Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒரு பத்து நாளைக்கு முன்னர், யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சி.என்.என் தொலைக்காட்சிக்காரர்கள் வன்னி அகதிகளைச் சந்திக்க விரும்பினார்கள். இதற்காக உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் மூலமாக அவர்கள் கொக்குவில் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அது தாவடி தெற்கு அல்லது கொக்குவில் வடக்குப் பகுதி. அங்கே அவர்கள் முதலில் சந்தித்தது வன்னிப் போரின்போது இரண்டு கால்களையும் இழந்திருந்த மகேஸ்வரன் (45) என்பவரை. மகேஸ்வரன் நான்கு பிள்ளைகளின் தந்தை. அவருடைய மூத்த மகனும் வன்னியில் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். இறந்த மகன் திருமணமானவர். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த பிள்ளைக்கு நான்கு வயது. அடுத்ததற்கு இரண்டு வயது. எல்லோரையும் இப்போது மகேஸ்வரன்தான் கவனிக்க வேணும். ‘இரண்டு…

  2. நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், வரலாற்றுக் கடமை, வரலாற்றுத் தவறு, வரலாற்றுத் துரோகம் போன்ற சொல்லாடல்கள் நிரம்பி வழியப் போகின்றன. 22 மாவட்டங்களில், வட கிழக்கு பிரதேசங்களிலேயே அதிகமான கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் மிதந்த அன்னம், வெற்றிக்கிண்ணமாக உருமாறியுள்ளது. அக்கிண்ணம் வெற்றியைப் பெற்றுத்தருமா என்பதை சிங்கள மக்கள் தீர்மானிப்பார்கள். அதே வேளை போட்டியிடும் கட்சிகளின் கூட்டமைப்புகளின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது, ஊடகவியலாளர்களு க்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். ஜனநாயகம், தேசியம், விடுதலை, ஐக்கியம், மக்கள், சுதந்திரம் போன்ற சொற்களை, விரும்பியவாறு இணைத்…

    • 10 replies
    • 1.1k views
  3. பிரிட்டிஸ் பிரதமர் கோர்டன் பிறவுண் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களைச் சந்தித்ததன் மூலம் ஜனநாயக சம்பிரதாயங்களை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள சிறிலங்கா அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல இது ஒரு நியாயமற்ற செயல் எனவும் வர்ணித்திருக்கிறார். அல் கைடா ஆதரவாளர்களுடன் பேசுவதற்கும் கோர்டன் பிறவுண் தயாராக இருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ள றம்புக்வெல்ல பயங்கரவாதம் தொடர்பில் பிரிட்டன் இரட்டை வேடம் பூணுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பிரித்தானியப் பிரதமரும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் நடந்து கொண்ட விதம் குறித்து உத்தியோகபூர்வமான எதிர்ப்பை அரசு வெளியிடும் எனவும் றம்புக்வெல தெரிவித்துள்ளார். SOURCE: http://www.eelamweb.com/

  4. பாராளுமன்ற வழாகத்தை அதிரவைக்கும் உலகத் தமிழர் பேரவை-காணொளி Posted by எல்லாளன் பிரித்தானியாவில் இன்று முத‌லாவ‌து உல‌க‌த் த‌மிழ‌ர் பேர‌வையின் மாநாடு இன்று ந‌டைபெற்ற‌து. பிரித்தானிய‌ நாடாளும‌ன்ற‌ வ‌ழாக‌த்தில் ந‌டைபெற்ற‌ இம் மாநாட்டில் பிரித்தானிய வெளிநாட்ட‌மைச்ச‌ர் டேவிட் மில‌பான்ட் ம‌ற்றும் ப‌ல‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ல‌‍ன்து கொண்ட‌ன‌ர். ‍நாடாளும‌ன்ற‌ வ‌ழாக‌த்தில் தொட‌ர்ந்தும் மாநாடு ந‌டைபெற்றுக் கொண்டிருக்கிற‌து. இக் கூட்டத்தில் உரையாற்றிய டேவிட் மிலபான் அவர்கள் உலகத் தமிழர் பேரவை உருவாக்கம் குறித்து பாராட்டுத் தெரிவித்தார். அவர் தொடர்‍ந்தும் குறிப்பிடுகையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்தும் தாம் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.…

  5. வெளிநாடுகளுக்கு சென்று பின்னர் இலங்கைக்கு திரும்புகின்றவர்களிடம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கடமையாற்றும் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவ தாக தகவல்கள் தெவிக்கின்றன. இலங்கையில் கடந்த காலங்களில் நிலவி வந்த அசாதாரண நிலைமையின் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் அங்கு சில காலம் தங்கி மீண்டும் தமது நாட்டிற்கு திரும்பும் போதே பயணிகளிடம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் உத்தியோகஸ்தர்கள் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெயவருகின்றது. இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையின் நிமித்தம் பணியாற்றுபவர்களில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரைத் தவிர்ந்த பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் விமானநிலைய சிவில் பாதுகாப்பு பிரிவு உத…

  6. இலங்கையில் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது:-உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார். [saturday, 2010-02-27 12:36:06] இலங்கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் கவலையளிப்பதாகவும், எந்தக் கட்சியினர் தமது குறிக்கோளில் உறுதிப்பாட்டுடன் உள்ளார்களோ அவர்களை தாம் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னரான காலக…

  7. சிறீலங்கா என்ற தேசத்தின் "சனநாயகம்' மீது ஏற்கனவே நம்பிக்கையிழந்திருந்த தமிழர்கள் மட்டுமல்ல பெரும்பாலான உலக சனநாயக அரசுகள்இ மனித உரிமை அமைப்புக்கள் உட்பட சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருமே அதிருப்தியுற்றிருக்கிற தருணம் இது. இதன் நிமித்தம் அதன் தேர்தல் நடைமுறைகளின் மீதும் சன நாயக செயற்பாடுகள் மீதும் தமிழர் தரப்பு நம்பிக்கை கொள்வதும் - பங்காளிகளாக மாறுவதும் ஏற்புடைய ஒன்றாக இல்லாத போதும் காலத்தின் (வி)சித்திரங்களில் ஒன்றாக தமிழர்தரப்பு பங்காளிகளாக மாறவேண்டி இருப்பதையும் மறுப்பதற்கில்லை. எமது இந்த கண்ணோட்டம் அந்த (வி) சித்திரம் குறித்ததல்ல. மாறாக நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலை முன்னிறுத்தி இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய ஊடகவெளியில் உருவாகி வரும் ஒரு புதிய அபாயகரமான …

  8. பிரபாகரன், பொட்டம்மான் தலைமறைவு - விசாரணையை இந்திய நீதிமன்றம் தள்ளிவைப்பு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களும் தலைமறைவாக உள்ளதால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை இந்திய நீதிமன்றம் மே மாத்திற்கு தள்ளி வைத்துள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உட்பட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டு கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வருகின்றது. தற்போது இவர்கள் இருவரும் தலைமறைவானதை அடுத்து, இவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது…

    • 8 replies
    • 2k views
  9. பொன்சேகாவின் செயலாளர் சேனக கரிப்பிரியா வெள்நாட்டு வங்கியில் மோசடியாம் நாடு கடத்த கோருகிறது பெல்ஜியம். திகதி: 28.02.2010 // தமிழீழம் பெல்ஜியத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொன்சேகாவின் பிரதான செயலாளரும், அரச தலைவர் தேர்தல் பிரச்சார முகாமையாளருமான சேனக கரிப்பிரியா டி சில்வாவை நாடுகடத்துமாறு பெல்ஜியம் சிறீலங்கா அரசை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்தவாரம் பொன்சேகாவுக்கு மிகவும் நெருக்கடியான வாரமாக அமைந்துள்ளது. சிறீலங்காவின் குற்றப்புலனாய்வுத் துறையினர் புதிய தலைவலி ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். பொன்சேகாவின் பிரதான செயலாளரும், அரச தலைவர் தேர்தல் பிரச்சார முகாமையாளருமான சேனக கரி…

  10. தமிழர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டம் கடந்த வருடம் மௌனிக்கப்பட்ட நிலையில் சிந்திய இரத்தங்கள் துன்பங்கள் விம்மல்கள் நீங்குவதற்கு முன்னரே தமிழ் மக்கள் முன் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் திருவிழா ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் வடக்கு கிழக்கில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமன்றி ஈசல்கள் போல் சுயேச்சை அணிகளும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004ஆம் ஆண்டு 22 ஆசனங்களைப்பெற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றாவது பலம்பொருந்திய கட்சியாக திகழந்த தமிழரசுக்கட்சி இம்முறை தனது வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்ளுமா? கடந்த பொது…

    • 6 replies
    • 1.3k views
  11. உண்மையை உணரமறுக்கும் மகிந்த..அரசியல் ஆய்வு: நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்புகள் தவறவிடப்படும் அவலம் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கம் தமிழ்த் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகப் போராடியதனால் மக்களிடையே அவை குறித்து கருத்து வேறுபாடுகள், ஏற்பட்ட அதேநேரத்தில் இலங்கையில் நிலவிய முரண்பாடுகளை நீக்குவதற்கும் குணப்படுத்துவதற்குமான வழி சமைக்கப்படும் என்றும் அதனால் விரைவான பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் ஒரு நியாயமான எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக நாடு மேலும் கூடியளவுக்கு கருத்து ரீதியாகப் பிளவுற்றதுடன், முன்னர் எப்போதையும்விடக் கூடிய முனைவாக்கம் பெற்றதாகிவிட்டது. முன்னர் இன…

    • 0 replies
    • 1.2k views
  12. இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பௌத்த விகாரைகளைப் புதுப்பிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் பணம் திரட்டும் முயற்சியொன்றை இத்தாலி ஒன்றுபட்ட சிங்கள ஒன்றியம் என்ற அமைப்பு ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக ‘யாழ்ப்பாணத்தில் சிங்களவரின் உரிமைகள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடும் ஒன்றியம் எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியின் பெர்லினிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் குறித்த புத்தகம் விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் முழுப் பணமும் வடக்கிலுள்ள பௌத்த விகாரைகளைப் புனரமைக்கப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழ் பகுதிகளில் பௌத்த பிரசன்னத்தை அதிக…

  13. தமக்கு எதிராக உலகம்: சிறுபான்மை மனோநிலையில் சிங்கள இனம் [ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி 2010, 14:34 GMT ] [ ரி.ரேணுபிரேம் ] ஆசியாவின் அழகிய தீவுகளில் ஒன்றான சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் 80,000 மக்களின் சாவுக்குக் காரணமாக இருந்தது இனப் பகை, வன்முறை மற்றும் முட்டாள்தனமான தேசப்பற்று வெறி என்பனவாகும். அவற்றின் கடைசிப் பொறியையும் அணைத்து விடுவதற்கு இப்போது கிடைத்துள்ளது போன்ற ஒரு சந்தர்ப்பம், அந்த நாட்டின் 62 வருட கால சுதந்திரத்தில் எப்போதுமே கிடைத்ததில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து சிங்கள வெற்றி எக்களிப்பு அலையால் கடந்த தை மாதத்தில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார் ஒரு குடியரசு அதிபர். அவர் தன்னிச்சைப்படி நடப்பது மேலும் மேலும் அதிகர…

  14. கிழக்கு தீமோருக்கு சிறிலங்கா அதிகாரிகளை அழைத்து சென்று நிலப்பிரச்சனை தொடர்பில் அமெரிக்கா விளக்கம் சிறீலங்கா அதிகாரிகளை கிழக்கு தீமோர் (தீமோர் –லெஸ்ரே) பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ள அமெரிக்கா அவர்களுக்கு நில உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பது எவ்வாறு என்ற விளக்கங்களை அளித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவில் உள்ள மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களை சேர்ந்த 13 அதிகாரிகளை தீமோர் –லெஸ்ரே நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ள அமெரிக்கா நில உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பான விளக்கங்களை அளித்துள்ளது. மேதல்களில் இருந்து விடுபட்டு பிரச்சனைகளை தீர்த்துக்கொண்ட நாட்டுக்கான ஏழு நாட்களை கொண்ட இந்த கல்விச்சுற்றுலாவை அமெரிக்…

    • 3 replies
    • 870 views
  15. தற்கால உலக ஒழுங்கை சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியதன் காரணமாகவும்இ ஆயுதப் போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட பலத்திற்கு அரசியல் வடிவம் கொடுக்கத் தவறியதன் காரணமாகவுமே நான்காம் கட்ட ஈழப்போரில் தமது நிழலரசை தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்ததாகஇ மே 18இற்குப் பின்னர் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் தற்கால உலக ஒழுங்கு என்பது எவ்வகையான தன்மையைக் கொண்டுள்ளது? இதற்கு இசைவாக எதனைப் புரிந்திருந்தால் தமிழீழ நிழலரசு பாதுகாக்கப்பட்டிருக்கும்? இக்கால உலக ஒழுங்கில் ஆயுதப் போராட்டம் என்பது சாத்தியமற்ற விடயமா? போன்ற கேள்விகள் எம்மவர்களிடையே எழுவது இயல்பானதே. இவற்றை நுணுகி ஆராயும் களமாக இக்கட்டுரையின் இரண்டாவது பகுதி அமைகின்றது. பனிப்போருக்கு முன்னரான உலக ஒழுங்கு என்பது சோவி…

    • 2 replies
    • 1.1k views
  16. 306 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்... [படங்கள் இணைப்பு] வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களடங்கிய வன்னிதொகுதி பொதுத் தேர்தலில் போட்டியிட 19 அரசியல் கட்சிகளும் 15 சுயேற்சைக்குழுக்களுஷமாக 306 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். ஏப்பிறல் 8ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் மூலம் ஆறு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளனர் இன்று நண்பகலுடன் வேட்பு மனு தாக்கல் முடிவுற்றது இரண்டு பிரதான தேசிய கட்சிகளும் தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றனர். விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி வெள்ளி 11:59 மணிக்கு இறுதியாக வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தது. இதன் முதன்மை வேட்பாளர் இருளன் ஜெயந்தி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஈபிடிபி வன்னியில…

  17. வடபகுதியில் போட்டியிடும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சுவரொட்டிகள் யாழ் நகர வீதிகளில் ஒட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் யாழ்.செயலகத்தில் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.அதனைத்தொடர்ந்து சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் பிள்ளையான் அங்கிருந்து சென்றவுடன் பொலீஸார் வந்து சுவரொட்டிகளை கிழித்தார்கள் என எமக்குக்கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. www.tamil.dailymirror.lk

  18. தமிழினம் இலங்கையில் இருந்த தடமே இல்லாது போகும் அபாயம் இருக்கிறது. அதனால் ஒன்றிணைந்து போராடுவதும், குரல் கொடுப்பதும் அவசியம்...!!! யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஸ்ரீலங்கா அரசின் செயல் திட்டங்களுக்கமைய சிங்கள மக்களால் துரிதகதியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. போர்ச்சூழல் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களே அதிகமாக இவ்வாறு அபகரிக்கப்பட்டு வருகின்றன. வறுமையில் வாடும் தமிழ் மக்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு அதிகளவு பணங்களை கொடுத்து அவர்களின் நிலங்களை பெரும்பாலான சிங்களவர்கள் வாங்கிவருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில வருடங்களில் வடபகுதி எங்கும் அதிகளவான சி…

  19. அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய 2/27/2010 2:43:08 PM இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதிபாதுகாப்புத் தேவைப்படுவோருக்கு மட்டுமே இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் தவிர்ந்த மற்றைய அரசியல் தலைவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் கோத்தபாய தெரிவித்தார். கிழக்கு மாகாண ம…

  20. கிழக்கு முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திடீரென் நீக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திடீரென் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி பிள்ளையானுக்கு வழங்கிய பாதுகாப்பு விலகிக் கொள்ளப்பட்டமை தொடர்பாக மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிக் காவற்துறை மா அதிபருக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்து போட்டியிட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தீர்மானித்தது…

  21. ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துடன் மட்டும் கரையேறுவது சாத்தியமாகாது! - ஈழநாடு (பாரிஸ்) முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் இலங்கைத் தீவில் இரண்டாவது அரசியல் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. ஈழத் தமிழர்களின் ஆயுத பலம் அழிக்கப்பட்ட பின்னர், சிங்கள இனவாதத்திற்கு எதிராக ஒரு முனைப்படுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசியமும் இப்போது பலத்த சிதைவினை எதிர் கொள்ள வேண்டிய நிலையை அடைந்துள்ளது. தமிழர்களின் அரசியல் பலம் சிதைக்கப்படக் கூடாது என்று கருதுபவர்களும் முடிவெடுக்க முடியாத நிலையில் திக்கு முக்காடுகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற விடுதலைப் புலிகளின் ஆளுமைக்குட்பட்ட அமைப்புக்கெதிராக ஒட்டுக் குழுக்களே போட்டியிட்டன என்பதற்கு மாறாகத் தற்போது, தமிழீழ அரசியல் களம் பலமா…

  22. விடுதலைப் புலிகள் "யார்" என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்? [ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி 2010, 11:57.54 மு.ப | ஊடகப் பணிமனை ] இலட்சிய பயணத்தை உறுதியோடும் உண்மையோடும் முன்னெடுக்கும் விடுதலைப்புலிகளின் பின்னால் மக்களே அணி திரள்வார்கள் - வி.உருத்திரகுமாரன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரசியல் ரீதியான வேலைகளில் ஈடுபடுதல் அவர்களுக்கான சட்ட ஆலோசனை வழங்கல் போன்ற பணிகளில் ஈடுபடுவதை அனுமதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகளுக்கான தீர்ப்பு இவ்வருட நடுப்பகுதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இவ்விசாரணைகள் பற்றி பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் வி. உருத்திரகுமாரன் மேலதிக வி…

  23. வடபகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய 7 மேல் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானம் வடபகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய 7 மேல் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம், ஊர்காவற்துறை, பருத்தித்துறை ஆகிய பிரதேசங்களில் இந்த மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். வட மாகாண மக்களின் அடையாளம் மற்றும் கலாசாரத்திற்கேற்ப இந்த நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படும். வட மாகாண நீதிமன்றங்களில் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு மாத்திரமே நிலையான கட்டிடம் இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். ஊர்காவற்துறை, சாவகச்சேரி, மல்லாகம், போன்ற பிரதேசங்களில் நீதிமன்றம் இயங்கிய போதி…

    • 8 replies
    • 693 views
  24. யாழ்க்குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் என் பரமேஸ்வரனுக்கு கொலை அச்சுறுத்தல் யாழ்க்குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளரான என் பரமேஸ்வரன் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினரிடம் முறையிட்டுள்ளார். இன்று காலை யாழ் வேம்படி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா மக்கள் கட்சி அலுவலகத்தில் தான் பலாத்காரமாக பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் குற்றஞ் சாட்டியிருந்தார். யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரணதுங்கவின் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் அமை;பாளராக இருப்பவர் மகிந்த திலக் குமார உடுகம. இவர் வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தின் அமைப்பாளராக இருக்கின்றார். ஜனாதிபதியினதும் ஜனாதிபதியின் பாரியாரினதும் நெருங்கிய நண்பரான இவர் …

  25. சனிக்கிழமை, 27, பிப்ரவரி 2010 (12:36 IST) ஈழத்தமிழரின் மறுவாழ்வுக்கு பட்ஜெட்டில் உரிய அறிவிப்புகள் இல்லை: திருமாவளவன் வேதனை ஈழத்தமிழரின் மறுவாழ்வுக்கு இந்திய பொது பட்ஜெட்டில் உரிய அறிவிப்புகள் இல்லாதது வேதனையளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் 5 சதவீத வட்டியில் விவசாயிகள் கடனுதவி பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரவேற்கத்தகுந்ததும் பாராட்டுக்குறியதுமாகும். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படி பாராட்டுக்குரிய அம்சம் ஏதுமில்லையென்பது ஏமாற்றத்தைத் தருகிறது. அத்துட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.