Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்து வதற்காக சீன இராணுவம் செல்கின்றது. இவர்கள் ஐந்து வருடம் அங்கு தங்கியிருந்து கண்ணிவெடிகளை அகற்றுவார்களாம் பசில் இராஜபக்‌ஷவிற்கும் சீன அதிகாரிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த சீன இராணுவம் அங்கு செல்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 1500 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் சீன இராணுவம் மேற்கொள்ளும். என்றும் கூறப்படுகின்றது. ஈழ நாதம்

    • 0 replies
    • 735 views
  2. சீனா உலகில் சனத்தொகையில் கூடிய நாடு மட்டும் அல்ல, உலக குற்றவாளிகள் தொகையிலும் சீனாவே முதலிடம் 1.57 மில்லியன் கைதிகள் சீனாவில் உள்ளனர். எனவே இவர்களை பராமரிப்பதற்கு பதிலாக இவர்களை வெளி நாடுகளில் வேலைக்கமர்த்துவது சீனாவிற்கு பொருளாதார ரீதியகாவும், பாதுகாப்பு ரீதியாகவும் பெரும் இலாபமாகும். (அம்பாந்தோட்டையில் சீன கைதிகள்) முந்திய நூற்றாண்டுகளில் குற்றவாழிகளை கப்பலில் ஏற்றி நாடு கடத்துவதனை கேள்விப்பட்டிருக்கின்றோம். அயர்லாந்து குற்றவாழிகள் அவுஸ்ரேலியாவிற்கும் இந்திய குற்றவாழிகள் பக்கத்து நாடுகளுக்கும் இங்கிலாந்து கைதிகள் பல ஆபிரிக்க ஆசிய நாடுகளுக்கும் அனுப்பபட்டுள்ளனர். சண்டயிடும் படைகளாக அனுப்பபட்டும் உள்ளனர். அதேபோலதான் சீனாவும் அபிவிருத்தி என்ற போர்வை…

    • 0 replies
    • 740 views
  3. இலங்கை வெற்றி எப்.எம். அலுவலகம் மீது தாக்குதல் திகதி: 30.07.2010, இலங்கையில் பிரபல வானொலி ஒலிபரப்பு நிறுவனமான 'வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்' (Voice of Asia Network)இன் வெற்றி எப்.எம்., சியத்த எப்.எம்., றியல் ரேடியோ ஆகியவற்றின் செய்திப்பிரிவு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இத்தாக்குதலின் போது அந்நிறுவனத்தின் செய்திப்பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது இணையத்தள செய்தியாளார் தெரிவித்தார். இன்று அதிகாலை 1.20 மணியளவில் முகமூடியணிந்த 12 பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள் அலுவலகத்திற்குள் கூரிய ஆயுதங்களுடனும் நுழைந்ததாகவும், பின்னர் அவர்கள் வைத்திருந…

  4. நனைந்த காற்சட்டைகளுடன் வீதியில் சென்ற 6 இலங்கையர் அமெரிக்காவில் கைது; படகிலிருந்து இறக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் திகதி: 30.07.2010, நனைந்திருந்த காற்சட்டைகளுடன் வீதியால் சென்று கொண்டிருந்த 6 இலங்கையர்கள் தொடர்பாக அமெரிக்கப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அமெரிக்க எல்லை ரோந்துப் பொலிஸாரே ஈரமான காற்சட்டைகளுடன் சென்றவர்களை அவதானித்ததாக 'பாம் பீச்' பொலிஸார் கூறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை 6.40 மணியளவில் செமினோல் அவென்யூவுக்கு சமீபமாக வீதியால் இவர்கள் சென்று கொண்டிருந்ததை ரோந்து பொலிஸ் அதிகாரி கண்டதாக பொலிஸ் பேச்சாளரான சார்ஜன்ட் இ கோர்ட்டிஸ் கிராவுல் கூறியதாக பாம்பீச் டெய்லி நியூஸ் பத்திரிகை தெரிவித்தது. இந்த 6 பேரும் 20 வயதுக்கும் 40 வ…

  5. “எனது மகன் இருக்கிறாரா? இல்லையா?” கண்ணீருடன் கேட்கும் தாய்மார்! உறவுகளைத் தேடி அலையும் பெற்றோர்! திகதி: 30.07.2010, வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு சிறீலங்கா காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியாமல் வாழ்வது தாங்கிக் கொள்ளமுடியாததொன்று என்று தாய்மார் முறையிட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலிருந்து வெளியேறிய போது தனது மகன் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் இப்போது வெலிக்கந்த இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தாயார் ஒருவர் கண்ணீருடன் நிருபர் தினசேன ரதுக…

  6. சமூகம் குறித்துச் சிந்திக்கும் வினைத்திறன் உள்ள ஒவ்வொரு மனிதனையும் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கின்றது. தெற்காசியாவின் முக்கியத்துவமற்றதாகக் கருதப்பட்ட ஒரு மூலையில் சாட்சியின்றி நடத்தப்பட மனிதப் படுகொலைகள் எழுபத்தையாயிரம் உயிர்கள் வரை காவு கொண்டிருக்கலாம் என சர்வதேசச் சிக்கல்களுக்கான குழுமம் கருதுகிறது. ஐ.நாவின் அதிகாரி கோடன் வைஸ் இன் கணிப்பில் நாற்பதாயிரமாவது இருக்கலாம் என்கிறார். உலகின் அதிகார பீடங்கள் இருபதாயிரம் வரை செல்லலாம் என்கின்றன. எது எவ்வாறாயினும் இதன் எதிர்விளைவுகள் மனித சமுதாயத்திற்குப் எச்சரிக்கை விடுக்கின்றன. 1. முதலில் இத்தனையும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரும் இலங்கை அரசு இனச் சுத்திகரிப்பை எந்தத் தடையுமின்றி நடத்திவரு…

  7. சிறிலங்கா அரசின் சதித்திட்டங்களுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழர்களும் துணைபோகின்றனர் - கலாநிதி இம்மானுவேல் அடிகளார் சிறப்புச் செவ்வி - ரெண்டாம் பாகம் http://www.eelamenews.com/?p=32176

  8. தண்ட கரண்யா வனத்தில் இந்திய படையினரின் நடவடிக்கைகள்..இது எனது நண்பர் ஒருவரால் முக நூலில் share பண்ண பட்டு இருந்தது

  9. வியாழக்கிழமை, 29, ஜூலை 2010 (23:41 IST) பொன்சேகா மீது புதிய வழக்கு இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த, அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது, வன்முறைக்கு தூண்டியதாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பொன்சேகாவுக்கு 20 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்போது அரசியலில் ஈடுபட்டது, ஊழல் செய்தது உள்ளிட்ட புகார்கள் குறித்து, சரத் பொன்சேகா மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ராணுவ சிறையில் தற்போது உள்ள பொன்சேகா மீது, மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கை போரின் போது சரண்…

    • 1 reply
    • 580 views
  10. வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “எந்தவொரு குற்றவாளியையும் அரச தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு. கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இதற்கு விதிவிலக்கானவரல்ல. எமது நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் தமிழ் மக்களின் நலன் கருதி வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதிய…

    • 2 replies
    • 613 views
  11. வன்னியில் நிலங்கள் ஆக்கிரமிப்பு - மீளக்குடியமர்ந்த மக்களை விரட்டுகிறது இராணுவம் திகதி: 29.07.2010 ஏ-9 நெடுஞ்சாலையை அண்டியுள்ள பிரதேசங்களில் இருந்து இராணுவத் தேவைக்காக சுமார் நாலாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் நிலங்கள் சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தற்பொழுது படிப்படியாக தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஏ-9 வீதியின் மருங்குகளில் இராணுவமுகாம்களை அமைக்கும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்தின் அடிப்படையில் முறிகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்தபுரம் பிரதேசங்களில் இருந்து பொதுமக்களின் நிலங்கள் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக…

  12. வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள பாடசாலைகளில் நீண்டகாலம் கடமை யாற்றிய ஆசிரியர்களில் 232 பேர் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப் படும் அதே நேரம் யாழ்.மாவட்டம் உட் பட வெளிமாவட்டங்களில் இருந்து 560 ஆசிரியர்கள் வன்னிக்கு இடமாற்றம் செய் யப்படவிருக்கின்றனர். வன்னியில் நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியர்கள் 232 பேருக்கு இடமாற்றம் வெளிமாவட்டங்களில் இருந்து 560 பேர் அங்கு செல்கின்றனர் யாழ்ப்பாணம், ஜூலை 29 வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள பாடசாலைகளில் நீண்டகாலம் கடமை யாற்றிய ஆசிரியர்களில் 232 பேர் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப் படும் அதே நேரம் யாழ்.மாவட்டம் உட் பட வெளிமாவட்டங்களில் இருந்து 560 ஆசிரியர்கள் வன்னிக்கு இடமாற்றம் செய் யப்படவிருக்கின்றனர். இவர்களின் ப…

  13. ஆடை அவிழ்த்து அம்மணமாக்கி தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தும் மலையாளிகள் ”துணியை அவிழ்த்துப் போடு… ம்ம்… கழட்டு!” ”ஐயோ வேணாம் சாமீ…” ”ஏய், விடுடி… துணியை விடுடி…””வேணாங்க… கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா… இனிமே இங்கே குளிக்க வரலீங்க… விட்ருங்க…” ”டேய்! இவளை மட்டுமில்ல… இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி…” இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளாவில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது. இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய ‘வன சம்ரக்ஷண சமிதி’ எனப்படும் க…

  14. போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாகவும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதுவர் சூசன்ரைஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக நியூயோர்க்கில் ஐ.நா. வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருப்பதாவது; சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இனப்படுகொலைக்காக சூடானின் ஓமர் அல் பாசிரை உத்தியோகபூர்வமாகக் குற்றஞ்சாட்டிய சில நாட்களின் பின்னர் பாசிர் மீதான குற்றச சாட்டானது தனது பணியை கடினமானதாக மாற்றியுள்ளதாக சூடானுக்கான ஐ.நா. தூதுவர் ஸ்கொட் கிரேசியன் கூறியுள்ளார். மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுப்போருக்கு இந்த…

  15. சரியான நியாயம் கிடைக்காவிட்டால் நியாயம் கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார். ருஹ_னு பல்கலைக்கழக மாணவர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்த நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவர் ஒருவரை படுகொலை செய்தது மட்டுமன்றி மற்றுமொரு மாணவரின் மீது கொலைப் பழியை சுமத்துவதற்கு காவல்துறையினர் முயற்சிப்பதானது காவற்துறையின் அநாகரீகத்தை காட்டுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

  16. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது. பாதுகாப்பு விவகாரத்த கொழும்பு, ஜூலை 28 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது. பாதுகாப்பு விவகாரத்துக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் தொ…

  17. கிளிநொச்சி நகரிலிருந்து 02 மைல் தொலைவிலுள்ள பாரதிபுரம் கிராமத்தில் கடந்த வியாழன்று ஆண்டு- 05 ல் கல்வி கற்கும் பாடசாலை சிறுமியொருவர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கபடுதலிற்கான முயற்சியொன்று பொதுமகனொருவரின் விழிப்புணர்வால் தடுக்கபட்டு சிறுமி காப்பாற்றபட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க பட்டார். சம்பவம் பற்றி தெரியவருவது யாதெனில் பாடசாலை விட்டு வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்த இளைஞயொருவர் தனது துவிச்சக்கர வண்டியில் வீட்டிற்க்கு கூட்டி சென்று விடுவதாக கூறிய போது அவ் இளைஞருடன் சிறுமி சென்றுள்ளார். ஆள்கள் அதிகம் இல்லாத ஒழுங்கையொன்றில் இடிந்த கட்டிடம் ஒன்றிற்க்குள் கூட்டி செல்லபட்ட சிறுமியை வன்புணர்வுக்கு முயற்சித்த சமயம் சிறுமி அவலக்குரல் எழுப்பியுள்ளது. கட்டிடத…

    • 0 replies
    • 1k views
  18. தொடர்ந்த வழக்கு நாளை காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகின்றது. சென்ற ஆண்டு பரமேஸ்வரன் உடனடி போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அதே வருடம் சுமார் 6 மதாங்கள் கடந்த நிலையில் டெய்லி மெயில் என்னும் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளில் ஒன்றான டெய்லி மெயில் எனும் பத்திரிக்கை பரமேஸ்வரன் உணவருந்தியவாரே உண்ணாவிரதம் இருந்ததாக குற்றம் சுமத்தியது. அதனை தொடர்ந்து பிரித்தானியாவின் பல பத்திரிக்கை உட்பட உலகின் முன்னனி பத்திரிக்கைகள் அனைத்தும் அந்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்து முதன்மை செய்தியாக வெளியிட்டது. ஆனால் அனைத்து பத்திரிக்கைகளும் டெய்லி மெயிலை மேற்கோள் காட்டி வெளியிட்டபோதும் சண் பத்திரிக்கையும் டெய்லி மெயிலின் தலையங்கத்தை முளுவதுமாக மாற்றி அதே செய்த…

    • 4 replies
    • 1.1k views
  19. கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால் அவரை பிரதமர் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றார். இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்இ முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில்இ வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுவார். அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும்இ இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வர…

  20. தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களிடமிருந்து 17 கையடக்கத் தொலைபேசிகளை மன்னார் மருதமடு புனர்வாழ்வு மையத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது; மீட்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவல தெரிவித்துள்ளார். மிகவும் தந்திரமாக சந்தேக நபர்கள் கையடக்கத் தொலைபேசிகளையும், ஏனைய உபகரணங்களையும் மறைத்து வைத்திருந்ததாகத் அவர் தெரிவித்தார் தேவையான நேரத்தில் அழைப்புக்களை ஏற்படுத்தி பின்னர், கையடக்கத் தொலைபேசிகளை புலி சந்தேக நபர்கள் புதைத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கும், புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கும் தொடர்பு பேணப்பட்டுள்ளதா என்பது பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக …

  21. இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்று தவத்திரு யோகர்சுவாமிகளிடம் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு யோகர் சுவாமிகள் எந்தவித பதிலையும் தரவில்லை. மாறாக, குலுங்கிக் குலுங்கி அழுதாராம். அவரின் அழுகைக்கான காரணம் என்ன என்பதை இப்போது தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர். எத்தனை துன்ப துயரங்கள். இதற்கு மேலாக எல்லாவற்றையும் இழந்து போன பரிதாபங்கள். இது தமிழரின் நிலையாக இருக்கும்போது தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் எங்கள் எதிர்காலமும் ஆரோக்கியமானதாக அமையா தென்பதை உறுதிப்படுத்துவதாகவுள்ளது.தமிழர்களுக்காக பாடுபட்டவர்களை துரோகி களாகக் காட்டி அவர்களை வெளியேற்றி விட்டு அந்த இடத்தை தாங்கள் கைப்பற்றி தமிழ் இனத்தை படுபாதாளத்தில் வீழ்த்துவதற்கு கெடு கூட்டமொன்று புறப்பட்டு…

  22. விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 737 பேர் கடுமையான தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டு இவர்கள் ஏனையவர்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக பாரிய குற்றங்களை இழைத்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு ஆணையாளர் சுதந்த ரணசிங்கவை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட இந்தச் செய்தியில் மொத்தம் 7948 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 15,000 வரையிலான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெ…

  23. கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் ஐலன்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் முதலாவது பகுதி இது – புவுN செய்தியை உறுதிப்படுத்துகிறார் கேபீ‐தமிழில் புவுN ‐ 29 துரடல 10 01:49 யஅ (டீளுவு) மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் புலம்பெயர் சமூகம் இணைந்து செயற்படும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சமூகங்களுக்கிடையேயான வேறுபாட்டை இல்லாதொழிப்பதில் மிக நேர்மையாகச் செயற்படுகிறார். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதிலும் ஈடுபடுகிறார். போர் முடிவடைந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே பெரும்பான்மையான இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர…

    • 0 replies
    • 1.2k views
  24. ஈழத் தமிழர்களால் தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனேடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் டிசெம்பர் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் திரையிடப்படவிருகின்றன. அனைத்து கனேடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டு மென கனேடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனேடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் மனோ, சுதா, கவிதா மற் றும் இயக்குநர் தரன் மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்களும் நடித்துள்ளனர். திரைப்படத்தின் பாடல்களை தமிழ்நாட்டு பாடலாசிரியர் காதல்மதி, இயக்குநர் தரன் ஆகியோர் எழுதியுள்ளனர். நிலா திரைப்படம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.