Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by தமிழ் சிறி,

    http://www.youtube.com/watch?v=IHRO6B7Cw58&feature=player_embedded

  2. 'உலக வரலாற்றில் தாட்சணியத்திற்கும்,நீதியைப் பெறுவதற்கும்,சட்டமுறையான பாதுகாப்பைப் பெறுவதற்கும், கை விலங்குகளின்றிச் சுதந்திரத்துடன் நடமாடுவதற்கும் பாக்கியம் கிட்டாமை எமக்கொரு துரதிஸ்டமே' என யாழ்.பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை வருமாறு, முள்ளிவாய்க்காலில் வரையப்பட்ட வடுக்களுடனும், ஆறாத மனக்காயங்களுடனும், உள்ளெழும் அழுகுரலையும் தாங்கிக்கொண்டு,உள்ளூரத் தெரியும் ஏதாவொரு நம்பிக்கையை மனதில் எண்ணியவாறு,ஆயுத மோதலின் போது எங்களை விட்டுப் பிரிந்த எமது சக பல்கலைக்கழக மாணவர்கள்,பொதுமக்கள் எங்கள் உடன் சகோதரர்கள் ஒவ்வொருவரையும் மனதில் எண்ணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று பிர…

    • 0 replies
    • 657 views
  3. பருத்தித்துறை மகளீர் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தள்ளனர். உயர்தர வகுப்பு மணவியான துரைாஜா நிஷா வயது 17 என்ற என்ற மாணவியே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு சடலம் மந்திகை அரச வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்ததுறை பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Eelanatham

    • 0 replies
    • 1.1k views
  4. அறுபது நீண்ட ஆண்டுகள், தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர். வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்;. அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்படும் அபாயத்துடன் கூடவே தமிழர் பகுதிகள்; மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டு விட்டது. வட கிழக்கு பௌத்த சிங்கள மயமாவதற்குக் கூட இலங்கை அரசின் தமிழ் உளவாளிகளும் அரசின் புலம் பெயர் நீட்சிகளும் நியாயம் சொல்கின்றன. நாளாந்த உணவிற்காக, தமது குழந்தை செத்துப் போகாமல் வளர்வதற்காக அநாகரிகமான இராணுவத்திற்கு உடலை விற்கும் தமிழ்ப் பெண்களின் சோக வ…

  5. மே-18 நினைவு வணக்க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள வேலூரை நோக்கி திரள்கிறது தமிழர் கூட்டம். முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழித்தொழிக்கட்டு மூச்சடக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வான மே௧8 நினைவு வணக்கமும் நாம் தமிழர் கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவு பொதுக் கூட்டமும் இன்று வேலுரில் நடைபெற உள்ளது. நாம் அழிந்து போய்விடவில்லை புதிதாய் பிறப்பெடுத்துள்ளோம் என்று முழங்கி கடந்த ஆண்டு மே௧8ல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கு பலம் சேர்க்கும் வகையில் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தார் செந்தமிழன் சீமான் அவர்கள். ஆரம்பித்தது முதல் கொண்டு தமிழர்களது விடிவிற்கான பாதையில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடாது துணிவுடன் பயணி…

  6. உண்மைகளைப் பேசாமல் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது! - groundviews போர் முடிவுற்று இரு ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமிழ் மக்கள் தற்போதும் சந்தேகக் கண்ணோடு நோக்கப்படுவதும், பயங்கரவாதிகள் போன்று நடத்தப்படுவதும் நீடித்து வருவதாக groundviews எனும் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந் நிலை மாறி தமிழ் மக்களும் கௌரவமாக நடத்தப்பட்டாலேயே இலங்கையில் உண்மையானதும், நிலையானதுமான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என இந்த இணையத்தளம் வலியுறுத்தியுள்ளது. இவ் விடயம் குறித்து இந்த இணையத்தளம் தெரிவித்துள்ள முக்கிய பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம். 'தென்னாபிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு போல் சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்…

    • 1 reply
    • 726 views
  7. தமிழனப் படுகொலை ஈராண்டு நிறைவு: போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா விசாரிக்க வேண்டும்! - சர்வதேச மன்னிப்புச் சபை வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடாபில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஈராண்டு நிறைவடையும் நிலையில் சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை விவகாரங்கள் தொடர்பிலான ஆய்வாளர் யூலன்டா பொஸ்டர் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். போர் எவ்வுளவு கொடுமையானது என்பதற்கு ஆன்னி பிராங்கின் நாட்குறிப்பின் சில குறிப்புக்களை சுட்டிக்காட்டிய அவர், வன்னிப் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீத…

    • 2 replies
    • 586 views
  8. தேசிய துக்க நாளான இன்று தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குச் சபதம் எடுப்போம்! கூட்டமைப்பு அழைப்பு பிரசுரித்தவர்: Sukkran May 18, 2011Add a comment தேசிய துக்க நாளாகிய இன்று முள்ளிவாய்க்கால் வரலாற்றுப் பெருந்துயரை நெஞ்சில் இருத்தி இலங்கைத் தீவில் தமிழர்கள் இழந்துபோன தமது தன்னாட்சி உரிமையை வென்றெடுக்க சபதம் எடுப்போம். இவ்வாறு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வரலாற்றுப் பெருந்துயரை நினைவு கொள்ளும் முகமாகத் தமிழ் மக்கள், மே 18ஆம் திகதியை தேசிய துக்க நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர் என்று கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அதேவேளை, போரில் உயிரிழந்தவர்களுக்காக நாளைய தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அது கேட்டுள்ளது. கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும…

  9. ஜெயலலிதாவுக்கு மகிந்தா வாழ்த்து …! தமிழக இன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை கிட்லரும் தமிழின அழிப்பின் கதாநாயகனுமான மகிந்தா வாழ்த்து செய்து அனுப்பி வைத்துள்ளார் . அவரது வாழ்த்து செய்தியினை இந்தியா சென்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உத்தியோக பூர்வமாக ஜெயலலிதவுக்கு அனுப்பி வைத்துள்ளார் . அம்மா மகிந்தாவை போர்குற்ற நீதி மன்றில் நிறுத்த வேண்டும் என கூறிய நிலையில் இந்த வாழ்த்து அறிக்கை அம்மாவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது ..!

  10. இனிமேலாவது சிந்திப்பீர்களா? கருணாநிதிக்கு பழ.நெடுமாற‌ன் கடிதம் Wednesday, May 18, 2011, 16:41இந்தியா, தமிழீழம்96 views1 comment தி.மு.க தலைவ‌ர் கருணா‌நி‌தி‌க்கு இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் ப‌கிர‌ங்கமாக கடித‌ம் ஒ‌ன்றை எழு‌தியு‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக கருணா‌நி‌தி‌க்கு அவ‌ர் எழு‌தியு‌ள்ள கடித‌த்த‌ி‌ல், மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம். எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் …

  11. எங்கள் இயக்கம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்த சந்தர்ப்பம் அளித்த வேண்டும் என்று ஐ.நா.விடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை தாம் வரவேற்பதாகவும், அதே நேரம் தம் மீதுசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தமது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த ஐ.நா சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கை: அன்பான தமிழ் மக்களே, காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த …

  12. யுத்தத்தில் மரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து தங்கள் வீடுகளில் அல்லது அருகாமையிலுள்ள வணக்கஸ்தலங்களில் அமைதியான பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா நேற்று செவ்வாய்க்கிழமை அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; மே மாதம் 19 ஆம் திகதி எமது நாட்டில் விசேடமாக வன்னிப் பகுதியில் இடம்பெற்ற கொடூரமான போர் முடிவுற்று இரண்டு வருடங்களாகியுள்ளது. இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும் இனப்பிரச்சினையின் காரணமாக இடம்பெற்ற வன்முறையால் பலர் உயிர்த்தியாகம் செய்தும் இன்னும் பலர் தங்கள் வீடுகளிலிருந்…

    • 2 replies
    • 958 views
  13. முள்ளி வாய்க்காலில் உடல்கள் சிதைந்து -சதைகள் தொங்க –தப்பி பிழைத மக்கள் பன்னிருவர் தரும் கண்ணீர் பேட்டி . படித்தால் விழி கதற மனசு உருகும் –ஆயுதம் தூக்கி அடிபட உன்னை தூண்டும் ..! 1. செல்வம் : குண்டுவீச்சுக்கள், உறவுகளின் உயிர் இழப்புகள் தாண்டி ஒரு வழியாக முகாமுக்கு வந்தோம். முதல் மூன்று நாட்கள் நீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை மட்டும் உணவுப்பொட்டலங்கள் வந்தன. அதனைப்பெறுவதற்காக வரிசையில் நிற்கவேண்டும். வந்த உணவுப் பொட்டலங்கள் பாதி வரிசை முடியும் முன்பே முடிந்துவிடும். உணவு கொண்டுவந்தவர்கள் போய் விடுவார்கள். மீதிப்பேர் அன்று பட்டினிதான். இப்படித்தான் நாட்கள் ஓடின. இப்படியான நிலையில் என் மூன்று வயது மகனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்ப…

    • 3 replies
    • 1.6k views
  14. இறுதி யுத்தம் முள்ளி வாய்க்கால் வரை நகர்ந்து கொண்டிருந்த போது இருபத்தி எட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அந்த மக்களை சர்வதேசம் காக்க வேண்டும் பாரிய இனவழிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி பரமேஸ்வரன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தான் . வாலிப வயதில் தான் நினைத்தை சாதிக்கும் தேசத்தில் அவன் தனது தனி நபர் வாழ்வுடன் கலந்து சிறப்பாய் வாழ்ந்திருக்க முடியும் . அதற்கு மேலால் தனது மண்ணை ,மக்களை ,அந்த விடுதலை அமைப்பை தன் உயிருளும் மேலாக நேசித்தான் .அதன் விளைவு அவான் உண்ணாவிரதம் இருந்து வதங்கிய படி சோர்வற்று கிடந்தான் . திலீபன் போல் ஒருதியாகம் அனைய இந்த பிரித்தானியா விட்டிடுமா என மக்கள் மத்தியில் அவ்வேளை கொந்தளிப்பும் பர பரப்பு மக்களை பற்றிய படி இருக்க இவனது உடல் தளர…

    • 2 replies
    • 1.4k views
  15. [ புதன்கிழமை, 18 மே 2011, 02:45.44 AM GMT ] ''கதரா... கருகிய பதரா... என்கிற அளவுக்கு காங்கிரஸை அறைவேன். எங்களின் உரு அறுத்த காங்கிரஸைக் கருவறுப்பேன்!'' - திருப்பி அடித்த சீமானின் வெறிகொண்ட வேகம் காங்கிரஸ் தோற்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. 63 தொகுதிகளில், 5 தொகுதிகளில் மட்டுமே தப்பித்தோம் பிழைத்தோம் எனக் கரையேறி இருக்கிறது காங்கிரஸ்!! இது தனிப்பட்ட சீமானுக்கோ, 'நாம் தமிழர்’ கட்சிக்கு மட்டுமோ, கிடைத்த வெற்றி அல்ல. தமிழர் என்கிற இனத்துக்கும், இன மானத்துக்கும் கிடைத்த வெற்றி. இருட்டு, திருட்டு என எண்ண முடியாத அளவுக்கு இங்கே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும்... ஈழத் துயரமும் இந்தியக் கடல் எல்லையில் மீனவர்கள் பட்ட துயரமுமே தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைத் துரத்தி அடித்தி…

    • 2 replies
    • 1.6k views
  16. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் செல்வி ஜெயலிலாவுக்கு நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிபீடத்தில் ஏறியிருக்கும் செல்வி ஜெயலலிதா ஈழதமிழர் பிரச்சனை குறித்து கூறிய கூற்றுக்கள் பரவலாக பலரது கவனத்தைப் பெற்றிருக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின் கடிதத்தின் முழுவிபரம் : நீயு யோர்க் 16, 2011 மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு! நடைபெற்று முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியடைந்து தமிழ்நாட்டின் முதல்வராக, தாங்கள் பதவியேற்கும் இத்தருணத்தில் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் தங்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாடுகடந்த தமிழீழ…

  17. வன்னியில் இடம்பெற்ற போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் நாம் மதிக்கவேண்டும் எனில் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி ஜோலந்தா போஸ்ரர் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் இரண்டாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையி;ல் தெரிவித்துள்ளார். நேற்று (17) வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்காவில் இடம்பெற்ற போர் நிறைவடைந்து இன்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த நேரத்தில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என நாமும், போரில் தப்பியவர்களும் வேண்டிக்க…

  18. அன்புடையீர்!நீண்ட காலத்திற்குப் பின்னர் எமது தாயக உறவுகளை பார்க்கச் செல்லும் இரவல் தாயக உறவுகளிற்கு வணக்கம்.சிங்கள ராஜபக்சாக்கள் பல்லாயிரக்கணக்கான எமது தாயக உறவுகளைத் திறந்தவெளி சிறைகளிலும் சித்திரைவதை முகாம்களிலும் அடைத்து வைத்திருப்பது உங்களெல்லோரிற்கும் தெரிந்த விடயமே. ஆகவேதான் இவற்றையெல்லாம் உல்லாச பயணிகள் ஆகிய உங்கள் மனதிலிருந்து அகற்றுவதற்காகச் சிங்களவர் உங்களுடன் பின்வரும் முறையில் நடந்து கொள்வார்கள். சிங்கள சிப்பாய், புதிய புத்த விகாரைகள், சிங்கள ஊர்சுற்றிகள், தடை முகாம்கள், சோதனைச் சாவடிகள் இவை அனைத்துமே உங்கள் கண்களிற் தெரியும்.இந்த நிலை உங்களிற்கே சர்வ சாதாரணமாகப்படும். ஆனால் தடைமுகாம்கள், சோதனைச் சாவடிகள், ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நடமாட்டம் என்பன நீங்க…

    • 1 reply
    • 1.3k views
  19. இன்று மே 18 அன்று வேலூரில் இலங்கை இனவெறி அரசின் மீது ஐ.நா மன்றம் போர்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வை முழுவதுமாக நாம்தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வலைதிரையில் நேரலை செய்யப்படுகிறது. www.naamtamilar.org/valaithirai

    • 0 replies
    • 1.1k views
  20. By Harry Miller » A Tamil gang from Tooting clashed violently with a Croydon gang on Saturday leaving two men were seriously injured. Members from the Tooting Boys fought with Croydon's Jaffna Boys in London Road, West Croydon. A man in his late teens and a man in his late 20s were rushed to hospital in a serious condition after the fight. The gang battle came just days after the announcement that a feature film is being shot in Tooting, Croydon and Merton exploring the notoriously violent and secretive world of south London Tamil gangs. Police were called to the area after reports of a group of males fighting. As they arrived at the scene…

  21. புதன்கிழமை, மே 18, 2011 கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் வீடு, இராணுவ கொமாண்டோ படை பிரிவினரால் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இச் சோதனை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் பிள்ளையான் தனது கண்டனத்தையும் மனவருத்தைத்தையும் தெரிவித்துள்ளார். Eelanatham

    • 0 replies
    • 1.1k views
  22. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்ட போதும் இன்னும் ஒரு லட்சம் தமிழர்கள் மீளக்குடியமர்த்தப்படாமலேயே இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது பீபீசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . 2011 மே மாதம் 13ஆம் திகதி நிலை வரப்படி, உள்ளூரில் இடம்பெயர்ந்த குறைந்தது ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 888 பேர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை என்று அந்த அறிக்கை கூறுகின்றது. . மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பு அலுவலகம் இந்த அறிக்கையை விடுத்துள்ளது. இலங்கை அரசின் கூற்றுப்படி இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் இடத்தங்கல் அல்லது நலன்புரி முகாம்களில் இருந்து வெளியேறிச் சென்று விட்டார்கள். . எனவே அவர்கள்…

    • 0 replies
    • 937 views
  23. செவ்வாய், 17 மே 2011 18:43 .மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் அவசரகாலச் சட்டத்தினை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ,நா பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தம் அவசியம் என்பதனை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள இலங்கை - இந்திய கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வவிஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் ஆகி…

    • 1 reply
    • 944 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.