ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
என்னை அழைத்தது ஒரு முரண்நகை adminNovember 2, 2023 “பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை.” என சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் “நெருக்கடியான காலங்களில் நீதித்துறை சுதந்திரம்” என தொனிப்பொருளில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் கருத்துரை வழங்க இருந்தார். அந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் தெற்கில் நடைபெற்ற புத்தக வெளியீடு ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்…
-
- 69 replies
- 5.2k views
- 1 follower
-
-
மீண்டும் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவ்வாறு சேவை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சேவை நீடிப்பானது நான்காவது முறையாக வழங்கப்படுவதோடு இதற்கு முன்னர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இரண்டு முறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1356975
-
- 0 replies
- 254 views
-
-
02 NOV, 2023 | 07:11 PM மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. https://www.virakesari.lk/article/168355
-
- 28 replies
- 2.3k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 02 NOV, 2023 | 04:47 PM (இராஜதுரை ஹஷான்) பல்கலைக்கழகங்களின் வளப்பற்றாக்குறை,விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி 17 அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் இன்று வியாழக்கிழமை (02) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரச பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. விரிவுரையாளர்களர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் பரண ஜயவர்தன குறிப்பிடுகையில், பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.புதிய வரி கொள்கையினால…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
Published By: VISHNU மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று 49 ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது. பண்ணையாளர்களும், கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிராக நீதி வேண்டி இச் சுழற்சி முறை போராட்டம் இடம்பெற்று வருகிறது. இதற்கு வலுச் சேர்க்கும் முகமாக வியாழக்கிழமை (2) கிழக்கு பல்கலைக் கழகத்தின் அனைத்துப் பீட தமிழ் மாணவர்கள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களது நிண்ட கால மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறு அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் வியாழக்கிழமை (2) காலை ஒன்று கூடிய மாணவர்கள…
-
- 0 replies
- 207 views
-
-
யாழிற்கு சீனத் தூதுவர் விஜயம்! இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 06 ஆம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள குறித்த குழுவினர் வட மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நலனோம்புத் திட்டங்களையும் குறித்த குழுவினர் பார்வையிடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கல…
-
- 32 replies
- 2.6k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் படத்தை பத்திரிகையில் பிரசுரித்தமைக்காக விசாரணை adminNovember 1, 2023 யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படைத்தை வெளியிட்டமை தொடர்பில் பத்திரிகையின் ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து, இன்றைய தினம் புதன்கிழமை வாக்குமூலம் பெற்றுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் , உதயன் பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அது தொடர்பில் விசாரணைக்காக பத்திரிகையின் செய்தி ஆசிரியர் கு.டிலீப் அமுதனை சுமார் மூன்றாண்டுகளின் பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் …
-
- 1 reply
- 411 views
-
-
வட மாகாண அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் போராடப் அறிவிப்பு! November 2, 2023 வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணியிலிருந்து நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 8 மணி வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில், நாங்கள் பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், அதை தடுப்பதற்குரிய வழி வகைகளைப் பற்றியும் ஆட்சியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்,…
-
- 0 replies
- 216 views
-
-
இலங்கையில் எயிட்ஸால் பாதிக்கப்பட்ட 43 பேர் உயிரிழப்பு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் மொத்தம் 485 பேர் எச்.ஐ.வி அல்லது எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம் 43 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள 41 நிலையங்களில் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டம் அறிவித்துள்ளது. இதற்காக www.know4sure.lk என்ற இணையத்தின் ஊடாக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் மேலதிக தகவல்களுக்கு 0112 667 163, 0703 633 533 இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள ப…
-
- 0 replies
- 224 views
-
-
யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஈடுபட்டனர். அதன்பின் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர். https://athavannews.com/2023/1356773
-
- 0 replies
- 341 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதான அடிப்படையில் தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பின் பிரதான மாவீரர் துயிலும் இல்லமாக கருதப்படும் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. தரவை மாவீரர் துயிலும் இல்…
-
- 0 replies
- 280 views
-
-
கல்வியை இடைநிறுத்தி வேலைக்கு செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பொருளாதார நெருக்கடி காரணமாக பன்னிரெண்டு முதல் பதின்மூன்று வயது வரையிலான பல சிறுவர்கள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. குடும்ப சுகாதாரப் பணியகத்தின் பாடசாலை சுகாதாரப் பிரிவின் தலைவர் டொக்டர் ஆயிஷா லொகு பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார் இந்த நிலைமை பல பாடசாலைகளில் குறிப்பாக கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மற்றும் தொல…
-
- 0 replies
- 263 views
-
-
பணமோசடி வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் விடுதலை ! கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கில் இருந்து நாமல் ராஜபக்ஷ உட்பட அனைத்து பிரதிவாதிகளையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு, குறித்த நிறுவனத்தின் ஊடாக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் 30 மில்லியனை முறைகேடாக சம்பாதித்ததாக குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1356831
-
- 0 replies
- 382 views
-
-
Published By: DIGITAL DESK 3 02 NOV, 2023 | 09:36 AM (நா.தனுஜா) தொல்பொருள் திணைக்களமானது நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் அப்பிரதேசங்களிலுள்ள கட்டமைப்புக்கள் மற்றும் பௌத்த பிக்குகளுடன் இணைந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வணக்கத்தலங்களைக் கைப்பற்றுவதற்கு வசதி ஏற்படுத்துகின்றது என சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை, நாட்டில் வாழும் சிறுபான்மையின இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கான மீயுயர் மத சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கமானது தற்போது நடைமுறையிலுள்ள 'ஒடுக்குமுறை' கொள்கைகள் மற்றும் சட்டங்களை முற்றாக நீக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ நடவடி…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
இலங்கை இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் கேள்வி துரிதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இவ் வருடம் இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தரவுகள் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை (CDA) அதிகாரிகளுடன் நேற்று அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே இதனை தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின் போது, இலங்கையின் தென்னைச் செய்கையின் அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 2022 ஆம் ஆண்டு 11 ம…
-
- 0 replies
- 530 views
-
-
01 NOV, 2023 | 11:10 AM (நா.தனுஜா) பாராளுமன்ற உறுப்பினர் தராதரம் தொடர்பான சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய ஒழுக்கக்கோவை தயாரிக்கப்படும் எனவும், அதனை மீறுபவர்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை இரத்துச்செய்யப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
01 NOV, 2023 | 12:10 PM (நா.தனுஜா) தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து பேசினாலும், அவை எதிர்பார்க்கப்பட்டவாறு செயல்வடிவம் பெறவில்லை என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். அதே வேளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்புக்கள் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்களை செவிமடுத்த அவர்கள், இதனையொத்த கருத்துக்களையே தாம் சந்தித்த ஏனையோரும் கூறியதாகத் தெரிவித்துள்ளனர். நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்தல்…
-
- 3 replies
- 386 views
- 1 follower
-
-
பணவீக்கம் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்! ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம், இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், எவ்வாறு இருப்பினும் உணவுப் பணவீக்கம் மாறாமல் தொடர்ந்து -5.2 தவீதமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1356558
-
- 0 replies
- 454 views
-
-
மக்கள் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம். பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது. தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டெப்லெட்டுகளைப் பயன்படுத்துவதே இவ்வருட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் சிறப்பான அம்சமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இறுதியாக 2012 ஆம் ஆண்டு மக்கள் சனத்தொகை கணக்கிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1356628
-
- 4 replies
- 731 views
- 1 follower
-
-
01 NOV, 2023 | 11:46 AM இலங்கையில் கடந்த 9 மாதங்களில், 14 வயதுக்கு உட்பட்ட 120 பாடசாலை மாணவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் கூறுகிறது. அதிக எண்ணிக்கையான மாணவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 31 ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பாடசாலை மாணவர்களும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவர்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில், முழு நாட்டிலும் 1150 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். https://www.virakesari.lk/article/168230
-
- 5 replies
- 872 views
- 1 follower
-
-
01 NOV, 2023 | 10:58 AM அமெரிக்கா விசா மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர ஆசியாவின் தவிர்க்க முடியாத நம்பகமான நண்பன் சீனா என அந்த நாட்டிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். பிஓஏஓஉச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகளிற்கு இடையிலான பிணைப்பை நெருக்கத்தை மேற்குலகினால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இந்த பிணைப்பு வர்த்தகம் மூலமும் முக்கியமாக பௌத்தம் மூலமும் வளர்ச்சியடைந்தது வளர்த்தெடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர சீனா ஆசியாவின் தவிர்க்க முடியாத நம்பகதன்மை மிக்க நண்பன் எனவும் தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில் பாதுகாப்பு சபையின் ந…
-
- 1 reply
- 441 views
- 1 follower
-
-
மனைவியின் கடவுச்சீட்டில் வேறொரு பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றவர் கைது! யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்றவேளை சந்தேக நபர் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர், தனது 5 வயது மகன் மற்றும் அவரது மனைவி என குறிப்பிடப்பட்ட காங்கேசன்துறையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவருடன் இத்தாலி செல்வதற்காக இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். விமானநிலையத்தில் தமது பயண ஆவணங்களை வழங்கியபோது, நம்பகத்…
-
- 0 replies
- 300 views
-
-
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இலங்கைக்கு செல்கிறார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார். மேலும் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளை நிர்மலா சீதாராமன் திறந்து வைக்க உள்ளார். அவரது இந்த பயணத்தின்போது இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பவுத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு சார்பில் 82.40 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 26 replies
- 2.5k views
- 2 followers
-
-
31 OCT, 2023 | 02:47 PM ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் சம்பந்தனையும் சுமந்திரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற தமிழ் தேசிய பிரச்சனை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் இரத்துச் செய்யப்படாமல் இருப்பது போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பந்தனை சந்தித்தனர் ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் ! | Virakesari.lk
-
- 5 replies
- 554 views
-
-
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரட்ண தேரருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கை இன்று செவ்வாய்க்கிழமை (31) விசாரணைக்கு எடுத்தபோது தேரர் தமிழர்கள் மீதான இன வன்முறைகளை தூண்டும் விதமாக வெளியிட்ட கருத்துக்கள் இறுவெட்டில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி குறித்த தேரர் மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்கு அருகாமையில் வீதியை மறித்து வீதியால் சத்தமாக தெற்கிலுள்ள தமிழர்கள்…
-
- 1 reply
- 444 views
-