ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
சந்தோஷ்நாராயணன் அவர்களிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அனுப்பியுள்ள கடிதம் . 21.10 23 நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி யை யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவு நாளில் இருந்து மாற்றி அமைக்க வேண்டும்
-
- 7 replies
- 947 views
- 1 follower
-
-
11 பேர் படுகொலை செய்யப்பட்டு 36 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் கடந்த 23.10.1987 ஆம் திகதி இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 36 ஆவது நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. நேற்று (23) மாலை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பிரத்தியேக செயலாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானதுடன் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,…
-
- 2 replies
- 657 views
- 1 follower
-
-
24 OCT, 2023 | 07:57 PM பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி பதிவாளர் நாயகத்தால் வெளியிட்ட சுற்று நிரூபத்த்திற்கு இ.தொ.கா கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது. பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்திற்கு இ.தொ.கா.வின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இருந்தனர். இ.தொ.கா.வின் தொடர் அழுத்தத்…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
24 OCT, 2023 | 07:58 PM வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அதனூடாக முப்படையினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினை இணைத்து சுற்றிவளைப்புகளுக்கு அவசியமான திட்டங்களை வகுப்பதற்கான இயலுமை கிட்டும் என்றும் தெரிவித்தார். அண்மையில் மீட்கப்பட்ட 4 பில்லியன் ரூபாய் பெறுமதியான 200 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பு துறைமுகத்தில் இன்று (24) மேற்பார்வை செய்ததன் பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த நிக்லாப்பிள்ளை அந்தனி எமில் லக்க்ஷ்மி காந்தனும் மற்றுமொரு நபரும் குறித்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், முருகேசு ஸ்ரீ சண்முகராஜா என்பவரும் கறுப்புப் பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பட்டியலிலிருந்து எமில் காந்தன் உட்பட இருவரின் பெயர்கள் நீக்கப்பட்டன! | Virakesari.lk
-
- 0 replies
- 352 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். சுமார் 8 கோடி ரூபாவினை போலி முகவர்களின் ஆசைகளை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான எம்மை காப்பாற்றுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர். திங்கட்கிழமை (23) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு வந்திருந்த குறித்த பணத்தை இழந்தவர்கள், சுமார் பல மணித்தியாலங்கள் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து தத்தமது பிரச்சினைகளை முன்வைத்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கி…
-
- 0 replies
- 227 views
-
-
(எம்.நியூட்டன்) கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல ஆரம்பித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சைனோபெக் நிறுவனம் பெற்றோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை (24) மானிப்பாய் மெமோறியல் வீதியில் சைனோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக சைனோபெக் ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட்லிமிட்டட் நிறுவனமானது யாழ்ப்பாணத்திற்கான தனது யாழ். விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தினை மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது. இந்நிகழ்வில் பங்குதாரர்களான …
-
- 0 replies
- 116 views
-
-
Published By: RAJEEBAN 24 OCT, 2023 | 12:36 PM பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பு துறைமுக நகர திட்டத்தினை அங்கீகரிக்கும் விதத்தில் செயற்படுவது குறித்து பிரிட்டனின் தமிழ் சமூகம் கடும் ஏமாற்றமடைந்துள்ளது என தமிழ் கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் புதியபட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியான கொழும்புதுறைமுகநகர திட்டத்திற்கு டேவிட் கமரூன் ஆதரவளிப்பது குறித்து பிரிட்டனின் தமிழ் சமூகத்தினர் ஆழ்ந்த ஆச்சரியமும் திகைப்பும் அடைந்துள்ளனர் என பிரிட்டிஸ் தமிழ் கென்சவேர்ட்டிவ்களின் செயலாளர் கஜன் ராஜ் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் க…
-
- 3 replies
- 248 views
- 1 follower
-
-
மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பதற்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியங்களைப் பெறுவதற்கும் அது தொடர்பான உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீனவர்களுக்கான குளிர்பதனக் கிடங்கு வசதிகளை மேம்படுத்தி மீன்பிடித் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜப்பானிய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இருநூறு மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த மானியத்தின் கீழ், மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கான ஐஸ் இயந்திரங்கள், இலங்கை மீன்பிடித் துறைமுக சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்திற்கான டிஜிட்டல் எடையளவுகள், தேசிய மீன்வளர்ப…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
21 OCT, 2023 | 11:00 AM (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தை கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது பயங்காரதவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே அங்கு நடக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், நாங்கள் யூதர்களுக்கு அவர்களின் நாட்டை கொடுக்க வேண்டும். அவர்கள் சமாதானமாக வாழ வேண்டும். அதேபோன்று பலஸ்தீனத்திற்கும் அநீதி ஏற்பட்டுள்ளது. அங்கே…
-
- 61 replies
- 3.7k views
- 1 follower
-
-
23 OCT, 2023 | 06:57 PM (நா.தனுஜா) இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைவடைந்திருப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எனும் கட்டமைப்புக்குள் அரச சட்டவாதி செயற்படும் முறை மிக முக்கியமான காரணமாகும். சட்டத்துறை சார்ந்த விவகாரங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கல் மற்றும் குற்றமொன்றை சட்டத்துக்கு அமைவாகக் கையாளல் ஆகிய இரண்டு பணிகளை சட்டமா அதிபர் முன்னெடுப்பதானது வெளிப்படையாகத் தெரியக்கூடிய முரண்பாடொன்றைத் தோற்றுவித்திருக்கின்றது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: சர்வதேச நாணய நிதியத்தினால்…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
23 OCT, 2023 | 06:58 PM (நா.தனுஜா) பலஸ்தீன மக்களுடனான தமது ஆதரவை வெளிப்படுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (22)கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தில் ஒன்று கூடிய பல்மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட், காஸா மக்கள் முகங்கொடுத்து வரும் துயரங்கள் குறித்து அவர்களிடம் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார். ஹமாஸ் அமைப்பினால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் நீட்சியாக கடந்த சில வாரங்களாக காஸாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திவரும் தாக்குதல்களால் சிறுவர்கள் உட்பட பெருமளவானோர் உயிரிழந்துள்ளனர். இருப்ப…
-
- 5 replies
- 448 views
- 2 followers
-
-
இஸ்ரேலின் பாதுகாப்பு என்ற பெயரில் இன்னும் எத்தனை பாலஸ்தீன உயிர்களை பறிக்கப்போகின்றீர்கள் - குடியேற்ற காலனித்துவ இஸ்ரேலின் போர் இயந்திரங்களினால் மோசமாக தாக்கப்படும் பாலஸ்தீன மக்களிற்கு தமிழ் ஏதிலிகள் பேரவை தனது ஆதரவை வெளியிட்டுள்ளது ஈழத்தமிழர்கள் நன்கறிந்த இனப்படுகொலை பயங்கரம் காசாவில் இடம்பெறுவதை நாங்கள் அச்சத்துடன் பார்க்கின்றோம் என தெரிவித்துள்ள தமிழ் ஏதிலிகள் பேரவை இலங்கை அரசாங்கத்தின் கரங்களில் தமிழர்கள் 2009 இல் இவ்வாறான இனப்படுகொலையை சந்தித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்குகிழக்கில் அங்கீகாரிக்கப்படாத தேசத்தை உருவாக்கியிருந்த தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை இராணுவ…
-
- 0 replies
- 191 views
-
-
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது. இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு அவரது சம்பளத்தில் ரூ. 5000 கூடுதல் கொடுப்பனவாகவும் மேலும் கைது செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாட…
-
- 7 replies
- 472 views
- 1 follower
-
-
22 OCT, 2023 | 08:56 PM எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக மூடிவிட்டு ஆயுதங்களினால் எதையும் அடைந்துவிட முடியும் என்ற அதீத நம்பிக்கையின் விளைவுகளே அந்தப் படிப்பினைகள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாலஸ்தீன - இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (20) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது முன்னோர்கள் காத்துவந்த மரத்தின் விதைகளை நான் மறவாது க…
-
- 3 replies
- 476 views
- 1 follower
-
-
23 OCT, 2023 | 04:08 PM (எம்.நியூட்டன்) சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. இதனை உணர்ந்து செயற்பட்டால் சிறந்த வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என யாழ். போதனா வைத்தியசாலை நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணரும் மருத்துவருமான பொன்னம்பலம் ஆதித்தன் தெரிவித்தார். வடமராட்சி 91 க.பொ.த. உயர்தர மாணவர்களினால் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிக்கு சொலிடர் இயந்திரம் (கழிவுகளை தூண்டாக்கும் இயந்திரம்) வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாங்கள் அனைவரும் சுகாதார முறைகளையும் சட்டங்களையும் பின்பற்றி நடப்போமானால் வருகின்…
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
அமைச்சரவையில் அதிரடி மாற்றம். சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுகளில் இன்று காலை அவசர மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் இந்த அமைச்சுக்களை புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரமேஷ் பத்திரனவிற்கு, அவர் வகித்திருந்த கைத்தொழில் அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு அவர் வகித்திருந்த நிதி இராஜாங்க அமைச்சுக்கு மேலதிகமாக தோட்டத் தொழ…
-
- 2 replies
- 283 views
- 1 follower
-
-
தூத்துக்குடி – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை! தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ. உ. சி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் கப்பல் போக்குவரத்திற்காக இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக துறைமுக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை மையமாகக் கொண்டு பல்வேறு இடங்…
-
- 1 reply
- 304 views
- 1 follower
-
-
சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் மறைத்து கடத்தப்பட்ட 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கேயின் : இந்தோனேஷிய பெண் கட்டுநாயக்கவில் கைது! 23 OCT, 2023 | 11:41 AM பெரிய ஆங்கில எழுத்துக்கள் கொண்ட 8 சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் இருபத்து மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேயின் போதைப்பொருள் மறைத்து வைத்து வெளிநாட்டு பெண் ஒருவரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், குறித்த பெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முதன்முறையாக இலங்கைக்கு வந்த 42 வயதான இந்தோனேஷிய பெண் எனவும், அவர் அந்நாட்டில் ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆரம்பகட்ட சுங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது. …
-
- 1 reply
- 185 views
- 1 follower
-
-
23 OCT, 2023 | 09:52 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த ஒரு வருட காலத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மாத்திரமின்றி உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்தும் 1550 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளதாக ஜக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். தேசிய கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்துள்ளதைப் போன்று வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பையும் விரைவில் நிறைவு செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ள சாகல ரத்நாயக்க, அதன் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலைமையிலிருந்து முற்றாக மீளும் என்றும் குறிப்பிட்…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 23 OCT, 2023 | 12:20 PM நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் ஆராயப்பட்டவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஊடக நிறுவனங்கள் மற்றும் பரப்புரை நிறுவனங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் நிகழ்நிலை சட்ட மூலத்தை சவாலிற்குட்படுத்தியுள்ளனர். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் சிறிதளவு கூட நிகழ்நிலை பாதுகாப்பினை உறுதி செய்யவில்லை மாறாக மக்கள் தங்கள் கருத்துக்களை எண்ணங்ளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடுப்பதற்காகவே இந்த சட்ட மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மனுதாரர்கள் குறிப்பிட்ட சட்ட மூலத்தின் மூலம் உருவாக்கப்படக்கூடிய ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழு எவ்வாறு…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
22 OCT, 2023 | 11:03 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. திம்புலாகல பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற ஒருபோதும் இடமளிக்க முடியாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி மட்டக்களப்பு, திம்புலாகல…
-
- 1 reply
- 247 views
- 1 follower
-
-
Published By: VISHNU 22 OCT, 2023 | 12:45 PM யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (21) நடைபெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் 'யாழ் கானம்' இசை நிகழ்ச்சியின் முதல் அம்சமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலையை மறைக்கவே அதே நாளில் இசை நிகழ்ச்சி நடாத்தப்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது குறிப்…
-
- 1 reply
- 377 views
- 1 follower
-
-
Published By: VISHNU 20 OCT, 2023 | 01:34 PM மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சனிக்கிழமை (21) பயணம் செய்யவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ அவரின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு 21,22 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு தாம் செல்லும் முதல் பயணமாக இது அமைவதாகவும், இரண்டு நாட்களும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றி பார்வையிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/arti…
-
- 12 replies
- 1.4k views
- 2 followers
-
-
22 OCT, 2023 | 01:24 PM விளையாட்டு செயலிகள் (apps) ஊடாக பண மோசடிகள் நடக்கின்றன என்றும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இவ்வாறான பண மோசடிகளில் சிக்கிக்கொண்ட பலர் உள்ளனர். குறிப்பிட்ட விளையாட்டுச் செயலிகளில் இணைந்துகொள்வோர் அங்கு ஒரு சிலரைக் கொண்ட குழுவாக்கப்படுகின்றனர். அதில் இணையும்போது ஒரு சிறு தொகைப் பணம் அவர்களின் கணக்குக்கு வழங்கப்பட்டு சேர்க்கப்படுகிறது. அந்த குழுவில் அதிகளவானோர் இருப்பதாகவும் காட்டும். அதன் பின்னர் விளையாட்டின் ஒவ்வ…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-