ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கவேண்டும்: மலேசிய அரசியல் கட்சியினர் ஐ.நாவிடம் மனுக் கையளிப்பு! [saturday, 2011-07-02 11:51:37] சிறிலங்காவிலும் பலஸ்தீனத்திலும் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று "மலேசிய மக்கள் சக்தி கட்சி" வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்றயதினம் கோலாலம்பூரில் உள்ள ஐ.நா பணியகத்துக்கு பேருந்துகளில் சென்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதுதொடர்பான மனுவொன்றைக் கையளித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் பொதுச்செயலர் ஆர்.கண்ணன் தலைமையிலான இந்தக் குழுவினர் மலேசியாவுக்கான ஐ.நா செயலக பாதுகாப்பு அதிகாரி தேவேந்திர பட்டேலிடம் இரண்டு பக்க மனுவைக் கையளித்தனர். இந்த மனுவில்…
-
- 1 reply
- 475 views
-
-
மீள்குடியேற்ற அமைச்சினால் வடக்கில் ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன! [saturday, 2011-07-02 12:10:10] சிறிலங்கா அரசின் மீள்குடியேற்ற அமைச்சால் வடக்கு மாகாணத்தில் ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தலா ஒரு லட்சம் ரூபாவை மானியமாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மூலம் 2 லட்சம் ரூபா கடனாகவும் இதற்கு வழங்கவுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 200 வீடுகள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்கள், உதவி அரச அதிபர் பணிமனைகள் மூலம் பெறப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுத் தகுதியானவர்களின் பெயர், விவரங்களைத் தயாரித்து அனுப்பி வைக்குமாறு மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் சகல பிரதேச செயலகங்கள், உதவி அரச அதிபர் பண…
-
- 0 replies
- 294 views
-
-
புற்றுநோய் விழிப்புணர்வுக்காக யாழிலிருந்து கொழும்புக்குச் சைக்கிள் பயணம் news வேகமாக அதிரித்துவரும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும், யாழ்ப்பாணத்தில் நவீன வசதிகளைக்கொண்ட புற்றுநோய் சிகிச்சை நிலையமொன்றினை அமைப்பதற்காக தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைப்பயணத்தை ஊக்குவிக்கும் வகையிலும் யாழ்.றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று காலை சைக்கிள் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.றோட்டறிக் கழகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட புற்றுநோய் விழப்புணர்வுக்கான சைக்கிள் பயணத்தில், யாழ். நீர்வேலியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிறீகாந்தன் என்ற தன்னார்வ சமூகசேவகர் நல்லூரிலிருந்து இன்று காலை 7 மணியளவில் த…
-
- 0 replies
- 418 views
-
-
பிரித்தானியாவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் குழப்பம் நடந்ததா? என்ன நடந்தது? Saturday, July 2, 2011, 10:27 உலகம் பிரித்தானியத் தமிழர்களால் வருடா வருடம் நடாத்தப்பட்டுவரும் மெய்வல்லுனர் போட்டியின் இவ்வருடத்திற்கான போட்டிகள் மில்ரன்கீன்ஸ் பகுதியில் 26-06-2011 அன்று நடைபெற்றது. இவ் மெய்வல்லுனர் போட்டியில் சிலரால் குழப்பம் ஏற்பட்டு அது இடைநிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இது தொடர்பாக பேர் ஊரற்ற அனாமதேய ஒலிப்பதிவு ஒன்றுடன் ஒரு சில ஊடகங்களில் வெளியான செய்தியால் எமது சில மக்கள் மத்தியில் குழப்பகரமான நிலை தோன்றியுள்ளது. சிறுவர்களின் விளையாட்டுப் போட்டிகளில் கூட அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக கலந்துகொள்ள முடியாமல் உள்ளதாக பிரித்த…
-
- 0 replies
- 881 views
-
-
கனடாவிலிருந்து இலங்கை சென்றிருந்த தமிழர் ஒருவர் இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சிறைவைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்குள்ளானதாக தெரிவிப்பு. [saturday, 2011-07-02 11:19:01] கனடாவின் குடியுரிமையை பெற்ற இலங்கை தமிழர் ஒருவர் இலங்கையின் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக தெ நெசனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகளாக 40 வயதான ரோய் மனோஜ்குமார் சமாதானம் என்பவர் இலங்கை சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் தாம் ஆயுதம் கடத்தியதாக பொய்யான வாக்குமூலம வழங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பயமுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது கனடாவுக்கு திரும்பியுள்ள அவர், தாம் இலங்கையில் மூன்று இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டதாக கு…
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கைத் தூதரகத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்! Saturday, July 2, 2011, 10:48 சுவிட்சர்லாந்திலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த ஒருவருக்கு அங்குள்ள இலங்கைத் தூதரகத்தில் நிரந்தர வேலைவாய்ப்பொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தூதுவரின் சாரதியாக கடமையாற்றி பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவரே அவ்வாறு விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய நிலையில் தூதரகத்திலும் பணியாற்றி வந்துள்ளார். தற்காலிக அடிப்படையில் தூதரக சாரதியாக நியமிக்கப்பட்டிருந்த அவர், தூதுவருக்கான சாரதியாக கடமையாற்றியுள்ளார். அதனையடுத்து தூதுவரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நி…
-
- 0 replies
- 355 views
-
-
429 தடவைகள் நீதிமன்றில் ஆஜர்; ஆனால் இன்னும் இல்லை விடுதலை; 15 வருடங்களாக சிறையில் வாடும் மட்டு. வாசிகள் 429 தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் 15 வருடங்களாக மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஐவர். இவர்கள் பற்றிய மனதை உருக்கும் கதை இது. கர்ப்பிணியாக கைதுசெய்யப்பட்ட திருமகள் என்பவரும் இவர்களில் ஒருவர். சிறையில் பெற்றெடுத்த தனது குழந்தை இப்போது எங்கே, எப்படி இருக்கிறார் எனத் தெரியாமல் பித்துப் பிடித்த நிலையில் உள்ளார் என்று நாம் இலங்கையர் அமைப் பின் நிறைவேற்று குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ன நேற்று உதயனுக்குத் தெரிவித்தார். மட்டக்களப்பில் பிறந்து கொழும்பு, தெமட்டகொ…
-
- 0 replies
- 437 views
-
-
அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கை காரியாலயத்திற்கான பிரதி துணை செயலாளர் பேராசிரியர் அலிசியா அயர்சை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கையின் சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சித் தலைவர், பேராசிரியர் அலிசியா அயர்சுக்கு விளக்கமளித்துள்ளார். இதேவேளை, அண்மையில் கட்டுநாயக்கவில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும், செனல் போ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படம் தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துக்களை பறிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழ நாதம்
-
- 4 replies
- 627 views
-
-
சனல்4 ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களம் என்ற விவரணத்திற்கு பயன்படுத்தப்பட்ட அசல் வீடியோ நாடா தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாற்றம் எதுவும்செய்யப்படாத வீடியோ பதிவுகள் கிடைத்திருக்கின்றன நாட்டுக்கு எதிரான சில வெளிநாட்டுச் சக்திகளுக்கு இந்நாட்டிலுள்ள சிலர் உதவுவதாக கூறிய அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, டொலர்களுக்கும் யூரோக்களுக்கும் அடிமையாக வேண்டாம் என தான் அவர்களை கோருவதாகவும் தெரிவித்தார். Eelanatham
-
- 4 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்தினால் கடந்த மாதம் இறக்குமதி செய்யப்பட்ட 20 ஆயிரம் மெட்ரிக் தொன் லீற்றர் எரிபொருள் பெற்றோல் அல்ல என்றும் அது வேறு வகையான திரவம் என்றும் பரிசோதனையின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த திரவம் பாவனையில் விடப்பட்டமையினால் ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் பழுதடைந்துள்ளன என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். பெற்றோல் போன்ற இந்த திரவத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பம்பிகளும் பழுதடைந்துள்ளன. இத்தகைய பாதிப்புக்கு முழுக் காரணம் அரசாங்கமேயாகும். எனவே பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் நட்ட ஈட்டினை அரசாங்கம் வழங்க வேண்ட…
-
- 3 replies
- 694 views
-
-
'மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இந்த ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும், இல்லையேல் தேடி அழிப்போம்" என இராணுவ கிழக்குக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொடிபஸ் பெரேரா அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பிலுள்ள வங்கி உத்தியோகத்தர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'ஆயுதம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் எங்களுக்கு நம்பகரமான சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஆயுதம் வைத்திருப்பவர்களை கண்டு பிடித்து அவற்றை களைந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். நேற்று மட்டக்களப்பு புதூரில் இடம்பெற்ற வங்கிக்கொள்ளை சம்பவமான…
-
- 3 replies
- 526 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் அதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு முயற்சிகளை மேற் கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பதற்கான பிரேரணை எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 18 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ள நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான திருத்தத்தை 20 ஆவது திருத்தமாக முன்வைப்பதற…
-
- 2 replies
- 675 views
-
-
[Friday, 2011-07-01 19:37:10] நாட்டில் இனப்பிரிவினை வாதத்தை ஏற்படுத்த சர்வதேச ரீதியில் சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் இலங்கை அரசு அதற்கு இடங்கொடுக்கவில்லை என பிரதமர் டீ.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும். மோதல்களால் சிலர் பாதிக்கபடுவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. எந்த இனத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. இந்நாட்டில் ஒரே சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். எமக்கிட…
-
- 6 replies
- 773 views
-
-
இந்திய தலைவர்கள் பணத்திற்காகவே ஈழத் தமிழர்களுக்கான போராட்டம் நடத்துகின்றனர்: பெரியார் தாசன் ஈழத் தமிழர்களுக்காக இந்தியாவில் போராட்டம் நடத்தும் தமிழ் தலைவர்கள் பணத்திற்காகவே போராட்டம் நடத்துகின்றனர் என இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ள பெரியார் தாசன் என்றழைக்கப்படும் பேராசிரியர் அப்துல்லா தெரிவித்தார். இன விடுதலை, சுதந்திரம் என்றெல்லாம் பேசும் இவர்களுக்கு பணம் கிடைக்கா விட்டால் இவ்வாறு பேசமாட்டார்கள். தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களுக்கு அதிக பிரச்சினைகள் உள்ள இச்சந்தர்ப்பதில், அதை பேசாமல் இலங்கை தமிழர் விடயத்தை இந்திய தமிழ் தலைவர்கள் பேசுகின்றனர"என அவர் தெரிவித்தார். ஆரம்ப காலத்தில் ஈழத்து போரட்டத்திற்கு ஆதரவாக பிரசாரங்களை நான் மேற்கொண்டேன். 1989ஆம் ஆண்டு யா…
-
- 4 replies
- 1.1k views
-
-
[Friday, 2011-07-01 12:24:55] மும்பை தாக்குதல்களையடுத்து கரையோர ரோந்து நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக இலங்கையிலிருந்து படகுகளை இந்திய கடற்படை கொள்வனவு செய்யவுள்ளது. இலங்கையைத் தளமாகக் கொண்ட கப்பல் நிர்மாண நிறுவனமொன்றிடமிருந்தே 80 அதிவேக இடைமறிப்புப் படகுகளை சுமார் 300 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்குவதற்கு இந்திய கடற்படை தீர்மானித்துள்ளது. மும்பை தாக்குதல்களையடுத்து கரையோர ரோந்து நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக இப்படகுகளை வாங்கப்படவுள்ளன. இப்படகுகள் இந்திய கடற்படையின் புதிதாக அமைக்கப்பட்ட படைப்பிரிவான சாகர் பிராஹரி பால் மற்றும் அக்கடற்படையின் ஏனைய பிரிவுகளால் பயன்படுத்தப்படவுள்ளதாக இந்தய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையைத் தளமாகக் கொண்ட …
-
- 6 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திக்கவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் அமெரிக்க உயரதிகாரிகள் சிலரை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும்தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கை காரியாலயத்திற்கான பிரதி துணை செயலாளர் அலிசியா அயர்சை நேற்று சந்தித்து கலந்துரையாடிய ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/news/17232/57//…
-
- 1 reply
- 374 views
-
-
உலகத்தை ஏமாற்ற ஏமாற்றப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! தீர்வுத்திட்டம் இன்று வழங்கப்படும் நாளை வழங்கப்படும் என எம்மை அரசு ஏமாற்றுவதாக கூட்மைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிங்கள அரசு தமிழர்களுக்கு எவ்வித தீர்வுகளையும் வழங்கப்போவது இல்லை. ஆனாலும் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட இந்த தீர்வுத்த திட்டம் தற்போது போரினவாத பிக்குகளிடம் இருக்கின்றது அதில் திருத்தங்களை செய்யவே மகிந்த காத்திருக்கின்றார். இப்படி இதற்கு முதல் பல முறையான செயற்பாடுகளுக்கு இதே முறை கடைபிடிக்கப்பட்டடுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் “எங்களுக்கு மதிப்பளிக்கவிட்டால் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் திரும்ப வரும்” என பிக்குகள் பீடாதிபதி மறைமுகமாக அரசை மிரட்டியிருந்ததை கவணிக்க வேண்டும். சர…
-
- 2 replies
- 751 views
-
-
[Friday, 2011-07-01 13:13:15] மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது இடம்பெற்று வரும் குற்றச் செயல்களுடன் அரசியல்வாதிகளுக்குத் தொடர்புள்ளதாக கிழக்கு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இந்த ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் தேடி அழிப்போம் எனவும் அவர் தெரிவித்தார் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பிலுள்ள வங்கி உத்தியோகத்தர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடாந்து உரையாற்றுகையில், ஆயுதம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் எங்களுக்கு நம்கமா…
-
- 2 replies
- 428 views
-
-
கரும்புலிகள் என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர். முதற்கரும்புலி மாவீரர் கப்டன் மில்லர் ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அ…
-
- 6 replies
- 1.1k views
-
-
[Friday, 2011-07-01 13:22:34] வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தினமும் இரவு வேளையில் கதிர்காம கந்தனின் வீதியுலா இடம்பெறவுள்ளது. மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீமிதிப்பு வைபவம் எதிர்வரும் 12மே திகதி இடம் பெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள கொடியேற்த்தை காண்பதற்காக வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கதிர்காமத் திருத்தலத்தில் கூடியுள்ளனர். இதேவேளை பல நாட்களாக பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் கதிர்காமத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கதிர்காமதத்திற்கு…
-
- 1 reply
- 628 views
-
-
இந்திய உளவுத்துறையின் சதி காரணமாகவே தானும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் எதிரிகளாக நோ்ந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலைப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்திற்குள் இராணுவத்தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு என்று ஏற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் இராணுவ ஜெனரல்கள் இருவருடன் தனிப்பட்ட முறையிலான உரையாடலொன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக…
-
- 10 replies
- 1.9k views
-
-
[Friday, 2011-07-01 17:23:11] சிறிலங்காவில் வெள்ளை வான் கடத்தல்காரர்களால் கடத்திச் செல்லப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக தகவல்களை அறியத்தரவேண்டும் எனக் கோரி நூற்றுக்கணக்கான மக்கள் நேற்றயதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடத்திச் செல்லப்பட்ட மற்றும் ,புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற நிலையில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த தமது பிள்ளகைள் தொடர்பாகவோ அல்லது கணவன்மார் தொடர்பாகவோ இதுவரை தமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். திருகோணமலைத் துறைமுக நகரில் கடமையில் ஈடுபட்டுள்ள சிறிலங்காக் கடற்படையினர் எனத் தம்மை அடையாளம் காட்டிய சிலர் பிரதாபன், ஜெகரூபன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு ஆண் பிள்ளைகளையும் 2008ல் …
-
- 1 reply
- 395 views
-
-
[Friday, 2011-07-01 11:13:04] தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் நடைபெற்று பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஒரு தரப்பாகக் கலந்து கொள்ள வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு கலந்து கொள்வதன் மூலம் மனத்தடைகளையே தோற்றுவிக்கும் எனத் டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தற்போது அரசு- கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளில் தாமும் பங்கு கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார…
-
- 5 replies
- 814 views
-
-
Friday, July 1, 2011, 15:26சிறீலங்கா, முதன்மைச்செய்திகள் யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்திருக்கும் இராணுவம் மற்றும் கடற்படை அண்மையில் தொடர்ச்சியாக நடத்திய கூட்டு இராணுவப் பயிற்சிகள் மூலம் யாழில் உள்ள மக்களை தொடர்ந்தும் ஒரு யுத்தப் பீதிக்குள் வைத்திருக்க முயல்வதாக அங்குள்ள சிவில் சமூக அமைப்புக்கள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.. இந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெற்ற தீவிர கூட்டு இராணுவப் பயிற்சிகளால் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகள் எங்கும் பலத்த அதிர்வலைகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது… வடமராட்சி கிழக்கின் நாகர்கோவில் பிரதேசங்கள், வலிகாமத்தின் மாதகல் கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் காது கிழியக் கேட்கும் குண்டுச் சத்தங்களால் மக்கள் தங…
-
- 0 replies
- 602 views
-
-
[Friday, 2011-07-01 17:06:02] தங்காலை பிரதேச சபைத் தலைவர் பயணம் செய்த வாகனத்தின்மீது இனந்தெரியாத நபர்களால் இன்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வீதாரன்தெனிய பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.seithy.com/breifNews.php?newsID=45773&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 481 views
-