ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
வன்னியில் யுத்தத்தால் அழிவிற்குள்ளான ஒரு தொகுதிப் பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்ப சுவிஸ் முன்வந்துள்ள நிலையில் ஜனாதிபதிச் செயலணிக் குழு அதனைத் தடுத்துள்ளது. தேவையாயின் யுத்தத்தால் அழிவுற்றுள்ள அல்லது சேதமடைந்துள்ள பாடசாலைகளை திருத்திவழங்க அனுமதிப்பதாக அறிவித்துள்ளது. யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாசார், முகாவில் மற்றும் கோவிற்பற்று பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளை மீளக்கட்டியெழுப்ப சுவிஸ் அரசு, தனது சுவிஸ் அபிவிருத்தி நிறுவனமூடாக முன்வந்திருந்தது. எனினும் ஜனாதிபதி விசேட செயலணிக்குழு இதற்கான அனுமதியை வழங்கியிருக்கவில்லை. இதையடுத்து நிதி ஒதுக்கீட்டினை இரத்துச்செய்துள்ள சுவிஸ் அரசு, தற்காலிக திருத்த வேலைகளை மட்டும் குறித்ததொரு பாடசாலையில் செய்து வழங்க முன்வந்துள்…
-
- 1 reply
- 696 views
-
-
யுத்தம் ஒழிந்து சமாதானம் நிலவுகின்றதென இலங்கை பெருமையடைந்து கொண்டாலும் சர்வதேச ரீதியில் அதன் பெயருக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு சாதாரணமானதன்று. இலங்கை சிறிய நாடு மட்டுமல்ல, மிக வறுமையான நாடும் கூட.நாங்கள் எத்துணை வீராப்பு - பெருமை பேசிக்கொண்டாலும் இந்த நாட்டின் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாகச் செல்லும் நிலைமை இருக்கும் வரை நாம் வீறாப்புப் பேசுவது வேடிக்கையான தாகவே இருக்கும். எனினும் இந்த உண்மையை மறந்து அரசியல் வாதிகள் சிலர் இலங்கையர் என்று மார்தட்டி சண்டித்தனக் கதையும் பேசுகின்றனர். தயவுசெய்து இந்தப் பேச்சை எங்கள் நாட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. இப்படியான கதைகள் மத்திய கிழக்கு நாடுகளின் காதுகளில் கேட்காமல் கதைப்பதும் அவசியம். ஏனெனில், இலங்கை அரசிய…
-
- 0 replies
- 924 views
-
-
யார் இந்த ஜெகத் கஸ்பர்? 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி அறிமுகப் படுத்தப்பட்ட முதல் வருடம், அந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஜூ.வி. வெளியிட்ட விமர்சனங்கள் என்ன மாகக் கோபம் கொள்ளவைத்தது ஜெகத் கஸ்பரை! துளிகூட அப்பழுக்கு இல்லாத, எந்த விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட தூய உடை மனிதராக தன்னை நிலை நாட்டிக்கொள்ள படாத பாடுபட்ட ஜெகத் சீறினார் அப்போது. ஆனால், அந்த சங்கம நிகழ்ச்சிக்குப் பிறகு பொது வாழ்க்கை மேடைகளில் அவர் தோன்றிய விதமும், அவர் வலுப்படுத்திக்கொண்ட புதுப் புது தொடர்புகளும் திரும்பத் திரும்ப சர்ச்சைப் புள்ளியாகவே அவரை அடையாளம் காட்டியது. இதோ, முதல்வர் மகள் கனிமொழியின் அரசியல் எதிர்காலத்தையே ஆட்டம் காணவைக்கிற லெவலுக்குக் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் ஜெகத் க…
-
- 7 replies
- 4.4k views
-
-
ஒரு வேளை உணவுக்கு கையேந்திய அந்த கொடுமையான நாள் இன்றும் நம் கண்முன்! வன்னித் தாய் உருக்கம் ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2010 10:40 யுத்தம் என்ற கோரப்பசிக்கு ஆளானவர்கள் இலட்சம் பேர். பல இலட்சம் பேர் அங்கவீனர்களாகவும், மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர்களாகவும் இருக்கிறார்கள். குடும்பங்களின் உறவுகளை இழந்து அனாதைகளாகவும் அடைக்கலம் இன்றியும் இருக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கானோர். யுத்த நிறுத்தம், சமாதானம், மீள் குடியேற்றம் என்று அரசு வாய் வார்த்தைகளை அள்ளி வீசி வந்த போதிலும் எமது மக்கள் இன்னும் துயரிலேயே வாழ்ந்து வருகிறார்கள். ஒரு புறம் குடும்பத்தவர்களை இழந்த மன உளைச்சல் நிறைந்த துயரம். மறுபுறம் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத அளவு வறுமை. இன்னொரு புறம் யுத்தத்…
-
- 1 reply
- 1k views
-
-
"போர் குற்றம்"-ஐநா குழுவுக்கு அனுமதி இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படு்ம் போர் குற்றங்கள் தொடர்பாக ஐ நா பொதுச் செயலர் பான் கி மூனுக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்ட மூன்று நபர் நிபுணர் குழு இலங்கை வருவதற்கு தான் அனுமதி அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை கூறியுள்ளது. இலங்கைப் போரின் இறுதி கட்டத்தின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் பற்றி ஆராய கடந்த ஜூன் மாதம் ஐ நா பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு இலங்கைக்கு வர அரசு முன்பு அனுமதி மறுத்திருந்தது. மேலும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க உள்நாட்டில் ஒரு குழுவை இலங்கை அரசு அமைத்தது. ஆனால் தற்போது இலங்கை அரசு, ஐ நா குழுவினர் இலங்கைக்கு வரலாம் என்றும் தனது ஆணைக் குழுவுடன் தமது ஆதாரங்களைப் பகிர்ந்து…
-
- 3 replies
- 763 views
-
-
சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்தவருக்கு கல்முனையில் ஆயுள் தண்டனை தீர்ப்பு! [ பிரசுரித்த திகதி : 2010-12-18 06:24:09 PM GMT ] அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்ட பட்ட ஒருவருக்கு கல்முனை மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் கடந்த வியாழக்கிழமை இந்தத்தீர்ப்பினை வழங்கியுள்ளார். சுலைமான் முகம்மத யூசுப் றியாஸ் என்பவர் மீது அனுமதிப்பத்திரமின்றி 2006.6.24 ஆம் திகதி T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி ஒன்றைத் தன் உடைமையில் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் நடைபெ…
-
- 0 replies
- 569 views
-
-
போர்க் குற்றங்கள் தொடர்பாக 1100 முறைப்பாடுகள் ஐ.நாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன: [sunday, 2010-12-19 05:05:29] இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து மின் அஞ்சல் மற்றும் விரைவுத் தபால் மூலம் 1100 முறைப்பாடுகள் ஐ.நா.விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு மேலதிகமாக, நோர்வே, பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் புலி ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கான மின் அஞ்சல் முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்கப்படாத ஆவணங்களை ஐ.நா.நிபுணர் குழு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 428 views
-
-
சைவ சமயத்தில் நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர். அவர்களில் மன்னர்களும் உண்டு, மந்திரிகளும் உண்டு, வேடர்களும் உண்டு. இன்னார்தான் நாயன்மாரில் இடம்பெற வேண்டும் என்று அங்கெல்லாம் ‘காடர்’ (CARDER) கிடையாது. அன்பர் பணிசெய்து தில்லைக்கூத்தன் தரிசனப் பேறுபெற்ற திருவுடையார் நாயன்மார் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதில் திருவாசகம் தந்த மாணிக்கவாசகப் பெருமான் மந்திரியாக இருந்தவர். என்ன மந்திரியோ யாமறியோம். ஆனால் இப்போது இலங்கையில் இருக்கக்கூடிய மந்திரிகள் போல் அவர் யாரையும் கட்டவில்லை. மாறாக ஆணவம், கன்மம், மாயை எனும் மும் மலத்தால் தாம் கட்டுண்டிருப்பதை அறிந்து அதை அறுத்து பேரானந்தப் பெரும்பேற்றை அடைய முற்பட்டார். அவர் தந்ததே திருவெம்பாவை. பாவைகள் நோன்பு நோற்கும் காலம் இதுவெ…
-
- 0 replies
- 1.3k views
-
-
விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக அறிக்கைகளில் ஒட்டுக்குழுக்கள் பற்றிய விடயத்தில் பெண் போராளிகள் பற்றிய எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் அது தொடர்பாக அனைத்துலக தொடர்பகத்தினால் இயக்கப்படும் தேசிய ஊடகம் சங்கதியின் செய்தி. பெண் போராளிகள் தொடர்பான அவர்களின் வக்கிரத்தை அண்மைக் காலமாக தமது செய்திகளில் பதிவு செய்கிறார்கள். (ஒட்டுக்குழுக்கள் பற்றிய அமெரிக்க தூதரக அறிக்கை தொடர்பான செய்தி வெளியிடாமல் பெண் போராளிகளை இழிவு படுத்தாமல் விட்ட பதிவு இணையத்திற்கு நன்றி)
-
- 11 replies
- 2k views
-
-
மட்டக்களப்பு ஆயித்தியமலை கற்பானைக்குளத்தைச் சேர்ந்த இருவர், இராணுவச் சீருடையில் வந்தவர்களால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இராணுவ ஜீப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே இவர்களை அழைத்துச் சென்றதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். பேரின்பராசா தவசீலன், பேரின்பராசா திருக்கேஸ்வரன் ஆகியோரே இவ்வாறு அழைத்துச் செல்லப்ட்டவர்களாவர். இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்ட ஒருவரின் தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் உறவினர்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டள்தாகத் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/news/head_view.a…
-
- 0 replies
- 429 views
-
-
அவசியமின்றி இரவில் நடமாடுபவர்கள் கைது செய்யப்படுவர்:மானிப்பாய் பொலீசார் அறிவிப்பு [ பிரசுரித்த திகதி : 2010-12-18 05:59:14 AM GMT ] யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மானிப்பாய் பகுதியில் அவசியமில்லாமல் இரவில் நடமாடுவோர் கைது செய்யப்படுவர் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்த பொலிஸார் கொள்ளையர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, யாழ். பழம் வீதியில் கொள்ளையடிக்கச் சென்றதாகக் கூறப்படும் மூவர் அந்தக் கிராமத்தின் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். tamilulakam.com
-
- 2 replies
- 732 views
-
-
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இலங்கைவர நினைக்குமாயின் அதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சும் இதற்கு முன்னர் இதே நிலைபாட்டில்தான் இருந்ததாகவும், அது தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா நிபுணர் குழு இலங்கை வரும் பட்சத்தில் பொய்சாட்சியங்கள் உருவாக்கப்பட்டு இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் ஐ.நா நிபுணர் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதி அளிக்கக் கூடாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அவ்வாறு உள்நுழைவார்…
-
- 3 replies
- 636 views
-
-
விஜய் நம்பியாருக்கு எதிராக பிரிட்டன் நகர்வு! சனி, 18 டிசம்பர் 2010 01:13 . .கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைய வந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த் தவறினார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் விஜய் நம்பியாரை பர்மாவுக்கான ஐ.நாவின் தற்காலிகத் தூதுவர் பதவியில் இருந்து நீக்கி விட வேண்டும் ஐ. நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் பிரிட்டன் கோரி உள்ளது. விஜய் நம்பியார் சிறுபான்மை இனங்களின் நலன்களைப் புறக்கணிக்கும் வகையில் செயற்படுகிறார். என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நைஜீரிய இராஜதந்திரி இப்ராகிம் கம்பாரி பர்மாவுக்கான ஐ.நா தூதுவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஐ.நா செயலாளர் நாயகத்தின…
-
- 1 reply
- 1.1k views
-
-
புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியினை திசைதிருப்பும் நோக்கில் தாயகத்தில் வாழும் உறவுகளின் ஊடாக எதிர்ப்பினை தெரிவிக்கும் ராசபக்சே அரசு பிரித்தானிய தமிழ்மக்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவின் பிரித்தானிய பயணத்தின்போது புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழ்மக்களால் நடத்தப்ட்ட ஆர்ப்பாட்டத்தை கண்டித்து சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில் யாழ்நகதில் நாளை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ்மக்களின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவரும் நிலையில் யாழ்ப்பாண மக்களை வைத்து புலம்பெயர்ந்து வாழும் பிரித்தானிய மக்களுக்கு எதிராக ஆர்ப…
-
- 1 reply
- 615 views
-
-
சிங்களத்தின் மேல் கொடுக்கும் அழுத்தம் வேலை செய்யத்தொடங்கியுள்ளது - தமிழ் கார்டியன் 1. 2010 ஜூன் மாதம் ஐ.நா. பரிந்துரை குழு அமைக்கப்பட்டபோது அதை முழுமையாக எதிர்த்து சிங்களம். இது தமது சுதந்திரத்தையும், இறையாண்மையையும் மீறுவதாக சொன்னது. குழுவுக்கு "விசா" அனுமதியை மறுத்தது. 2. சர்வதேச மனித அமைப்புக்களை அவர்களின் நல்லிணக்க ஆணைக்குழு மீதான கருத்துக்களை கண்டித்து சிங்கள அரசு ஐ.நா. சபை முன்னர் ஆர்ப்பாட்டம் செய்தது. 3. இப்பொழுது தாம் இந்த ஐ.நா. குழுவுக்கு அனுமதி தருவதாயும் அவர்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சந்திக்க அனுமதி தருவதாயும் சொல்லியுள்ளது சிங்களம்: - பொருளாதார நெருக்கடி - ஜி.எஸ்.பி. ப்ளஸ் இழப்பு, இதனால் தொடரும் பொருளாதார பழு - ஒக்ஸ்போட்டில் கண்ட அரசி…
-
- 1 reply
- 903 views
-
-
அன்பான புலம்பெயர் மக்களே எல்லாவற்றையும் செய்யுங்கள்...ஆனால் இதையும் படியுங்கள்! -ஒரு போராளியின் உள்ளக் குமுறல்- திகதி:17.12.2010 sankathi
-
- 12 replies
- 1.9k views
-
-
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் இருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களில் அறுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 20 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்திருக்கின்றார். இவர்களில் சிலர் தமது சொந்த இடங்களிலும் பலர் பொது இடங்களிலும் தங்கியுள்ளார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ் நகரப்பகுதியிலும் சிறிய எண்ணிக்கையானோர் சாவகச்சேரி பகுதியிலும் தங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போரினால் இடம்பெயர்ந்துள்ள தமிழ் குடும்பங்களைப் போலவே, இந்த முஸ்லிம் குடும்பங்களுக்கும் மீள்குடியேற்ற உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட…
-
- 1 reply
- 665 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் ஒரு சாராரின் ஆதரவைப் பெற்றுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு என்று கூறி கொள்ளும் அமைப்பானது இலங்கையின் இறுதிப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணங்களை ஐ நா நிபுணர் குழுவிடம் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. இறுதிப் போரின் போது நடந்த விடயங்கள் குறித்து வந்த ஊடகத் தகவல்களையும், இதுவரை வெளிவராத சில புகைப்படங்களையும் தாம் ஐ நா குழுவிடம் அளித்துள்ளதாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசைச் சேர்ந்த டிலக்ஸன் மொரிஸ் தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கை போர் குறித்து சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும் என்று தமது அமைப்பு தொடர்ந்து கோருவதாகத் தெரிவித்த அவர், தம்மிடம் ஆதாரம் அளித்தவர்களின் விபரங்களை பாதுகாப்பு காரணங்களால் வெளியிட முடியாது என்றும் கூ…
-
- 0 replies
- 805 views
-
-
14 வயதில் போராட்டத்தில் இணைந்தவன்.19 வயதில் களமொன்றில் தன்னிரு கண்களையும் இழந்துபோனான். கண்ணையிழந்தவன் தன்னை இசையோடு இணைத்து இசையால் தனது கடமைகளை வழங்கியதோடல்லாமல் எத்தனையோ பேருக்கு ஒளியாயிருந்தான். ஒளிதரும் கண்கள் இருளாகிப்போன பின்னும் தன்னால் இயன்ற யாவையும் இதயசுத்தியோடு ஊருக்கே வழங்கினான். எங்கள் விதியை மாற்றிய மே18 2009 வரையும் எந்த மண்ணை நேசித்தானோ எந்த மண்ணில் ஒரு இசைக்கலைஞனாய் செதுக்கப்பட்டானோ அந்த மண்ணோடு ஒட்டியிருந்தான். அந்த மண்ணோடு மண்ணாய் மாண்டுபோகும் முடிவோடிருந்தவனை அவன் மனையாளின் கண்ணீர் உயிரோடு காப்பாற்றியுள்ளது. கண்ணிரண்டையும் நாட்டுக்காய் இழந்ததில் இன்றும் பெருமைப்படும் இவனது வாழ்வு இன்று அன்றாடக் கஞ்சிக்கே ஆட்களைக் கெஞ்சிக் கொண்டிருக்கிற…
-
- 8 replies
- 1.6k views
-
-
சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதற்காகவா இலங்கையின் வட மாகாணத்திலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு வெளியேற்றப்படுகின்றது என்று பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபையில் – தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு அதிக உதவிகள் தேவைப்படும் இக்கால கட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில்இருந்து செஞ்சிலுவைச் சங்க குழு அலுவலகம் மூட வைக்கப்பட்டிருப்பது சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை அவமதிக்கும் ஒரு செயல். காணாமல் போன தமிழ் இளைஞர்களை கண்டுபிடித்து உறவினர்களோடு இணைத்து வைக்கும் பணியிலும் செஞ்சிலுவைச் சங்க குழு ஈடுபட்டு வந்தது. தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 548 views
-
-
ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை செல்லும் வெளிநாட்டவர் குறித்து விசாரணை : 18 டிசம்பர் 2010 ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு பிரஜைகளில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் வருகின்றனரா என்பதை கண்டறிய புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பில் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுக்க பாதுகாப்பு புலனாய்வு பிரிவுகள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தொடர்பாகவும் முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோ படங்களை கொண்டு …
-
- 1 reply
- 766 views
-
-
இந்தியத் தலைவர்களைக் கொல்லத் திட்டமா... புலிகளின் கண்டனமும், மறுப்பும்! சனிக்கிழமை, டிசம்பர் 18, 2010, 18:13[iST] கருணாநிதி, மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு தங்களால் அச்சுறுத்தல் உள்ளதாக இந்திய உளவுத் துறை கூறியுள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ளது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். அதுபோன்ற திட்டம் ஏதும் தம்மிடமில்லை என்றும் அந்த இயக்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இணைப்பாளர் இராமு.சுபன் இன்று வெளியிட்ட அறிக்கை: "இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லத் திட்டமி…
-
- 0 replies
- 758 views
-
-
மண்டைதீவு மருத்துவமனையில் இரவோடு இரவாக கடற்படை முகாம் அமைத்துள்ளனர் * Saturday, December 18, 2010, 11:55 மண்டைதீவு மருத்துவமனையில் கடற்படையினர் இரவோடு இரவாக பாதுக்கப்பு அரனை அமைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன . மருத்துவமனையின் அவிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் கடற்படையினர் நேற்று இரவு இந்த பாதுக்கப்பு அரனை அமைத்துள்ளதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்கள் . tamilthai.com
-
- 0 replies
- 704 views
-
-
சென்னையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 5 இலங்கையர் கைது : 18 டிசம்பர் 2010 சென்னையில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 5 இலங்கைத் தமிழர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஈச்சம்பாக்கம் அனுமன் காலனி அருகே இலங்கை தமிழர்கள் 10 பேர் ஒரு வேனை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் காவற்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து காவற்துறை அங்கு சென்றும் அவர்களில் 5 பேர் தப்பிவிட்டனர். ராஜா, ராஜீவ் காந்தன், உதயகுமார், ரோஜ்மாரியா, சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களை சேர்ந்தவர…
-
- 0 replies
- 546 views
-
-
"ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!" - சேனன் (மிக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய சேனனுடன் ஒரு நேர்காணல்) நேர்காணல்: : ம. நவீன் சேனன் தொண்ணூறில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியா , பிரான்ஸ் என்று அகதியாக அலைந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். 'அம்மா', 'எக்ஸில்' ஆகிய சஞ்சிகைகளில் வித்தியாசமான கதைகளைக் கவிதைகளை எழுதியவர். எதிர், தமிழ்ஒருங்கமைப்பு ஆகிய இணையத்தளங்களின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார். சேனன் லண்டனில் தொழிலாளர்களின் போராட்டங்களையும் அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்ப்புகளையும் மிகத் தீவிரமாக முன்னெடுப்பவர். மார்க்சிய சிந்தனைவாதி. தமிழ்ஒருங்கமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரான சேனன் கடந்த மாதம் கொழும்பில் நடத்திய கூட்டத்தில் சிறீலங்கா அரச…
-
- 13 replies
- 1.3k views
-