Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் சபாநாயகருக்கான உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்! முன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில், உணவுக்காக.... மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட முழுமையான கணக்காய்வின் அறிக்கை, பதில் கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவினால் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த விசேட கணக்காய்வு விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கணக்காய்வு அறிக்கையில் நாடாளுமன்றத்தின் பல்வேறு துறைகளில…

  2. 18 Oct, 2025 | 04:11 PM "தீபலோக" தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றதுடன் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவனந்தராசா , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோரும், வடக்கு மற்றும் தெற்கு கலைஞர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/228077

  3. 18 Oct, 2025 | 03:27 PM இலங்கை இளைஞர்களில் ஒரு பகுதியினரை பாதாள உலகத்தினுள் தள்ளியவர்கள், அவர்களைப் பயன்படுத்தியவர்கள் யாவர் என்பதை அறிய வேண்டியது அவசியமாகும், இது காலத்தின் கட்டாய தேவையாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அவர் சனிக்கிழமை (18) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிகையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்காலத் தலைவர்களாக, எதிர்காலத்தை வடிக்கும் சிற்பிகளாக மாற வேண்டிய இளைஞர்களை ஆக்கவழிக்குள் கொண்டு செல்லாமல், அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் அதிகார சத்திகள், அரசியல்வாதிகள் யாவர் என்பதை இனங்காண வேண்டியது அவசியமாகும். அவர்களுக்குரிய தண்டனைகளும் அவசிய…

  4. யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு – விசேட தபால் தலை வெளியீடு written by admin October 18, 2025 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, விசேட தபால் தலை (Commemorative Stamp) இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. அஞ்சல் திணைக்களத்தின் உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம், வட மாகாண உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம் மற்றும் அஞ்சல் துணைக் கிளை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த விசேட தபால் தலையை வெளியிட்டனர். அந்நிகழ்வில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராசா , சி.சிறிதரன் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் , வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், மருத்துவ…

  5. கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது Oct 18, 2025 - 05:33 PM - இலங்கைக்கு கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, இந்த போதைப்பொருள் மாபியாவுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது. இதற்குரிய நடவடிக்கையின் போது கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலட்டை சங்க பிரதிநிதிகளுடனான கூட்டம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (18) நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் …

  6. இலங்கை தற்போதைய சர்வதேச நாணய நிதிய நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, எதிர்காலத்தில் சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்று அதன் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிங் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களுக்கு இணையாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அத தெரணவுக்காக நியூயோர்க்கில் இருக்கும் இந்தீவரி அமுவத்த கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அதன் பிரதிநிதிகள் இந்தக் கருத்தை வெளியிட்டனர். அங்கு கருத்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிரதிப் பண…

  7. கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை adminOctober 17, 2025 மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சவிற்ஸ்லாந்தில் இடம் பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது சுவிஸ் அரசாங்கம் சமஸ்டித் தீர்வினை தமிழ் மக்களுக்கு வ…

  8. Published By: Vishnu 17 Oct, 2025 | 08:37 PM மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு, காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். வலி, வடக்கில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மக்களின் காணிகளை மக்களுக்கே கையளிப்போம் என ஆட்சி அமைத்தவர்கள், இன்று ஆட்சி அமைத்து ஒரு வருட காலம் கடந்து காணிகளை மக்களிடம் கையளிக்கவில்லை. கடந்த அரசாங்கம் கையளிக்க தயாராக இருந்த காணிகளையே அவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் மக்களிடம் கையளித்தனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியை முழுமையாக திறந்து விட்டதன் ஊடாக உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள பலாலி காணிகளை விடுவித…

  9. 17 Oct, 2025 | 03:58 PM (எம்.மனோசித்ரா) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சிய நிலையங்களைப் பார்வையிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர். இதன் போது, பிரதி அமைச்சர் வெடிமருந்து களஞ்சிய தொகுதிகளை ஆய்வு செய்ததுடன், அந்த வளாகத்தின் தற்போதைய செயற்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பாய்வு செய்தார். சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார். இதன்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், அவசரகால நிலைமைகளுக…

  10. 17 Oct, 2025 | 04:13 PM யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு, அவற்றை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி, மழைக்காலம் முடிவடைந்த பின்னர் மீள பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக மந்திரிமனையின் பாகமொன்று இடிந்து விழுந்தது. முன்னதாக, சேதமடைந்து காணப்பட்ட அப்பகுதி மேலும் இடிந்து விழாமல், அதனைக் காப்பாற்றுவதற்காக இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டது. இந்நிலையில், அந்த இரும்புக் கம்பிகளை திருடர்கள் திருடிச் சென்றமையால், பாதுகாப்பின்றி இருந்த …

  11. 17 Oct, 2025 | 03:22 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) புதிய ஆய்வுக் கூடம் ஒன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கு அண்மையில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது பிரதமர் ஹரிணி, சமூகவியல் இளங்கலைப் பட்டத்தைப் பூர்த்தி செய்த டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு (Hindu College) விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் போது டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) புதிய ஆய்வுக் கூடத்திற்கு "ஹரினி அமரசூரிய சமூக மற்றும் இனவியல் ஆய்வுக் கூடம்" (Harini Amarasuriya Social & Ethnographic Research Lab) என்று பெயர் சூட…

      • Haha
    • 2 replies
    • 205 views
  12. 17 Oct, 2025 | 05:02 PM தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன. குறித்த திட்டம், இன்று காலை வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. அல்லையூர் இளைஞர்களின் ஏற்பாடில் வேலணை பிரதேச செயலகம் மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் , பிரதேச சபையின் உறுபினர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டு பனம் விதைகளை நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அடையாளத்தை பாதுகாக்க வேலணையில்…

  13. 17 Oct, 2025 | 03:34 PM பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “தொட்டலங்க கன்னா” என்பவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார். “தொட்டலங்க கன்னா” என்பவர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி 39.99 கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் “தொட்டலங்க கன்னா” என்பவர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (10…

  14. இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இந்த காலம் 3 மணி நேரத்திற்கு முன்னதாக காணப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmguh67ze0129o29nsvhmes6m

  15. Published By: Digital Desk 3 17 Oct, 2025 | 04:38 PM பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில், இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/22801…

  16. புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் கணக்குகளில் வெளியிடப்படும் பதிவுகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டு, அதன் மூலம் பெறப்படும் பணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் உட்கொள்வது தெரியவந்துள்ளது. புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி, இந்தக் குழு போலி பேஸ்புக் கணக்குகளை நிர்வகித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்தக் கணக்குகளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி தேவை எனக் கூறி பதிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனை பார்த்து உணர்ச்சி…

  17. தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி! அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தந்தை யைப்படுத்திய மேற்கொள்வதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியுடனான அரசியற் கூட்டில் (தமிழ்த் தேசியப் பேரவை) இருந்து வெளியேறுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் 13ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் அவர்கள் தமக்குள் ஒன்றுகூடிக் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர். இதையடுத்தே, தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் போது செய்து…

  18. Published By: Vishnu 17 Oct, 2025 | 03:52 AM கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான வழக்கு, 2025 ஒக்டோபர் 13 திங்கட்கிழமை கொழும்பு நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வைத்திய பகுப்பாய்வை ஆரம்பிக்குமாறு விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அகழ்வாய்வில் இருந்து மீட்கப்பட்ட குறைந்தது 106 ப…

  19. 16 Oct, 2025 | 03:32 PM (இராஜதுரை ஹஷான்) பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மெதிரிகிரிய பகுதியில் புதன்கிழமை (15) இரவு நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாள குழுக்களை கைது செய்வதாகவும், போதைப்பொருட்களை கைப்பற்றுவதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி ஏதும் குறிப்பிடுவதில்லை. அனைத்து குற்ற…

  20. வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை! இலங்கை சுங்கத்துறை, 2025 ஒக்டோபர் 15 அன்று 2,470 மில்லியன் ரூபாவை வசூலித்து. இது இதுவரை இல்லாத அளவிலான ஒரு நாள் வரி வருவாயை பதிவு செய்த சந்தர்ப்பம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. சுங்க பணிப்பாளர் ஜெனரலின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 1,867 பில்லியன் ரூபாவாகும். இதனால், சுங்கத்துறை அதன் வருடாந்திர இலக்கான ரூ. 2,115 பில்லியனைத் தாண்டும் பாதையில் செலுத்துகிறது. இதற்கு வாகன இறக்குமதி வரிகள் முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதாகவும், அவை சுங்க வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1450559

  21. தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை! இணையத்தளங்கள் அல்லது கைத் தொலைபெசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய நிறுவனங்கள் ஊடாக கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பாக எவ்வித முழுமையான தகவல்களும் முன்னறிவித்தலுமின்றி கடன் வழங்குவதால் கடன் பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் மன அழுத்தங்களுக…

  22. கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா ; 1883 பட்டதாரிகளுக்கு பட்டங்கள், 155 பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் 16 Oct, 2025 | 02:07 PM ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொது பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமை (15) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதுடன், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) மற்றும் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோர் வரவேற்றனர்…

  23. வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் நேற்று (13) மாலை இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். சுமார் 30 பேர் வரை வருகை தந்துள்ளதோடு இன்று (14) குடாநாட்டின் பல இடங்களிற்கும் பயணிக்கின்றனர். குடாநாட்டின் கரையோரக் கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளை (15) நெடுந்தீவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmgq4g68g0101o29noeyxhu2f

  24. இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை! சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா பயணமானது 120 நாட்களில் பின்னர் நேற்றையதினம் மீண்டும் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் நிறைவடைந்துள்ளது. குறித்த இளைஞர்கள் வான் ஒன்றினை வீடாக மாற்றி அதில் சகல வசதிகளையும் உள்ளடக்கி, 25 மாவட்டங்களுக்கும் அந்த வானிலேயே சென்று, அந்த வானிலேயே தங்கி அன்றாட செயல்பாடுகளை முன்னெடுத்தனர். இவர்கள் நால்வரும் 25 மாவட்டங்களுக்கும் சென்று, அந்த 25 மாவட்…

    • 5 replies
    • 360 views
  25. மக்களின் துயரங்கள், கண்ணீர், வலிகள் மற்றும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் பலமானதொரு அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ வேண்டும். அண்மையில் நடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாட்டின் 220 இலட்சம் மக்களும் ஏமாந்தனர். 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு நாடு வங்குரோந்தடைந்தது. 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது சமூகமயப்படுத்தப்பட்ட பொய்கள் மற்றும் ஏமாற்று பேச்சுக்களால் நாட்டு மக்கள் ஏமாறும் நிலைக்கு இன்று வந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேற்று (15) மாத்தளை நகரில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.