ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
மதுபான கலவை தொடர்பாக இராணுவத்தினருக்குப் பயிற்சி வீரகேசரி இணையம் 1/5/2011 4:30:27 PM இலங்கை கொமாண்டோ படையைச் சேர்ந்த 11இராணுவ வீரர்களுக்கு இலங்கையிலுள்ள தாஜ் சமுத்திரா விடுதியானது சமயற்கலை மற்றும் மதுபான கலவை தொடர்பான பயிற்சிகளை வழங்கியுள்ளதாக இலங்கை இராணுவ உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி பிரபல இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி பயிற்சியானது சுமார் 3 மாத காலமாக வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது இராணுவத்தினரின் விருந்து நிகழ்ச்சிகள் போன்றவற்றை சரியான முறையில் தயார்படுத்துவதற்கு அவர்களுக்கு உதவுமெனவும் இப்பயிற்சியை இலவசமாக வழங்கியமைக்காக தாஜ் சமுத்திராவிற்கு அவ்வதிகாரி நன்றியை தெரிவிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 842 views
-
-
யாழ்ப்பாணத்திலும் முக்கிய இடங்களில் அதிநவீன கமராக்கள்! அண்மையில் கொழும்பின் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே. அதே போன்று யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அதி நவீன கமராக்கள் பொருத்தப்பட உள்ளது. யாழின் நகரப்பகுதியிலேயே முதற் கட்டமாக கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. யாழ். நகருக்குள் பிரவேசிப்பதற்கான பாதைகள், முக்கிய இடங்கள் என்பன கண்காணிக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் குற்றச்செயல்கள் இடம்பெறுவதைக் குறைக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=16783:2011-01-05-05-03-17&catid=54:2009-12-16-09-39-3…
-
- 1 reply
- 552 views
-
-
சொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ் -ச.பொட்டு January 5th, 2011 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. ~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?” தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார். மன்னார் களமுனையின் பின்னணியில் எதி…
-
- 1 reply
- 1k views
-
-
வரலாற்றில் இருந்து பாடம் படியாதோருக்கு அதே பாடத்தையே வரலாறு திரும்பத் திரும்பப் புகட்டும் இத்தீவின் சுதந்திரத்தை பிரித்தானிய காலனிய ஆட்சியாளரிடம் ஒரே குரலில் வலியுறுத்திக்கோரும் பொருட்டாக முன்வைக்கப்பட்ட தீர்மான வரைபில்தானே ஆட்புல பிரதிநிதித்துவமும் வலியுறுத்தப்பட்டிருந்தமையால் யாழ்ப்பாண மகாசபையின் தலைவர்களான சபாபதியும் கனகசபையும் ஆட்சேபித்து அதில் கையெழுத்திட மறுத்திருந்தார்கள். ஒற்றையாட்சி நிலவும் நிலையில் ஆட்புலப் பிரதிநிதித்துவம் தமிழ் மக்களை எண்ணிக்கையில் சிறுபான்மையினராக மாற்றிவிடும் என்பதே அவர்களது ஆட்சேபனைக்குக் காரணமாக இருந்திருத்தல் வேண்டும். தீவிலுள்ள அனைத்து அமைப்புகளையும் இணைத்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவ முற்பட்டிருந்த சிங்களத் தலைவர்கள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன்கிழமை, ஜனவரி 5, 2011 வடக்கே யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் அன்றாடப் பிழைப்பிற்காக விவசாய நடவடிக்கைகளி்ல் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுடைய விவசாயப் பயிர்களை கட்டாக்காலி மாடுகள் நாசம் செய்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவகம் தெரிவித்துள்ளது. 30 வருட யுத்தம் நிறைவடைந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில், 80 சதவீதமானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டவர்களின் பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் கட்டக்காலி மாடுகள் அலைந்து திரிவதாகவும் அந்த நிறுவகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலத்திலும் வடக்கு பகுதி விவசாயிகளது பயிர் நிலங்களை கட்டாக்காலி மாடுகள் …
-
- 1 reply
- 1k views
-
-
புதன்கிழமை, ஜனவரி 5, 2011 வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியில் திருகோணமடுவ சந்தியில் பொலித்தின் உறையில் பொதி செய்யப்பட்ட நிலையில் பிறந்து ஒரு நாள் மாத்திரமேயான பெண் குழந்தையொன்று பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சடலம் வெலிக்கந்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வெலிக்கந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Add new comment Eelanatham
-
- 0 replies
- 857 views
-
-
அனைத்து உள்ளூராட்சி சபைகளும் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் யாழ், மாநகர சபையும், வவுனியா நகர சபையும் கலைக்கப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம் 30 வருட யுத்தத்தின் பின்னர் யாழ், மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல் கடந்த வருடமே நடத்தப்பட்டது. Eelanatham
-
- 0 replies
- 484 views
-
-
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்”என்ன செய்யலாம் இதற்காக?” வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ் ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் நம் மீனகம் தளத்தில் நேரலையாக காணலாம் http://meenakam.com
-
- 0 replies
- 725 views
-
-
கேணல் சாள்ஸ் உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் – கேணல் சூசை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கேணல் சாள்சின் வீரவணக்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும். கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி. …
-
- 0 replies
- 847 views
-
-
சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனம் அரசுத்துறை, அரசசார்பற்ற நிறுவனங்களின் தற்கால அபிவிருத்தி திட்டங்களுக்கு வழிகாட்டும் நோக்கில் "யாழ்ப்பாண மாவட்டத்தின் வளங்கள், பயன்பாடு, அபிவிருத்தி வழிமுறைகள்" எனும் தலைப்பிலான இருநாள் செயலமர்வினை 29/01/2011 சனிக்கிழமை, 30/01/2011 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறைக்கொடை நிலையக் கேட்போர் கூடத்தில் நடத்தவுள்ளது. எமது மக்களின் அபிவிருத்திப்பணி சிறக்க புலமையாளர்களும், திட்டமிடுவோரும், திட்டங்களை அமுல்படுத்துவோரும் ஒன்றுகூடும் இச் செயலமர்வில் பங்குகொள்ள விரும்புவோர் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி சிந்தனைக்கூட செயலமர்வின் ஏற்பாட்டாளர் பேராசிரியர் இரா. சிவசந்திரன் வேண்டுகின…
-
- 0 replies
- 853 views
-
-
சிந்தனைக் கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12/01/2011 புதன்கிழமை மு.ப 8மணி முதல் தியாகி அறைக்கொடை நிலையக் கேட்போர் கூடத்தில் "வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் காணிப் பிரச்சனைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்" எனும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்வுக்குள்ளான மக்கள், மீள்குடியேற்றப்படும் போது தமது காணிகளை மீளப்பெற்றுக்கொள்ளல் தொடர்பாகப் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். காணி தொடர்பாகப் பல சிக்கலான விடயங்களை ஆராய்ந்து உரிய சட்டரீதியான நடைமுறைகளைத் தெளிவுபடுத்துவதற்காக இத் துறையில் நீண்டகால அநுபவம் வாய்ந்த இளைப்பாறிய காணிப் பிரதி ஆணையாளர் திரு.கே.குருநாத…
-
- 0 replies
- 494 views
-
-
இனப்படுகொலை மண்ணில் உலககோப்பை மட்டைப்பந்து போட்டி நடைபெறுவதை தடுப்போம்…இலங்கையை உலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து நீக்க குரல் கொடுப்போம்… இலங்கையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடுத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல இலங்கை அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலுகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். ஒரு லட்சம் கையெழுத்துக்கள் குவிக்க உறுதி கொள்ளுங்க தோழர்களே… போராட்டம் ஆரம்பிக்கட்டும்… நாம் வெல்வோம்… http://www.change.org/petitions/view/boycott_of_sri_lanka_cricket_2011 http://www.eelamwebsite.c…
-
- 0 replies
- 764 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கவுள்ள ஜாதிக ஹெல உறுமய! புதன், 05 ஜனவரி 2011 11:55 கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக ஜாதிக ஹெலஉறுமய இன்று சாட்சியமளிக்கவுள்ளது. லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இன்று மாலை மூன்று மணிக்கு ஜாதிக ஹெலஉறுமயவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இரண்டு பேர் சாட்சியமளிக்கவுள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தமிழ் சி.என்.என்.க்கு தெரிவித்தார். ஜாதிக்க ஹெலஉறுமயவின் பிரதம செயலாளர் பாட்டலே சம்பிக்க ரனவக்கவும், அக்கட்சியின் சட்ட ஆலோசகர் உதயகம்மன்பில ஆகியோர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர்.…
-
- 0 replies
- 376 views
-
-
தேங்காய் இறக்குமதி நிறுத்தம் வீரகேசரி இணையம் 1/4/2011 8:45:19 AM இந்திய கேரள மாநிலத்திலிருந்து தேங்காயை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்த போதிலும், அந்த இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. நாட்டில் நிலவிய தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் வகையிலும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கிலுமேயே தேங்காயை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீரமானித்திருந்தது. இந்நிலையில், தாவர உற்பத்திச் சட்டத்தின் பிரகாரம் தேங்காயை இறக்குமதி செய்யமுடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியதை அடுத்தே இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக…
-
- 2 replies
- 1k views
-
-
பொன்சேகா ஆதரவு 60 ஆயிரம் இராணுவத்தினரை நீக்க மகிந்த திட்டம்? Posted by saritham On January 4th, 2011 at 1:57 pm முன்னால் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரையும் பல அதிகாரிகளையும் படையிலிருந்து நீக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உண்மைக்கு புறம்பான குற்றங்களை இவர்கள் மேல் சுமத்தி இவர்களை படையிலிருந்து முற்றுமுழுதாக நீக்கிவிடுவதற்கு சிறப்பு அணியொன்றை அரசு நியமித்துள்ளது. பணியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமித்துள்ள குழுவொன்று தயாரித்து வருகிறது. இந்த குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் தயா ர…
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாண சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் நிதானமாக செய்தி வெளியிட வேண்டும் - ஈ.பி.டி.பி : ஆதாரங்கள் காணப்படும் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென.. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் நிதானமாக செய்தி வெளியிட வேண்டுமென ஈ.பி.டி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆதாரங்கள் காணப்படும் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும…
-
- 1 reply
- 483 views
-
-
புதன்கிழமை, ஜனவரி 5, 2011 வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் இலங்கை ஆயுத கொள்வனவுகளில் ஈடுபட்டால் பொருளாதாரத்தடையினை விதிப்போம் என அமெரிக்கா 2009 இல் இலங்கையினை எச்சரித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் இங்க்ஸ்னா தீர்மானத்தின் படி வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் ஆயுத வியாபாரம் செய்ய கூடாது எனவும் அப்படி செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கப்படும் படவேண்டும் என்பதும் ஐக்கிய நாடுகள் சபையின் திர்மானமாக இருக்கின்றது. இதனை இலங்கைக்கு ஞாபகமூட்டியே அமெரிக்கா மிரட்டியது. ஆனால் இலங்கை அமெரிக்காவிற்கு காதில் பூ வைத்துவிட்டு தேவையான ஆயுதங்களை ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்தது. இதனை தமது உளவு அமைப்பின் ஊடா…
-
- 1 reply
- 706 views
-
-
எதற்காக புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்? உங்களுக்கு என்னதான் வேண்டும்? எதற்காகப் புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்? எதற்காகத் தமிழ்த் தேசியத் தளத்தைக் குறி வைத்து நகர்கிறீர்கள்? என்ற கேள்வியே இப்போது எங்கள் எல்லோரையும் ஆக்கிரமித்துள்ளது. மெல்ல மெல்ல உருவான உங்களின் தமிழ்த் தேசிய சிதைவு முயற்சி, தற்போது பகிரங்கமாக மேடை ஏறி வருவது எங்களுக்குத் திகிலான அநுபவங்களையே தருகின்றது. இப்போதெல்லாம், புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் சிங்கள எதிரியைப் பற்றிப் பேசுவது கிடையாது. அவலங்களே வாழ்வான எங்கள் உறவுகளை எண்ணிப்பார்க்க முடிவதில்லை. மொத்த மனத்தையும் அழுத்தும் பாரமாக, எதிர்காலத்திற்கான பாதைகளில் தடைக் கற்களாக விழுந்து எங்கள் …
-
- 5 replies
- 1.4k views
-
-
Jan 3, 2011 / பகுதி: செய்தி / பாடசாலைகளில் தினமும் பிரித் ஓதவேண்டும் - சிறீலங்கா அரசின் புதிய சட்டம் சிறீலங்காவில் உள்ள எல்லா பாடசாலைகளிலும் காலை வேளையில் பௌத்த மதத்தின் பிரித் ஓதப்படவேண்டும் என சிறீலங்காவின் கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. பாடசாலைகள் தினமும் தமது செயற்பாட்டை ஆரம்பிக்கும் முன்னர் பிரித்த ஓதப்படவேண்டும். அதற்காக 20 நிமிடங்கள் தினமும் ஒதுக்கப்படும். 2600 ஆவது சம்புத்தா ஜெயந்தியை முன்னிட்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அது தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. சிறீலங்கா முழுவதையும் பௌத்த நாடாக மாற்றும் சிறீலங்கா அரசின் திட்டத்தில் இது அடுத்த கட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 6 replies
- 939 views
-
-
புதன்கிழமை, ஜனவரி 5, 2011 யாழ். குடாநாட்டில் தற்போது அரங்கேறி வரும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களை அவதானித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தி சர்வகட்சிக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிபோதே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் கூறி யவை வருமாறு யாழ். குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளை, கடத்தல்களினால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அங்கு…
-
- 0 replies
- 477 views
-
-
உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்த சட்டமூலம் குறித்து உள்ளூராட்சி சபை அமைச்சருக்கோ, உள்ளூராட்சி சபை பிரதி அமைச்சருக்கோ எதுவும் தெரியாத போது அதனை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதுமையானது கேலிக் கூத்தென ஜனநாயக தேசிய முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்த சட்டமூல ஆவணம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இச்சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டால் உள்ளூராட்சி சபைகளில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் உறுப்பினர்களது எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈழ நாதம்
-
- 0 replies
- 440 views
-
-
துரோகி ப(ட்)டத்திற்கு சீமான், சிம்பு தெரிவு! ஈழத்தமிழ் மக்களின் சுதந்திர தாகம் அகில உலகமெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இலங்கையில் யுத்தகாலங்களில் ஏற்பட்டிருந்த மாறுபட்ட அபிப்பிராயங்களும், கருத்துக்களும் தற்பொழுது மாறுதலடைந்து வருகிறது. இதனிடையே சில சக்திகள் ஊடுருவி மக்களின் தாகத்தை வேறு திசைக்கு திருப்ப முயற்சிப்பதும் தெளிவாகிறது. ஒரு நாட்டுப்பழமொழி நினைவுக்கு வருகிறது. 'கூத்தாடிக் கூத்தாடி கூட்டத்தைக் கலைக்கும் அண்ணாவிபோல' உள்ளுக்குள் நின்று நஞ்சை விதைப்பவர்கள் அதிகரித்துக்கொண்டு வருபவதை காணக்கூடியதாக இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் தேசவிடுதலையை தளமாகக் கொண்டு உடல் வருத்தப்படாமல் 'பிறர் உழைப்பில்' சுகம் கண்டகார்கள் ஏராளம். இப்பொழுது இலங்கையில் யுத்தமென்ற ச…
-
- 4 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்புத் தரப்பினர் யாரையும் கடத்த வேண்டிய நிலையில் இல்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். அதனால் மேற்படி விடயம் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் பதிலை கோருமாறும் ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேற்று கூறியுள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் யாழ் வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/…
-
- 3 replies
- 927 views
-
-
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்…! எதிர்காலம் இதைச் சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டுகோள்! தமிழினத்தின் தன்மானத்திற்குச் சாவாலாகத் – தமிழ்த்திரைப்படத் துறையினரின் வேண்டுகோள் புறக்கணித்து, ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்துக் கொடூரமான இனஅழிப்பினை முனைப்போடு செய்து முடித்த கொலைகாரன் ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா அரசிற்கு சர்வதேசத்தின் முன் நற்சான்றிதழ் வாங்கிக் கொடுப்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து மகிழ்வு கொண்டாடிய ஸ்ரீலங்கா இராணுவத்தினரைக் கு~pப்படுத்தவும், தமிழின அழிப்புக்கானசாட்சியங்களை மூடிமறைத்து….. உலக அரங்கில் ஸ்ரீலங்கா அரசின் அனைத்துக்குற்றங்களையும் மூடிமறைக்கவும், உலகின் பல நாடுகள் போட்டிபோட்டு தங்கள் நா…
-
- 0 replies
- 1.9k views
-
-
உரிமையுடன் வாசகர்களுக்கு, மூன்று தசாப்தங்கள் கடந்து சென்றுவிட்டன. தொலைபேசியில் பேசுவதற்குக் கூட பயம் மேலிடுகிறது. ஏதோ நடக்கப்போவதற்கான அறிகுறிகளும் முன்னறிவுப்புகளும் தென்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டுத் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டது. அதனை ஆட்சேபித்தவர்கள் கொல்லப்பட்டும் மிரட்டப்பட்டும் மயான அமைதிக்கு அழைப்பு விடுக்கிறார்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள். எப்படி எதிப்புக்கள் எழுகின்றன யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்கள் என்று நாடிபிடித்துப் பார்ப்பதற்காகவே தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டதும் அதனைப் பின் தொடர்ந்த மிரட்டல்களும் கொலைகளும். யாழ்ப்பாணத்தில் திருட்டுக்களும் கொள்ளைச் சம்பவங்களும் பாலியல் வல்லுறவுகளும் அதிகரித்துள்ளன. இதனை நடத்துபவ…
-
- 2 replies
- 1.3k views
-