ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143169 topics in this forum
-
சரத்பொன்சேகா மீதான யுத்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் 21 ஆம் திகதி வரை இடைநிறுத்தம் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிறிலங்காவின் தரைப்படைத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பான முதலாவது யுத்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை இம்மாதம் 21ம் திகதிவரையில் இடைநிறுத்துமாறு சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெனரல் சரத்பொன்சேகா சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. தமக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட முதலாவது நீதிமன்றத்தின் நீதிபதிகள் தகுதியற்றவர்கள் என்பதனால் அதனை இரத்துச்செய்யுமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தனது மனுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார். …
-
- 0 replies
- 416 views
-
-
இங்கிலாந்தில் லண்டனுக்கு வெளியில் நடைபெற்ற குழறுபடிகள் காரணமாக அப்பகுதித் தேர்தல் முடிவுகள் ரத்து என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் யாருக்காவது தெரியுமா?
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம் - உலகத்தமிழர்களுக்கு சீமான் அவசர வேண்டுகோள் மலேசிய அரசு கைது செய்துள்ள 75 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பகூடாது என்று இயக்குனர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் இயக்க தலைவரும், திரைப்பட டைரக்டருமான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடுத்த போரினால் பாதிப்புற்று வன்னிவதை முகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் பெண்கள், குழந்தைகள் உள்பட 75 பேர் தங்களால் இனி இலங்கையில் வாழ முடியாத நிலையில் வேறு ஏதாவது நாட்டிற்கு அகதிகளாகப் போய் பிழைத்துக் கொள்வோம் என்று கப்பலில் தப்பித்து சென்றனர். ஆனால் அப்படி சென்றவர்களின் படகை மலேசிய காவ…
-
- 1 reply
- 544 views
-
-
அனைத்து அரசுகளும் ஊடகவியலாளர்களை பாதுக்கவேண்டும் – ஐ.நா.செயலர் அனைத்து நாட்டு அரசாங்கங்களும் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். உலக ஊடக சுதந்திரதினத்தை முன்னிட்டு வெளியிட்டு அறிக்கையிலேயே ஐ.நா.செயலாளர் நாயகம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஊடகவியலாளர்களை பாதுகாப்பது மட்டுமின்றி அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளை கட்டவீழ்த்தி விடும் நபர்கள் மட்டில் பக்கசார்பற்ற விசாரணைகளை நடாத்தி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார். கருத்து சுதந்திரம் மக்களின் அடிப்படை சுதந்திரங்களில் ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச மனித உரிமை பிரகடனத்…
-
- 3 replies
- 404 views
-
-
மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியா அழுத்தம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம்!! சிறிலங்காவின் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசதலைவர் மகிந்த மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்றும் மகிந்த இந்த ஆதரவரை வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம் வழங்கியுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இணைக்கப்படாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை தவிர்ந்த அதிகாரங்களை பகிர்ந்தளித்து – மகிந்தவின் திட்டப்படி – தீர்வு பொதி ஒன்றை முன்மொழிந்து தமிழர் பிரச்சினைக்கு முடிவு ஒன்றை காணவேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் - தீர்வ…
-
- 32 replies
- 2.1k views
-
-
கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு?: கோத்தபாய திகதி: 30.04.2010 // தமிழீழம் உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். Indian Defence Review இற்காக திரு சசிக்குமார் என்பவருக்கு அளித்த விரிவான செவ்வியிலேயே இந்த ஏமாற்று நாடகத்தின் பின்னணியை கோத்தபாய போட்டு உடைத்துள்ளார். புலிகளை வெற்றிகரமாகத் தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செவ்வியின் சில பகுதிகளை பொங்குதமிழில் ஏற்…
-
- 17 replies
- 2k views
-
-
தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தம்மை அர்ப்பணித்தோரது குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலை வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் நாளாந்த உணவிற்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர் என மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பத்தலைவர்களில் பெருமளவானோர் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான குடும்பத்தலைவர்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். கணவன்மார்கள் தடுப்பு…
-
- 15 replies
- 1.7k views
-
-
வளமுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்தவர்கள் பதுங்குகுளிக்குள்ளே பிணங்களாகிய போது அவர்களின் வாழ்வில் முதல் இடிவிழுகிறது. தன்குடும்பத்துத் துயரை எம்மோடு பகிர்கிறாள் கிருபா என்ற யுவதி. பட்டதாரி அண்ணனை இழந்த துயர் தங்கைகளை இழந்த துயர் மனநிலை பாதிக்கப்பட்ட தாயின் நிலை குடும்பமே ஆதரவற்றுத் தவிக்கிறது. இறுதியாக இவர்களது நம்பிக்கையாக உள்ள பல்கலைக்கழகம் சென்ற தம்பியை யாராவது படிப்பிக்குமாறு கெஞ்சுகிறாள். இதோ அவளது குரலிலிருந்து....
-
- 0 replies
- 1.5k views
-
-
திஸ்ஸநாயகத்திற்கு மன்னிப்பு வழங்கப்போவதாக சிறிலங்கா அறிவிப்பு ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்திற்கு மன்னிப்பு வழங்க சிறிலங்காவின் அதிபர் தீர்மானித்ததுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர், நீண்ட காலத்தின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவருக்கு மன்னிப்பு வழங்க சிறிலங்காவின் அதிபர் தீர்மானித்துள்ளார். http://meenakam.com/?p=15228
-
- 0 replies
- 460 views
-
-
மட்டு-கொழும்பு தொடரூந்து சேவை பாதிப்பு கொழும்பு மட்டக்களப்பிற்கும் இடையிலான தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பிலிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து நேற்று இரவு 11.30 மணியளவில் கெக்கிராவை பகுதியில் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பிலிருந்து இன்று காலை 10.30 மணிக்கும் அதுபோல், மட்டக்களப்பிலிருந்து இன்று காலை 07.30 மணிக்கும் பயணிக்க இருந்த தொடரூந்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடருந்து தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட சேவைகளை மீண்டும் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலையப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். http://meenakam.com/?p=15231
-
- 0 replies
- 404 views
-
-
கடந்த நூற்றாண்டில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின்போதும் தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் படிப்படியாக வீடு திரும்புகிறார்கள். ஆனால் கடந்த காலத்தின் கசப்பான நினைவுகள் பசுமரத்தாணி போலப் பதிந்திருக்கும் இந்த முல்லீம்களுக்கு அயலிலுள்ள தமிழர்களுடன் இணக்கத்துடன் வாழ்வது சவால் நிறைந்த காரியமாகவே இருக்கும். இவ்வாறு ஐ.நாவின் மனிதார்ந்த விவகாரங்களுக்கான செயலகத்தின் IRIN செய்தித் தளத்தில் எழுதப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அத்தளத்தில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளதாவது, தமிழர்களுக்குச் சுதந்திரத் தனிநாடு அமைப்பதற்காகப் போராடிவந்த விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவ…
-
- 0 replies
- 417 views
-
-
770 வைத்தியர்களுக்கு இன்று பட்டமளிப்பு 2002ம் மற்றும் 2003ம் ஆண்டுகளில் வைத்திய பட்டப்படிப்பினை நிறைவு செய்த 770 வைத்தியர்களுக்கு நியமனங்களை வழங்க சிறிலங்காவின் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று காலை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் வைத்து வழங்கப்படவுள்ளது. இவ்வாறு நியமனக்கடிதங்கள் வழங்கப்படும் வைத்தியர்கள் சிறிலங்காவிலுள்ள 48 வைத்தியசாலைகளில் சேவையில் இணைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. சிறிலங்காவின் பல்கழைக்கலகங்களில் வைத்திய பட்டப்படிப்பினை நிறைவு செய்த 726 பட்டதாரிகளுக்கும் வெளிநாடுகளில் வைத்திய பட்டம் பெற்ற 44 பட்டதாரிகளுக்கும் இதன்போது நியமனக்கடித…
-
- 1 reply
- 574 views
-
-
வருகின்ற திங்கள் கூட்டமைப்பு - இந்திய தூதர் சந்திப்பு வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நல்லெண்ணச் சந்திப்பு ஒன்றை நடத்த இந்தியத் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது.கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நாளை மறுதினம் திங்கட்கிழமை நண்பகல் இருதரப்பினரும் பரஸ்பரம் நேரில் சந்தித்துப் பேசஉள்ளார்கள். இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இது தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் இச்சந்திப்பில் கலந்துகொள்கின்றார்கள். கடந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்மைப்பினருக்கும், இந்தியத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெறுகின்ற …
-
- 3 replies
- 623 views
-
-
செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்கள் என பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்று வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, அவர் இதனைக் கூறினார். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2124
-
- 19 replies
- 1.5k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான முதலாவது உத்தியோகபூர்வமான முடிவுகள் அறிவிப்பு! -(நியூசிலாந்து) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நியூசிலாந்து பிரதிநிதிகள் பற்றிய விபரங்களை நியூசிலாந்து தேர்தல் ஆணையகம் இன்று (மே 2) அறிவித்துள்ளது. நியூசிலாந்தின் Auckland நகரம் உள்ளடங்கிய வடக்குத் தீவின் மேல் அரைப்பங்குப் பகுதிக்குரிய (upper half of the North Island including Auckland) பிரதிநிதியாக திரு தேவராஜன் ஆறுமுகம் அவர்களும் வெலிங்டன் நகரம் உள்ளடங்கலான நியூசிலாந்தின் ஏனைய பகுதிகளுக்கான பிரதிநிதியாக கலாநிதி சிவபாதம் நகுலேஸ்வரன் அவர்களும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என முதன்மைத் தேர்தல் ஆணையாளர் திரு John Minto அவர்கள் அறிவித்துள்ளார். …
-
- 0 replies
- 836 views
-
-
அன்புடையீர் எமது இணையம் பல சவால்களை எதிர்கொண்டு கட்டுரைகள் செய்திகள் ஒளி, ஒலி மற்றும் படங்களை பெற்று அவற்றை வெளியிட்டு வருகின்றது. எம்முடன் கடமையாற்றுபவர்களும் பல சவால்களை எதிர்கொண்டே அவற்றை சாதித்து வருகின்றனர். ஆனால் எமது இன்னல்கள் கஸ்டங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் எமது கட்டுரைகளை பிரதி பண்ணி தமது இணையத்திற்காக தாம் எழுதியது போல் அவற்றை பிரசுரிப்பது வேதனை அளிப்பது. ஊடக தர்மம் அற்றது. அந்த வகையில் எமது ஆசிரியர் பீடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கின் எமது விசேட செய்தியாளர் நாகேஸ நடராஜா எழுதிய கிழக்கின் உதயத்தில் அஸ்த்தமனமாகும் உண்மைகள் 1 என்ற கட்டுரையை பிரதி பண்ணி படங்களை மட்டும் மாற்றி எழுதியவரது பெயரை மட்டும் போட்டு பல இணையங்கள் வலைப்பதிவுகள் அதனை வெ…
-
- 2 replies
- 1.1k views
-
-
2ஆம்இணைப்பு‐யாழ்ப்பாணம் சமூகச் சீரழிவுகளுக்கு எதிரான கண்டனப்பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ஏற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சறுத்தல் GTN செய்தியாளர் 02 May 10 05:51 am (BST) யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள கடத்தல் கப்பம்கோரல் படுகொலை செய்தல் கற்பழித்தல் போன்ற சமூக சீரழிவுகளுக்கு எதிராக இன்று காலை 9 மணிக்கு கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்படவிருந்தது. யாழ் துரையப்பா மைதானத்திற்கு அருகில் உள்ள முனயப்பர் கோவிலின் முன்பாக தொடங்க இருந்த இந்தப் பேரணியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருந்தனர். இன்று காலை குறித்த பேரணிக்கு சென்ற எமது விசேட செய்தியாளர் அங்கு பேரணி தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பிலான செய்தியை தருகிறார். யாழில் மக்களை பயத்திற்குள் தள்ளும்…
-
- 5 replies
- 1k views
-
-
வித்தியாதரனின் நேர்மை பாராட்டப்பட வேண்டியதே. அவர் சொல்கிறார் 2 மாதங்களுக்கு முன்பே விலகல் கடிதம் கொடுத்து விட்டதாக. அதைவிட தனக்கு த.தே.கூ சார்பாக போட்டியிட வந்த வாய்ப்பை நிராகரித்ததாக. அவர் சொல்வதும், அவருடைய செயலும் ஒன்றோடொன்று பொருந்துகின்றது. இனியாவது அவரை விமர்சிப்பதை நாங்கள் தவிர்க்க வேண்டும். அவருடைய முழு செவ்வியை இங்கே அழுத்தி பார்க்கவும் Noted Editor of Sri Lanka’s Tamil ‘Udayan’, ‘Sudar Oli’ resigns.
-
- 2 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்பு திகதி: 02.05.2010 // தமிழீழம் வவுனியாவில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. வவுனியாவில் பாழடைந்த குளம் ஒன்றில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெழுக்குளம் பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா ஸ்ரீலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள் http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8636&cntnt01origid=53&cntnt01returnid=51
-
- 3 replies
- 744 views
-
-
மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கலாம். ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் மனோ கணேசனிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒதுக்கப்படலாம் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவிற்கும் தேசியப் பட்டியில் ஆசனம் ஒன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினமாச் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த இறுதி முடிவை எடுப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்க இருப்பதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சுக்களில் ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்க…
-
- 0 replies
- 1k views
-
-
சாவகச்சேரி மாணவன் கொலை பற்றி விசாரிக்கும் நீதிவானின் வாசஸ்தலப் பகுதியில் ஆயுதத்துடன் ஈ.பி.டி.பியினர் நடமாட்டம் என முறைப்பாடு சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் படுகொலை தொடர்பாக விசாரித்துவரும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானின் யாழ்ப்பாணத்தில் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் வாசஸ் தலம் அமைந்துள்ள பகுதியில் கடந்த மூன்று தினங்களாக ஆயுதம் தாங்கிய இரு வர் நடமாடுகின்றன சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் படுகொலை தொடர்பாக விசாரித்துவரும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானின் யாழ்ப்பாணத்தில் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் வாசஸ் தலம் அமைந்துள்ள பகுதியில் கடந்த மூன்று தினங்களாக ஆயுதம் தாங்கிய இரு வர் நடமாடுகின்றனர் என அப்பகுதி மக் கள் நீதிமன்…
-
- 2 replies
- 688 views
-
-
எமது இனமும், நிலமும் சூறையாடப்படுகின்றது - மாவை சேனாதிராஜா யாழ் நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010 இன்றைய சந்ததியினர் எமது இனத்தின் அடையாளத்தை தாங்கிப்பிடிக்க அணிதிரளத் தயாராக வேண்டும். இல்லையேல் எமது இனம் இதுவரை செய்த தியா கம் தோற்றுப் போய்விடும். தியாகத்தின் பயனை இழக்கும் நிலைக்கு எமது இனம் தள்ளப்பட்டுவிடக் கூடாது. இவ்வாறு கூறினார் மாவை சேனாதி ராஜா எம்.பி. இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதினக் கூட்டம் நேற்று மாலை யாழ்.மார்ட்டீன் வீதியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. விவசாய சங்கங்களின் சம்மேளனத் தலைவர் செ.இலகுநாதனின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விசேட உரை நிகழ்த்தும்போது மாவை சேனாதி ராஜா மேலும் தெரிவித்தவை வருமாறு: தற்போது எமது சூழலில் நி…
-
- 0 replies
- 495 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாது கொழும்பு நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 இலங்கையில் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ காவலில் வைத்துள்ளமை ஆகியன குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது. ஆனாலும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஒன்றியத்தின் நோக்கமல்ல என்று ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுத் தலைவர் பேர்னாட் செவேஜ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது இலங்கையை பொறுத்தவிடயம். ஆனால், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்திவிடுவதென ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. மனித உரிமைகள், தொழில் உரிமைகள், ஊடக…
-
- 0 replies
- 630 views
-
-
சாவகச்சேரி நீதிமன்ற நீதவானிற்கு ஈ.பி.டி.பி அச்சுறுத்தல் யாழ் நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 ஈ.பி.டி.பியைச் சேர்ந்த யாழ். மாநகர சபை பிரதி மேயர் றேகன் என்பவரும் சாள்ஸ் என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் நீதவானின் வீட்டுப்பகுதியில் நடமாடித்திரிகின்றனர். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் படுகொலை தொடர்பாக விசாரித்துவரும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானின் யாழ்ப்பாணத்தில் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் வாசஸ்தலம் அமைந்துள்ள பகுதியிலேயே கடந்த மூன்று தினங்களாக ஆயுதம் தாங்கிய இருவரும் நடமாடுகின்றனர்.இவ்வாறு அப்பகுதி மக்கள் நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளமையை அடுத்து நேற்று இவ்விவகாரம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்…
-
- 0 replies
- 569 views
-
-
இலங்கை பிரச்சினைக்கு தீர்வு புதிய குழு அமைப்பு; சிங்கிற்கு தண்ணிகாட்டும் மஹிந்த வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 பூட்டானில் மன்மோகன் சிங்கை சந்தித்த மஹிந்த இனப்பிரச்சினைக்கு தான் புதிய குழு ஒன்றை அமைத்து தீர்வு காணபப்போவதாக கூறிவிட்டு வந்துள்ளார். ஆனால் மன்மோகன் சிங் அவர்கள் முன்னைய குழுவிற்கு என்னவாயிற்று என கேட்கவில்லை போலும். நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் உட் பட சகல தமிழ்த் தரப்பினருடனும் பேசியே பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார். ஏற்கனவே இவ்வாறு குழு அமைத்து அது செத்து விட்டது என்றே கூறலாம். இந்த முறையும் சர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த வலுவான திட்டம் ஒன்றை தொடங்கி இருப்பதாகவே தெ…
-
- 0 replies
- 564 views
-