Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து இணைய தளங்கள் குறித்து விசாரணை ஆரம்பம் திங்கட்கிழமை, 20 டிசம்பர் 2010 04:38 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான முறையில் இயங்கி வரும் ஐந்து இணைய தளங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர் புலி ஆதரவாளர்களை திருப்திபடுத்தும் வகையிலும், பாதுகாப்பு படையினருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வரும் ஐந்து இணைய தளங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சினால் இந்த விசாரணைங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து தமிழ்,சிங்களம்,மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பிரசுரிக்கப்படும் குறித்த இ…

    • 6 replies
    • 1.4k views
  2. போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சுயதொழிலில் ஈடுபடுத்தும் நோக்குடன் மண்சுமந்த மேனியர் அமைப்பினருடன் சுவிஸ் வாழ் அமைப்புக்கள் சிலவற்றின் நிதியுதவியுடன் சுயதொழில் ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. சுவிஸ் சூரிச் சிவன்கோவில் சைவத் தமிழ் சங்கத்தின் மண்சுமந்த மேனியருடன் இணைந்து சுவிஸ் சொலத்தூண் தமிழர் நலன்புரிச் சங்கமும், கிறங்கன் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயமும் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பலதரப்பட்ட உதவிகளைச் செய்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக யாழ்.வடமராட்சி கொற்றாவத்தை சித்திவிநாயகர் கல்யாண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 23 பயனாளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்புத் தொகையாக தலா இருபத்து ஐயாயிரம்…

  3. இன்று எனக்கு பஸ்ஸிலிலும் செல்ல முடியாதுள்ளது. விமானத்திலும் செல்ல முடியாதுள்ளது. இதற்கெல்லாம் காரணம் நான் இந்த நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தமையே. நான் இன்று ஒரு போத்தலுக்கு அடைக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறேன். என்னால் முழுமையாகச் சாப்பிடவும் முடியாதுள்ளது. சாப்பிடும்போது யாராவது ஒருவர் வந்து அதன் ஒரு பகுதியினைப் பறித்துக் கொண்டு செல்கிறார். மேற்கண்டவாறு தெரிவிப்பது வேறு யாருமல்ல.. இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே… கொழும்புப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பல்கலைக் கழக மாணவர்களால் ஜனாதிபதியின் படமொன்று போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் நினைவுப் பரிச…

  4. சீமான் நேர்காணல் Jeya TV 19/12/2010 Part 1 http://www.youtube.com/watch?v=3apM2u8niYM Part 2 http://www.youtube.com/watch?v=GmIDsmWVrO4

  5. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் மக்களால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை ஐ.நா. நிபுணர் குழு பார்வையிட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட இக்குழுவானது இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளக் கூடிய குழு இல்லை. ஐ.நா.வுக்கான ஆலோசனை வழங்குவதே இக்குழுவின் நோக்கமாகும்.இவ்வாலோசனைக் குழுவினை ஐக்கிய நாடுகள் சபை நியமித்த போது ஆரம்பத்தில் இலங்கைக்குள் வர அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது. இதே வேளை இக்குழுவொன்று தேவையில்லை என்று தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச உண்ணாவிரதம், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எனப் …

    • 0 replies
    • 576 views
  6. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்ற திடமான நம்பிக்கை அரசாங்கத்திடம் இருக்குமானால் ஐ.நா நிபுணர்கள் குழு தொடர்பில் கலவரமடையவோ அல்லது அச்சமடையவோ தேவையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றமை சந்தேகங்களை கிளப்பிவிடுகின்ற அதேவேளை ஐ.நா.வையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுகின்ற நிலைப்பாடாகவுமே இதனை நோக்க வேண்டியுள்ளது என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனைகளை வழங்கும் வகையில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாகவும் …

    • 0 replies
    • 463 views
  7. Started by nadodi,

    UN team not sure of Sri Lankan visit The United Nations says it is not yet clear that its own investigators will travel to Sri Lanka to look into allegations of war crimes in the final stage of the government's conflict with Tamil Tigers rebels last year. In an interview with the BBC's Sinhala service, a spokesman, for the UN secretary general, Farhan Haq said a team would meet members of the government's own commission of inquiry, but he said he wasn't sure where. Referring to a statement made by the General Secretary, Farhan Haq said, "He said that he is pleased that the panel is now able to visit Sri Lanka to meet with the Lessons Learnt and Reconciliati…

  8. போர் நிறைவுபெற்றபோதும் சிறீலங்காவில் பொருளாதார மேம்பாடுகள் முடக்கமடைந்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகளும், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு பகுதிகளின் கட்டுமானத்திற்கான உதவிகளும் சிறீலங்கா அரசு எதிர்பார்த்தவாறு கிடைக்கவில்லை. போர் நிறைவடைந்த பின்னர் பெருமளவிலான முதலீடுகளை கவர்ந்துகொள்ளலாம் எனவும், வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு என அதிக நிதியை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் சிறீலங்கா அரசு எதிர்பார்த்திருந்தது. ஆனால் அவை எவையும் நிகழவில்லை. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்கள் மீதான இராணுவ அழுத்தங்கள், புலம்பெயர் தமிழ் மக்களின் தொடர்போராட்டங்கள் என்பன சிறீலங்கா அரசின் கனவை தகர்த்துள்ளது. மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கூட நி…

    • 0 replies
    • 632 views
  9. பொருட்களின் விலை உயர்வினால் பாதி தேங்காயைகூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என ஜே.வி.பி. விமர்சித்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் 12 ரூபாவாக இருந்த தேங்காய் விலை தற்போது 60 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் முழுத் தேங்காயை வாங்குவத்றகு பதிலாக பாதித் தேங்காயைதான் வாங்குகின்றனர். சில இடங்களில் தேங்காய்ப் பூவை கிராம் கணக்கில் வாங்குகின்றனர் - இவ்வாறு கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். உருளைக்கிழங்கு, வெங்காயம், சீனி, பருப்பு என்பன 2005 ஆம் ஆண்டு இருந்ததைவிட பல மடங்கு விலை உயர்ந்துவிட்டதாகவும் அவர்கூறினார். கடந்த வருடம் தேங்காய் உற்பத்தி 7.7 ச…

    • 0 replies
    • 704 views
  10. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா. நிபுணர் குழு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சி கூறியுள்ளது. நாட்டிற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் எந்தவொரு சர்வதேச விசாரணைக்குழுவுக்கும் முகம்கொடுக்கத் தயார் என சரத் பொன்சேகா ஏற்கெனவே தெரிவித்துள்ளார். எனவே அவரை ஐ.நா. நிபுணர் குழு சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதற்காக ஐ.நா. நிபுணர் இலங்கைக்கு வரவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும் நிபுணர் குழுவி…

    • 0 replies
    • 536 views
  11. ஐ.நா. நிபுணர் குழுவுக்கு போலியான முறைப்பாடுகள் அனுப்பிய அரசாங்கத்தின் இரகசிய செயற்திட்டம் அம்பலம் திங்கட்கிழமை, 20 டிசம்பர் 2010 12:36 ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு போலி முறைப்பாடுகளை அனுப்பும் இலங்கை அரசாங்கத்தின் இரகசிய செயற்திட்டம் தற்போது அம்பலமாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு இலங்கை அரசாங்கத்துக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் முகமாக ஏராளம் முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இறுதிக்கட்ட யுத்தத்தின் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்த நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு பல வருடங்களு…

  12. வன்னியில் புதிய கட்டிடங்கள் அமைக்க அனுமதி இல்லை * Monday, December 20, 2010, 14:20 உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் வன்னியில் இனிமேற்கொண்டு புதிய கட்டிடங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என முல்லை அரச அதிபர் தொரிவிக்கின்றார் . ஏற்கனவே கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அவ்வாறு புதிய கட்டிடங்கள் அமைக்கமுடியும் எனவும், உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வடக்கு கிழக்கில் அமைக்கும் கட்டிடங்களை இடைநிறுத்துமாறு பொறுளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தொரிவித்துள்ளமையினை அடுத்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கட்டிடங்களை அமைப்பதனை விடுத்து ஏற்கனவே காணப்படும் கட்டிட…

  13. 50,000 வீடுகள் அமைக்கும் பணி தடைப்படமாட்டாது பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவிப்பு [20 டிசம்பர் 2010, திங்கட்கிழமை 6:45 மு.ப இலங்கை கொழும்பு, டிசெ.20 வடக்கு, கிழக்கில் உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகள் இடை நிறுத்தப்பட்டாலும் இந்தியாவின் உதவியுடனான 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுமெனப் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் நேற்று "உதயனு"க்குத் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்கும் நாடுகள் ஆகியவற்றின் உதவியுடனான கட்டட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தும்படி டிசம்பர் 9ஆம் திகதி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வ…

    • 4 replies
    • 1.4k views
  14. தனியே நிற்கும் ஒருவனை இன்னொருவன் வந்து தள்ளிப் பார்த்தால் தனியே நின்றவன் ஏனென்றேனும் நிச்சயம் கேட்பான். பத்து பேர் வந்து தள்ளினால் முறைக்கவேனும் செய்வான். நூறு பேர் வந்து தள்ளினால் மானஸ்தனுக்கு கோபமேனும் வரும். ஆயிரம் அல்ல லட்சம் பேர் வந்து சீன்டினாலும் ஒருவனையேனும் திருப்பி அடிப்பான் தமிழன். அந்த வீரத்தை மீட்டு கையில் வைத்திருப்போம். யாரை அடிக்கவும் அல்ல, நம்மை யாரும் அடிக்காமல் காத்துக் கொள்ள.. .(GTV காணொளி)

    • 2 replies
    • 1.1k views
  15. பான் கீ மூனுக்கு மட்டுமல்ல சர்வதேசத்தின் எந்தவொரு சக்திக்கும் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட அதிகாரம் இல்லை என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பிரதான செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதி வழங்கக் கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு வழங்கப்படுமாயின் அதனை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விஜித ஹேரத் தெரிவித்தார். எனினும் குறித்த நிபுணர் குழு இலங்கை வர அரசாங்கம் தற்போது அனுமதி அளித்துள்ளதாகவும், இதன்மூலம் அரசாங்கத்தின் இரட்டைவேடம் வெளியாவதாகவும் அவர் சுட்டிக்க…

  16. இலண்டனில் இருந்து சில புலிப்பிரமுகர்கள் சிறிலங்காவில் மகசின் சிறையில் இருக்கும் சில முக்கிய புலி உறுப்பினர்களுடன் பேசியுள்ளதாக இலங்கை புலனாய்வுத்துறை கதை விட்டுள்ளது. இலண்டனில் இருக்கும் புலிகளின் முக்கிய நபர் ஒருவர் மகசீன் சிறையில் இருக்கும் புலி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு அவரிடம் அரசாங்கத்திற்கு எதிராக வாக்கு மூலம் பெற்றுள்ளதாக புலனாய்வுத்துறை கூறியுள்ளது. இதனால் தாம் அந்த புலி உறுப்பினர்களை இடமாற்றம் செய்ய உத்தேசித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். கூடவே நாள் தோறும் இந்த சிறையீல் உள்ள புலி உறுப்பினர்களை அவதானிக்கவும் அவர்கள் தொலைபேசிவைத்திருப்பின் அதனை பறிமுதல் செய்யவும் போவதாக கூறியுள்ள்து சிங்கள புலனாய்வு பிரிவு. உண்மையில் இவ்வாறான சம்பவம் நடந்திருப்பின் புலனாய்வுத்த…

  17. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணை – பிரித்தானியா மீண்டும் அழைப்பு சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. “ஸ்கை நியூஸ்“ தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றில் பிரித்தானியாவின் இந்தக் கருத்தை வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் வெளியிட்டுள்ளார். “ கடந்த காலங்களில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் இன்னும் அதிகமான அக்கறையைக் காண்பிக்க வேண்டும். சிறிலங்கா அரசுடனான உறவுகளில் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நாம் அவர்களைச் சந்தித்துப…

  18. It appears from what is going on re an independent investigation of GoSL atrocities against IDPs, we, Tamils, would have to take our campaign to a much higher level, and the one organisation that can help us do this is AVAAZ (www.avaaz.org). Avaaz achieved major successes in its campaigns recently against the government / bureaucracy in Brazil, Canada, China, Germany, Zimbabwe, etc by bringing about worlwide outcry through online petitions signed by hundreds of thousands of its over 6.6 million members. The petition to China was signed by more than 1.5 million: the first million was reached in 7 days. They have members in 193 countries and carry out the campaigns in 13 la…

    • 0 replies
    • 731 views
  19. இராணுவத் தளபதிகளின் மாற்றத்தின் பின்னணி என்ன? [Monday, 2010-12-20 03:59:35] வன்னிப்படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கிழக்குப் படைகளின் தளபதியாக மேஜர் ஜெனரல் நத்தன உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வன்னிப் படைகளின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவும், கிழக்குப் படைகளின் தளபதியாக இருந்த பிரிகேடியர் பொனிபொஸ் பெரேராவும் வெளிநாடு ஒன்றுக்கு மேலதிக பயிற்சிக்காகச் செல்லவுள்ளனர். இதையடுத்தே இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் முக்கிய பங்கு வகித்தவர். அவரது படைப்பிரிவினரே இசைப்பிரியா உ…

  20. கடற்புலி சூசையின் இறுதி தொலைப்பேசி உரையாடல் - "நாம் தமிழர் அழகூடாது, தைரியமாய் போராடத்தை முன்னெடுத்து செல்லுங்கள்" http://www.youtube.com/watch?v=YP9wMp2pLXg http://vanakkammalaysia.com/index.php/permalink/3293.html

  21. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தின் முன்னால் இன்று பகல் உண்ணாவிரதப் போராட்டமொன்று நடை பெற்றது. பிரித்தானியா சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்த விருந்த உரை ரத்துச்செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான வேல் முருகு தங்கராசாவினால் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்வரும் கோசங்களையும் எழுதிய பதாகைகளையும் உண்ணவிரதப்பந்தலில் கட்டியிருந்தாhகள். 1.நாட்டின் பயங்கரவாதத்தை ஒழித்த ஜனாதிபதியை துற்றுவதா? 2. ஐக்கியதேசியக் கட்சி ஜெயலத்த…

  22. புலிகள் தங்கியிருந்த இடங்கள் படையினருக்கே சொந்தமானவை - விசேட செய்தியாளர்:- 20 டிசம்பர் 2010 தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்த இடங்கள் இராணுவத்தினருக்கே சொந்தமானவை என்றும் அவற்றை மக்களிடம் கையளிக்கும் முடிவு எதனையும் பாதுகாப்பு அமைச்சு எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் காணிகளிலேயே விடுதலைப் புலிகள் முகாமிட்டிருந்தாக பொதுமக்கள் குறிப்படுகின்றனர் என ஜீரீஎன்னின் விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு சகல படைத்தளங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகள் பெருமளவில் பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டுள்ளன …

    • 1 reply
    • 827 views
  23. வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி இம்மாகாணங்களில் இனவிகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் சிங்கள அரசு வடகிழக்கின் வளங் களைச் சூறையாடி தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. சிங்களதேசம் மட்டுமன்றி இந்திய தேசமும் தமிழர் பிரதேசங்களின் வளங்களைக் கொள்ளைய டிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. கனிம வளங்கள் நிறைந்திருக்கும் வடக்கு கிழக்கிலிருந்து இந்த வளங்களைச் சுரண்டும் நடவடிக்கைகள் அண்மைகாலமாக அதிகரித்திருக்கிறது. சுண்ணாம்புக்கல் வளம் இலங்கையில் சுண்ணாம்புக்கல் வளம் யாழ்ப்பாணத்திலேயே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக பருத்தித் துறையிலிருந்து காங்கேசன்துறை வரையான கரையோரப் பிரதேசம் ச…

    • 0 replies
    • 922 views
  24. காயமடைந்த போராளிகளை காப்பாற்றவே சரணடைகின்றேன் – நடேசனின் மகன் சாட்சியம் – நாடுகடந்த தமிழீழ அரசு * Monday, December 20, 2010, 3:29 இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள், நாடு கடந்த தமிழீழ அரசினால் ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளிவராத போர்க்குற்ற ஆவணங்களை தகுந்த சாட்சியங்களுடன் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசனின் மகனின் வாக்குமூலமும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஸ் அவர்களின் மனை…

  25. பூசா முகாமுக்கு 29 ஆம் திகதி ஆணைக்குழுவினர் விஜயம் [ பிரசுரித்த திகதி : 2010-12-20 05:12:03 AM GMT ] கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவினரும் அதன் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி காலி பூசா தடுப்பு முகாமுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். ஆணைக்குழு உறுப்பினர்கள் பூசா தடுப்பு முகாமுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமைகளை ஆராயவுள்ளதுடன் அவர்களின் விடுவிப்பு தொடர்பான சாத்தியங்களை ஆராயவுள்ளதாகவும் அதிகாரி மேலும் கூறினார். அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.