Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 16 MAR, 2024 | 04:01 PM கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் இந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நிலைபேறான கடல் மற்றும் கரையோர வலயத்தை உறுதி செய்யும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்…

  2. தயாசிறி ஜயசேகர எம்.பியின் தலைமையில் புதிய கூட்டணி – 20 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு March 16, 2024 சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு – லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நாற்பது சிவில் அமைப்புகள் இந்த புதிய கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அன்றைய தினம் இந்த புதிய கூட்டணியுடன் சில ஒப்பந்தங்…

  3. அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிள்ளைகள்: தந்தை அளித்த வாக்குமூலம் தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவியின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்து இருந்தமையால்தான் இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்றதாக தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதி மேலும், தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணம…

  4. 16 MAR, 2024 | 10:05 AM வெடுக்குநாறி மலையில் மஹாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி, நல்லூரில் இருந்து வவுனியா வரையான வாகனப் பேரணியானது நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து இன்று சனிக்கிழமை (16) காலை 7.45 மணியளவில் ஆரம்பமாகியது. இப் பேரணியானது காலை 10 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை அடைந்து, வெடுக்குநாறி மலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி மாபெரும் போராட்டம் இடம்பெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார். இப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட ஆசிரிய சங்க தலைவர், உறுப…

  5. Published By: VISHNU 15 MAR, 2024 | 11:04 PM யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 வயதான இளைஞன், வண்ணார்பண்ணையை சேர்ந்த 19 வயதான இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள…

  6. நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடையாளம் காணப்பட்ட காசநோயாளர்களில் நாள் ஒன்றுக்கு இரண்டு பேர் மரணிப்பதாக அந்த வேலைத்திட்டம் குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் நாட்டில் 9,358 காசநோயாளரகள் பதிவாகினர். இதுவே அண்மையில் பதிவான அதிகூடிய எண்ணிக்கையாகும். நாட்டில் அதிகளவான காசநோயாளர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு நகர எல்லையிலேயே பதிவாகியுள்ளனர். https://www.virakesari.lk/article/178823

  7. Published By: VISHNU 15 MAR, 2024 | 06:48 PM இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எமது யாழ்ப்பாண மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்திய மீனவர்கள் எமது வாழ்வாதாரத்தையும் …

  8. மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து, பணம் கோரிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வர்த்தகர் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபா கப்பம் கேட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாகவே தலங்கமை பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை 5 லட்சம் ரூபாய் பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு கடுவலை பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம பொலிஸ் நி…

  9. 2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இன்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அடுத்த மாதம் 5ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/295936

  10. தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1, 700 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை! மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை ஆயிரத்து 700 ரூபாயாக அதிகரித்து எதிர்வரும் 30 நாட்களுக்குள் வழங்கவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் நேற்று அமைச்சர் ஜீவன் தொண்டமானினால், மக்களுக்கு கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சக்திவேல், பெருந்தோட்ட மனித வள…

  11. நாட்டில் நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு! நாட்டில் வைத்தியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் தற்போது நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரித்துள்ளமை தொடர்பாகத் தாம் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத்தகைய செயற்பாடானது நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும், இதன் காரணமாக உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1373610

    • 1 reply
    • 446 views
  12. 15 MAR, 2024 | 03:28 PM மகாவலி மற்றும் 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது . மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மழையின்மை காரணமாகக் குறைந்துள்ளது. வெப்பமான வானிலை காரணமாக வீடுகள் மற்றும் அரச நிறுவனங்களில் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/178803

  13. Published By: RAJEEBAN 15 MAR, 2024 | 03:43 PM செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ள நிலையில் ஒழுக்கவியல் சார்ந்த அடிப்படைகள் அவசியம். அவ்வாறா ஒழுக்கவியல் அடிப்படையில்லாவிட்டால் முடிவற்ற நெருக்கடிகள் உருவாகலாம் என தமிழ் நாடு உட்கட்டுமான நிதி முகாமைத்துவ தலைவரும் டான்சம் அமைப்பின் பணிப்பாளருமான பேராசிரியர் எம்.ஆறுமுகம் தெரிவித்தார் வவுனியாவில் இடம்பெற்ற ஆசிய பசுபிக்சமாதான ஆராய்ச்சி சங்கத்தின்2024ம் ஆண்டுக்கான சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிட்டதாவது …

  14. மட்டக்களப்பில் 7 வயது சிறுமி - 5 பேரால் துஸ்பிரயோகம்! Vhg மார்ச் 14, 2024 மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட 5 பேரில் 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன் 18 வயதுயை ஒருவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை நேற்று (13-03-2024) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ளார். வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கணவனை இழந்த தாயார் ஒருவர் அவரது 7 வயது சிறுமியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தினமும் வேலைக்கு சென்றுவரும் நிலையில் சிறுமியுடன் அந்தபகுதியைச் சேர்ந்த 11வயது சிறு…

    • 3 replies
    • 627 views
  15. பாராளுமன்றத்தைக் கலைத்துக் காபந்து அரசாங்கத்தை அமைக்க திட்டமிடும் ரணில்! பாராளுமன்றத்தைக் கலைத்துக் காபந்து அரசாங்கத்தை அமைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமான சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெற்றுவருவதாக அறியமுடிகிறது. பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென மகிந்த ராஜபக்ச தரப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் ரணில் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்கிறார். பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென ராஜபக்ச தரப்பு அழுத்தம் கொடுத்திருந்தபோதும் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறார். இதனாலேயே ரா…

  16. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் பேரினவாதம் : தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை. திரிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டைச் சிதைப்பதே பேரினவாதத்தின் முதன்மை நோக்கமாக இருப்பதாக தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் இவ்வாறான விஞ்ஞான பூர்வமற்ற, திரிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டைச் சிங்கள-பௌத்த பேரினவாதம் சிதைத்து வருகின்றது. சிங்கள-பௌத்த மயமாக்கல் மூலமாக சிங்கள-பௌத்தர்களின் பாரம்பரிய வாழிடமாக வடக்கு-கிழக்கைக் ம…

  17. இலங்கை இராணுவத்துக்கு நேர்மறை மீள்வரைவிலக்கணம் வழங்குகிறதா அமெரிக்கா? - சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் விமர்சனம் Published By: DIGITAL DESK 3 15 MAR, 2024 | 08:59 AM (நா.தனுஜா) 'குறைந்தபட்சம் பகுதியளவிலான பொறுப்புக்கூறலையேனும் உறுதிசெய்யவேண்டிய நிலையில் இருக்கும் பிரச்சினைக்குரிய கட்டமைப்பு' எனும் நிலையிலிருந்து தற்போது 'இந்திய - பசுபிக் பிராந்திய கடற்பாதுகாப்பில் மிகமுக்கிய பங்காளி' எனும் நிலையை நோக்கி அமெரிக்கா இலங்கை இராணுவத்துக்கு மீள்வரைவிலக்கணம் வழங்குவதாக சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் விமர்சித்துள்ளார். இலங்கையின் கடற்பிராந்தியம்சா…

  18. Published By: VISHNU 15 MAR, 2024 | 01:49 AM வடபகுதியின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகப் பல மில்லியன் நிதியை வழங்க சீனா, இந்தியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தைச் சரியானதாக பயன்படுத்திக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்; பாரிய பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்திருந்தாலும் தற்போதுள்ள அரசின் சரியான அரசியல் வழிநடத்தல் காரணமாக அந்த நிலையிலிருந்து நாடு தற்போது மீண்டு வருகின்ற நிலையில் வடக்கின் அபிவிருத்திக்கு இன்றைய அரசு அதிகளவான முக்கியத்துவம…

  19. இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்! அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700 Bombardier உளவு விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். குறித்த அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் இரத்மலானை விமான நிலையத்தில் விசேட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் வகையிலும் கடல் எல்லையை கண்காணிப்பது தொடர்பிலும் இதன்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373413

    • 10 replies
    • 1.2k views
  20. மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இதனைத் தெரிவித்தார். மீன்பிடி தொழில்துறையின் வளர்ச்சிக்காக, மீன்களின் தரத்தை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக மீனவர்களின் வருமானத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலைமையை தணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மீன்பிடித் தொழிலுக்கு …

  21. ரயில் இருக்கைகளுக்கான முன்பதிவுகள் இன்று முதல் ஒன்லைன் மூலம் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஒன்லைன் மூலம் ரயில் நிலையங்களின் ஊடாக தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார். இதன்படி, பயணிகள் பயணிப்பதற்கு 30 நாட்களுக்கு முன்னதாக தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன், இன்று காலை 7 மணிமுதல் அதற்கான பதிவு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295697

  22. 14 MAR, 2024 | 11:21 AM நவகமுவ பெரஹரவின் நேரடி ஒலிபரப்புக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட வேண்டிய 9 இலட்சம் ரூபாவை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே செலுத்தத் தவறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற நவகமு பிரதேச விஹாரை ஒன்றின் 188 ஆவது ரந்தோலி பெரஹராவை நேரடியாக ஒளிபரப்புவதற்காக இந்தத் தொகை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. டயானா கமகேவின் வேண்டுகோளுக்கிணங்க ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் நவகமுவ பெரஹராவை நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது. இந்நிலையில், குறித்த நிலுவைத் தொகை தொடர்பில் ரூபவாஹினி கூடடுத்தாபன கணக்காளர் இராஜாங்க அமைச்சரிடம் பலமுறை நினைவ…

  23. 14 MAR, 2024 | 11:15 AM அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…… நீதிக்கான பொறிமுறைகளை தேடும் நோக்குடன் ஜனநாயக போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். தற்போது இந்த நாட்டிலே தமிழ் மக்கள் மேற்கொள்ளும் அறவழியான போராட்டங்களை கூட நசுக்கும் வகையான உத்தரவுகளை வழங்கி கைது செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இது ஒரு மோசமான நிலையினையே காட்…

  24. இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி நேற்று(13) கொழும்பு பங்குச்சந்தைக்கு அறிவித்தது. இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைவராக செயற்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, நேற்று முதல் அந்த பதவியில் இருந்து விலகுவதாகவும் புதிய தலைவர் நாளை முதல் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சாகல ரத்நாயக்கவின் சகோதரரான காவன் ரத்நாயக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பட்டதாரியாவார். https://thinakkural.lk/article/295663

  25. யாழ். பல்கலையின் 38 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எழிலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்தப் பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 46 தங்கப் பதக்கங்கள், 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.(க) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையின்_38_ஆவது_பொதுப்_பட்டமளிப்பு_விழா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.