ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அல்ல. அவர்கள் சிறு மக்கள் பகுதியினர் மட்டுமேயாவர். அதாவது ஜப்பானில் உள்ள கொரியர்கள் போன்ற மற்றும் தாய்லாந்தில் உள்ள சீனர்கள் போன்றவர்களே இலங்கையில் உள்ள தமிழர்கள். அவர்களினால் சுய நிர்ணய உரிமையையோ சுயாட்சியையோ கோர முடியாது. ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அந்நாட்டில் தேசிய இனமாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபையின் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். எதிர்காலத்தில் மூன்று முக்கிய இடங்களில் தமிழ் பிரிவினைவாதத்தின் தலைமைத்துவம் உருவாகலாம். கொழும்பில் எனது நண்பர் சுமந்திரன் அவ்வாறு உருவாகலாம். வடக்கு கிழக்கில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வாறு உருவாகலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அல…
-
- 6 replies
- 1.9k views
-
-
புலிளிடம் இருந்த 21 கப்பல்ககளில் 11 கப்பல்களை கடற்படையினர் அழித்துள்ளனர்-தினேஷ் குணவர்த்தன! [ பிரசுரித்த திகதி : 2011-01-06 04:19:00 PM GMT ] புலிகளிடம் இருந்த 21 கப்பல்களில் 11 கப்பல்களை கடற்படையினர் அழித்துள்ளதாகவும் மீதமுள்ள கப்பல்களை கைப்பற்றுவதற்காக அரச புலனாய்வுதுறையினர் அந்த கப்பல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள நாடுகளில் புலனாய்வுதுறையினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ர பெரேரா எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். புலிகளின் இந்த கப்பல்கள் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு…
-
- 2 replies
- 1.6k views
-
-
உள்ளூர் சந்தையில் திடீரென காய்கறி விலை அதிகரித்துள்ளது இதனால் ஏற்கனவே விலை அதிகரிப்பால் அதிருப்தியில் இருந்த மக்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மரக்கறி ஓர் அத்தியவசியப்பொருள் என்பதனால் அனைத்து தரப்பினரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இதனால் மஹிந்தவிற்கு வருகின்ற உள்ளூராட்சி தேர்தல்களில் பாதிப்பு ஏற்படலாம். இதனைப்போக்குவதற்கு இராணுவத்தினரை மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுமாறு மஹிந்த பணித்துள்ளார். இதன்படி இராணுவம் கிராமங்களில் மரக்கறிகளை குரைந்த விலைக்கு பெற்று (பறிமுதலும் செய்யலாம்) அதனை கொழும்பு சந்தைகளில் நேரடியாக விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதன முத்தாவின் திட்டத்தினால் மரக்கறி வியாபாரிகள், விவசாயிகள் மனம் நோகலாம் இது எதிரணிக்கு நல்லதோர…
-
- 4 replies
- 1.4k views
-
-
பிரதமர் உருத்திரகுமாரனால் மறக்கப்பட்ட மாவீரர்களும், மறைக்கப்பட்ட தேசியத் தலைவரும்! [ பிரசுரித்த திகதி : 2011-01-05 07:43:18 AM GMT ] கே.பி. அவர்களால் முன்மொழியப்பட்ட நாளிலிருந்து `நாடு கடந்த தமிழீழ அரசு` தமிழ்த் தேசியத்திற்கெதிரான அச்சுறுத்தல் தளமாகவே தன்னை நிறுவி வருகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் அவைகளும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தமிழீழ விடுதலைத் தளத்தில் இணைந்து பயணிக்கும் என்ற தனது முன்னைய வாக்குறுதியையும் மீறியே திரு. உருத்திரகுமாரன் அவாகள் செயற்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை நடாத்தி முடிக்கும்வரை புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களு…
-
- 22 replies
- 3.3k views
-
-
புதிய புத்தாண்டிலாவது எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் - கைதிகளின் பெற்றோர் கோத்தபாயவுக்கு கடிதம் ... வியாழக்கிழமை, 06 ஜனவரி 2011 13:54 இலங்கையில் பல்வேறு சிறைச்சாலைகளிலுமுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை விடுவிக்கக் கோரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு கடிதம் ஒன்றை இன்று (06.01.2011) அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அண்மையில் ஜனாதிபதி அவர்களுக்கும் கைதிகளின் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை விடுவிக்கக்கோரி ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தார்கள். அத்துடன் இதற்கு முன்பு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார அவர்களை தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் சந்தித்து தங்கள் பிள்ளைகளின் விடுதலை தொடர்பாக …
-
- 0 replies
- 671 views
-
-
யாழ். கண்ணாதிட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இன்று மாலை இனந்தெரியாத விசமிகளால் தீயூட்டப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர். இத்தீவிபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவிக்கின்றார் பொலிஸார் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழிலிருந்து thx http://www.newjaffna.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கு - கிழக்கு என்பது தமிழர்களின் தாயகமாகும். அவர்களுக்கென தனித்துவமான பண்பாடு, ஒழுக்கங்கள், விழுமியங்கள், வரலாறு உண்டு. அதை விடுத்து தமிழர் ஓர் இனம் அல்ல எனக் கூறுவது இன வேற்றுமையை ஏற்படுத்தும் செயலாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு என்று வரலாறு உண்டு. இலங்கையில் ஆதி காலத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்களே. ஈழம் என்றே இலங்கை அழைக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை தமிழர் ஒரு தேசிய இனம் அல்ல. அவர்கள் சிறுபான்மைப் பகுதியினர் மட்டுமேயாவார் என ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபையின் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தது தொடர்பாக கருத்துக் கூறியபோதே நாடாளுமன்ற உ…
-
- 0 replies
- 980 views
-
-
தமது சுகபோகத்துக்காக தமிழக முதல்வர் மு.கருணாநிதி இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு துணைபோயுள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய அரசாங்கம் இந்திய மருத்துவ சபை தொடர்பில் விடுத்துள்ள புதிய அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.கருணாநிதியை வலியுறுத்தி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமது நலன்களுக்காக, தமிழன படுகொலைகள், கச்சத்தீவு விவகாரம், இங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் போன்ற விவகாரங்களில் இருந்து இந்திய அரசாங்கத்தை தமிழக முதல்வர் பாதுகாத்து வருவதாகவும் ஜெயலலிதா ஜெயராம் சுட்டிக்காட்டியுள்ளார். Eelanatham
-
- 15 replies
- 2.2k views
-
-
நகர, உபநகர பகுதிகளிலில் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைப்பதையிட்டு தனது அதிரச்சியை ஐ.தே.க வெளியிட்டுள்ளது. தேர்தலில் தோற்றுவிடும் என்ற பயத்தினாலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஐ.தே.க கூறியது. ஆறு மாதகாலமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் மாற்றங்களை செய்யப்போவதாக அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. பின் இதற்கு இன்னும் பல மாதங்கள் எடுக்குமென கூறியது. பழைய முறையிலேயே தேர்தல்கள் நடைபெறும் எனவும் கூறியது. ஆனால் இப்போது பல இடங்களில் தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது என ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். மக்கள், அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்து விட்டனர். அரசாங்கம் மக்களை ஏமாற்றி விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் அரசாங்கம…
-
- 1 reply
- 961 views
-
-
அவுஸ்த்திரேலியாவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டம் - கொலைகாரன் வருவானா?? இவ்வருட இறுதியில் அவுஸ்த்திரேலியாவில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு நடக்கவிருக்கிறது. அம்மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவிருப்பதாக ஆஸிப் பிரதமர் ஜூலியா கிலாட் அவர்கள் இன்று தெரிவித்தார். அத்துடன் மாநாட்டில் பங்குபற்றும் நாட்டுத் தலைவர்களுக்கு உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறப்போகின்றனவாம். தமிழினக் கொலைகாரன் ராஜபக்ஷவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து இங்கு வர முனையக்கூடும். ஆகவே இங்குள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அவன்மீதும் அவனது பரிவாரங்கள் மீது போர்க்குற்றங்களுக்காகவும், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள…
-
- 3 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளின் மொத்தமாக 20 படகுகள் இருந்ததாகவும் அதில் 9 படகுகள் அளிக்கப்பட்டதாகவும் மீதி 11 படகுகள் வெளி நாடுகளில் உலாவருவதாகவும் அமைச்சர் தினேஸ் குனவர்த்தனா கூறியுள்ளார். ஆனால் சென்றவருடம் இதே அரசாங்கம் புலிகளின் படகுகளை கே.பி.பத்மனாதனின் உதவியுடன் கைப்பற்றி விட்டதாகவும் அதில் சிலவற்றை கொழும்புக்கு கொண்டுவந்து கண்காட்சிக்கும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கூடவே அகதிகளை ஏற்றி சென்ற கப்பல்களும் புலிகளின் உடையதுதான் என கூறியது. அப்படியாயின் 11 படகுகள் எவ்வாறு வந்தது தினேஸ் குனவர்த்தனா அவர்களே? http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%…
-
- 1 reply
- 1.8k views
-
-
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் கொழும்பு தமிழ் சங்கத்தில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிமை வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இம்மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் ஈழத்துத் தமிழ் இலக்கியம், உலகத் தமிழ் இலக்கியம், செவ்விதாக்கம், மொழிபெயர்ப்பு, நாட்டாரியல், சிற்றிதழ், சிறுவர் இலக்கியம், மகளிர் மற்றும் பல்துறை ஆகிய பிரதான பிரிவுகளின் கீழ் ஆய்வரங்குகள் நடைபெறவுள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ளும் பேராசிரியர்கள், படைப்பாளிகள், புத்திஜீவிகள் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளனர். 45 தென்னிந்திய தமிழ் எழுத்தாளர்கள் உட்பட 100 மேற்பட்ட வெளிநாட்டு எழுத்தாளர்கள் இம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்கவை அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை கடற்படையின் கட்டளைத் தளபதியான திசர சமரசிங்கவின் பதவிகாலம் இம்மாதம் 15ம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையிலேயே அவரை அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்க, யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திசர சமரசிங்க கடந்த 2009ம் ஆண்டு ஜுலை 15ம் திகதி கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஈழ நாதம்
-
- 2 replies
- 1.1k views
-
-
வியாழக்கிழமை, ஜனவரி 6, 2011 மகாவலி குட ஓயா பகுதி காட்டில் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ் இராணுவத்தினரும் இலங்கைப்படையினரும் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இந்த மாதம் 10 ஆம் திகதி இந்த பயிற்சி ஆரம்பமாகுமாம். இதில் புலிகளுக்கு எதிரான காட்டுப்போர் பற்றியே பயிற்சி நடைபெறப்போகின்றதாம். இந்த பயிற்சியில் புலிகளுக்கு எதிராக சிங்களபப்டைகள் எவ்வாறு போர் செய்தார்கள் என இந்திய, பாகிஸ்தான், பங்களா தேஸ் இராணுவத்தினருக்கு படிப்பிற்கப்போகின்றார்களாம். ஆனால் பிற நாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சி அழிக்க 40 நாடுகளுக்கு இலங்கை அரசு அழைப்பு விட்டிருந்தும் ஒருவரும் அதற்கு பதில் அளிக்கவில்லை. இதனால் இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி ஒவ்வொரு நாட்டிலும் இரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறீலங்காவில் இராணுவப்பயிற்சி � இஸ்ரேலிடம் ஆயுதக்கொள்வனவு: நோக்கம் என்ன? [Thursday, 2011-01-06 06:00:21] சிறீலங்காவை இராணுவமயப்படுத்தி தென்னிலங்கை சிங்களவர்களுக்கு கட்டாய இராணுவப்பயிற்சி அளிப்பதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவில் உள்ள பல்கலைக்கழங்களுக்கு செல்லும் தென்னிலங்கை மாணவர்களுக்கு மூன்று வாரம் இராணுவப்பயிற்சி அளிக்கப்படும் என சிறீலங்கா கல்வி அமைச்சர் எஸ்.பி திஸ்ஸாநாயக்கா நேற்று (05) தெரிவித்துள்ளார். மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் முகமாக இது மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளபோதும், தென்னிலங்கை சிங்களவர்களை முற்றுமுழுதாக இராணுவமயப்படுத்தும் நடவடிக்கை இது என தமிழ் இராணுவ பத்தி எழுத்தாளர…
-
- 0 replies
- 1.9k views
-
-
உயிருடன் இருக்கும் போது ஜனாதிபதிக்கு செய்யப்பட்ட சிலை மீண்டும் உருக்கப்பட்டது:- 06 ஜனவரி 2011 சிலை செய்தமை அபசகுணம் என ஜோதிடர்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்தை அடுத்தே அந்த சிலை உருக்கப்பட்டுள்ளது. 2 கோடி ரூபா செலவில் தங்கத்தில் செய்யப்பட்ட ஜனாதிபதியின் சிலை நேற்று மீண்டும் உருக்கப்பட்டு உள்ளதாகவும் தேசிய மணிக்கல் மற்றும் ஆபரண அதிகாரச் சபையின் தலைவர் பதவியில் இருந்து அனில் கொஸ்வத்த நீக்கப்படடுள்ளதாகவும் தெரியவருகிறது. உயிருடன் இருக்கும் போது, சிலை செய்யப்பட்டமை அபசகுணம் என ஜோதிடர்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்தையடுத்தே அந்த சிலை உருக்கப்பட்டுள்ளது. அனில் கொஸ்வத்த அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியிடம் இந்த தங்க சிலையை அண்மையில் கையளித்திருந்தார். எனினும் சில…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயமொன்றில் தீவிபத்து! வியாழன், 06 ஜனவரி 2011 15:15 E-mail அச்சிடுக PDF ஜனாதிபதி அலுவலகம் அமைந்துள்ள அதிஉயர் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு சிலேவ்-ஹைலன்ட் பகுதியிலுள்ள பயிற்சிக் கல்லூரி ஒன்றிலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பயிற்சிக் கல்லூரியில் லிஃப்டில் ஏற்பட்டுள்ள மின் ஒழுக்கே இந்த தீவிபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தினால் எவருக்கும் எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லையெனவும், தீயணைப்புப் படை வீரர்கள் தற்போது தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். Share 0 tamilcnn.com
-
- 0 replies
- 914 views
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சம்பவங்கள் மீண்டுமொரு பயங்கரவாதம் நாட்டில் தலைதூக்க ஏதுவாக அமைவதோடு, சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்கள் உருவாகும் என்று ஐ.தே.க. எச்சரிக்கை விடுக்கின்றது. தூங்கிக் கொண்டிருக்கும் விடுதலை புலிகளை அரசாங்கம் தட்டியெழுப்புவதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டுகின்றது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐ. தே. கவின் தவிசாளரும், குருநாகல் மாவட்ட எம்.பியுமான காமினி ஜயவிக்ரம பெரேரா இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஆட்கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகளென யாழ். குடாநாட்டில் நிலைமைகள் நாளுக்கு நாள்…
-
- 1 reply
- 766 views
-
-
யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்று வருகின்ற கொலை, கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கொண்டு வந்த கவனயீர்ப்பு பிரேரணைக்கு உடனடியாக பதிலளிப்பதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது. பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான மாவை சேனாதிரõஜா மேற்படி கவனயீர்ப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். இந்த கவனயீர்ப்பு பிரேரணையை நேற்று (நேற்று முன்தினம்) முன்வைப்பதற்கு முயற்சித்தோம். எனினும் பிரேரணையை சிங்கள மொழியில் மெõழிப்பெயர்ப்பு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் இன்று (நேற்று) சமர்ப்பிக்கின்றோம் எனக் கூறினார். யாழ…
-
- 0 replies
- 520 views
-
-
யாழ். குப்பிளான் பகுதியில் இளம் பெண்ணை கடத்த சிலர் மேற்கொண்ட முயற்சி பொதுமக்களின் விழிப்பினால், பொலிஸாரின் தலையீட்டினால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளம் பெண்ணினை யாரோ கடத்தி செல்வதாக பொதுமக்கள் உசாராகினர் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொலிசார் அப்பிரதேசங்களில் சோதனையில் திடீரென ஈடுபட்டனராம். முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரின் வாகனத்தைக் கண்டதும் பதட்டமான நிலையில், வந்த பாதை வழியாக திரும்பிச் செல்வதை அவதானித்த பொலிஸார் வாகனத்தை தொடர்ந்து சென்று மறைத்து சோதனையிட்ட போது முச்சக்கர வண்டியில் இளம் பெண் ஒருவரும் மற்றும் மூவரும் இருந்…
-
- 0 replies
- 784 views
-
-
குட்டைப் பாவாடை தடையில்லையாம்! மறுக்கும் அரசு வியாழன், 06 ஜனவரி 2011 12:28 ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாக புதிய விதிமுறைகளை புத்தாண்டில் அரசு அமுலுக்கு கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக செய்தி வெளியானது. அவ்வாறு புதிய விதிமுறைகள் அமுலாகும் பட்சத்தில் குட்டைப்பாவடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் இதனை அரசாங்கம் முற்றாக நிகராகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் குட்டைப் பாவாடை அணிவதற்கு அரசாங்கம் தடை விதித்ததாக கூறி வெளியான செய்திகள் வீண் வதந்திகள் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த காலங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை, இது போன்று எதுவித விதிமுறைத் திட்டங்களையும் அறிவிக்கவில்லைவும் இல்லை இவ்வாறா…
-
- 0 replies
- 739 views
-
-
அம்பாந்தோட்டை தங்காலையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு புதிதாக தனியார் பஸ் சேவை ஒன்று கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு தங்காலையில் இருந்து புறப்படும் இந்த பஸ் காலி, கொழும்பு வழியாக யாழ்ப்பாணத்தைச் சென்றடையும். இது தொடர்பாக தங்காலை நகரில் விளம்பரங்களும் ஒட்டப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இந்த பஸ் சேவை மூலம் தெற்கிலிருந்து வடக்கு, வட மத்திய பிரதேசங்களுக்கு செல்வோர் பயன்பெறுகின்றனர். அத்துடன் வியாபாரிகளும் பொருட்களை ஏற்றிச் செல்வதைக் காணமுடிகிறது. இவ்வாறு விளம்பரங்கள் நடக்கின்றன. தெற்கில் உற்பத்தியாகும் பொருட்கள் பெருமளவு எடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பஸ் மறுநாள் மாலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு தங்காலை…
-
- 0 replies
- 457 views
-
-
மீள்குடியேறிய பகுதிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான இலவச பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உடனடியாக அந்த பஸ் சேவையினை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென்றும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; கிளிநொச்சி, துணுக்காய், முல்லைத்தீவு கல்வி வலயங்களின் கீழுள்ள பாடசாலைகளில் பல்வேறு சிரமங்களின் மத்தியிலேயே ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். எதுவித அடிப்படை வசதிகளோ விடுதி உள்ளிட்ட வசதிகளோ இல்லாத நிலையில் அர்ப்பணிப்புடன் இந்த ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது வன்னியில் பல இடங்களில் ஆசிரியர்கள் இடமாற்றஞ் செய்யப்படும் வேளையில் மக்கள் மீளக்குடியமர்ந்த இப்பகுதிகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள்…
-
- 0 replies
- 549 views
-
-
Thursday, January 6th, 2011 | Posted by நிலா 20 நாட்களின் பின் இன்று வௌ்ளைக் கொடி வழக்கு விசாரணை சரத் பொன்சேகா மீதான வௌ்ளைக் கொடி விவகார வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வௌ்ளைக் கொடி வழக்கு கடந்த மாதம் 16ம் திகதியே இறுதியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அதன் போது முழு வீடியோ காட்சிகளும் இன்றி சாட்சியம் பெற நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://thaynilam.com/tamil/?p=1464
-
- 0 replies
- 409 views
-
-
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்nhற்ற தேசிய அனர்த்த நிகழ்வில் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே தனக்கு உத்தரவிட்டதாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் தேசிய கீத் பாடப்பட்டமை தொடர்பாக எழுப்பப்ட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடுமாறு தனக்கு பணித்ததாக இமெல்டா சுகுமார் தெரிவித்தார். ஆனாலம் தான் முன்னதாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மாறி மாறி படிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அதன்படி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டதாகவும் இரு மொழிகளிலும் பாடப்பட்டாலும் தமிழ்ப் பாரிம்பரிய உடைகளிலேயே மாணவர்கள் தேசிய கீதத்தைப் பாட ஏற்பாடு செய்த…
-
- 2 replies
- 872 views
-