ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
பிரித்தானியாவில் இயங்கும் நிறுவனம் ஒன்றிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதே நியாயாதிக்க சபையில் முறையீடு ஒன்றைச் செய்யும் வகையிலேயே இந்தத் தவகல்களைப் பெற்றுக் கொண்டிருக்கலாமென் ஏசியன் ரியூ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச ரீதியிலான குற்றச் செயல்கள் குறித்தே இந்த முறைப்பாட்டினை இலங்கை செய்யலாம் என எதிர்பார்க்கிறது. இது இவாறிருக்க, நிதிச்சேகரிப்பு ஆயுதக்கொள்வனவு உட்பட்ட தமது குற்றச்செயல்களை பெரும்பாலும் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஜேர்;மனி, டென்மார…
-
- 2 replies
- 755 views
-
-
திருமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக சிங்கள இராணுவத்தில் புதிய படையணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பிரிகேடியர் அத்துல கொடிப்பிலி தலைமையிலான 224ஆவது படையணி உருவாக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஹப்புஆரச்சி தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் வாழும் இடங்களையும் சிங்களமயப்படுத்த அவற்றினை இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரும் சிங்கள அரசாங்கத்தின் முயற்சியே இது என முஸ்லிம் மக்கள் கடிந்துகொள்கின்றார்கள். . முஸ்லிம் மக்கள் வாழ் பிரதேசங்களையும் இராணுவமயபப்டுத்துவதற்கான திட்டத்தின் கீழேயே கிறிஸ் பூதம் என்ற இரகசியபடைகளை நோன்பு காலத்தில் ஏவிவிட்டு மக்களை கோபமுறவும், பீதியடையவும் சிங்கள …
-
- 1 reply
- 393 views
-
-
வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் வன்முறையில் ஈடுபடச் சென்ற மர்ம மனிதர்களை இராணுவ வாகனம் கிராம இளைஞர்களிடம் இருந்து காப்பாற்றி ஏற்றிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நெடுங்கேணிப் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் மர்ம மனிதர்களை யாரும் கண்டால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் என்று இராணுவத்தினர் தொடர் அறிவிப்புக்களை ஒலிபெருக்கிகள் மூலம் விடுத்து வருகின்றனர். இந்த அறிவித்தலை அடுத்து அந்தப் பகுதி இளைஞர்கள் உசார் நிலையில் தமது கிராமத்தினைக் கண்காணித்து வருகின்றனர். கடந்த இரவு 8.30 மணியளவில் மர்ம மனிதர்கள் அறுவர் அந்தக் கிராமத்தில் ஊடுருவிய தகவல் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து கிராமத்தினை…
-
- 0 replies
- 766 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினருக்குக் கட்டளை இடுபவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவா? அல்லது அவரது மனைவியா? என படை தரப்பினர் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர். தமக்குக் கட்டளை இடுபவராகவும் தமது நிர்வாக நடவடிக்கைகளைக் கவனிப்பவராகவும் இராணுவத் தளபதியின் மனைவியான மஞ்சுலிகா அருண விஜய சூரியவே தற்போது செயற்படுகிறார் எனவும் அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவியாகச் செயற்படும் அவர், தற்போது இராணுவ நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். தண்டனை பெற்ற தனக்குத் தேவையானோரை மன்னிக்கும் படியும் தனக்குப் பிடிக்காதவர்களை தண்டிக்குமாறும் அவர் உத்தரவிடுகிறார். உயர்மட்ட படை அதிகாரிகளை தம்ச (நீ) பளயங் (போடா) மே வரேன…
-
- 0 replies
- 732 views
-
-
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களை கோம்பாவில் பகுதியில் குடியேற்றம் செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்ய அனுமதிக்கப்படாத 10 கிராம அலுவலர் பகுதிகளைச் சேர்ந்தவர்களையே கோம்பாவில் பகுதியில் குடியேற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு கிழக்கு, புதுக்குடியிருப்பு மேற்கு, மந்த…
-
- 0 replies
- 331 views
-
-
[Monday, 2011-08-22 16:30:30] மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனிதர்களை பொதுமக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் பேசாலை கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருக்கும் கடற்படை முகாமுக்குள் நுழைந்து ஒழிந்து கொண்டதினைத்தொடர்ந்து பொது மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அவை தற்போது கலவரமாக மாறியுள்ளது. இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,,, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேசாலை கடற்கரைப் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடிப்பதற்காக துரத்திச் சென்றனர். அப்போது அங்கிருக்கும் கடற்படை முகாமுக்குள் மர்ம நபர்கள் ஓடிச்சென்று ஒளிந்து கொண்…
-
- 0 replies
- 616 views
-
-
[Monday, 2011-08-22 17:08:05] தமிழீழம் என்பது உலகத் தமிழினத்தின் உயிர் நாடியும், இறுதியானதும் உறுதியான முடிவும் .அதை அவர்களால் தவிர வேறு யாராலும் எவராலும் மறக்கவோ ,மறுக்கவோ அல்ல மாற்றவோ முடியாது . அதற்கு சிறந்த உதாரணம் முள்ளிவாய்க்கால் . குருதி தோய்ந்த முள்ளிவாய்க்கால் தினங்களை ஏன் நாம் இங்கு நினைவு கொள்ள வேண்டும் .? பல்லாயிரக் கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட இடம் என்பதால் மட்டும் அல்ல ,. எந்த ஒரு ஈழத் தமிழன் தமிழ் ஈழத்தில் சுதந்திரமாக வாழ நினைத்தானோ அவன் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டான் என்பதுக்காக மட்டும் அல்ல , உண்மையிலே ஈழத் தமிழர்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தில் தமது சுதந்திரத்து…
-
- 0 replies
- 359 views
-
-
Saturday, August 20, 2011, 20:30 கட்டுரைகள், சிறீலங்கா, தமிழீழம் முப்பது வருடகால யுத்தம், அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என துன்பியல் வாழ்க்கையைக் கடந்து மற்றுமொரு பரிமாணத்தில் குடாநாடு காலடி எடுத்துவைத்திருக்கும் காலம் இது. எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த காலம் தள்ளிப்போய் எதிர்பார்ப்புகளை மனதில் விதைத்து நாளைய பொழுதுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது நம் தமிழச் சமூகம். இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் முளைவிட்டு எமது சமூகத்தின் ஆணிவேரையே அசைக்க முற்பட்டுக்கொண்டிருக்கும் புதியதொரு பிரச்சினையாக கலாசார சீர்கேடு மாறியுள்ளது. ஆங்காங்கே நடக்கும் விபச்சாரம், பள்ளிக்குச் செல்லும் இளம் பெண்களின் கர்ப்பம் தரிப்பு வீதம் அதிகரிப்பு, சூறையா…
-
- 24 replies
- 7.4k views
-
-
கொழும்பு: இலங்கைக்கு வருமாறு அதிபர் மகிந்த ராஜபக்சே விடுத்த அழைப்புக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை என்று அந் நாட்டு வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது. அந் நாட்டின் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக அந் நாட்டின் சண்டே லீடர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையின் வன்னிப் பகுதியில் போருக்குப் பிந்தைய நிலைமைகள் குறித்து நேரில் அறிந்து கொள்ள இலங்கை கொழும்புக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிபர் ராஜபக்சே சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி மூலம் இந்த அழைப்புக் கடிதம் நேரில் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த அழைப்புக்கு இதுவரை தமிழக முதல்வர…
-
- 0 replies
- 388 views
-
-
முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் நேற்று ராணுவத்தினர் பாரியளவிலான சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பல கவசவாகனங்கள் சகிதம் பல நூறு ராணுவத்தினர் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக எமது வன்னி செய்தியாளர் மேலும் தெரிவிக்கையில்... குமுளமுனை காட்டுப்பகுதியில் நேற்று துப்பாக்கிவேட்டுச்சத்தங்கள் உணரப்பட்டதாகவும் அதன் பிற்பாடே ராணுவத்தினர் பெரும் அளவிலான படையினருடன் குறிப்பிட்ட பகுதியையும் ஊர்மனைகளையும் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதாக சிலர் தெரிவித்துள்ள போது,தம்மால் நடத்தப்பட்டுவரும் தேடுதல் சம்பவங்களை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறான கதையை ராணுவத்தினர் கசியவிட்டிருக்கலாம் என ஈழதேசத்தின்…
-
- 1 reply
- 538 views
-
-
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த 40 வயதுடைய இலங்கைப் பெண்ணொருவர் தன்னைத்தானே கத்தியால் வெட்டி துன்புறுத்திக் கொண்ட சம்பவமொன்று இன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. வோல்டன் பகுதியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற பிரித்தானிய எல்லைச் சேவை முகவர் அதிகாரிகள் மூவரையும் கண்டதும் குறித்த பெண் சமையலறைக்கு சென்று அதிகாரிகள் முன் தன்னை தானெ வெட்டி துன்புறுத்திக் கொண்டுள்ளார். குறிந்த பெண்ணின் கணவர் உயிரிக்குமுன் அவரை விடுதலை புலிகளுக்கான ஆயுத கடத்தலில் ஈடுபட்டவர் எனக்கூறி அவருக்கு இலங்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தலைமறைவாகியிருந்த குறித்த ப…
-
- 0 replies
- 844 views
-
-
புத்தளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட இராணுவத்தினருடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரகசிய புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும் புத்தளத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தலைமையிலான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் குழுவொன்று இன்று திங்கட்கிழமை காலை புத்தளத்துக்கு விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில், அவர்களிடையே புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று த…
-
- 0 replies
- 540 views
-
-
கார்த்திகைத் திருவிழாவில் மாலை 5.45 மணிக்கு பூஞ்சப்பறத்தில் பல்லாயிரக் கணக்கான அடியவர்களுடன் சேர்ந்து வள்ளி தெய்வானையுடன் பவணி வந்த முருகப் பெருமான் மாலை 7 மணிக்கு உள்வீதி சென்றடைந்தார். அக் காட்சிகள் புகைப்படங்களாக மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் நல்லூர் தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது புகைப்படங்களுக்கு இதனை அழுத்தவும். அல்லது புகைப்படப் பிரிவில் பார்வையிடவும்
-
- 0 replies
- 604 views
-
-
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு; 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை தாரைவார்க்க அரசு தயார் 2016 ஆம் ஆண்டில் ஆயிரத்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்துக் கொள்ளும் இலக்கைக் குறி வைத்து ஐந்து இலட்சம் ஏக்கர் நிலத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கையளிக்க அரசு தயாரகி வருகிறது. தொல்லியல் பெறுமதி கொண்ட 18 இடங்கள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் 30, வன விலங்கு சரணாலயங்கள், காடு கள், ஈரவலயங்கள், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றவாறு 124 இடங்கள் அடங்கும் கரை யோரங்களை அண்டிய இரண்டு இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் விவசாயச் செயற்பாடுகள், விளையாட்டு மைதானங் கள், பொழுதுபோக்கு மையங் களை நிறுவுவதற்காக மூன்று இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு என்பன இவ்விதம் வெளிநாட்டு நிறுவனங்க…
-
- 0 replies
- 408 views
-
-
தண்ணீர், மின்சார விநியோகம் நிறுத்தம்! முகாம்களைவிட்டு வெளியேறுமாறு இடம்பெயர்ந்த மக்கள் மீது அரசு அழுத்தம்! Published on August 16, 2011-4:28 am வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் இடம்பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லுமாறு கூறியுள்ள அரசாங்கம், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை நிறுத்தி, தங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள். முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா போன்ற பல மாவட்டங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த முகாம்களில் பன்னிரண்டு வருடங்களாக வசித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குடும்பங்களில் ஒ…
-
- 3 replies
- 532 views
-
-
வெள்ளவத்தையில் வீடு வாங்கி ஏமாந்தார் யாழ்.வர்த்தகர்! Published on August 22, 2011-8:58 am சட்டவிரோதமாக காணி,வீடு பரிவர்த்தனைகளில் பின்னணியில் இருப்போரைக் கண்டுபிடிப்பதற்கு குழுவொன்றை குற்ற விசாரணைத் திணைக்களம் நியமித்திருக்கின்றது என சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ஆங்கில வாரப் பத்திரிகையொன்று நேற்று தெரிவித்திருக்கிறது. முறைப்பாடுகள் அதிகரித்ததையடுத்தே பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலில் இந்த விசாரணை இடம்பெறுகிறது. போலி ஆவணங்கள், உரிமையாளர்களைப் பலவந்தமாக வெளியேற்றும் விடயங்கள், வீடுகளின் உரிமையாளர்களிடமிருந்து பணத்தை கப்பமாகப் பெறுதல், ஏனையோரின் நிலத்தை விற்றல், அடைமானம் வைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பாக சி.…
-
- 0 replies
- 898 views
-
-
திருமலை வடக்கு கல்வி வலயம் தனிச் சிங்களமயமானது! Published on August 22, 2011-9:06 am திருகோணமலை மாவட்டத்தில் வடக்கேயுள்ள சிங்களப்பாடசாலைகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தின் நிர்வாகம் முற்றாக தனிச்சிங்களத்திலேயே நடத்தப்படுவதால் அவ்வலயத்தின் கீழுள்ள தமிழ்மொழி மூலப்பாடசாலைகள் பெரும் சிரமத்திற்குள்ளாவதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருகோணமலை நகரசபை உறுப்பினர் சி.நந்தமார் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாட்டில் நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது; திருகோணமலை வடக்கு கல்வி வலய நிர்வாகத்தின் கீழ் தமிழ் மொழி மூலம் பாடசாலைகள் பல வருகின்றன. ஆனால் வடக்கு கல்வி வலய அலுவலகத்தில் தமிழ்மொழி மூல உத்தியோகத்தர்கள் …
-
- 0 replies
- 472 views
-
-
மாலைதீவுக்கு இலங்கை இறக்குமதி கடனுதவி மாலைதீவுக்கு இலங்கை அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 110 கோடி இலங்கை ரூபா) இறக்குமதி கடனாக வழங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட் இலங்கைக்கு விஜயம் செய்தபோது; கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் ஒன்றாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். சுற்றுலாத்துறையில் தங்கியுள்ள மாலைதீவு அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்நோக்குகிறது என ஏ.எவ்.பி. செய்திச் சேவையின் கொழும்பு நிலையத் தலைவர் அமல் ஜயசிங்க தெரிவித்துள்ளர். உலகில் வருமான வரி அறிவிடாத மிகச்சில நாடுகளில் மாலைதீவும் ஒன்றாகும். எனவே அரசாங்கம் வரவு செலவுகளை சமப்படுத்துவதற்கு தடுமாறுகிறது என அவர் பி.பி.சி…
-
- 0 replies
- 358 views
-
-
போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வலுவான பரப்புரை வலையமைப்பு தேவை! - மகிந்த ராஜபக்ச போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வலுவான பரப்புரை வலையமைப்பு ஒன்று தேவை என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களை அலரி மாளிகையில் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேற்கத்தைய நாடுகளில் வாழ்கின்ற விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகின்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் வகையிலான பரப்புலைப் பொறிமுறை ஒன்று ஊருவாக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வெளிநாடுகளில…
-
- 0 replies
- 360 views
-
-
Aug 22, 2011 / பகுதி: செய்தி / யாழ். தீவுப்பகுதியில் இந்தியாவின் உதவியுடன் சிங்கள மீனவக் குடியேற்றம்! யாழ். குடாநாட்டின் தீவுப் பகுதியை நோக்கி தெற்கின் கவனம் திரும்பியுள்ள நிலையில் உள்ளூர் மீனவர்களிடையே அச்சமான சூழல் எழுந்துள்ளது. அண்மையில் புங்குடுதீவை வந்தடைந்த தெற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்தும் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் மீனவர்களிடையே சந்தேகம் தொடர்கின்றது. அதேவேளை நெடுந்தீவிற்கும் தெற்கு மீனவர்கள் வருகை தரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அங்கும் குழப்பகரமான சூழலொன்றை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்கு பிடிப்பதற்கென கூறி நூற்றுக்கணக்கான தெற்கு மீனவர்கள் வருகை தந்…
-
- 3 replies
- 954 views
-
-
தமிழர்களின் தாயக பூமியை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவ வேண்டும் - இரா. சம்பந்தன் தமிழர்களின் தாயக பூமியை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று சனிக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், உள்ளூராட்சி சபைகளை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவிகளையும், நிதியை எவ்விதம் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர…
-
- 7 replies
- 940 views
-
-
[sunday, 2011-08-21 19:09:17] யாழ். இளம்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சிசபை உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு- உள்ளுராட்சிசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சிசபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று முற்பகல் யாழ். நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிறேமச்சந்திரன், ஈ.சரவணபவன், எஸ்.சிறீதரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன…
-
- 3 replies
- 746 views
-
-
சிறிலங்கா படைத்துறை அமைச்சின் அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குக்கு கையளிப்பு! - ஜாலிய விக்கிரமசூரிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர் தொடர்பில் சிறிலங்காவின் படைத்துறை அமைச்சினால் தயாரிக்கப்பட்ட 'மனிதாபிமானப் போரின் உண்மை சார்ந்த அலசல்கள்' என்ற தலைப்பிலான அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள், கொழும்பிலுள்ள அனைத்து இராஜதந்திர தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுக்கும் இவ்வறிக்கையின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் படைத்துறை அமைச்சு கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது. இந்நிலையில், சிறிலங்காவின் படைத…
-
- 3 replies
- 769 views
-
-
[sunday, 2011-08-21 17:49:51] சிறிலங்கா அரசினது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பௌத்தபிக்குகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கேம்பிரிட்ஜ் பிளேஸில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 200 பௌத்த பிக்குகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினரால் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு வர…
-
- 2 replies
- 440 views
-
-
Aug 22, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / நவம்பர் 15 இறுதி அறிக்கை - சனல் 4 காணொளி தொடர்பிலும் விசாரணை! சனல் 4 ஒளிபரப்பிய இரு காணொளிகள் தொடர்பான விசாரணைப் பகுதிகளும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இணைத்துக் கொள்ளப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நவம்பர் 15 ம் திகதி மஹிந்தவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கையில் சனல் 4 வெளியிட்ட காணொளிகள் தொடர்பில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என பல்தரப்பினராலும் சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் சுதந்திர விசாரணைக்கு வலியுறுத்தப்பட…
-
- 4 replies
- 726 views
-