ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
[ சனிக்கிழமை, 11 யூன் 2011, 00:31 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] இறுதிப்போரின் பின்னர் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாம்கள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்பட்டு விடும் என்று சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். “ தற்போது புனர்வாழ்வு முகாம்களில் 3572 முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் யாவும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து விடும். அதன் பின்னர் அனைத்து புனர்வாழ்வு முகாம்களும் மூடப்பட்டு விடும். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் புனர்வாழ்வு அளிப்பதற்கென 11,664 முன்னாள் போ…
-
- 1 reply
- 527 views
-
-
இலங்கை வந்துள்ள இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று காலை 10.30 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரையான ஒன்றரை மணிநேர சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பானது இந்திய தூதுவருடை இல்லத்தில் இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகள், வடக்கு கிழக்கு காணி, வணக்கஸ்தலங்கள், கலாச்சார நிலங்கள் தொடர்பாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பேசப்பட்ட மேலதிக விடயங்கள் தொடர்பிலும் கலந்த…
-
- 2 replies
- 948 views
-
-
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விடுத்துள்ள அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார். My link
-
- 2 replies
- 734 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 12:22 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மே மாதம் சிறிலங்காவுக்கு 48 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் சிறிலங்கா வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 39சதவீத அதிகரிப்பாகும். இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த மாதம் பிரித்தான…
-
- 4 replies
- 945 views
-
-
[ சனிக்கிழமை, 11 யூன் 2011, 01:40 GMT ] [ கார்வண்ணன் ] 1971இல் இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்கியதற்காக சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்துள்ளது. இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு சென்றுள்ள நிலையிலேயே பாகிஸ்தான் நன்றி கூறியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா – பாகிஸ்தான் வர்த்தக சபையின் கூட்டத்தில் பேசிய போதே, சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சீமா இலாகி பலோச் இவ்வாறு நன்றி கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் தூதுவர் இலாகி பலோச், “ நாங்கள் சிறிலங்காவை நம்புகிறோம். சிறிலங்கா தனது இறைமை விடயத்தில் விட்டுக் கொடுக்காமல் இருப்பதையிட்டு பெருமை கொள்கிறோம். எ…
-
- 1 reply
- 820 views
-
-
இலங்கையில் தமிழர்களுடன் விரைவில் அரசியல் ஒப்பந்தம் செய்துக்கொள்ளுமாறு அதிபர் ராஜபக்சேவை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை சென்றுள்ள வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் ஆகியோர் அந்நாட்டு அதிபர் ராஜபட்சேவை 11.06.2011 அன்று சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர மேனன், கூடிய விரைவில் தமிழர் பிரதிநிதிகளுடன் அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுவதே நல்லது என்று ராஜபக்சேவிடம் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தார். தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்கும் அரசியல் சாதன சட்டத் திருத்தத்தை கொண்டுவர இலங்கை ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அ…
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத்தமிழர்களின் அடிப்படை பிரச்சினை பற்றி இந்திய மத்திய அரசுக்கு புரியவில்லை- தினமணி Saturday, June 11, 2011, 12:57 கட்டுரைகள் தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் இரு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டுமே கருத்துமாறுபாடின்றி பாராட்டுக்குரியவை. இரண்டுமே இலங்கை தொடர்பானவை. முதலாவது தீர்மானம், கச்சத்தீவை மீட்கும் முயற்சி. இரண்டாவது தீர்மானம், இலங்கைத் தமிழர் வாழ்வை மீட்டெடுக்கும் முயற்சி. 1974, 1976 ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவின் எல்லையிலிருந்து பிரிக்கப்பட்டு இலங்கையில் சேர்க்கப்பட்டது. கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் கோயிலுக்குச் சென்று வருவதும், தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடி வலைகளை உலர்த்துவதும் எப்போதும்போல, இலங்கை…
-
- 1 reply
- 1k views
-
-
[ சனிக்கிழமை, 11 யூன் 2011, 00:49 GMT ] [ தா.அருணாசலம் ] கொழும்பில் இராணுவத் தலைமையகத்துக்குச் சொந்தமான நிலத்தை இரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது தொடர்பாக எந்தக் கணக்கு வழக்கும் அரசாங்கப் பதிவேடுகளில் இல்லை என்றும் இதில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே இந்த நிலத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார். இந்தவிவகாரம் தொடர்பாக நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐதேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, இராணுவத் தலைமையகத்துக்குச் சொந்தமான நிலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது தொடர்பான தரவுகள் எதும் அரச…
-
- 0 replies
- 829 views
-
-
ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டனை தர வேண்டும் என்று திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது. சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக வழக்கறிஞர்கள் அணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் ஈழத் தமிழர்களை பல லட்சக்கணக்கில் கொன்று குவித்தும், எஞ்சிய தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்தும் நடைபிணங்களைப் போல நடத்திட்ட சிங்கள இராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வந்த ஐ.நா. குழுவின் அறிக்கையை அனைத்து நாடுகளும் மனிதநேய அடிப்படையிலும் இன ஒடுக்கல் கொடுமைக்கு எதிராகவும் இருப்பதால், உரிய சட்ட நடவடிக்கை எடுத்து குற்றவாளிக் கூண்டில…
-
- 0 replies
- 560 views
-
-
இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்: நடிகர் விஜய் இலங்கை தமிழர்கள் அமைதியோடும், உரிமைகளோடும் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். இலங்கையில் பல்லாயிரணக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து போர்க் குற்றம் புரிந்ததாக ஐநா சபையால் போர்க் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் மற்றும் இலங்கை தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை – பங்களாதேஸ் அரசுகளுக்கு இடையில் ஒப்பந்தம்! Published on June 11, 2011 No Comments பங்களாதேஸ் மற்றும் இலங்கை அரசாங்ககங்களுக்கு இடையில் கடல் நடவடிக்கைகள் தொடர்பான சேவை ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது. இலங்கையின் சார்பில் துறைமுக மற்றும் பொருந்தொருக்கள் பிரதியமைச்சர் ரோகித அபேகுணவர்தன மற்றும் பங்களாதேஸ் சார்பில் அந்த நாட்டின் கடற்சேவைகள் அமைச்சர் சாஜான் கான் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்போது கருத்துரைத்த பிரதியமைச்சர் ரோகித அபேகுணவர்தன இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் வலுப்படுவதாக குறிப்பிட்டார். அத்துடன் கடல் போக்குவரத்து தொடர்பில் இருநாடுகளும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக நன்மை பெறும் எனவும் அவர் தெரிவி…
-
- 1 reply
- 432 views
-
-
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையிலான இந்திய உயர்மட்டக்குழு இன்ற பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை சந்தித்தது. இந்த சந்திப்பில், இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ், இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஷபக்ஷ, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா மற்றும் வெளிவிவகார செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆகியோர் கலந்துகொண்டனர். இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் …
-
- 1 reply
- 701 views
-
-
மகஸின் தமிழ் அரசியல் கைதிகள் ஏனைய கைதிகளால் நிர்வாணப்படுத்தி சித்திரவதை Saturday, June 11, 2011, 8:05 சிறீலங்கா கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஏனைய கைதிகளால் மனிதாபிமானமற்ற வகையில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அரசியல் கைதிகளின் ஆடைகளை ஏனைய கைதிகள் பலவந்தமாகக் கழற்றி கேவலப்படுத்துகிறார்கள். இவற்றை கண்டும், குருடர்களைப் போல சிறை அதிகாரிகள் செயற்படுகிறார்கள் – என்று நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிட நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண வெள்ள…
-
- 0 replies
- 555 views
-
-
அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி 11 ஜூன் 2011 தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக் காட்சியை ஒளிபரப்ப சனல் 4 அனுமதி தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- சனல் 4 தொலைக்காட்சி நிர்வாகம் இதுகாலவரை ஒளிரப்பாத பார்ப்பவர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விரிவான காணொளிக்காட்சியை ஒளிபரப்ப அனுமதி வழங்கியிருக்கிறது. அக்காணொளிக்காட்சியில் படுகொலைகள், பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போராளிப் பெண்களின் உடல்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன. இவை இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்களுக்கு சாட்சியங்களாக அமைகின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
முந்நூறு தமிழர்களை பிரித்தானியா இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது 300 Lankans to be deported from UK Thursday, 09 June 2011 01:42 By R.Sethuraman Around 300 Sri Lankans are to be deported from the United Kingdom to Sri Lanka on June 16, Tamil Mirror online learns. Sources in the UK told Tamil Mirror that the UK Border Agency had arranged a special charter flight to deport around 300 persons whose asylum requests had been turned down by the authorities. Mr. Nishan Paramjorthy, a human rights advocate in the UK told Tamil Mirror online that some of his clients had got notice about their “removal” from the UK Border Agency. He said most of the per…
-
- 4 replies
- 938 views
-
-
Friday, June 10, 2011, 19:09சிறீலங்கா வன்னிப்போரின்போது காயமடைந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு இளைஞர் ஒருவர் சென்னையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது; கோம்பாவில், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 20 வயதுடைய இராசேந்திரம் நிஷாகரன் என்ற இளைஞர் வன்னியில் நடைபெற்ற போரின் போது பலத்த காயம் அடைந்திருந்தார். போருக்குப் பின்னர் இலங்கையில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தார். சென்னையில் நண்பர்களுடன் விளையாட்டு மைதானம் ஒன்றில் நின்றிருந்தவேளை திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்ததாக தமிழகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடலின் பல பாகங்களிலும் காணப்பட்ட குண்டுச் சிதறல்கள் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் என்…
-
- 2 replies
- 926 views
-
-
சட்டப் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்! ருத்ரகுமாரன் ராஜபச்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவும் சிறிலங்கா மீது பொருளாதார தடைவிதிக்கவும் இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஏகமனதாக தீர்மானமொன்றை நிறைவேற்றுவதில் முன்னின்ற தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களை ஈழத் தமிழர் தேசத்தின் சார்பில் வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் பெருநிறைவடைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப் பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தமிழகம் தொடர்ந்து செயற்படவேண்டும் என வேண்டுவதாகவும் தமிழக முதல்வர் இதற்கு ஆவன செய்வார் என தாம் உறுதியாக நம்புவதாகவும் நாடுகடந்…
-
- 2 replies
- 453 views
-
-
மன்னாரில் 11 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் Friday, June 10, 2011, 22:38 சிறீலங்கா தலைமன்னார் பிரதான வீதி சின்னக்கருஸல் கிராமத்தில் 11 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அத்துடன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி சிறுமி நேற்று வியாழக்கிழமை பாடசாலை முடிவடைந்த நிலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது குறித்த நபரினால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது…
-
- 0 replies
- 763 views
-
-
வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 17:03 GMT ] [ கார்வண்ணன் ] இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இன்று நண்பகல் கொழும்பு வந்தடைந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இன்று மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேசினர். இவர்களுடன் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் ஏ…
-
- 1 reply
- 1.4k views
-
-
காரைக்கால் மாவட்ட பா.ம.க செயலாளர் க.தேவமணி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகள் மீதான இறுதிக்கட்ட தாக்குதலின்போது பன்னாட்டு போர் நெறி முறைகளை மீறிய இலங்கையை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இதற்காக ஐ.நா சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்தியாவும், இதரநாடுகளும் சேர்ந்து இலங்கை நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற இரண்டு முக்கியமான தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார். மாறாக இலங்கையில் வாழும் அப்பாவி தமிழ் மக்களை முழுமையாக ஒழித்துக் கட்டும் வகையில் ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு நடவடிக்கை எடுத்தது. மக்கள் கூடும் மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் …
-
- 0 replies
- 596 views
-
-
போர்க் குற்றத் தீர்மானம் எங்களுக்கு கொழு கொம்பு: சிறீதரன் எம்.பி. ஈ.ழத் தமிழினத்தை இனப்படுகொலை செய்த இலங்கை அரசையும், அதன் ஆட்சியாளர்ளையும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் தங்கள் இனத்திற்கு அரசியல் உரிமையை பெற்றுதரும் கொழு கொம்பு என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞ்ஞானம் சிறீதரன் கூறினார். சென்னை வந்த சிறீதரன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியபோது, தமிழினத்திற்கு விடிவுத் தேடித் தரும் இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூற…
-
- 0 replies
- 1.1k views
-
-
முதலமைச்சர் ஜெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம்! – நடராஜன் மகிந்தவிற்கு ஆலோசனை Friday, June 10, 2011, 17:30 உலகம், சிறீலங்கா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம் எனவும் ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்திருந்த ஜனாதிபதியின் உறவினரான திருகுமார் நடராஜனை ஜனாதிபதி நேற்றிரவு ஆபாச வார்த்தைகளினால் திட்டித் தீர்த்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய யோசனை பற்றி ஜனாதிபதி செயலகத்தின் மூத்த அதிகாரியொருவர் அறிவித்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு திட்டித்தீர்த்துள்ளார். தமிழ் நாடு அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து நேற்றிரவு 8 மணியளவிலேயே ஜனாதிபதிக்க …
-
- 4 replies
- 1.4k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 01:50 GMT ] [ அ.எழிலரசன் ] ஈழத்தமிழரின் அரசியல் மற்றும் புனர்வாழ்வு விவகாரங்கள் குறித்தும், தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்புக் குறித்தும் கொண்டுள்ள தமது கரிசனைகள் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம் எடுத்துக் கூறியுள்ளார். நேற்றுமாலை சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போதே அவர் இந்த விபரங்களை எடுத்துக் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது கச்சதீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது சிறிலங்காப் படையினர் நடத்தும் தாக்குதல்கள் குறித்தும், கடந்த காலங்களில் சிறிலங்கா அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பின்பற்றப்படாது போனது குறித்தும் சிவ்சங்கர் மேனனு…
-
- 1 reply
- 807 views
-
-
Friday, June 10, 2011, 19:26சிறீலங்கா மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இன்று படையினர் நடத்திய தேடுதலின் போது 19பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெல்லிப்பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் வலிகாமம் வடக்கு பிரதேசத்தை சேராத வெளியிடங்களை சேர்ந்தவர்கள் என்றும் கொள்ளை உட்பட குற்றச்செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3பேர் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக தெல்லிப்பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏனையவர்கள் பற்றியும் விசாரணை நடைபெறுவதாகவும், காவல்த…
-
- 0 replies
- 689 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 11:38 GMT ] [ நித்தியபாரதி ] பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளும் ஏன் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களிற்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளன? இதற்கான பதிலை விபரித்து கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அப்பத்தியின் முழுவிபரமாவது, சிறிலங்கா மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவின் அறிக்கையை எதிர்த்து ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிறிலங்கா சார்பாகப் பேசிய நாடுகளில் பாகிஸ்தான் பிரதான பங்கு வகிக்கின்றது. …
-
- 0 replies
- 477 views
-