Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை மீதான மேற்குலகம், ஐ. நா ஆகியவற்றின் அழுத்தங்களை சீனா தடுக்கும் - பாலித கேகன்ன மலேசிய நிருபர் சனிக்கிழமை , மார்ச் 20, 2010 இலங்கை மீது மேற்கத்தைய நாடுகள் மற்றும் ஐ. நாடுகள் சபையின் அழுத்தங்களை சீனா தொடர்ந்து தடுக்கும் என பாலித கேகன்ன கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் குழு அமைப்பது தொடர்பாக ஐ. நாவுக்கான நிரந்தர செயலர் பாலித கேகன்ன அவர்களை இன்ன்சிற்றி பிறெஸ் கேள்வி கேட்டது. இது தொடர்பாக அவர் அளித்த பதிலில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான நடவடிக்கைகளுக்கு மேர்உலக நாடுகளின் அழுத்தங்களே காரணமென்றார். இலங்கை மீது அழுத்தங்களை ஐக்கிய நாடுகள் பிரயோகிக்கும் போது இலங்கையானது ஐ. நாவில் சம அந்தஸ்து உள்ள ஓர் நாடு என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். அளவுக்கு மீற…

  2. விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும்;அது எவ்வாறு உறிதிசெய்யப்பட்டதென்றும் கற்பனையாகவோ அல்லது பகுதியளவில் உண்மையாகவோ இருக்கக்கூடிய ஒரு கட்டுரையை விகடன் வெளியிட்டுள்ளது அது பின்வருமாறு; ''பொட்டு அம்மான் உயிருடன் இருக் கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!'' - இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல... இண்டர்போல் போலீஸ்! விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பிரபாகரன் விஷயத்தில் சந்தேகப்பட்ட ஈழ ஆதரவாளர்கள்கூட பொட்டு அம்மான் உய…

  3. இனி நடைபெறும் பேச்சுக்களின் போது விடுதலைப்புலிகள் கேட்டதைதமிழ்க் கட்சிகள் கேட்கமுடியாது! சமஷ்டி என்பது பிரிவினையுடன் தொடர்புபட்டது என்கிறார் ஜனாதிபதி எதிர்காலத்தில் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்ள நான் உத் தேசித்துள்ளேன். அப்போது அவர்கள் விடுதலைப்புலிகள் கேட்டதை எல் லாம் கேட்க முடியாது. வடக்குக் கிழக்கை நான் ஒருபோதும் இணைக்கப்போவதில்லை. மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்குவது ஆபத்தானது. சமஷ்டி என்பது இலங்கையைப் பொறுத்தவரை மிகக் கேவலமானது. அது பிரிவினையுடன் தொடர்புபட்டது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிங்கப்பூரின் "ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ்' பத்திரி கைக்கு வழங்கியுள்ள நீண்ட பேட்டியில் மேற்கண்டவற்றைத் தெரிவித்திருக்கின்ற…

  4. தாயகத்தேர்தல் களத்தின் தடுமாறிய போக்குகள் இன்று எதிரும் புதிருமான களத்தில் தமிழ் தேசியத்தோடு பயணித்த எம்மவர்களே சந்திக்கின்ற தேர்தலில் முக்கியமான பல விடயங்கள் சர்வதேச சமுதாயத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் சொல்லப்படவிருக்கிறது. தமிழ் தேசிய பலமானது இரண்டு பிரிவுகளாக பிரிந்திருந்தாலும் தேர்தலின் பின்னர் அவ்வாறான நிலமை மாற்றப்பட்டு இரண்டு எதிர் எதிர் முனைகளும் ஒன்றுசேரும் என்றே சொல்லப்பட்டுவருகின்றது. இவ்வாறான சூழலில் இரண்டு துருவங்களாக தேர்தலை எதிர்கொள்ளும் தமிழர் தரப்பின் பிரதான தரப்புகளால் எதிர்கால அரசியலில் தமிழர்களின் பங்கு பணி தொடர்பில் எவ்வாறான இணைவு எதிர்காலத்தில் இருக்கப்போகின்றது? உண்மையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரானது என சொல்லப்பட்ட த…

    • 0 replies
    • 486 views
  5. ஐ. நா அதிகாரிகள் இலங்கைக்கு வந்தால் கைது செய்யவேண்டும் - எல்லாவல மேதானந்த தேரர் வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 19, 2010 ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்க கூடாது. மீறி பலவந்தமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைத்து இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை நாகரிகமின்றி தலையிடுமாயின் உள்நாட்டிலிருந்து ஐ. நா. அலுவலகத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்…

    • 5 replies
    • 512 views
  6. பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்றழித்து இன்னும் இலட்சக்கணக்கான மக்களை அதகதிகளாக்கிய இந்த அரசாங்கத்திற்கு மானமுள்ள தமிழ் மக்கள் எவரும் முண்டு கொடுக்க மாட்டார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமாகிய இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். ஈழத் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையினை ஏற்றுக் கொண்டு அவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்க மறுத்தால் அதன் விளைவுகள் பாரதூரமாக அமையும் என்று எச்சரித்த சம்பந்தன் சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமையினை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் இந்…

  7. விடுதலைப்புலிகள் கட்சிக்கு பிரிட்டனில் அங்கீகாரம் விடுதலைப் புலிகளின் அதிகரப்பூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி (People’s Front of Liberation Tigers) என்ற கட்சி, பிரிட்டனில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அரசியல் கட்சி தொடர்பாகப் பேசிய என் பாலசுப்பிரமணியம், விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம் பிரிட்டனில் மறையும் காலம் உருவாகி இருக்கிறது என்று தெரிவித்தார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனால் எதிர்காலத்தில் தேவைப்படலாம் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் அந்தக் கட்சியின் தேவையை சிற…

  8. தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் பொதுகூட்டம் இன்று மூதூரில் திருமலை நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 19, 2010 gajen தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்” திருகோணமலை மாவட்டத்துக்கான பொதுக்கூட்டம் இன்று வெள்ளி கிழமை காலை மூதூர் பிரதேசத்து மக்களைச் சந்தித்து, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் காங்கிரசின் சின்னத்தில் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” போட்டியிடுவற்கான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து மாலை 3.00 மணிக்கு நியூ சில்வெர் ஸ்டார் விடுதியில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்போது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்பட உள்ளதாக, திருக்கோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் …

  9. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய றாஜபக்ச உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி வவுனியா நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா பம்பைமடுவைச் சேர்ந்த சற்குணம் கஜன் என்பவரது தந்தை தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஜே.விஸ்வநாதன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். தனது மகனை விடுதலைப் புலிகள் பலாத்காரமாக பிடித்துச் சென்றிருந்ததாகவும் எனினும் அவரை மீட்டு புதுமாத்தளன் பகுதியில் தான் இராணுவத்திடம் ஒப்படைத்ததாகவும் அவரை விடுதலை செய்யும் படி கோரியுமே இந்த வழக்கினைப் பதிவு செய்திருந்தார். மேலதிக செய்திகளுக்கு : http://www.eelamweb.com/

  10. சரத் பொன்சேகாவின் கைதினைத் தொடர்ந்து றாஜபக்ச சகோதரர்களையும் ஆளும் கட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்த மல்வத்தை மகாநாயக்கர் தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். இதன் ஒரு அங்கமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கக் கூடிய விதமாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அரசியல்வாதிகளைச் சந்திக்கப் போவதில்லை என்று அண்மையில் கூறியிருந்த மகாநாயக்கர் ஆளும் கட்சியின் அமைச்சர் கெஹெலிய றம்புக்வெலவைச் சந்தித்த போதே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யக் கூடிய வகையில் சக்திமிக்க பாராளுமன்றம் ஒன்றை அமைக்கக் கூடிய விதத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் இதன…

    • 3 replies
    • 580 views
  11. 1997 கலதாரி குண்டுவெடிப்பு, 72 வயது மட்டு வாழ் வயோதிபர் சூத்திரதாரியென கைது மட்டுநகர் நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 19, 2010 1997 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலதாரி குண்டுவெடிப்பின் சூத்திரதாரியென 72 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இவர் கோட்டை பகுதியில் முன்பு வியாபாரம் செய்து வந்தவர் என்றும். பின்னர் மட்டக்களப்பில் வசித்து வந்தவர் என்றும் பொலிசார் கூறியுள்ளனர். புலனாய்வுத்துறையில் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராம் இந்த வயோதொபர் என பொலிசார் கூறியுளனர். http://www.eelanatham.net/story/1997-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%…

  12. பான் கி மூனின் நடவடிக்கை இலங்கையர்களை ஆத்திரமூட்டுமாம் - போகொல்லாம கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 19, 2010 பான் கி மூன் அவர்களின் குழு அமைக்கும் செயற்பாடு இலங்கையர்களை ஐ. நா மீது கோபமடைய செய்யும் என எச்சரித்துள்ளார் போகொல்லாம. ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களை செவி மடுக்காது இலங்கை தொடர்பில் ஆலோசனை குழு அமைக்க போவதாக கூறியமை அவரது சுயாதீன, தனிப்பட்ட முடிவாகும். உண்மையில் இலங்கை தொடர்பான விடயங்கள் ஐக்கிய நாடுகளின் பொது சபை, பாதுகாப்பு சபை ஏன் மனித உரிமைகள் ஆணையகத்திலும் கூட தோற்கடிக்கப்பட்ட நிலையில் இவ்வாறான முடிவினை எடுப்பது பான் கி மூன் அவர்களின் தன்னிலை வெளிப்பாடே என குமுறியுள்ளார் போகொல்லாம. இந்த செயற்பாடுகள் கூடவே ஐ. நா வின் அரசியல்…

  13. அச்சம் தரும் இங்கிலாந்தின் புலி உறுப்பினர் தஞ்சக்கோரிக்கை இங்கிலாந்தின் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் தஞ்சம் நிலை கோரலாம் என்ற அறிவிப்பு. மேலோட்டமாகப்பார்க்கும்போது தமிழர்களுக்கு அதரவு நிலைப்பாடு இருந்தாலும், இது ஆராய்ந்து தான் தமிழர்கள் முடிவு செய்யவேண்டும். 1. சமாதானம் அமூலில் இருக்கும்போது ஒரு தலைப்பட்சமாகப் புலிகளுக்குத் தடை அறிவித்தவர்கள் 2. தமிழர்கள் வகை தொகையாகக் கொல்லப்பட்டபோது ஆயுதங்கள் அள்ளி வழங்கியவர்கள் 3. தமிழர்கள் வீதி வீதியாகக்போராட்டம் செய்தபோது கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் 4. தமிழர்களின் உரிமை என்கின்ற விடயத்தையே இன்றும் கணக்கொடுக்காமல் கண்மூடி இருப்பவர்கள். 5. புலிகள் பயங்கரவாதிகள் என்று சித்தரித்தவர்கள் 6. ஈழத்தமிழர் வரலாறே முழு…

  14. புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் ஐந்தாவது பகுதி வெள்ளி (19.03.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். "தேசிய இனப் பிரச்சனையும் இலங்கைத் தேர்தலும்" என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் மே18 அமைப்பு சார்பில் ஜான் றஹ்மான் அவர்களுடன் கலந்துரையாடல் இடம் பெறும். இந்த நிகழ்வில் பங்காற்ற விரும்புவோர் நேரடியாக சன்றைஸ் வானொலியூடாகவோ அன்றி குரல்வெப் (kuralweb.com) இணையத் தளத்தினூடாகவோ தம்மை இணைத்துக் கொள்ளலாம். குரல்வெப் மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக…

  15. வன்னி மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்ற வேண்டும்:கீதாஞ்சலி வன்னி மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்ற வேண்டும். இந்த உயரிய நோக்கத்தை ஆளும் கட்சியுடன் இணைந்து நின்றே செயற்படுத்த வேண்டியுள்ளது என வடக்கு மக்கள் முன்னணியின் தலைவியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளரும் வேட்பாளருமான என்.கீதாஞ்சலி தெரிவித்தார். விரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் பின்வருமாறு, நீங்கள் அரசியலுக்கு புதிதாக நுழைந்துள்ளவர் என்ற வகையில், உங்களது அரசியல் நோக்கு எவ்வாறு உள்ளது? சுதந்திரத்துக்குப் பின் 30 வருடங்களாக அகிம்சை போராட்டம் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் என வன்னி மண் தொடர்ச்சியான அவ…

  16. கொழும்பு காவல் நிலையங்களில் தமிழில் புகார் செய்ய ஏற்பாடு இலங்கைத் தலைநகர் கொழும்பின் காவல் நிலையங்களில் பொதுமக்கள் முதல் தடவையாக தமிழில் புகார் தெரிவிக்க வழிவகை செய்யும் விசேடப் பிரிவுகள் அமைக்கப்பட்டுளன. சாதாரணமாக தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு இலங்கைப் பிரஜை கொழும்பு காவல் நிலையம் ஒன்றில் புகார் தெரிவிக்கவோ வாக்குமூலம் வழங்கவோ வேண்டுமானால் அவர் சிங்களம் தெரிந்தவர் ஒருவரைக் கூட்டிக்கொண்டுபோய் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும் என்ற நிலைதான் இத்தனைக் காலமும் இருந்துவந்தது. இலங்கை பொலிஸார் பெரும்பாலும் சிங்களம் மட்டும் அறிந்தவர்களாகவே இருந்துவருகின்றனர் என்பது இதன் காரணம். தாங்கள் சொல்வதைக் கொண்டு எழுதப்பட்ட ஆவணத்தில் என்ன இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்…

  17. அமெரிக்காவில் நாளை சிறிலங்கா தயாரிப்பு ஆடை புறக்கணிப்பு போராட்டம்: திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு தமிழர் செயலவை அழைப்பு [ வெள்ளிக்கிழமை, 19 மார்ச் 2010, 01:06 GMT ] சிறிலங்காத் தயாரிப்பு ஆடைகளைப் புறக்கணிக்கும்படி கோரும் எதிர்ப்புப் போராட்டங்களை - மனித உரிமை ஆர்வலர்களும், நுகர்வோரும் அமெரிக்கா முழுவதும் நடத்த உள்ளனர். நாளை சனிக்கிழமை அமெரிக்காவின் முதன்மையான 16 நகரங்களில் இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. New York - NY, Princeton - NJ, Baltimore - MD, Boston - MA, Atlanta - GA, Dallas - TX, Houston - TX, Columbus - OH, Cleveland - OH, Chicago - IL, Detroit - MI, Wilmington - DE, San Francisco - CA, Los Angles - CA, Sawgrass Mills - FL,…

    • 0 replies
    • 392 views
  18. மோசடிப் பேர்வழி மகிந்தவை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன்: சிறையிலிருந்து சரத் பொன்சேகா மோசடிப் பேர்வழியான அதிபர் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்பாக அம்பலப்படுத்தாமல் விடப் போவதில்லை என்று மீளவும் சூளுரைத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா. சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் இளநிலை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ள ஐந்து மாடிக்கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 100 சதுர அடி கொண்ட படுக்கை அறை, 150 சதுர அடி பரப்பளவுள்ள வரவேற்பு அறை, தனியான குளியலறை ஆகிவற்றைக் கொணட குடியிருப்பு ஒன்றிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குடியிருப்பின் அனைத்து யன்னல்களும் அடைத்து…

    • 17 replies
    • 1.3k views
  19. வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு றிசாட் பதியுதீனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வீரபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் அரசாங்கத்தை அண்டிப் பிழைக்கும் இந்த அராஜக அமைச்சரின் செயல் குறித்து மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் குறித்த பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளுக்கு மேல் றிசாத் பதியுதீனின் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றனர். அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இந்தச் செயலுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு நின்ற பதி…

  20. நாடு கடந்த அரசு எல்லோருடைய உள்ளக் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்து செயற்பட இருக்கிறது, அதனுடைய அடித்தளம் 1976ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஈழவேந்தன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான கனடிய செயற்பாட்டுக்குழுவின் உத்தியோகபூர்வ ஒலிபரப்பான தமிழீழத்தின் குரல் நிகழ்ச்சியின் போது வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் சில கேள்விகளுக்கான பதிலில் அவர் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்வதோடு காலத்தால் சாகாத நல்ல உள்ளடக்கத்தைக…

  21. தமிழ்தேசிய கூட்டமைப்புக்கெதிரான பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள் இலங்கை அரசின் சதித்திட்டத்திற்கு துணைபோகாதீர்கள் தனிநபர்களின் விருப்புவெறுப்புகளுக்கு இடமளியாமல் தமிழ்மக்களின் பொதுநலனில் கவனம் செலுத்துங்கள் அழிந்தது இழந்தது போதும். இனியும் இடமளிக்க வேண்டாம் என்ற மொட்டைக் கடிதப் பாணியிலான எச்சரிக்கை டென்மார்க்கிலிருந்து குகன் தம்பிப்பிள்ளை எனபவரால் தயாரிக்கப்பட்டு, சுவிசிலிருந்து துரைரட்ணம் இராமசாமி என்பவரால் தமிழ்த் தேசிய சார்பு ஊடகங்களுக்கு மின் அஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக இவர்கள் மேற்கொண்டுவரும் எச்சரிக்கை அச்சுறுத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களை இலங்கை அரசின் ச…

  22. உறவுகளே உங்கள் மௌனம் எதுவரைக்கும்: யாழிலிருந்து இலங்கைப்பாராளுமன்ற தேர்தல் என்றுமில்லாதவாறு வடகிழக்கு பகுதிகளில் சிறீலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் ,பேரினவாத சிந்தனையுடனும் செயற்பட்டுவருவதை தெளிவாக காணமுடிகின்றது. இதுவரைகாலமும் யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா அரசிற்கு ஒத்தூதும் ஒருசில கட்சிகளுமே போட்டியிட்டு வந்தன ஆனால் இம்முறை தமிழ் தேசியத்திற்கு எதிராக போட்டியிடக்கூடிய வலு அக்கட்சிகளுக்கு இல்லாதமையாலும் அவர்களின் செல்வாக்கு குறைவடைந்து செல்வதாலும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் பல்வேறுபட்ட பெயர்களில் ஓரளவு செல்வாக்குடைய பிரமுகர்களை பணத்துக்காக பேரம் பேசி சுயேட்சை…

  23. மண்டேலா பாணியில் நாட்டை கட்டியெழுப்புவோம்--ஐ.தே.மு WEDNESDAY, 17 MARCH 2010 01:10 செய்திகள் நிறவெறி ஆட்சிக்கெதிராகப் போராடி வெற்றிகண்ட தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா பாணியில் புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப சகல இன மக்களையும் ஒன்றிணையுமாறு அழைப்புவிடுத்திருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கு தங்களால் முடியுமென்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதுடன், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சகல சமூகங்களினதும் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற உறுதியான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் செயலகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று செவ்வாய்க்…

  24. தமிழர் தாயகத்தில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலே திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் எல்லோரினதும் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி போட்டியிடும் இரு மாவட்டங்களில் திருகோணமலையும் ஒன்று. இந்நிலையில் தமிழ்மக்களிடத்தில் – குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர், ஆய்வாளரிடத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது திருகோணமலை தேர்தல் மாவட்டம். காரணம், அங்கு தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமற் போகப்போகிறது என்ற ஒரு வாதம். கடந்தமுறை மூவாயிரத்துச் சொச்ச வாக்குகளால் ஓர் ஆசனத்தை அதிகமாகப் பெற்றுக்கொண்டது தமிழர் தரப்பு. இந்தமுறை என்னதான் ‘ஒற்றுமை’ப் பூச்சாண்டி காட்டிப் போட்டியிட்டாலும் ஓர் ஆச…

    • 10 replies
    • 1.2k views
  25. பிரான்சு பிரதேசசபைத் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்புக்கு தெரிவாகியுள்ளார் செல்வி.சாளினி பிரான்சு பிரதேசசபைத் தேர்தலில் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்சு சோசலிசக் கட்சியுடன் (Parti Socialist) பச்சைக் கட்சி (Europe Ecologiste) இடதுசாரிமுன்னனி கட்சி(Force de Gauche) கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கிறது பிரான்சு பிரதேசசபைத் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு 21.03.2010 ஞாயிறு நடைபெறவுள்ளது இத்தேர்தலில் சோசலிசக் கட்சியுடன் (Parti Socialist) பச்சைக் கட்சி (Europe Ecologiste) இடதுசாரிமுன்னனி கட்சி(Force de Gauche)கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கிறது. பிரான்சு பிரதேச சபைத் தேர்தலில் சென் செந்தெனித் (93Seine Saint Denis)…

    • 1 reply
    • 693 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.