ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
போர் ஆயுதமாக பாலியல் பலாத்காரம் பாவிக்கப்பட்டதற்காக சிங்கள இனத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில் வெட்கப்படுகிறேன்.இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியாக மறியுள்ள ஒரு நாட்டில் இருந்து வருகை தந்த துயருறும் சமூகமாக நாங்கள் இங்கே கூடியிருக்கின்றோம் [Monday, 2011-06-06 11:15:33] இலங்கை இரண்டு துரித பரிமாணங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு தோல்வியுற்ற ஜனநாயகத்திலிருந்து குடும்ப ஆட்சியை நோக்கி மட்டுமன்றி ஒரு தேசிய பாதுகாப்பு அரசை நோக்கியும் அது சென்று கொண்டிருக்கிறது. யுத்தத்தின் பின்னான இலங்கையில் வடக்கில் இராணுவ மயமாக்கம் துரித கதியில் நடைபெறும் அதேவேளை தெற்கில் உறுதியான மற்றொரு வகை உத்தியில் இராணுவ மயமாக்கம் நடைபெறுகிறது. வடக்கில் தற்காலிக இராணுவ முகாம்கள் நிரந்த…
-
- 3 replies
- 2.1k views
-
-
இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லோட்ஸ் விளையாட்டு அரங்கருகே தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பிரிட்டனின் த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் 2.45 மணியளவில் மஞ்சள் பலூன் லோட்ஸ் மைதானத்திற்கு மேலாகப் பறக்கவிடப்பட்டது. தடித்த கறுத்த எழுத்துகளால் இலங்கையைப் பகிஷ்கரிக்குமாறு அதில் எழுதப்பட்டிருந்தது. இந்த பலூனில் கட்டியிருந்த நூலில் தமிழ்க் கொடியும் சேர்த்து பிணைக்கப்பட்டிருந்தது. கடந்த 30 வருடங்களாக இலங்கை சமூகத்துடன் ஒன்றிணைந்ததாக ஏதோ ஒரு விதத்தில் கிரிக்கெட் அடிக்கடி வெளிப்படுத்தப்படுகின்றது. இலங்கைச் சமூகத்தின் சகல துன்பங்களையும் ஆற்றுப்படுத்துவதாக கிரிக்கெட் இருப்பதாக இந்த வாரம் குமார் சங்கக்கார வர்ணித்திருந்தார். ஆனால…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிங்களஆதிக்ககனவினுள் தீக்குச்சிகிழித்து எறிந்தவன் அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்ற ஒரு காட்சியை தமிழீழம் பார்த்து அறிந்து இருக்கவில்லை.மிகவும் உணர்ச்சிநிறைந்த ஒரு இறுதிநிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை.தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெதுமெதுவாக ஆயுதப் போராட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுதபோராட்ட வீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழிஅனுப்பு நிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட்டுத்தில் நின்று கொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப் பின்னர் போராட்டகளத்துக்கு வந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக்கொடுத்தது.பொன்.சிவகுமாரன் தான்வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டதுபோலவேதன் மரணத்தின்போதும் விடுத…
-
- 0 replies
- 736 views
-
-
Why, the New LTTE Leader Kumaran Padmanathan (KP) Represent the Sri Lankan Government as the Spokesperson? So through lack of awareness, lack of concern or simply because it suites a particular argument to hold on to power, President Mahinda Rajapaksa and his brother Defence Secretary Gotabaya Rajapaksa, is misleading the general public in Sri Lanka by allowing Kumaran Padmanathan to be their spokesperson. They used all available means, printed media, electronic media and the public meetings to mislead the educated and the un-educated people saying that the “dead” LTTE bogy is trying to raise its head again, but use the present LTTE leader to mislead the people. The …
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
Monday, June 6, 2011, 22:56சிறீலங்கா கடந்த வெள்ளிக்கிழமை (03) ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற காணொளி காண்பிக்கப்பட்ட பின்னர், அவையில் இருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் கேள்விகளுக்கு சிறீலங்கா அமைச்சர் மகிந்தா சமரசிங்கா தாறுமாறாக பதில் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. காணொளி காண்பிக்கப்பட்ட பின்னர் அதனை ஏற்பாடு செய்திருந்த அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி பீற்றர் ஸ்பிலின்டர் சிறீலங்கா பிரதிநிதிகளுக்கு 10 நிமிடம் உரையாற்ற அனுமதி வழங்கியிருந்தார். ஆனால் காணொளி தொடர்பில் பேசாது வாய்க்கு வந்தபடி 15 நிமிடம் பேசிய சிறீலங்கா தரப்;பை ஸ்பிலின்டர் தலையிட்டு நிறுத…
-
- 1 reply
- 2k views
-
-
Posted by சோபிதா on 06/06/2011 in செய்தி கடந்த வெள்ளிக்கிழமை (03) ஜெனீவாவில் இடம்பெற்ற போர்க்குற்ற காணொளி மீதான விவாதத்தில் ஒரு சமயத்தில் நிலை தடுமாறிய சிறீலங்கா அமைச்சர் மகிந்தா சமரசிங்கா, மனித உரிமைச் செயற்பாட்டாளர் திரு கிருபாகரனை கோப்பி குடிக்க வருமாறு அழைத்ததால் அரங்கத்தில் சிரிப்பு ஒலி எழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: காணொளியின் பின்னரான கேள்வி நேரத்தின் போது பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் திரு கிருபாகரன் அவர்கள் மேதகு அமைச்சர் அவர்களே என கேள்வியை ஆரம்பித்திருந்தார் (ஐ.நா விதிகளின் பிரகாரம் அப்படித்தான் அழைக்க வேண்டும்). ஆனால் அதனை இடைமறித்த சமரசிங்கா நாம் இருவரும் ஒருவரை ஒரு…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறீலங்கா தொடர்பில் அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர் மைக்கல் கிரிம் (Michael Grimm) கொண்டு வந்த பிரேரணைக்கு, கொங்கிரஸின் சில உறுப்பினர்கள் எதி;ர்ப்பை வெளியிடுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 17ஆம் நாளன்று, கொங்கிரஸின் நியூயோர்க் 13 ஆம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மைக்கல் கிரிம் ஸ்ரீலங்காவின், மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார். எனினும் இந்த பிரேரணை, இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் முரண்பாடுகளை கொண்டிருப்பதாக கொங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த வாரம், சட்டவிரோத கொலைகள் மற்றும…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத்தமிழர்களை லண்டனில் சந்திக்கவுள்ள அருந்ததிராய்! Monday, June 6, 2011, 23:04 இந்தியா, உலகம் பிரபல எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய் அவர்கள் லண்டன் வந்துள்ளார். பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய் அவர்கள் தற்சமயம் லண்டன் வந்துள்ளார். இந்திய அரசிற்கு சிம்மசொப்பனமாக இருக்கும் இவர், இந்தியா ஆதிவாசிகளைக் கொன்று குவித்து அவர்களின் காணிகளைக் கைப்பற்றி வருவதாக வெளிப்படையாகவே BBC தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார். இந்தியா ஒருவகையில் தனது பூர்வீகக் குடிமக்களை இன அழிப்புச் செய்கிறது என்ற இவரது கூற்று, பல மேற்குலக நாடுகளை அதிர்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. இந் நிலையில் இவர் ஈழத் தமிழர்களை லண்டனில் சந்திக்க நேரத்தை…
-
- 0 replies
- 522 views
-
-
யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்களக் குடும்பங்களால் மீண்டும் சர்ச்சை – 06 ஜூன் 2011 யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்களக் குடும்பங்கள் நிலை மீண்டும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. சத்தமின்றி அவர்களது குடியிருப்பு பகுதியில் வசதி வாய்ப்புகளை தெற்கு ஏற்படுத்தியே வருகின்றது. அவ்வகையில் அங்கு அவர்கள் சனசமூக நிலையமொன்றும் முளைத்துள்ளது. அண்மையில் வெசக் அனுட்டானங்களுக்கென வந்திருந்த பௌத்த துறவிகள் குழு இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது. இதனிடையே நாவற்குழி அரச காணியினில் குடியேறியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டியது தேசிய வீடமைப்பு அதிகாரசபையே என மீண்டும் இமெல்டா சுகுமார் கூறுகிறார். இக்குடியேற்றம் இடம்பெற்ற பல மாதங்கள் கடந்துவிட்ட போதும் அதையே தி…
-
- 0 replies
- 884 views
-
-
உள்ளக அரசியலில் சீரழியும் தமிழினம் _ தமிழ் மக்களிடையே தற்போது உள்ள உள்ளக சுயநல அரசியல் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் துவம்சம் செய்து கொண்டிருக்கின்றது. வடக்கு, கிழக்காகட்டும் மலையகமாகட்டும் ஒட்டு மொத்தத் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் புறப்பட்ட அரசியல் தலைமைகளின் உள்ளக சுயநல அரசியலால் இந்த நிலைமை இன்று உருவாக்கியுள்ளது. "தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன்'' என்ற வகையில் அரசியல் நடத்தப் புறப்பட்டவர்களே இன்றைய இந்த நிலைக்குக் காரண கர்த்தாக்களாக உள்ளனர். மக்களோ மனதுக்குள் அழுது கொண்டு மௌனித்துப் போய் உள்ளனர். முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ள இவர்களின் அரசியல் குறித்து, கேள்வி எழுப்ப முடியாத நிலையிலும் தம…
-
- 3 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று மகிந்த ராசபக்ச சில வைபங்களில் கலந்து கொண்டார். இந்த வைபவங்களில் மக்கள் அதிகம் கலந்து கொண்டனர் என காட்டுவதற்காக மன்னாரிலிருந்து ஆளும் கட்சி அமைப்பாளர்கள் பலரை பணம் கொடுத்து அழைத்து சென்றுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள மாதர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், இளைஞர் கழகங்கள், விளையாட்டக்கழகங்கள் ஆகிய அமைப்புக்களிலிருந்து பேருந்தில் இவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஒவ்வெரு சங்கம் மற்றும் கழகங்களில் இருந்து தலா 50 பேர் வரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அழைத்துச் செல்லப்படும் ஒவ்வெருவருக்கும் காலை மதிய உணவுகள் மற்றும் கொடுப்பனவாக ஆயிரம் ரூபா தருவதாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டபின் மன்னாருக்…
-
- 0 replies
- 820 views
-
-
[Monday, 2011-06-06 06:51:26] யாழ். மாவட்டத்தில் அரச நிகழ்வுகளில் இனிமேல் போசணை மிகுந்த பழங்கள் மற்றும் மூலிகைப் பானங்களை ருசித்து அருந்தி மகிழ முடியும். தற்போது வழங்கப்பட்டு வரும் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளுக்குப் பதிலாகவே இவை வழங்கப்படவுள்ளன.மாவட்டத்தில் நிலவும் போசணையின்மையை முழுமையாக ஒழிக்கும் திட்டத்தின் முன்னோடிச் செயற்பாடாகவே இந்தப் புதிய நடைமுறை வருகிறது.யாழ். செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போசாக்குக் கருத்தரங்கு நிகழ்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: * யாழ். மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போசாக்கு குறைவாகவுள்ள பிரதேசங்கள் எவை என இனங்காணுதல். * அவ்வாறு இனங்கா…
-
- 4 replies
- 1.3k views
-
-
கணவன், மனைவி பிரிவது போல் தமிழ், சிங்கள மக்கள் பிரிய முடியாது! - அமைச்சர் டலஸ் அழகப்பெரும இலங்கையில் தமிழ், சிங்கள மக்கள் சதோதரர்கள் போல வாழ்வதால் கணவன், மனைவி பிரிந்து விடுவது போல் அவர்கள் பிரிந்து விட முடியாது என சிறிலங்காவின் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று (06.06.11) புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் போராளிகளை விடுவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'தமிழ்,சிங்கள மக்கள் ஏன் பிரிந்து வாழமுடியாது என அண்மையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியிருந்தார். க…
-
- 3 replies
- 1.5k views
-
-
Jun 7, 2011 / பகுதி: செய்தி / புலம் பெயர்ந்தோரின் யாழ் – கிளி சொத்துக்கள் பறிமுதல்.. தமிழர் பகுதிகளைச் சிங்கள மயமாக்கும் நாசகாரத் திட்டத்தின் இன்னுமோர் வெளிப்பாடு அண்மையில் தோன்றியுள்ளது. யாழப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து சென்று வெளி நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் காணி நிலங்கள் வீடுகளை அரசுடமையாக்கும் சட்டம் அமுலாக இருக்கிறது. ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் பாவனையில் இருந்த நிலங்களும் வீடுகளும் என்று காரணம் காட்டித் தமிழர் சொத்துக்களை இராணுவம் தனக்குச் சொந்தமாக்கியுள்ளது. எஞ்சியிருப்பதையும் அபகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் -கிளிநொச்சி இராணுவ ஆளுனர் ஏராளமான நிலங்களும் வீடுகளும் வெளி நாட்டில் வாழும் தமிழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பொன்சேகாவுக்கு எதிரான வழக்கை அவதானிக்க நீதிமன்றம் சென்ற மார்க் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையை அவதானிப்பதற்காக அனைத்து நாடாளுமன்றங்களின் சங்கத்தைச் சேர்ந்த இராணி வழக்கறிஞரும் பாரிஸ்டருமான மார்க் ட்ரொவல் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். இவரை பிரதி சொலிஸ்டர் ஜெனரல் புவனேக அலுவிஹார, சரத் பொன்சேகாவின் வழக்குரைஞர் நளின் லத்துவஹெட்டிக்கு அறிமுகம் செய்துவைத்தார். பின்னர் மார்க் ட்ரொவல் சரத் பொன்சேகாவுடனும் அவரது மனைவியுடனும் பேசினார். பின்னர் ட்ரொவல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, டிரான் அலஸ், ஜயந்த கெற்றகொட ஆகியோருடன் பேசினார். மார்க் ட்ரொவல் சர்வதேச பிரபலம் பெ…
-
- 1 reply
- 512 views
-
-
இந்திய அரசு உணரத் தவறினும் இந்திய தேசம் உணர்ந்துள்ளது இலங்கையில் தமிழ் மக்கள் பெரும் அவலங்களை எதிர்நோக்கியுள்ளனர். சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக வாழும் பரிதாபத்திலிருப்பது வேதனைக்குரியது. இவ்வாறு தமிழகத்தின் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழக முதல்வராக செல்வி ஜெயலலிதா பதவி ஏற்ற பின் சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சுர்ஜித் சிங் பர்னாலா, ஈழத்தமிழர்களின் அவலத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி உரையாற்றினார். அவரின் இந்த உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஈழத் தமிழினத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததன் காரணமா…
-
- 1 reply
- 1.2k views
-
-
இனச் சுத்திகரிப்பு மேற்கொண்டமைக்காக ருவண்டா இராணுவத் தளபதிக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை : 06 ஜூன் 2011 ரூவண்டாவின் முன்னாள் இராணுவத் தளபதிக்கு இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா 30 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதவான்களில் ஒருவராக அசோக டி சில்வா கடமையாற்றி வருகின்றார். ரூவண்டாவின் முன்னாள் இராணுவத் தளபதி அகஸ்டின் பிஸின்முகுவிற்கு இவ்வாறு 30 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு ரூவண்டாவில் இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு முதல் …
-
- 1 reply
- 570 views
-
-
எனது சேவையை அன்று செய்ய முடியாமல் விடுதலைப் புலிகள் அச்சுறுத்தினர். அதேபோல் இன்றும் அச்சுறுத்துகின்றனர் என யாழ்.அரச அதிபர் இமெல்டா ஹத்துருசிங்க தெரிவித்தார். பயங்கரவாதத்தினை தோற்கடித்தமை மூலமாக இராணுவத்தினர் கற்றுக்கொண்ட அனுபவங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்துகொண்ட மூன்று நாள் கருத்தரங்கு நேற்றுமுன்தினம் முடிபடைந்துள்ளது. இறுதிநாள் கருத்தரங்கில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டபோதே யாழ். மாவட்ட அரச அதிபர் மேற்படி தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், உண்மைகளை உள்ளபடி உலகிற்கு எடுத்துக் கூறுவதால் பல பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுக்கிறேன். இப்போதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் மத்தியிலே நாள் வாழ்கிறேன். இருந்த போதிலும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பி…
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி யாழ். துரையப்பா விளையாட்டரங்களில் ஒருவர் இன்று உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். 'போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் 'பிரதிநிதியான வவுனியாவைச் சேர்ந்த என். சகாதேவன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். கடந்த கால போரின் காரணமாக, இழக்கப்பட்ட உயிர் உடமைகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. உதவி வழங்க வேண்டுமெனவும் கோரியும் போரில் உயிரிழந்த மக்களுக்கென நினைவுத்தூபிகள் அரசாங்கத்தினால் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். இம்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையெனில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற…
-
- 1 reply
- 980 views
-
-
சமர்ப்பிக்கப்படவிருந்த அதிகாரப்பகிர்வு சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்திய அரசின் வலியுறுத்தலால், வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் வகையில் கொண்டு வரவிருந்த சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசியலமைப்பின் 20 வது சட்டத்திருத்தம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவிருந்தது. எனினும் அதனை தற்போது இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்கப் போவதில்லை என்று தீர்மானித்துளளதாக லங்காதீப செய்திதாள் தெரிவித்துள்ளது. தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பைப் போன்று இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் எதிர்ப்பு ஏற்படல…
-
- 6 replies
- 781 views
- 1 follower
-
-
கொக்காவில் பகுதியில் புதிய தொலைத்தொடர்புக் கோபுரம் திறந்துவைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ இன்று காலை திறந்து வைத்தார். 174 மீற்றா உயரமான தொலைத்தொடர்பு பரிவாத்தனை கோபுரம், 400 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இந்தக் கோபுரத்தின் மூலமாக, வடபகுதி முழுவதற்குமான தொலைக்காட்சி, மற்றும் வானொலி சேவைகளை ஒளி மற்றும் ஒலிபரப்ப முடியுமென்று தெரிவிக்கப்பட்டது. அரச தனியார் துறையினரின் தேவைக்கு ஏற்றவகையில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் இடஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படையினரின் சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. கொ…
-
- 1 reply
- 609 views
-
-
மின்னேரிய இராணுவம் முகாமில் தலைமைத்துவப் பயிற்சியின் பின்னான களியாட்டத்தில் நிர்வான நடனம்? 06 ஜூன் 2011 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மின்னேரிய இராணுவம் முகாமில் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டு, வருகிறது. அந்த முகாமில் பயிற்சியளிக்கப்படும் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்டு நிகழ்வில், பெண்கள் அழைத்து வரப்பட்டு, நிர்வாண நடனம் ஆடப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனால் மின்னேரிய முகாமில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் பெரும் அசளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். உயர் பண்புகளை கொண்ட தலைவிகளாக வர வேண்டுமானால், இவ்வாறான உயர்ந்த கலாசார விழுமியங்களை கற்று அறிந்து கொள்ள வேண்டும் என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுக…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழர்களை தனியாக விட்டுவிடுங்கள்: இந்தியாவிலிருந்து வெளியாகும் தெஹெல்கா கட்டுரை இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆயினும் யுத்தத்தின் பிடியிலிருந்து நகர்ந்து செல்வதற்கு நாடு தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றது. போர்க் குற்றச்சாட்டுகள் இன்னமும் தொடர்கிறது. இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு குறித்து எவ்வித சமிக்ஞைகளும் இன்னமும் தெரியவில்லை. இவ்வாறு 'இலங்கைத் தமிழர்களை தனியாக விட்டுவிடுங்கள்' என்ற தலைப்பில் இந்தியாவிலிருந்து வெளியாகும் தெஹெல்கா ஊடகம் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதலமைச்சர் செ…
-
- 1 reply
- 979 views
-
-
ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கையின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கப் போகிறது என்ற கேள்வி இப்போது அனைவடத்திலும் வலுவாக எழுந்துள்ளது.இந்த அறிக்கை வெளியாகி நாட்கள், வாரங்களாகி, அது இப்போது மாதங்களாகத் தொடங்கி விட்டன. ஆனால் அது சார்ந்த எந்தவொரு உருப்படியான நகர்வும் ஐ.நா. தரப்பில் மேற் கொள்ளப்படவில்லை. இந்த அறிக்கை வெளியான போது அதுபற்றி இருந்த எதிர்பார்ப்பு இப்போது மெல்ல, மெல்ல வலுவிழக்கத் தொடங்கியுள்ளது. அதற்குக் காரணம், இந்த அறிக்கை மற்றும், ஐ.நா. தொடர்பாக ஏற்பட்ட மிகையான எதிர்பார்ப்பு என்பன மட்டும் அல்ல. அதற்கும் அப்பால் இலங்கை அரசின் இழுத்தடிப்பு இராஜதந்திரம், ஐ.நாவின் உறுதியற்ற தன்மையும் தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ …
-
- 3 replies
- 765 views
-
-
இலங்கையில் நிரந்தர கடற்படை முகாம் அமைக்கும் திட்டம் கிடையாது என சீனா அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நிரந்தர கடற்படை முகாம்களை அமைப்பதற்கு சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் கான்கில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் பத்தாவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு முகாம் அமைக்கப்பட வேண்டுமென்றால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தானின் குட்வாரிலும், இலங்கைத் துறைமுகம் ஒன்றிலும் கடற்படை முகாம்களை அமைப்பதற்கு சீனா ஆர்வம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிர…
-
- 1 reply
- 1.3k views
-