ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
சவீந்திரா டீ சில்வாவை வெளியேற்றுமாறு அமெரிக்க அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை மனு! Published on May 23, 2011-7:46 pm · No Comments இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையில், ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரத்தர பிரதிநிதி பிரிகேடியர் சவீந்திரா டீ சில்வா மீது நடவடிக்கை எடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கோரி அமெரக்கா அரசிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் UNROW மனித உரிமைகளுக்கான சட்ட ஆலோசனை நிறுவனம், SPEAK மனித உரிமைகளுக்கான முன்னெடுப்பு மையம் ஆகியன இணைந்து இந்த கோரிக்கையை அமெரிக்க அரசிடம் முன்வைத்துள்ளன. சிறிலங்கா இராணுவத்தின் …
-
- 2 replies
- 700 views
-
-
கைதடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார் – 23 மே 2011 – குளோபல் தமிழ்ச் செய்தியாளர். தென்மராட்சி கைதடிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் கைதடி தெற்கினைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரலிங்கம் தர்நேசன் என அடையாளங் காணப்பட்டுள்ளார். யாழ் பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான கைதடியிலுள்ள சித்த மருத்துவ பீட மாணவ விடுதியின் பகுதியில் மதில் மேலாகக் குதித்து வெளியேற முற்பட்ட வேளையில் காவலிற்கு இருந்த படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர…
-
- 0 replies
- 710 views
-
-
வடமராட்சி கிழக்குப் பகுதியில் மீண்டும் மீன்பிடித் தொழிலில் சிக்கல்கள் தோன்றி உள்ளன. 23 மே 2011 வடமராட்சி கிழக்குப் பகுதியில் மீண்டும் அதிகரித்திருக்கின்ற சிங்கள மற்றும் முஸ்லீம் மீனவர்களது அத்துமீறல் தொடர்பில் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றன. குறிப்பாக கடந்தகாலங்களில் மீன்பிடிபதற்கான கொட்டகைகள் அமைத்துத் தங்குவதற்காக வலைப்பாடுகள் தமக்கு இருப்பதாகக் கூறி முஸ்லீம் மற்றும் சிங்கள மீனவர்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். தாளையடிப் பகுதியில் இவ்வாறு நூற்றுக்கணக்கான மீனவர்கள் வந்திருப்பதாலும் அவர்களை உள்ளுர் மீனவர் சங்கம் வரவேற்று அனுமதி வழங்கியிருப்பதாகவும் ஏனைய மீனவ அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. ஏற்கனவே வடமராட்சி கிழப்பின் மணற்காடு குடத்தனை…
-
- 0 replies
- 719 views
-
-
தமிழீழத் தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு சிட்னி ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலையில் 22 மே 2011 அன்று சிறப்புற நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தர்சன் குணசிங்கம் பொதுச் சுடரை ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அவுஸ்திரேலியக் கொடியை மருத்துவர் ராகவன் அவர்களும் தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஸ்கந்தகுமார் அவர்களும் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மக்கள் தொடர்பாளர் திரு. யோகராசா தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமரும் நிதியமைச்சருமாகிய பேராசிரியர் செல்வநாதன், துணை வெளியுறவு அமைச்சர் மாணிக்கவாசகர், நாடுகடந்த …
-
- 5 replies
- 1.2k views
-
-
முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் கிழக்கில் இளம் பெண் கடத்தல் முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏறாவூர் பகுதியில் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தனது கணவனுடன் வீதியால் நடந்து வந்துகொண்டிருந்த இளம் பெண்ணே கடத்தப்பட்டுள்ளார். முச்சங்கரவண்டியில் வந்த ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கணவன் மீது தாக்குதலை நடத்திய பின்னர் மனைவியை கடத்திச் சென்றுள்ளதாக மட்டக்களப்பு சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் நிலை தொடர்பில் இதுவரை தகவல்கள் இல்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். பதிவு.
-
- 0 replies
- 873 views
-
-
ஜெயலலிதா ரணில் உரையாடல் மகிந்தாவின் ஓய்வைக் குலைத்துள்ளது. Posted by சோபிதா on 23/05/2011 in செய்தி | 0 Comment மகிந்தா அரசு அனைத்துலக மட்டத்தில் மட்டும் உறுதியற்ற நிலையை அடையவில்லை, அரசுக்குள்ளேயும் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐ.நா அறிக்கைக்கு எதிராக இந்தியாவை திருப்பும் சிறீலங்கா அரசின் முயற்சிகள் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமே அதற்கு காரணம். முத்துவேல் கருணாநிதியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டுள்ளதால் மட்டும் தி.மு.க பின்னடைவைச் சந்திக்கவில்லை, இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும் அது விசனம் அடைந்துள்ளது. ஊழல் வழக்கு தொட…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாட்டை அழித்த கருணாவுக்கு அமைச்சர் பதவி – தனக்கு சிறைத்தண்டனை- குமுறுகிறார் சரத் பொன்சேகா! Published on May 23, 2011-8:00 pm · No Comments நாட்டை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட கருணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை ஒழித்த தனக்கோ சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று கொழும்பு மேல்நீதிமன்றில் நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியம் அளிக்கும்போது தெரிவித்தார். ‘நாட்டையும் அழித்து, பொதுமக்களையும் அழித்து, பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்திய கருணா நீதிமன்றில் நிறுத்தப்படாமல் இலங்கை அரசாங்கத்தால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு சுகபோகம் அனுபவிக்கின்றார். ஆனால்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது. விக்கிலீக்ஸிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்ற தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கூறியதாக பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதுதொடர்பாக தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி: 2008ம் ஆண்டு நவம்பர் மா…
-
- 2 replies
- 1.4k views
-
-
வவுனியா மாவட்டத்தில், கந்தன்குளம் கிராம மக்கள் குடிப்பதற்கு 2 கி.மீ தூரம் நடந்து சென்று பூவரசங்குளத்திலிருந்தே தண்ணீர் எடுத்துவர வேண்டியுள்ளது. இன்று காலை வழக்கம்போல் கிணற்றுக்கு நீர் எடுக்கச் சென்ற 10 வயது சிறுமி தடுமாறி கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக மரணித்துள்ளார். இதுபற்றி தெரியவருவதாவது: பூவரசங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கிராமம் கந்தன்குளம். இந்த கிராமத்தில் இப்பொழுது 45குடும்பத்தினர் சுமார் 20வருடங்களின் பின்னர் கடந்த மாதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏனைய மீள்குடியேற்றங்களைப் போன்றே இவர்களுக்கும் 12 தகரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அத்துன் இந்த மக்களின் பாவனைக்காக ஒரு கிணற்றைக்கூட சுத்தம் செய்துகொடுக்காமல் விட்டுள்ளனர். ஆகவே…
-
- 0 replies
- 4.2k views
-
-
சிறிலங்காப் படைத்தரப்பினருக்கு எதிராக மாத்தறையில் வழக்கறிஞர்கள் கண்டனப் பேரணி! சிறிலங்கா படையத்தரப்பினரால் மாத்தறை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி தாக்கப்பட்டதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று (23.05.11) கண்டனப்பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தக் கண்டனப் பேரணி மாத்தறை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பேரணியில் சிறிலங்கா படைத்தரப்பினரும், படையதிகாரிகளும் பொதுமக்களைத் தாக்குவதைக் கண்டித்தும் வழக்கறிஞர்கள் கோசம் எழுப்பியுள்ளனர். அத்துடன், மாத்தறை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய படைச் சிப்பாய்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வழக்கறிஞர்கள் இந்த கண்டனப் பேரணியில் கோரிக்கை …
-
- 0 replies
- 714 views
-
-
"பழைய சம்பவங்களை மறந்து விட்டதா இந்தியா?" – கேள்வி எழுப்பும் சிங்களத் தேசியவாதிகள் [ திங்கட்கிழமை, 23 மே 2011, 00:53 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை வைத்துக் கொண்டு சிறிலங்கா அரசை இந்தியா ‘பணிய வைக்கும்‘ காரியத்தை மேற்கொள்வதாக சிங்களத் தேசியவாதிகள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர். அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான இந்தியாவின் ஆதரவு பற்ற…
-
- 2 replies
- 942 views
-
-
சரத் பொன்சேகா சாட்சியமளிக்க முற்படும்போது திடீர் மின்தடை கொழும்பு மேலு நீதிமன்றத்தில் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா வாக்குமூலம் அளிப்பதில் இடையூறு ஏற்பட்டது. இன்று முறபகல் 11.15 அளவில் சரத் பொன்சேக்கா வாக்குமூலமளிக்க தயாரானபோது நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டது. திபாலி விஜயசுந்தர, டப்பியூ.ரி.எம்.பி.வாரவௌ, ஏ.இசெட். ரசீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான இன்றைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. source:eeladhesam.
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈ.பி.டி.பியின் மண் அகழ்வு மோசடி- மேல் முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது! Published on May 23, 2011-3:26 pm · No Comments வடமராட்சி கிழக்கு அம்பன் குடத்தனை மணல்காடு பகுதிகளில் சட்டவிரோதமக மண் அகழ்ந்தெடுக்கப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாண குடிமகன் ஒருவர் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளிடமிருந்து பதிலை கோரியுள்ளது. பதில் அறிக்கை ஜூன் மாதம் 13 ஆம் திகதி மன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2010 இல் புவியியல் அளவை மற்றும் மண் அகழ்வு பணியகம் வெளியிட்ட சுற்று நிருபம் புஆஃஊஆஃஏஆஃ09 இன்படி, மண் அகழ்வில் ஈடுபடும் யாழ்ப்பாணம் குடிமக்கள் எவரும் கிராமசேவை உத்தியோகத்தர் ஊடாக மாவ…
-
- 0 replies
- 559 views
-
-
பூரண விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்- சமாதானத்திற்கும் நீதிக்குமான இயக்கம்! Published on May 23, 2011-2:12 pm · No Comments யுத்தத்தின் இரண்டாவது வருட நிறைவில் யுத்தம் முடிந்து வி;ட்டது என்று நாம் சந்தோஷப்படலாம். ஆனால் யுத்தத்தின் கடைசி வாரங்களில் இடம்பெற்றவை கடந்த காலத்தினதும் நிகழ்காலத்தினதும் பெரும் துன்பியலாகும். நடந்தவற்றை நியாயப்படுத்துவதை விட பூரண விசாரணை நடத்துவதும் உண்மைத்தன்மையை ஏற்றுக் கொள்ளுதலுமே நல்லிணக்கம் காணுவதை சாத்தியமாக்கும் என சிறிலங்காவின் சமாதானத்திற்கும் நீதிக்குமான இயக்கத்தின் தலைவர் எட்வேர்ட் மோர்டிமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்தும் படி அழ…
-
- 0 replies
- 482 views
-
-
மன்னார் – மதவாச்சி வீதியில் இராணுவத்தினர் அட்டகாசம் பயணிகளிடம் கையெழுத்து வேட்டை! Monday, May 23, 2011, 17:33சிறீலங்கா, முதன்மைச்செய்திகள்81 views2 comments மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இராணுவத்தினர் சோதனை கெடுபிடிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளமையினால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். கடந்த 18 ஆம் திகதி முதல் இந்த கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள கட்டையடம்பன் மற்றும் பரயனாளங்குளம் ஆகிய பகுதிகளில் இக்கெடுபிடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பேரூந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் பஸ்ஸினுள் வைத்து பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் ஆகியவை எழுதப்பட்டு கையொப்பத்தினை இராணுவத்தினர் பெற்றுக்கொள்ளுகின்றனர். …
-
- 0 replies
- 405 views
-
-
கிளிநொச்சி ஜெயபுரத்தில் ‘மகிந்த ராஜபக்ச மாவத்தை’ Monday, May 23, 2011, 18:59சிறீலங்கா, தமிழீழம்54 views1 comment தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகர் என வெளிநாடுகளால் வர்ணிக்கப்பட்டுவந்த கிளிநொச்சி ஜெயபுரத்தில் சிறீலங்காவின் பிறிதொரு ஆக்கிரமிப்பு வடிவம் நிறுவப்பட்டுள்ளதாக தெரியவருகிறது . ஜெயபுரத்தில் இருந்து பல்லவராயன்கட்டு நேக்கி பிரயாணிக்கையில் ஜெயபுரம் சந்தைக்கு அருகாமையில் இரண்டு குறுக்கு வீதிகள் ‘மகிந்த ராஜபக்ச மாவத்தை’ மற்றும் ‘அழுத் மாவத்தை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில வீதிகளுக்கு வேறுபல சிங்களப்பெயர்கள் இடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.சிறீலங்கா படைகள் தமிழர் தாயகப் பகுதகளை ஆக்கிரமிக்க மேற்கொண்ட போரின் பின்னர் தற்போது இவ்வா…
-
- 0 replies
- 630 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சீன, ரஷ்ய மற்றும் ஜப்பான் தூதுவர்களை சந்தித்துப் பேசவுள்ளனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் தூதுவர்களை சந்தி;த்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்துடன் நடத்தப்படவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகின் முன்னணி நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவதுடன், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து இந்த பேச்சுவார்த்தைகளின் போது கருத்துக்கள் பரிமாறப்பட உள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந…
-
- 0 replies
- 355 views
-
-
ஊக்கமருந்து சோதனையில் சிந்தன விதானகே தோல்வி பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இலங்கை வீரரான வீசிந்தன விதானகே தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் சித்தியடையத் தவறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெறும் ஆசிய பளுதூக்குதல் போட்டியின்போது சிந்தன விதானகேயிடம் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் வெற்றி பெறவில்லை. சிந்தன விதானகேயிடம் வழக்கமான சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக விளையாட்டுத்துறை மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. பொதுநலவாய போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்ற இலங்கை குத்;துச்சண்டைவீரரான மஞ்சு வன்னியாரச்சி ஏற்கெனவே ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால் அவரின் தங்…
-
- 1 reply
- 735 views
-
-
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே த.தே.கூவுடன் அரசு பேச்சு நடத்துகிறது: சுரேஷ் பிரேமச்சந்திரன் [Monday, 2011-05-23 04:52:21] இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சு நடத்துகிறது என்று தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரசுடனான கூட்டமைப்பின் பேச்சுகள் பயனுள்ளனவாக அமைவதற்கு இந்தியாவின் அழுத்தம் முக்கியமானதாக அமைந்துள்ளதோடு அது தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தச் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டம், 13 ஆம் திருத்தச்சட்ட மூல அமுலாக்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சு ஆகியன தொடர்பில் கூட்டறிக்கையின் ஊடாக இந்தியா அழுத…
-
- 2 replies
- 486 views
-
-
நெய்வேலி மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவதா? – பழ நெடுமாறன் கண்டனம் Posted by சங்கீதா on 23/05/2011 in செய்தி | 0 Comment நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவது அநீதியானது என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் சிபிஐ கைது செய்திருக்கிறது. எனவே, சிபிஐ வேண்டுமென்று செய்தது எனக் குறைகூறுவது சரியல்ல. கனிமொழி குற்றம் செய்யவில்லை என்று சொன்னால், அதை நீதிமன்றத்தில் நிரூபித்துவிட்டு வெளிவருவதுதான் சரியாக இருக்கும். கனிமொழி கைதுக்கு உள்நோக்கம் கற்பிப்பத…
-
- 1 reply
- 1.1k views
-
-
வடக்கில் பிரயாணம் செய்யும் ஒருவருக்கு அநுராதபுரம், பொலநறுவை ஊடாகப் பயணிப்பதான ஒரு உணர்வே எழும் - 23 மே 2011 மகிந்த அரசின் பித்தலாட்டங்களை படம் பிடித்திருக்கிறார் மாலினி மானெல் பெரேரா தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- மே 19ஆம் திகதியன்று சிறிலங்கா விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த இரண்டாவது வருடத்தைக் கொண்டாடுடியது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைய பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து மூன்று தசாப்தகாலமாக நீடித்த போர் முடிவடைந்து விட்டது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சிறிலங்காவில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று எவரும் இல்லையென்றும் ஆக இரண்டே இரண்டு பிரிவினர் தான் உள்ளனர் அவர்களில் ஒரு பிரிவினர் தாய்நாட்டை நேசிப…
-
- 1 reply
- 947 views
-
-
இந்த கட்டுரையை எழுதி மிகச்சரியாக இன்றோடு ஈராண்டு ஆகிறது. வெட்டுக்காயத்தோடு தொலைக்காட்சிகளில் அன்று காட்டப்பட்ட முகம் பிரபாகரனாக இருக்காது என்று திடமாக நம்பினேன். இப்போதும் நம்புகிறேன். ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஈராண்டில் சிதைந்தே வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த 2009 நவம்பர் 27 வரை அவர் உயிரோடிருப்பதாக பெருத்த நம்பிக்கையிலேயே இருந்தேன். அவர் மீதும், அவர் கட்டமைத்த இயக்கத்தின் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றில் பலவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் கூட. ஆயினும் அவர்மீதான 'ஹீரோ ஒர்ஷிப்' எனக்கு எப்போதும் குறைந்ததேயில்லை. அவர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் வீரவணக்கத்துக்கு உரித்தானவரே. இதுவரை உலகம் காணா ஒப்பற…
-
- 5 replies
- 1.5k views
-
-
இரகசியமாக பிரித்தானியா சென்ற நிமால் Posted by சங்கீதா on 23/05/2011 in செய்தி | 0 Comment புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு அஞ்சி சிறீலங்கா அரச தராப்பினரின் பயணங்கள் பல இரகசியமாகவே தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. அண்மையில் பிரித்தானியாவில் கொண்டாடப்பட்ட 2,600 ஆவது பௌத்த ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா பிரித்தானியாவுக்கு இரகசியப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த 20 ஆம் நாள் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட நிமாலின் நடவடிக்கை குறித்து நேற்றே (22) சிறீலங்கா அரசு தகவலை வெளியிட்டுள்ளது. லண்டன் பௌத்த விகாரையில் இடம்பெற்ற இந்த விழாவில் பல பௌத்த துறவிகளும், பிரித்தானியாவுக்கான சிறீலங்காவின் பிரதித் தூதுவர் அம…
-
- 0 replies
- 1.3k views
-
-
உறுதியை இழந்துவரும் மகிந்தா அரசு: கொழும்பு ஊடகம் Posted by இரும்பொறை on 23/05/2011 in செய்தி | 0 Comment மகிந்தா அரசு அனைத்துலக மட்டத்தில் மட்டும் உறுதியற்ற நிலையை அடையவில்லை, அரசுக்குள்ளேயும் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐ.நா அறிக்கைக்கு எதிராக இந்தியாவை திருப்பும் சிறீலங்கா அரசின் முயற்சிகள் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமே அதற்கு காரணம். முத்துவேல் கருணாநிதியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டுள்ளதால் மட்டும் தி.மு.க பின்னடைவைச் சந்திக்கவில்லை, இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும் அது விசனம் அடைந்துள்ளது. ஊழல் வழக்கு தொடர்பில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை விவகாரத்தில் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரட்டை நிலைப்பாடு திங்கட்கிழமை, 23 மே 2011 10:17 இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் விடயங்களைக் கையாள்வதில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீக்கன்ட் லீடர் இணையத்தளத்தில் போல் நியூமன் என்பவர் இந்த விமர்சனங்களைத் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதில் முதலாவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தயக்கம் காட்டியிருந்தார். அதன் பின்னர் 2011 மார்ச் 31 ல் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவின் …
-
- 0 replies
- 829 views
-