ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
நாடாளுமன்றத்தில் விசேட சோதனை! எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, எதிர்வரும் நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் நாடாளுமன்றத்தில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் ஆடை அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டிடமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதற்கிடையில், நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். அன்றையதினம் பொது மக்கள் பார்வை…
-
- 0 replies
- 71 views
-
-
21 Oct, 2025 | 07:48 PM யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்! | Virakesari.lk
-
- 1 reply
- 174 views
-
-
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு! இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவே…
-
- 1 reply
- 194 views
-
-
22 Oct, 2025 | 05:22 PM (எம்.மனோசித்ரா) 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் சிட்டைகளை 2025 பாடசாலை தவணை முடிவடையும் போது பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வவுச்சர்சிட்டைகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சால் நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பரிசு வழங்கும் கைத்தொலைபேசி மென்பொருள் மூலம் ஸ்கான் செய்வதற…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சூரன் adminOctober 22, 2025 பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து இன்றைய தினம் புதன்கிழமை சூரன் என்ற இளைஞன் யாழ்ப்பணத்தை சென்றடைந்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து மேலும் தெரிவிக்கையில் – “நான் பாரிஸில் இருந்து கடந்த செப்டம்பர் 01ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்தி…
-
- 0 replies
- 220 views
-
-
Published By: Digital Desk 1 22 Oct, 2025 | 03:53 PM தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை தீர்ப்பது பெரும் தலையிடியாக உள்ளதென தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் எல்லோரும் ஒன்றிணைந்தாலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (22) வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். எங்கள் சேவைக…
-
- 0 replies
- 69 views
- 1 follower
-
-
22 Oct, 2025 | 04:49 PM (எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்) வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு, புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது, வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்! சீரற்ற காலநிலை காரணமாக நாகை காங்கேசன்துறை மற்றும் நாகபட்டினத்துக்கிடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் நிறுத்தப்படும் எனவும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழமை போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் என்றும் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். சுபம் கப்பல் நிறுவனம் நாகை துறைமுகம் இலங்கையின் காங்கேசன்துறைக்கிடையே சிவகங்கை பயணிகள் கப்பலை இயக்கி வருகிறது. இந்தக் கப்பலில் கடந்த ஓராண்டில் 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். நாளுக்கு நாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிற நிலையில் புதிய கப்…
-
- 1 reply
- 116 views
-
-
22 Oct, 2025 | 12:13 PM 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 28 ஆயிரத்து 985 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 404,752 ஆகும். அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 170,422 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 127,613 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 113,293 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 109,653 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 91,694 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலி…
-
- 0 replies
- 106 views
-
-
கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்! கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு தலைவரான ‘கெஹெல்பத்தர பத்மே’ வின் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினரால் இன்று(22) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, கெஹெல்பத்தர பத்மேவிற்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்ட சொத்துக்களான மடெல்கமுவ, படபொத்த, உடுகம்பொல என்ற முகவரியில் உள்ள விடுதிக்குப் பின்னால் அமைந்துள்ள 20 பரப்பு காணி, அதே முகவரியில் உள்ள அதே விடுதி வளாகத்தில் அமைந்துள்ள ஆறு அறைகளைக் கொண்ட பகுதியளவு முடிக்கப்பட்ட கட்டிடம் என்பனவ…
-
- 0 replies
- 134 views
-
-
போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் உயர் அதிகாரிகள்? – விசாரணை சி.ஐ.டி.யிடம்! போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) விசாரணையை ஆரம்பித்துள்ளது. வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். தவறான செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபரும், தகுதி அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதிபடுத்தினார். கடல் வழியாக அதிக அளவில் மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் ஹாஷிஷ் க…
-
- 0 replies
- 101 views
-
-
கிண்ணியாவில் நிலத் தகராறில் 30 மாடுகள் மீது வாள்வெட்டு! மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிண்ணியா குரங்குபாஞ்சான் இரட்டைக்குளம் பகுதியில் வைத்து நேற்று காலை(21) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, கிண்ணியா பிரதேச கால்நடை விவசாயிகளுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையிலான நில மீட்புப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. சுமார் 2876 ஹெக்டேயர் நிலம் மேய்ச்சல் தரைக்கு உரியது என ம…
-
- 0 replies
- 152 views
-
-
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் தனது விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், "நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
-
- 5 replies
- 262 views
- 1 follower
-
-
தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன் adminOctober 21, 2025 யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வசாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் மற்…
-
- 1 reply
- 112 views
- 1 follower
-
-
இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியவரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு Published By: Digital Desk 1 22 Oct, 2025 | 10:01 AM இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று (22) யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது. அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடவடிக்…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
யாழில் போதைக்கு அடிமையான யுவதி உயிர்மாய்ப்பு! சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றைய தினம் (20) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச…
-
- 0 replies
- 132 views
-
-
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை… October 22, 2025 முதலமைச்சர் வேட்பாளர் யார் என பிரதான கட்சிகள் தீவிர ஆலோசனை நடாத்தி வரும் நிலையில், வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பிலும் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன. அந்த வகையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி, 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின் கீழ் களமிறங்கவுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது பற்றி தேசிய மக்கள் சக்தி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. உத்தேச முதலமைச்சர் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலனின் பெயர் முன்னணியில்…
-
- 0 replies
- 83 views
-
-
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்! கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியின் வவுனியா, பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செட்டிக்குளம் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சொகுசு பேருந்து வேகக் கட்ட…
-
- 0 replies
- 93 views
-
-
கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, இன்று (ஒக்டோபர் 21) காலை 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிண்ணியா - குரங்குபாஞ்சான், இரட்டைக்குளம் பகுதியில் வைத்து இன்று காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பாதிப்புகளின் விவரங்கள் 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளன. 12 மாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நான்கு மாடுகளைக் காணவில்லை எனவும் முறைப…
-
- 0 replies
- 120 views
-
-
Simrith / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 02:36 - 0 - 24 தேசிய மக்கள் சக்தி (NPP) கொள்கைப் பிரகடனத்தில் LGBTQI சமூகத்தை குறிவைக்கும் சட்டங்களைத் திருத்துவதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நிர்ணயிக்கவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். "இயற்கைக்கு மாறான குற்றங்கள்" மற்றும் "நபர்களுக்கு இடையேயான மொத்த அநாகரீக செயல்கள்" என்ற தலைப்பில் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 365 மற்றும் 365A ஆகியவை வரலாற்று ரீதியாக LGBTQI சமூகத்தை குறிவைத்து துன்புறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. NPP தேர்தல் அறிக்கையில், ஒருமித்த ஒரே பாலின நடத்தையைத் தண்டிக்கும் பிரிவு 365A ஐ ரத்து செய்வதற்கான உறுதிமொழியும் அடங்கும். பெண்கள், குழந்தைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களை ஒடுக்குவத…
-
- 1 reply
- 148 views
-
-
Published By: Digital Desk 1 21 Oct, 2025 | 04:01 PM பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2 முதல் 5 மற்றும் 7 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஜனவரியில் நடைமுறைக்கு வரும் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் வராததால், அவை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார். இருப்பினும், கல்வி சீர்திருத்தங்களின்படி, 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்றும், அதற்கு பதிலாக, அவை எளிமைப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பி…
-
- 0 replies
- 98 views
- 1 follower
-
-
Published By: Vishnu 21 Oct, 2025 | 07:48 PM யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228328
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
21 Oct, 2025 | 12:02 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நீரிழிவு சிகிச்சை மையத்தை வெளிநோயாளர் கட்டடத் தொகுதியின் முதலாம் மாடியில் திறந்துவைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இந்த பிரிவின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது இது வெளிநோயாளர் மற்றும் விபத்து சிகிச்சை கட்டடத் தொகுதிகளுக்கு இடையிலான பகுதியில் இரத்தப் பரிசோதனை மாதிரிகளை வழங்கும் பகுதி இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைக்கப்படுவதுடன், பர…
-
- 0 replies
- 96 views
-
-
21 Oct, 2025 | 03:16 PM இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்…
-
- 0 replies
- 78 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை - வைத்தியசாலைக்கு முன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு 21 Oct, 2025 | 03:31 PM இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியசாலையில் கடமையாற்றிய 21 பணியாளர்கள் உட்பட 68 பேரை சுட்டுப் படுகொலை செய்ததோடு, இந்த தாக்குதலில் பலரும் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜ…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-