Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார், முல்லை அரச அதிபர்களுக்கு திடீர் இடமாற்றம்! Posted by admin On January 6th, 2011 at 11:50 am அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு ஒத்துழைக்காமையால் மன்னார் அரச அதிபர் நீக்கிலாஸ் பிள்ளை உடனடி இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மன்னார் அரச அதிபராகச் செயற்பட்டு வந்த நீக்கிலாஸ் பிள்ளை கொழும்பில் பணியாற்றும் வகையில் உடனடி இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மன்னார் அரச அதிபராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு அரச அதிபராக மன்னார் திட்டப்பணிப்பாளராகச் செயற்பட்டு வந்த பத்திநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. முல்லைத்தீ…

  2. யாழ். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு சென்னைப் பல்கலை முழுமையாக உதவும் [06 ஜனவரி 2011, வியாழக்கிழமை 8:15 மு.ப இலங்கை] துணைவேந்தர் திருவாசகம் உறுதி சென்னை, ஜன. 6 யாழ்ப்பாண மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவ சென்னைப்பல்கலைக்கழகம் தயாராக உள்ளது என்று தெரிவித் துள்ளார் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். "எதிர்காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏறபடுத்திக்கொள்ளவும் விரும்புகின்றது. இதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும். யுத்தச் சூழலில் வாழ்ந்து கொண் டிருக்கின்ற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம்' என்றார் துணைவேந்தர் பேராசிரியர் திருவாசகம். யாழ…

  3. ஒட்டகம், தீக்கோழி இலங்கை வருகின்றன [06 ஜனவரி 2011, வியாழக்கிழமை 8:00 மு.ப இலங்கை] கொழும்பு, ஜன.06 மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஒட்டகம் மற்றும் தீக்கோழிகளை இறக்குமதி செய்ய அரசு ஆலோசித்து வருகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பால் மற்றும் முட்டையின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவே இவற்றை இறக்குமதி செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக கால்நடை மற்றும் கிராமிய சமூக பிரதி அமைச்சர் எச்.ஆர்.மித்திரபால தெரிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் வித்தியாசமான உணவு வகையை வழங்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தேயிலை மற்றும் இறப்பர் என்பன எமது நாட்டுக்குரிய தாவரங்கள் அல்ல. அவை ஆங்கிலேயரால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவை. அது போலவே ஒட்டகங்கள் …

  4. இலங்கையில் இந்திய புலனாய்வாளர்களின் ஊடுருவல் அதிகரிப்பு தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் இந்திய புலனாய்வுத் துறையான றோ அங்கத்தவர்களின் ஊடுருவல் அதிகரித்திருப்பதாக, பாதுகாப்பு அமைச்சின் உள்ளகத் தகவலை ஆதாரம்காட்டி சிஙகள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இந்தியாவின் பயிற்றுவிக்கப்பட்ட புலனாய்வு அங்கத்தவர்கள் மட்டுமன்றி, படை உறுப்பினர்களும் புலனாய்வு நடவடிக்கைக்காக இலங்கையில் பல்வேறு வகையில் களமிறக்கப்பட்டிருப்பதாக இந்தத் தகவல் மேலும் கூறுகின்றது. இவ்வாறு களமிறக்கப்பட்டவர்களில் இருவர் கடந்த சில நாட்களிற்கு முன்னர் கண்டியிலும், நீர்கொழும்பிலும் சிறீலங்கா புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், உயரதிகார…

    • 0 replies
    • 549 views
  5. புலிகள் மீண்டும் வருவார்களா கோத்தாபய ராஜபக்ஸவின் குழப்பம் - GTNனின் புலனாய்வுச் செய்தியாளர்:- 06 ஜனவரி 2011 விடுதலைப்புலிகள் மீண்டும் வருவார்களா என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ பல்வேறு தரப்பினரிடமும் அபிப்பிராயம் கேட்டு வருவதாக ஜீரீஎன்னின் புலனாய்வுச் செய்தியாளருக்கு தெரிய வந்துள்ளது. அண்மையில் லண்டனைச் சேர்ந்த அடியார் ஒருவர் சகிதம் புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்ற சிலர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவைச் சந்தித்து உரையாடியுள்ளனர். வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தே இந்த சந்திப்பில் முக்கியமாக உரையாடி உள்ளதாக ஜீரீஎன்னின் புலனாய்வுச் செய்தியாளர் குறிப்பிட்டு உள்ளார். …

    • 0 replies
    • 900 views
  6. யாழ். குடா அடாவடித்தனம்! கூட்டிக் கழித்துப் பார்த்தால் சூத்திரதாரிகள் யாரெனத் தெரியும் யாழ். குடாவில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் அங்கு இயங்கும் ஆயுக் குழுக்கள் செயற்படுவதாகத் தான் கருவதாக பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே. ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார். வடக்கில் தற்போது சமதானமும் அமைதியும் நிலவுவதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கும் போது இவ்வாறான சம்பவங்கள் தொடராக இடம்பெறுவது கேள்விகளைத் தோற்றுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, யாழ். குடாவில் இடம் பெறும் சம்பவங்கள் தொடர்பில் தான் ஆயுதக் குழுக்கள…

    • 0 replies
    • 531 views
  7. அடுத்தாண்டு முதல் பல்கலைக்கழக மாணவர்களின் திறன் விருத்திக்காக இராணுவப்பயிற்சியாம்! வியாழன், 06 ஜனவரி 2011 10:59 அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ பயிற்சியளிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். மூன்று வாரகாலம் இராணுவ முகாம்களில் வழங்கப்படும் இப்பயிற்சியானது தலைமைத்துவ பயிற்சியாகும், இதனை மாணவர்கள் இராணுவ பயிற்சியென தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. மாணவர்களின திறன் விருத்திகளுக்காகவே இப் பயிற்சியளிக்கப்படவுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார். tamilcnn

  8. இலங்கை அகதிகள் நாடு திரும்ப விருப்பம் அகதிகள் நாடு திரும்ப விருப்பம் என யு என் எச் சி ஆர் கூறுகிறது இலங்கையில் போர் காரணமாக அகதிகளாக வெளியேறிய பலர் நாடு திரும்ப விரும்புகிறார்கள் என்று ஐ நா வின் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அப்படி வருபவர்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கைகளை தாங்கள் மேலும் முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. போருக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று இலங்கையில் இருக்கும் யு என் எச் சி ஆர் அமைப்பின் துணை வதிவிடப் பிரதிநிதி ஜெனிஃபர் பகோனஸ் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். அந்த எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு கணிசமான அளவில் உயரும் என்று தாங்கள் நம்புவதா…

    • 2 replies
    • 952 views
  9. என்னதான் நடக்குது உலகத்திலே...GTN ற்காக கடுவன் கனகண்ணை யாழ்ப்பாணத்திலிருந்து:- 05 ஜனவரி 2011 என்னதான் நடந்தாலும், ஊர் உலகத்தில நடக்கிறது பற்றி உங்கள் நாலு பேரோட கதைச்சாத்தான் மனசுக்குள்ள திருப்தி. பழையபடி யாழ்ப்பாணத்தில நாலா பக்கமும் வெடிச்சத்தம் கேட்குது. நீங்கள் நினைக்கிற மாதிரி இதுவொண்டும் நத்தார், வருடப்பிறப்பு சீன வெடியில்ல. நிஜ துவக்கு வெடி. இப்ப பழையபடி மனிசி மாலை 5 மணியோட வீட்டுக்குள்ள இருந்துடோணும் என்றாள். அது சரி வீட்டுக்குள்ள இருந்தால் வாற யம தர்மராசா விலாசம் தெரியாமல் மாறிப்போயிடுவரோ எண்டு நீங்கள் சொல்லுறது கேக்குது. கடந்த வருடத்தில, கடைசியா பலியெடுத்த அந்த குடத்தனை கிழக்குப் பெடியன் என்ன பாவம் செய்தானோ. அவன்ற்ற மனுசி என்ர மனுசனைக் கொ…

  10. திருவேங்கடம் வேலுப்பிள்ளை வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் 10/01/1924 -- --06/01/2010 இந்த ஆண்டு தை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங்கு தருகிறோம். இது தமிழரின் போராட்ட வாழ்வோடு ஒன்றியது என்பதால் தொடராக வரவுள்ளது. வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கலாம். தலைப்பு மட்டும் மாற்றப்படும். இனி கட்டுரை..... யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமே வல்வெட்டித்துறையாகும். வல்வெட்டித்துறை என்னும் பெயர் அப்பிரதேசத்துக்கு வந்ததே ஒரு சுவாரசியமான கதைதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் இலங்கையை ஆண்டபோது `வெல்வெட்` என்னும் ஒரு வகை துணி அப்பிரதேசத்…

  11. மீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் அல்ல – கௌரி சில தினங்களுக்கு முன்பு லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு கலந்துரையாடல் கேட்க நேர்ந்தது. தனிப்பட்ட எந்த ஒரு நபரின் பெயரையும் நான் இங்கு குறிப்பிட விருப்பவில்லை. அது அநாகரீகமும் கூட.ஆனால் அதை பார்த்த நாளிலிருந்து இரணமான நெஞ்சம் இன்னும் ஆறவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது என்று சொல்வார்களே..அதுதான் அன்று நடந்தது. வைகாசி பேரவலத்தின் பின்பு மெல்ல மெல்ல மறைமுகமாகப் புலிகளைத் தாக்கினார்கள் இந்த பொய் வல்லுனர்கள்.ஆனால் இப்பொழுதெல்லாம் நேரடியாக அதுவும் தொலைக் காட்சியில் வந்து தாக்கும் அளவுக்கு துணிந்துவிட்டார்கள் இந்த “நாவலர்கள்”. அன்று அந்தத் தொலைக்காட்சியில் …

  12. புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? – உண்மைச் சம்பவம் ஓவ்வொரு இரவும் விடிகின்ற பொழுது எங்கள் வாழ்வில் ஒரு விடியல் வந்துவிட்டதா என்ற கனவுகள் சிதைக்கப்பட்டன. விடிந்துவிட்டது என்றால் அடுத்த நாள் இரவுக்குள் எனது உறவுகள் இருக்குமா அல்லது நான் தான் உயிரோடு இருப்பேனா. என்ற ஏக்கம் மனதுக்குள் குடிகொண்டது. எங்குமே இரத்தக் கறைகளும் அழுகைக் குரல்களும் வெளியில் போக முடியாதயளவிற்கு மழை போல் எறிகணைத் தாக்குதல். மக்களின் பிணங்களை வீதியோரங்களில் கிடந்தன. அவர்களை ஒரு புதை குழிக்குள் போட்டு மூடமுடியாமல் எறிகணைகள் வீழ்ந்த வண்ணம். இருந்தது. கொத்து கொத்தாக காயமடைந்து குருதி வெள்ளத்தில் மிதந்தார்கள். யார் யாரை பார்ப்பது என்ற நிலைமை. இன்னும் சிலர் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக…

  13. சிறிலங்காவின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களை பிரமாண்டமாக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனைத்து சிறிலங்கா இராஜதந்திரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மகிந்தா அரசின் இவ் வேண்டுகோளைத் தொடர்ந்து சுதந்திர தினக் கொண்டாட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து ராஜபக்சாக்களின் பாராட்டுதல்களைப் பெறுவதற்கான போட்டி உலக நாடுகளிலுள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகள் மத்தியில் தோன்றியுள்ளது. அமெரிக்காவிலும் வழமையைவிட சிறப்பாக இதனைக் கொண்டாடும் நோக்குடன் சிறிலங்காவின் ஐ.நாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சுதந்திர தின மற்றும் சம்புத்தர் ஜெயந்தி கொண்டாட்டங்களுக்காக அமெரிக்காவிலுள்ள சிங்கள சமூகத்திடம் நி…

    • 0 replies
    • 853 views
  14. யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையர் குழுவினால் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தசாமி இருதயன் வயது 27 என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார். இவர் வன்னியிலிருந்து இறுதி யுத்தத்தின் போது வெளியேறி, முகாமில் இருந்து பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தவர் ஆவார். அதன்பின் யாழ். திருநெல்வேலியில் வசித்துவந்த வேளையிலேயே கொல்லப்பட்டுள்ளார். இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/14350-2011-01-05-19-46-57.html

  15. யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிய கருத்துக்களை இராணுவம் மறுத்துள்ளது. "இராணுவம் இந்த குற்றச்சாட்டுக்களை பூரணமாக மறுக்கிறது" என யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பயப்பிராந்தியுடன் வாழும் மனநிலை ஒன்று மக்களிடம் தோன்றியிருப்பதாகவும் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கூறியமைக் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவதில் இராணுவம் பொலிஸாருக்கு உதவி வருகின்றது. இராணுவம் இரவு நேரத்தில் ரோந்துக்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இங்கு இடம்பெறும் களவு, கொலை, மற்றும் வேறு குற்றச்செய…

    • 0 replies
    • 1.4k views
  16. தமிழனுக்கு எதிர்காலம் உண்டா என்ற கேள்வி சிக்கல் நிறைந்த கேள்வி. எளிதில் பதில் அளிக்க முடியாது என்பது மட்டுமல்ல, இதற்குப் பதில் அளிப்பது கடினம் என்று தான் கூற வேண்டி இருக்கும். ஆனால் இந்தக் கேள்வி இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பப்பட்ட கேள்வியாக விளங்குகிறது. பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைந்தது 1921ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 11ஆம் தேதி. அவன் மனதிலேயே இக்கேள்வி எழுந்துள்ளது. "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று ஒரு பேதை உரைத்தான் என்று கோபம் கொள்ளும் பாரதி, மற்றுமோர் இடத்தில் "விதியே விதியே தமிழ்சாதியை என்ன செய்ய நினைத்தாய்?" என்று கேள்வி கேட்டு ஏங்குகிற காட்சியையும் காண்கிறோம். தமிழன் வாளாத நாடில்லை. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை: "தமிழன் வாழாத நா…

    • 0 replies
    • 1.1k views
  17. இன்று கேணல் சாள்ஸ் அண்ணாவின் வீரவணக்க நாளாகும் * Wednesday, January 5, 2011, 3:29 05-01-2008 அன்று மன்னார் இலுப்பைக்கடவைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளரான கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சார்லஸ் உள்ளிட்ட 4 போராளிகள் வீரச்சாவடைந்தனர் . இதில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சார்லஸ் (சண்முகநாதன் ரவிசங்கர்) மாதிரிக் கிராமம், ஜெயபுரத்தைச் சேர்ந்த லெப். சுகந்தன், 176, யோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த லெப். வீரமாறன் (பரராஜசிங்கம் சுதன்) ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சியைச் சேர்ந்த லெப். காவலன் (சின்னத்தம்பி கங்காதர…

    • 8 replies
    • 928 views
  18. கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர், மருதமுனை பிரதேசத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றபோதே தாக்கப்ட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் காதர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/14324-2011-01-05-12-37-23.html

    • 0 replies
    • 540 views
  19. புதன்கிழமை, ஜனவரி 5, 2011 பிரதம நீதியரசர் தனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டதாகவும் அதற்கான கடிதத்தை கையளித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சட்டத்துறையில் பெரும் பிரச்சினைகள் எழுந்துள்ளமையினாலும் இராணுவ நீதிமன்றம், நீதிமன்றம் இல்லை என்றும் இதனாலேயே இராஜினமா செய்ய கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மஹிந்த இந்த இராஜினமா கடிதத்தினை ஏற்கவில்லை என கூறப்படுகின்றது. Add new comment Eelanatham

    • 1 reply
    • 1.2k views
  20. தமிழினத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நாள் இன்றைய காலகட்டத்தில் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளை வாசிக்கும் பொழுது பலவிதமான இன்னல்கள், இடையூறுகள் மத்தியிலும் சில நினைவுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் சட்டத்திற்கு அடிபணிந்து சட்டத்தின் வாயலுக்கு பயமுற்று பகிரங்கப்படுத்தாமல் இருக்கும் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயம் காரணமாக மறந்தும் விடுகிறார்கள். மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் நினைவாக இந்த நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பல நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நினைவு மலர்கள் பல வெளிவந்துள்ளன என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள் என்ற காரணத்தினால் வெளிநாடுகள…

  21. புலம் பெயர் தமிழர்களின் வாக்குகளுக்காகவே இலங்கை தொடர்பில் UK விசேட கவனம் செலுத்தியது - விக்கிலீக்ஸ் 05 ஜனவரி 2011 புலம் பெயர் தமிழர்களின் வாக்குகளுக்காகவே இலங்கை தொடர்பில் UK விசேட கவனம் செலுத்தியது - விக்கிலீக்ஸ் புலம் பெயர் தமிழர்களின் வாக்குகளுக்காகவே யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், பிரித்தானியா இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தியது - விக்கிலீக்ஸ் புலம் பெயர் தமிழர்களின் வாக்குகளுக்காகவே பிரித்தானிய அரசாங்கம் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் வாழும் புலம் பெயர் தமிழர்களின் வாக்குகளுக்காகவே பிரித்தானிய அரசாங்கம் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், இலங்கை தொடர்பில் வ…

  22. தீபச்செல்வனின் ‘ஈழம் – மக்களின் கனவு’ சென்னை புத்தகத் திருவிழாவில் கவிஞர் தீபச்செல்வனின் ‘ஈழம் மக்களின் கனவு’ என்ற புதிய நூல் தோழமை வெளியீடாக வந்திருக்கிறது. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம், பாழ்நகரத்தின் பொழுது ஆகிய மூன்று தொகுப்புக்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் இது தீபச்செல்வனின் நான்காவது நூலாகும். ‘ஈழம் மக்களின் கனவு’ என்ற இந்நூல் ஈழம் பற்றிய உரையாடல்களையும் வாக்குமூலங்களையும் கொண்டிருக்கிறது. தீபச்செல்வனுடன் ஷோபாசக்தி நிகழ்த்திய ‘ஈழத்து மக்களும் கனவுமே எனது ஆதர்சம்’ என்ற நேர்காணல் தொடர்ச்சியான விமர்சனத்தினை எதிர்கொண்ட ஓர் உரையாடலாகும். அதேபோல் ‘பதுங்குகுழியில் இருந்து கொஞ்சம் சொற்கள்’ என்ற நேர்காணல் உன்னதம் இதழுக்காக கௌ…

  23. கொழும்பு விமான நிலயத்தில் கடுமையாக கண்காணிக்கப்படும் தமிழர்கள்.. கொழும்பு விமான நிலையத்தில் புலனாய்வுத்துறையினரின் கடும் கண்காணிப்புடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழர்கள் பலமணிநேரம் நீளும் கடுமையான விசாரனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.நாட்டினுள் உள் நுழையும்போது விசாரணைகளில் இருந்து தப்பியோர் வெளியேறும்போது விசாரிக்கப்படுகிறார்கள். பெயர்ப்பட்டியலுடன் காணப்படும் புலனாய்வுத்துறையினர் அந்தப்பட்டியலில் உள்ளவராயின் கைது செய்யப்பட்டு பலமணி நேரம் விசாரிக்கப்படுவதுடன் அவர்களில் சிலர் வெள்ளைவான்களில் ஏற்றப்பட்டு இனந்தெரியாத இடத்துக்கு கொண்டுசெல்லப்படுகின்றனர். அதேபோல நாட்டிற்குள் உள் நுழையும் சிலரை அவர்களது பெயர்களை குறிப்பெடுத்தபின் நாட்டினுள் அ…

  24. போதையில் இளைஞர்கள் செம்மணியில் அட்டகாசம் பொது மக்கள் முகஞ்சுழிப்பு [05 ஜனவரி 2011, புதன்கிழமை 12:00 மு.ப இலங்கை] செம்மணி, ஜன. 5 செம்மணி நீரேரியில் இளை ஞர் கும்பல் ஒன்று மது போதை யில் அரைகுறை ஆடைகளு டன் நீராடியதுடன் வீதியில் வாகனங்களில் சென்றவர்களு டனும் சேஷ்டை விட்டனர். இத னால் பொதுமக்கள் கடும் அசௌ கரியங்களுக்கு உள்ளாகினர். இந்த இளைஞர்களில் பலர் யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். சிறிய ஹன்ரர் வாகனம் ஒன் றில் வந்து இவர்கள் செம்மணி யில் ஏ9 வீதியில் உப்பளப் பக்கம் இருந்து மறுபக்கமாகப் பாய்ந்த வெள்ள நீரில் அரை குறை ஆடைகளுடன் இறங் கிக் குளித்தனர். இவர்கள் தண்ணீரில் நின்ற படி வீதியில் சைக்கிளில் சென்ற யுவதிகளையும், பஸ்ஸில் சென…

    • 9 replies
    • 2.1k views
  25. யாழப்பாணத்தில் கடந்த 4 நாட்களில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களின் 'ஸ்கோர்' விபரம்] 2011-01-05 00:32:02 யாழப்பாணத்தில் கடந்த 4 நாட்களில் 21 குழு மோதல்கள்,தனிப்பட்ட தகறாறுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 34 பேர் விழுப்புண் அடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்களில் 6 பேர் பெண்கள் எனவும் மிகுதிப் பேரில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 19 பேர் எனவும் தெரியவருகின்றது. கூடுதலாக வாள்கள் மற்றும் பொல்லுகள் கொண்டே தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் சில தாக்குதல்கள் வாய் மூலம் கடித்து நடைபெறுவதாகவும் தெரியவருகின்றது. குப்பிளான் பகுதியில் நடைபெற்ற வாய் மூலமான கடிபடு தாக்குதலில் ஒரு பெண் இன்னொரு பெண்ணினால் 4 பற்கள் மூலம் கையில் கடி வாங்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். வடமராட்சியில் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.