ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
ரணில் பக்கம் சாய்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் அந்தக் கூட்டணியில் இருந்து ஐந்து எம்.பி.க்கள் மாத்திரமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் எதனையும் செய்ய முடியாத நிலை எனவே எதிர்வரும் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு வடக்கில் எதனையும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அ…
-
- 0 replies
- 189 views
-
-
கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக நாளை பொன்னாலையில் போராட்டம்! யாழ்ப்பாணம் – அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ள நிலையில் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தி பொன்னாலை சந்தியில் கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். பொன்னாலை சந்தியில், நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்திற்கு பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 177 views
-
-
இந்திய - இலங்கை பாலம் குறித்து த ஹிந்து வெளியிட்ட செய்தி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மேம்படுத்த வேண்டும் என்று த ஹிந்து தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில், இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை மேற்கொண்டிருந்தார். எனினும் அது உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை. முன்னதாக இருபது ஆண்டுகளுக்கு முன்னரும் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, சென்னையில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தலைமானாருடன் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தை இணைக்கும் பாலம் கட்டும் யோசனையை முன்வைத்திருந்தார். இது பிராந்திய பொருளாதார ஒருங்கி…
-
- 0 replies
- 211 views
-
-
08 DEC, 2023 | 06:02 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விசேட தேவையுடையவர்களின் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான எண்ணம் இருக்குமானால் அதனை அரசாங்கம் நீக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் விசேட தேவையுடையவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2012 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பு! இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்களினாலேயே இது கையளிக்கப்பட்டது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை இமயமலைப் பிரகடனம் உள்ளடக்கியுள்ளது. இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பாக மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தே…
-
- 12 replies
- 1.4k views
-
-
(எம்.மனோசித்ரா) பயங்கரவாதத் தடை சட்டம் அநாவசியமாகப் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை எமது அரசாங்கம் உறுதி செய்யும். எனவே காசாவுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் மனித உரிமைகள் தொடர்பில் எமக்கு கற்பிக்கத் தேவையில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைக்குள் மனித உரிமைகளை பாதுகாப்பதை நாம் பார்த்துக் கொள்கின்றோம். எம்மை விமர்சிக்கும் நாடுகளில் என்ன மனித உரிமைகள் இருகின்றன? காசாவில் 14 000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதனை நிறுத்துமாறு கூறுகின்றார்களா? மாறாக ஜன…
-
- 2 replies
- 360 views
-
-
மத்தள சர்வதேச விமான நிலையம் இந்தியாவிடம் ஒப்படைப்பு? ஹம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திர கூறியுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் மத்தள விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது. அங்கு பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனத்தின் ஊடாக வழங்க திட்டமிட்டுள்ளது மேலும் இந்த திட்டத…
-
- 9 replies
- 1.1k views
-
-
தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்க அரச மரத்துடன் இணைந்தது கண்டல்! (புதியவன்) இதுவரை தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்கும் மரமாக வெள்ளரசு மரம் இருந்து வருகின்ற நிலையில், அதற்கு பக்கத் துணையாக இன்று கண்டல் தாவரங்களும் இடம்பிடித்திருக்கின்றன. அராலி தொடக்கம் பொன்னாலை வரையும் மற்றும் காரைநகர் பிரதேசம் போன்ற இடங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கடற்படையினரால் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன. தொடர்ந்து அரச திணைக்களங்கள் பிரதேசத்திலுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் இந்த மரங்களை கடலுக்குள் மற்றும் கடற்கரையோரமாக நாட்டினர். அந்த மரங்கள் ஓரளவு வளர்ந்து தங்களை நிலைப்படுத்திக்கொண்ட தற்போதைய நிலையில், காடுகளை பராமரிக்கவேண்டிய வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் குறி…
-
- 1 reply
- 452 views
-
-
இரண்டு இந்திய மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிக்காக தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான அனைத்து பண்ணைகளையும் குத்தகைக்கு வழங்குவதற்கான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதன்படி, தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 32,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட32 பண்ணைகள் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. மேலும் விலங்குகள் மற்றும் நிலங்களின் மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கண்காணிப்புச் சுற்றுப்பயணத்திற்காக சம்பந்தப்பட்ட பண்ணைகளுக்குச் சென்றதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்நாட்டில் கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக NLDB மற்றும் Milco ஆகிய நிறுவனங்கள் பல வருடங்களுக்கு முன்னர் ஸ்…
-
- 5 replies
- 406 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 06 DEC, 2023 | 09:26 AM கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு குழப்பத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் எனும் மாணவனே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சடலமாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் குறித்த மதரஸாவின் நிர்வாகியையும் பொலிஸ…
-
- 1 reply
- 319 views
-
-
08 DEC, 2023 | 05:57 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மிகவும் குறைந்த மட்டத்திலான சம்பளத்தையே ஊடகவியலாளர்கள் பெறுகிறார்கள். ஊடகவியலாளர்களுக்கு எவ்விதமான நலன்புரி திட்டங்களும் தற்போது செயற்படுத்தப்படுவதில்லை.ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை.தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு அமைய ஊடகவியலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெகுஜன ஊடகம் மற்றும் துறைமுகம…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
08 DEC, 2023 | 05:43 PM (எம்.மனோசித்ரா) இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இந்தியா யோசனையொன்றை முன்வைத்துள்ளது. எனினும் இது தொடர்பில் உடன்படிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் கடந்த ஆண்டு கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் வரையறுக்கப்பட்டளவில் அனுமதி…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட ஆணைக்குழு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படுவதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து குறித்த சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், சட்டமூலம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை பிரஜைகளி…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
உள்நாட்டு கறுவாப்பட்டைக்கு சீன சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றது. இதனால் வருடாந்தம் இரண்டு பில்லியன் டொலர் பெறுமதியான கறுவாவை சீனாவிற்கு அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த ஏற்றுமதியானது நாட்டின் கறுவா சந்தைக்கு பெரும் அனுகூலமாகும் என கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக்க லிந்தர தெரிவித்துள்ளார். பல வருடங்களாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பலனாக அண்மையில் ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/284112
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
வடக்கிற்கு அனுப்பப்பட்ட 30,000 Kg சீனி திருப்பி அனுப்பப்பட்டது! வட மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 80,000 கிலோகிராம் சீனி அனுப்பப்பட்டிருந்த அதில் தரமற்றதாகக் கருதப்படும் 30,000 கிலோகிராம் சீனி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 320 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வட மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடற்தொழில் அமைச்சரிடம் உறுதியளித்திருந்தார். அத்துடன் கிடைக்கும் சீனியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 280 ரூபாவிற்கு மக்களிற்கு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் சீன…
-
- 1 reply
- 388 views
-
-
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஆறு புதிய பாரந்தூக்கிகளைப் பயன்படுத்தி கொள்கலன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்தார். கிழக்கு முனையத்தின் 80 வீதமான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். 825 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கட்டுமானத்திற்காக செலவிடப்படுகிறது. கிழக்கு முனையமானது வருடாந்தம் 2 மில்லியன் கொள்கலன்களை இயக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/284102
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு “லன்ச் ஷீட்” பயன்பாட்டிற்கு தடை விதிக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் கூடிய சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவில் இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் லன்ச் ஷீட் பாவனையால் ஏற்படும் சுற்றுச் சூழல் கேடு குறித்தும், “phthalates” என்ற புற்று நோய் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நீண்ட விவாதம் நடைபெற்றது. இதன்படி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, லன்ச் ஷீட்ட…
-
- 0 replies
- 479 views
- 1 follower
-
-
08 DEC, 2023 | 12:14 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணம் நெடுந்தீவுக்கு வருகை தருவதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிடுவது முக்கியமானது. அவ்வாறு வருகை தரும் போது அவர் கடற்படையின் படகை பயன்படுத்த கூடாது. பொதுமக்கள் பயன்படுத்தும் படகை பயன்படுத்த வேண்டும். அதேபோல் நெடுந்தீவுக்கு சென்றதன் பின்னர் முச்சக்கர வண்டியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் உண்மை பிரச்சினை அவருக்கு விளங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் போக்குவரத்து அமைச்சரிடம் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது எஸ்.ஸ்ரீதரன் முன்வ…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
Published By: VISHNU 06 DEC, 2023 | 09:43 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் சிறுவர்களின் மனங்களில் சிங்களவர் தொடர்பில் வைராக்கியம் விதைக்கப்படுகிறது. தனி ஈழ இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை. சிங்களவர்களும் இடமளிக்க மாட்டார்கள். நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கமாட்டோம். அவர்களும் யுத்தக் களத்துக்கு செல்ல வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்ட…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
நிதி வேண்டாம் – நீதியே வேண்டும்! வடக்கு கிழக்கில் போராட்டத்திற்கு அழைப்பு! adminDecember 8, 2023 குறுகிய காலத்துக்குள் ராஜபக்சக்களுக்கு தீர்ப்பளித்த நீதித்துறை சாட்சியங்களோடு உள்ள தம்மை கண்டுகொள்ளவில்லை எனவும், நீதி பெற்று தருவதை வலியுறுத்தி 10ம் திகதி மனித உரிமை தினத்தன்று நடைபெறும் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 13 வருடங்களிற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வருவதுடன்,…
-
- 0 replies
- 169 views
-
-
தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர்கள் போதுமானளவு இருக்கிறார்களா? பாராளுமன்றத்தில், தமிழ் பாடசாலைகளில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது என்று சொன்னேன். மலையக பல்கலைகழகம் கட்டாயம் வேண்டும். ஆனால், அதற்கு முன் நமது மாணவர் பல்கலை செல்வதற்கான ‘கல்வி பாதையை’ வெட்டுவோம் என்றும் சொன்னேன். அதுதான் மேலே சொன்ன பாட விதானங்களுக்கான விசேட தமிழ் மொழிமூல ஆசிரியர் பயிற்சி கலாசாலை என்றும் சொன்னேன். எனது கருத்துகள் சரியா? பிழையா? என தமிழ் பாடசாலை அதிபர்கள் முதலில் பதில் சொல்லட்டும். அதையடுத்து, அரசாங்க பாடசாலைகளுக்கு தம் பிள்ளைகளை நம்…
-
- 0 replies
- 175 views
-
-
04 DEC, 2023 | 06:38 PM யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இறுதிவரையான காலப்பகுதியில் 2203 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில்,யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் செப்ரெம்பர் மாதத்தில் 110 டெங்கு நோயாளிகளும், ஒக்டோபர் மாதத்தில் 118 டெங்கு நோயாளிகளும் நவம்பர் மாதத்தில் 427 டெங்கு நோயாளிகளும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 82 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். நவம்பர் மாதத்தில் கூடிய ட…
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையிலுள்ள சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருக்கிறார். நேற்று (புதன், டிசம்பர் 6) இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையொன்றை நிகழ்த்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 117 சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், பொலன்னறுவை நகரில் சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் ஆலயத்தை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய அவர், தமிழர் பகுதிகளில் பௌத்த விக…
-
- 0 replies
- 693 views
- 1 follower
-
-
வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எமது வளங்களை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவர பொறிமுறை ஏற்படுத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டு வளங்களை திருடி வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவர முடியுமான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தொழிலட மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் …
-
- 2 replies
- 314 views
-
-
கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையத்தில் வைத்து அண்மையில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில், சிறுவனின் மரணம் தொடர்பாக குழந்தைகள் தடுப்பு மையத்தின் பாதுகாவலர் டிசம்பர் 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுவனைத் தாக்கியதாகக் கூறி கல்முனைப் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-