ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
நாம் கடந்த இரு வருடங்களில் எதிர்கொண்டிருந்த இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தமது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் நாட்டிற்காகவும், சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் எனவும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுபீட்சத்தின் தீபங்களை ஏற்றி, இலங்கையை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும், பல்லின மக்களுக்கு மத்தியில் சமாதானம், சகவாழ்வு, நல்லிணக்கத்துடன் கூடிய ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த தீபாவளி பண்டிகை வரப்பிரசாதமாக அமைய வேண்டும். இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் இருளை அகற்றி ஒளி பிறக்க வாழ்த்…
-
- 4 replies
- 481 views
- 1 follower
-
-
ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க தீரமானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ள என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தினால் எதிர்வுகூறப்பட்ட வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாத காரணத்தினால் இந்த வரிகளை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது. நிதி நிலையை ஸ்திரப்படுத்தும் நோக்கம் இதன் ஊடாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வரிகளை உயர்த்துவது போல், வரி கட்டாதவர்களிடம் இருந்து வரியை வசூலிப்பதற்கு வரி தொடர்பான வலையமைப்பை விஸ்…
-
- 3 replies
- 463 views
- 1 follower
-
-
திருகோணமலையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலநடுக்கம் இன்று (11.11.2023) திருகோணமலை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. குறித்த தகவலை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதேவேளை, குறித்த பகுதியில் உள்ள மக்கள் நிலநடுக்கத்தினை உணர்ந்துள்ளதோடு, அவர்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். https://tamilwin.com/article/earth-quick-in-trincomalee-today-1699778999
-
- 2 replies
- 597 views
- 1 follower
-
-
12 NOV, 2023 | 11:28 AM வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியிலுள்ள குளமொன்று உடைப்பெடுத்தமையினால் அதன் கீழுள்ள 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் முழ்கி பாதிப்படைந்துள்ளமையுடன் குளத்தின் நீர் தொடர்ந்தும் வெளியேறிய வண்ணமுள்ளது. மாவட்டத்தின் கடந்த சில நாட்களாக தொடரும் மழையுடனான காலநிலையினால் பல குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்ட நிலையிலேயே இவ் குளம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை உடைப்பெடுத்துள்ளது. ஊர் மக்கள் பல மணிநேரமாக குளத்தின் உடைபெடுத்த பகுதியினை மண்நிரப்பி கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை பயனளிக்கவில்லை. கோமரசங்குளம் பகுதியிலுள்ள இவ் குளம் நீண்ட…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
12 NOV, 2023 | 11:05 AM முதலாம் உலகப் போரில் இருந்து இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் முகமாக, இலங்கை முன்னாள் பாதுகாப்பு படைவீரர்கள் சங்கம், ஆயுதப்படைகளுடன் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் "ஆயுதப்படையினர் நினைவு தினம் - 2023" பிரதான வைபவமும் பொப்பி மலர் தின நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (11) பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபியின் முன்பாக முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவு கூரும் வகையில், கொழும்பு விஹார மகாதேவ…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
11 NOV, 2023 | 08:20 PM ஆர்.ராம் அடுத்துவரும் புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி.விஜயதாஸ ராஜாபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துவெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சம்பந்தமாக சிவில் மற்றும் இதர தரப்புக்களுடன் கலந்துரையாடும் செயற்பாடுகளுக்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அந்…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
பாகிஸ்தானுக்கு மிளகாயை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் அஃப்லாடாக்சின் Aflatoxin கலந்துள்ளமையினால் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் குழுவொன்று இந்த மிளகாயை இறக்குமதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, உணவின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தொலைபேசி; 0112 112 718 எனும் விசேட இலக்…
-
- 3 replies
- 430 views
-
-
175,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 75 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/280963
-
- 0 replies
- 440 views
- 1 follower
-
-
11 NOV, 2023 | 04:40 PM பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் குழுவொன்று இந்த மிளகாயை இறக்குமதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, உணவின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.…
-
- 3 replies
- 548 views
- 2 followers
-
-
11 NOV, 2023 | 11:56 AM பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. பயணிகள் பேரூந்துகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்குமாறும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாலக பண்டார கொட்டேகொட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துமாறும் அதன்படி பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெரா…
-
- 1 reply
- 215 views
- 1 follower
-
-
11 NOV, 2023 | 10:34 AM இலங்கை ஆயர் பேரவையினர் திருத்தந்தை பிரான்சிசை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாண்டுக்கு ஒருமுறை உரோமை சென்று திருத்தந்தையை சந்திப்பது வழக்கமாக மாகும். இதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இம் முக்கியத்துவம் வாய்ந்த திருப் பயணத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்கு ஆயர்களும் இணைந்து கொண்டுள்ளனர். இதன் போது இலங்கை கிறிஸ்தவ திருச்சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால விவகாரங்கள் குறித்து பாப்பரசருக்கு தெரிவிக்கப்பட்டதுடன், பரிசுத்த பாப்பரசரின் ஆலோசனைகளையும் பெற்றார். இந்த திருப்பயணமானது ‘Ad Limina Visit’ என திருச்சபையால் அழைக்கப்படுகிறது…
-
- 1 reply
- 516 views
- 1 follower
-
-
11 NOV, 2023 | 04:03 PM சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் ஒருங்கிணைப்புடன், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்விடம் (Qi Zhenhong) விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க இந்த நன்கொடையை வழங்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 570 views
- 1 follower
-
-
தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டம்! November 11, 2023 முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்க கோரி இன்று (11.11.23) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை இராணுவத்தின் 14 SLNG படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கு இடவசதி இன்றியும் தமது உறவுகளை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மாவீரர் துயிலும் இல்லக் காணியி…
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு – அந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை! November 11, 2023 அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் (09) ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கு – கிழக்கு பகுதியில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கருத்தினை வெளி…
-
- 0 replies
- 189 views
-
-
சீனாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மறுப்பு. இலங்கைக்கு அடுத்த வருடம் எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் ஆராய்ச்சி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக வருவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால், பிராந்திய ஒத்துழைப்புக்கு பிரச்சினையான கப்பல்கள் நாட்டுக்கு வருவதை நிறுத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த உத்தரவின் பிரகாரம், வெளிநாட்டுக் கப்பல்கள் அடுத்த வருடம் இலங்கைப் பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சிக்காக உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் அவை இரத்து செய்யப்படும் என்ற…
-
- 1 reply
- 359 views
- 1 follower
-
-
10 NOV, 2023 | 08:09 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் 2024 காலாண்டுக்குள் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் வருமானத்தையும் நோக்கமாகக் கொண்டு இந்த பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகமொன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பட்டப்படிப்புக்களை நிறைவு செய்யக் கூடிய வகையில் இந்த பல்கலைக்கழகத…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
10 NOV, 2023 | 04:39 PM கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய குளம் பகுதியில் உள்ள பெரும் காடுகளுக்குள் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (10) தர்மபுரம் பகுதியில் 6 பரல் கோடாவை கிளிநொச்சி பொலிஸார் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரம் பொலிஸாரால் பாரியளவு கசிப்பும் கோடாக்களும் கைப்பற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்றைய தினமும் அதே பகுதியில் கசிப்பு உற்பத்திக்காக குளத்தின் நடுப்பகுதியில் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பரல் கோடாவை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவி…
-
- 2 replies
- 426 views
- 1 follower
-
-
10 NOV, 2023 | 07:14 PM கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பயணிக்க ஓடுபாதையில் தயாரான விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் புறப்பட தயாராக ஓடுபாதையில் பயணித்த போதே இந்த மர்மப்பொதி கழிவறையில் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தியன் விமான சேவைக்கு சொந்தமான AI 272 விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி இன்று (10) பிற்பகல் 01.35க்கு பயணத்தை ஆரம்பித்தது. ஓடு பாதையில் விமானம் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், விமானத்தின் கழிவறைக்குள், சந்தேகத்திற்கிடமான மர்…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
10 NOV, 2023 | 05:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை கிரிக்கெட்டுக்குள் இனப்பாகுபாடு காட்டப்படுகிறது. இது கிரிக்கெட் அணியல்ல. இது ஒரு சிங்கள அணி என்ற நிலையே உள்ளது. இந்நிலைமை மாற்றப்பட்டு இலங்கை கிரிக்கெட் அணிக்குள் சகல இனங்களும் உள்வாங்கப்பட வேண்டும். எல்.பி.எல். போட்டியில் பிரகாசித்துக்கொண்டிருக்கின்ற வியாஸ்காந்துக்கு உரிய பயிற்சிகள் வழங்கி அவரை இலங்கை கிரிக்கெட் அணிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப் பொறுப்பு சட்டமூலம் மீதா…
-
- 1 reply
- 517 views
- 1 follower
-
-
10 NOV, 2023 | 04:39 PM பங்களாதேஷ் மருந்துக் கைத்தொழில் சங்கத்தினால் இலங்கை சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள மருத்துவ நன்கொடைகள் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் நாட்டுக்கு எடுத்துவரப்பட்டது. “ பல ஆண்டுகளாக நாம் உலகம் முழுவதிலுமிருந்து மருந்துகளை அனுப்பியுள்ளோம். விமானம் மூலம் சரியான நேரத்தில் மருந்துகள் விநியோகம் செய்வதன் மூலம் மருந்துகளை இலங்கையில் கிடைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம்” என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைவர் சமிந்த பெரேரா கூறினார். இந்த மருந்துகள் டாக்காவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 190 விமானத்தில் கடந்த நவம்பர் 4 அன்று கொழும்புக்கு கொண்டுவர…
-
- 3 replies
- 382 views
- 1 follower
-
-
வடக்கு – கிழக்கில் சீனாவின் முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது : செல்வம் அடைக்கலநாதன்! தமது இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படும் சீனாவின் எந்த முதலீட்டு நடவடிக்கைகளையும் வடக்கு கிழக்கில் அனுமதிக்கக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். “இலங்கையிலே அபிவிருத்தி என்ற போர்வையிலே சீனாவினால் வீதிகள் போடப்பட்டன. ஆனால் வட்டி வீதம் கூடிய நிலையிலேயே தன்னுடைய லாபம் கருதியே இலங்கை அரசாங்கத்திற்கு சீன அரசாங்கம் இந்த வேலைகளை செய்து கொடுத்தது. அதேபோல் போர்ட் சிட்டியும் …
-
- 8 replies
- 465 views
-
-
பாக்.உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி : 16 வருடங்களின் பின்னர் மூவரும் விடுதலை ! இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகர் பசீர் அலி மொஹமட் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் பிரதிவாதிகள் மூவரும் 16 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் வாகனப்பேரணியாக சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் உயர் ஸ்தானிகரை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முதலாவது பிரதிவாதியாக யோகராஜா நிரோஜனும் இரண்டாம் பிரதிவாதியாக சுப்பிரமணியம் சுரேந்திரராஜாவும் மூன்றாம் பிரதிவாதியான கனகரெத்தினம் ஆதித்தன் ஆகிய மூவரும் …
-
- 1 reply
- 242 views
- 1 follower
-
-
10 NOV, 2023 | 01:18 PM யாழ்ப்பாணம் - அல்வாய் பகுதியில் கடந்த மாதம் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் நெல்லியடி பொலிஸாரினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) என்ற மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடற்கூற்று பரிசோதனையின்போது சந்தேகங்கள் இருந்தமையால் அவரது உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனையடுத்து, கொழும்பில் மேற்கொள்ள…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை யது பாஸ்கரன் கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒன்பது வருடங்களின் பின்னர், வியாழக்கிழமை (09) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கத்தியால் குத்திக் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அதன்பின்னர் அப்பெண் சடலமாக மீட்கப்பட்டார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் CID யினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப…
-
- 1 reply
- 303 views
-
-
தமிழ் தேசியம் சார்ந்து செயற்பட தடையாக விளங்கும் டக்ளஸ் தரப்பு: முற்றாக விலகுவதாக அறிவித்த உறுப்பினர்! மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபன் கட்சியில் இருந்து விலகிகொண்டதாக தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை பகிரங்கமாக அறிவித்துள்ளார். தமிழ் தேசியம் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுவதற்கும் மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்துவதற்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தடையாக இருப்பதால் அக்கட்சியில் இருந்து முற்றுமுழுதாக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் காலங்களில் இருந்து தமிழ்த்தேசியம் சார்ந்து செயற்படுவேன் எனவும் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 253 views
-