Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்களத்திற்கு எதிராக போர்க்குற்றம் உட்பட மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்கள் வலுப்பெறும் வேளையில் காணமல் போன ஊடகவியளாரின் சார்பாக அமைப்புக்களும் அவரது மனைவியும் கூடிய அழுத்தம் கொடுத்துவருகிறார்கள். நாமும் இதை முடிந்தளவுக்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும், பிரச்சரரீதியாக. ---------------------------------------------------------------- UN intervention' to find Prageeth Five prominent media rights organizations has written to United Nations Secretary-General Ban Ki-moon, calling on the U.N. to intervene in the case of journalist Prageeth Eknelygoda. The letter notes, his wife, Sandhya Eknelygoda, has been asking the Sri Lankan government for any informati…

    • 1 reply
    • 715 views
  2. வெள்ளைக் கொடி வழக்கில் அரசுக்கு எதிராக தாம் சாட்சியம் அளிக்கப் போவதாக முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் வெள்ளைக் கொடியுடன் அரச படையினரிடம் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா நடேசன், சமாதானச் செயலகத்தின் பொறுப்பாளர் புலித் தேவன் மற்றும் அவர்களோடு வந்த போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்த வழக்கு விசாரணையின் போது தனது வழக்கறிஞர் மூலமாக சரத் பொன்சேகா இதை தெரிவித்துள்ளார். இது குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. புதன் கிழமை நடந்த விசாரணையின் போது தான் உட்பட பத்து பேர் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கப்போவதாக பொன்சேகா கூறியுள்ளார். நா…

    • 0 replies
    • 1k views
  3. லிபியாவை விட்டு வெளியேறுகிறார் கடாபி? – லிபியா அறிவிப்பு! March 9th, 2011 at 3:11 am கடாபியும் அவரது குடும்பத்தினரும் சொத்துக்களுடன் எவ்வித ஆபத்துமில்லாமல் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும்படி எதிர்த்தரப்பிடம் கடாபி கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்த தீர்மானம் ஒன்றை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.வில் கொண்டு வந்துள்ளன. லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாவியா, மிஸ்ரட்டாவிலும், மேற்குப் பகுதியில் உள்ள ராஸ் லுனுப், பிரிகாவிலும் அரசுப் படைகள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையிலான மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் வசிப…

    • 2 replies
    • 1.9k views
  4. சிறிலங்காவில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகிச் செல்கின்றது என மனித உரிமை அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்து விளக்கியிருக்கின்றன. சிறிலங்காவினது மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக பல மனித உரிமை அமைப்புக்கள் எழுத்துமூல அறிக்கையினை ஐ.நாவின் மனித உரிமைச் சபையிடம் சமர்ப்பித்திருக்கின்றன. எதிர்வரும் மார்ச் 16ம் திகதிவரை ஐ.நா மனித உரிமைச் சபையினது 16வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. ஐ.நாவின் மனித உரிமைச் சபையினது முன்னைய அமர்வுகளின் போது சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை அது நிறைவேற்றத் தவறிவிட்டது என அனைத்து வகையான இனவாதங்களுக்கும் எதிரான அனைத்துலக அமைப்பு [international Movement Against All Forms of Racism - IMADR] வெளியிட்டிருக்கும் அறிக்கை…

  5. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் டி.எம். ஜயரட்ன கண்டு பிடித்துள்ளார்:- 09 மார்ச் 2011 தமிழ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் காணப்படுவதாக பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் மூன்று ரகசிய பயிற்சி முகாம்கள் காணப்படுவதாக அவர் இன்று பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த முகாம்களில் ஒன்றில் விசேட பிரபுக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டு;ள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் சர்வதேச ரீதியில் புலிகள் வலையமைப்பின் அச்சுறுத்தல் நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். gtn

  6. மாறிவரும் உலக ஒழுங்கில் வலுப்பெறும் தமிழீழக் கோரிக்கை புதன்கிழமை, 02 மார்ச் 2011 08:15 மனித நாகரீகம் வலுப்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் அரசியலும் உலகாவிய ரீதியில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஆரம்பகாலத்தில் தோன்றிய கிரேக்க உரோம் அரசுகள் தேசிய அரசுகளாகவிருந்தன. குறுகிய நிலப்பரப்பு, சிறிய மக்கள் தொகை, இறைமை என்பவற்றை உள்ளடக்கி அவ் அரசுகள் அளவில் சிறியனவாகவிருந்தன. பின்னர் நாடுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளை மற்றவர்கள் ஆக்கிரமித்து கொள்ளும் புதிய நாகரீகம் அல்லது நடைமுறை தோற்றம் பெறலாயிற்று இத்தகைய போக்கு, பிரான்ஸ், பிரித்தானியா, போர்த்துக்கல், ஸ்பெயின், சீனா, இத்தாலி, ஜேர்மனி போன்ற அரசுகள் தமக்கு அண்மித்த தேசங்களை ஆக்கிரமிக்கவும் கடல் கடந்த பெரிய அரசுகளை…

    • 1 reply
    • 1.6k views
  7. திமுக-காங்கிரஸ் உடன்பாடு காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், இதை செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அறிவித்தார். இதற்கிடையே அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஒரு வைபவத்தில் உரையாற்றிய திமுக தலைவர் முதல் கருணாநிதி அவர்கள் இந்தக் கூட்டணி உடன்பாடு குறித்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். திமுக காங்கிரஸ்சுக்கு 61 தொகுதிகளைத் தரும் என்றும், பாமக ஒரு தொகுதியையும், முஸ்லிம் லீக் …

  8. ஜனாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சிவநாதன் கிஷோர் அதற்கு முன்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னர் சிலகாலம் இவர் புலி முழக்கமிட்டவர். http://www.alaikal.com/news/?p=60148

    • 0 replies
    • 1.1k views
  9. வறுமையைப் போக்குவதற்காக சவூதிக்கு உழைக்கச் சென்ற இன்னொரு தமிழ்ப் பெண் கொலை செய்யப்பட்ட கொடூரம் [Wednesday, 2011-03-09 11:06:07] சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாகத் தொழில் பார்த்து வந்த இலங்கைத் தமிழ் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவில் இருவருட சேவைக் காலத்தை நிறைவு செய்த நிலையிலேயே அவரின் சவூதி வேலை வழங்குனரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. பவானி தேவி சின்னையா எனும் 36 வயதான இப்பெண், அல் ஜோவ் மாகாணத்தின் அல் குவாரியாட் நகரில் பணியாற்றி வந்தார். ஜனவரி 19 அம் திகதி மர்மமான முறையில் அவர் இறந்திருந்தார். இது தொடர்பாக அவரின் சவூதி அனுசரணையாளரை சவூதி பொலிஸார் கைது ச…

  10. இலங்கையில் இரகசியத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் சித்திரைவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் சர்வதேச மன்னிப்புச் சபை விசனம் [Wednesday, 2011-03-09 12:18:56] தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாது இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானவர்களில் ஒருசிலர் இரகிசியமான இடங்களில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பன ஜனநாயகத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் பயமுறுத்தவும் மற்றும் தண்டனை வழங்கவும் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய ப…

  11. விரைவில் மாங்குளத்தில் இருந்து பூநகரி வரை மின் விநியோகம்! Posted by admin On March 9th, 2011 at 1:01 pm / No Comments மாங்குளம் முதல் பூநகரி வரையிலான மின் விநியோகத் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.தற்போது இப்பிரதேசத்துக்கு மின் பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. உத்தேச திட்டம் பூர்த்தி அடைந்ததும் தேசிய மின் விநியோகத்தின் ஊடாக மின்சாரத்தை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழான இதற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 24 கிலோ மீட்டர் தூரத்திற்குட்பட்ட குடும்பங்களுக்கு மின் விநியோகம் மேற்கொள்ளப்பட உள்…

  12. தமிழனுக்கு பஸ் போக்குவரத்திலும் பாகுபாடா? புதன், 09 மார்ச் 2011 15:31 வர்த்தக தலைநகரமாகிய கொழும்பில் அனைத்தின மக்களும் வாழ்வது அனைவரும் அறிந்த விடயமே. கொழும்பு வாழ் மக்கள் பயணிக்கும் பிரதான போக்குவரத்து சாதனமாக பஸ் காணப்படுகிறது. அதுவும் காலை வேளையில்தான் கொழும்பில் பஸ்களின் முக்கியத்துவம் புரியும். மட்டக்குளியிலிருந்து கல்கிசை வரை பயணிக்கும் பஸ்ஸில் நடைபெற்ற ஒரு சம்பவம் இன்று எமது காதுகளிற்கு எட்டியது. இன்று காலை 8.20 மணியளவில் கல்கிசையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பஸ் தனது பயணத்தின் இடைநடுவே கோளாறு காரணமாக தொடர்ந்தும் பயணிக்க மறுத்து விட்டது. அந்த பஸ்ஸில் குறைந்தது 45 பேராவது இருந்திருப்பர். பஸ் நடத்துனரோ அல்லது சாரதியோ எந்தவித தகவலையும் பயணிகளிற்கு அறிவி…

  13. புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகக்கொண்ட விஜயரத்திநம் மோகனதாஸ் வயது27 என்ற இவர் தற்சமயம் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார். blood cancer நோயினால் பீடிக்கப்பட்டு சாவுக்காக தேதிகுறிக்கப்பட்ட நிலையில் இந்நிலைமையை தவிர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிசோதித்து இவருக்காக மருத்துவச்செலவாக 15 லட்சம் இந்திய ரூபாய்கள்(371/2 லட்சம் இலங்கைரூபாய்) தேவை எனக்கூறியதால் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவரால் இவ்வளவு பணம் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் புலம்பெயர் உறவுகள் முன் தனக்கான உயிர்ப்பிச்சை கேட்டு உதவிக்கரம் நீட்டுமாறு இவர் இறைஞ்சிக்கேட்டுக்கொள்கின்றார். முழுமையாக விபரங்களிற்கு

  14. நொச்சியாகமவில் கைக்குண்டுத் தாக்குதல்: இதுவரை எவரும் கைதாகவில்லை [Wednesday, 2011-03-09 10:48:50] நொச்சியாகம பஸ் தரிப்பிடத்திற்கு அண்மித்தான கட்டடம் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர். நொச்சியாகம பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையிலுள்ள டிஜிட்டல் அச்சக நிறுவனமொன்றின் மீதே இன்று அதிகாலை இந்த பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நிறுவனத்தின் உரிமையாளர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரண…

  15. சிறிலங்கா வெளிவிவகாரச் செயலரின் பதவி பறிபோகிறது – சீனாவில் இருந்து வருகிறார் புதியவர் [ புதன்கிழமை, 09 மார்ச் 2011, 01:07 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் றொமேஸ் ஜெயசிங்க நிதியமைச்சுக்கு மாற்றப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவர் சிறிலங்கா நிதி அமைச்சின் மேலதிக செயலராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் சிறிலங்காவின் தூதுவராகக் கடமையாற்றிய கருணாதிலக அமுனுகம வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக நியமிக்கப்படவுள்ளார். இவர் அடுத்த மாதம் முதலாம் திகதி புதிய பதவியைப் பொறுப்பேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கருணாதிலக அமுனுகம சிறிலங்காவுக்கும் சீனாவுக…

    • 0 replies
    • 1.5k views
  16. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தை சிறிலங்கா சமாளித்தது எப்படி? விபரிக்கிறார் மகிந்த சமரசிங்க [ புதன்கிழமை, 09 மார்ச் 2011, 02:24 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோருபவர்கள், குறைந்தது சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் மற்றும் தோட்டத்துறை அமைச்சரான மகிந்த சமரசிங்க. “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அதிலுள்ள குறைகளை எவரும் சுட்டிக்காட்டலாம்.“ எனறும் அவர் தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வ…

    • 0 replies
    • 1.1k views
  17. கிளிநொச்சியில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கடத்தப்பட்டுக் கொலை... புதன்கிழமை, 09 மார்ச் 2011 01:20 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரொருவர் கிளிநொச்சிப் பிரதேசத்தில் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவர் காணாமற் போயிருந்ததுடன், அது குறித்து அவரது உறவினர்கள் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். ஆயினும் அவர் பற்றிய எதுவித தகவல்களும் கிடைத்திருக்கவில்லை. அவ்வாறான நிலையில் நேற்றைய தினம் அவருடைய சடலம் கிளிநொச்சியின் முரசுமோட்டைப் பிரதேசத்தில் இருந்து கிளிநொச்சிப் பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு 24 வயதுதான் ஆகின்றது என அவரின் உறவினர்கள் தெரி…

    • 1 reply
    • 1.6k views
  18. Sri Lanka: Forgotten prisoners: Sri Lanka uses anti-terrorism laws to detain thousands Thousands of people are languishing in detention without charge or trial under Sri Lanka’s repressive anti-terrorism laws. Sometimes held in secret prisons, they are vulnerable to a whole range of abuses, including torture or being killed in custody. Sri Lanka has been under a state of emergency almost continually since 1971. Successive governments have used national security as an excuse to introduce a range of broad and often confusing emergency regulations. http://www.amnesty.org/en/library/asset/ASA37/001/2011/en/41b0e9c5-4ee9-4c9d-9264-eb8e2add4f44/asa370012011ta.p…

    • 0 replies
    • 1k views
  19. வடக்கில் உள்ள சட்டம் ஹிட்லரின் ஆட்சியிலேயே ஜேர்மனில் அமுல்ப்படுத்தப்பட்டது 08 மார்ச் 2011 பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரில் காவற்துறையினரும் படையினரும் வடக்கில் வாழும் அனைத்து தமிழ் குடும்பங்களையும் புகைப்படம் எடுத்து, மேற்கொண்டு வரும் புதுமையான பாதுகாப்பு நடைமுறை குறித்து நாம் இலங்கையர் அமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு மாத்திரம் இவ்வாறு தொடர்ந்தும் பலவந்தமான சட்டங்களை அமுல்படுத்தி வருவது பாரிய தவறு என அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளதுடன், இதனை உடனடியாக நிறுத்துமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் எழுத்து மூலமான கோரிக்கை விடுத்துள்ளது. தமக…

  20. பல்லாயிரம் கோடி பெறுமதியான செலிங்கோ கோபுரக் கட்டிடத்தைக் கைப்பற்ற பாதுகாப்புச் செயலாளர் முயற்சி புதன்கிழமை, 09 மார்ச் 2011 01:34 பல்லாயிரக்கணக்கான ரூபா பெறுமதி கொண்ட செலிங்கோ கோபுரத்தைக் கைப்பற்ற பாதுகாப்புச் செயலாளர் கடும் முயற்சிளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொழும்பு , கோட்டையின் ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ள செலிங்கோ டவர் கட்டிடம் இன்றைய நிலையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபா பெறுமதி கொண்டது. அதனை தன் பெயருக்கு எழுதிக் கொள்வதில் பாதுகாப்புச் செயலாளர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளார். பிரஸ்தாப கட்டிடத்தை அமெரிக்க கம்பெனியொன்றுக்கு விற்பனை செய்வதன் மூலம் தன் பொருளாதார சரிவை ஈடுகட்டிக் கொள்ள செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவல முயற…

  21. Wednesday, March 9th, 2011 | Posted by thaynilam யாழ் குடாநாட்டிற்கு 2200 கோடி செலவில் குடிநீர் 2200 கோடி செலவில் யாழப்பாணத்துக்கான குடிநீர் விநியோகத் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இதன் மூலம் 60 ஆயிரம் குடும்பங்கள் நன்மை அடைய உள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைபபு அமைச்சர் திணேஷ் குணவர்தன தெரிவித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ள குடி நீர் வியோகத் திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களக்கு விளக்கமளிக்கும் முகமாக தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இரணைமடு நீர் தேக்க குடிநீர் விநியோகத் திட்டத்தின் மூலம் 60 ஆயிரம் குடும்பங்களு…

  22. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மறைந்த 16வது நாளில், அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக மீனவர்கள் அமைப்புகளின் சார்பில் அன்னதானம் அளிக்கப்பட்டது. திங்கட்கிழமை காலை மயிலாப்பூரில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உலகத் தமிழர் பேரவையின் பொருளாளர் சந்திரேசன் கலந்துகொண்டார். மாலை, எழும்பூரில் உள்ள அருநிமா இல்லத்தில் வளர்ந்து வரும் சிறுவர், சிறுமியருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மூத்த இதழாளர் டி.எஸ்.எஸ்.மணி, கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஜெயகுமார், தமிழ்நாடு மீனவர் சங்கத்தின் தலைவர் கபடி மாறன், இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் தயாளன், கடலோர மக்கள் இயக…

    • 0 replies
    • 919 views
  23. செவ்வாய்க்கிழமை, 8, மார்ச் 2011 (23:53 IST) ராஜபக்சே பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது! இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு! 08.03.2011 அன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே பயணம் செய்த ஹெலிகொப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, அவசரமாகத் தரையிறங்கியதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. 08.03.2011 அன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே மன்னாரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த ஹெலிகொப்டரில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் 08.03.2011 அன்று மாலை மூன்றரை மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து ஹெலிகொப்டர் அவசர அவசரமாக பாராளுமன்றத் திடலில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு…

  24. தீவிரவாதிகளுக்கு நுழைவு வீசா, இலங்கை அமைச்சர்களுக்கு மறுப்பு - மேற்கு நாடுகள் மீது ஜனாதிபதி மஹிந்த சீற்றம் [Tuesday, 2011-03-08 14:26:44] தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத சந்தேக நபர்களுக்கும் நுழைவிசைவினை [வீசா] வழங்கும் சில மேற்குநாடுகள் இலங்கை அரசின் அமைச்சர்கள் சிலருக்கு மட்டும் அதை வழங்க மறுக்கின்றன என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசனம் வெளியிட்டுள்ளார். பிரெஞ்சு நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு எதிராக வேலை செய்யத் தவறும் உதவி நிறுவனங்களுக்கு நிதியைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகள் உள்ளன. இதனால் அவை பொய்யான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன. ஜனாதிபதி அரசாங்கம் கடந்த காலங்களில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.