ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142972 topics in this forum
-
எதிர்க்கட்சிக்கு வழங்கும் வாக்குகள் தேசத்துரோகிகளுக்கான வாக்குகளாகும் - ஜனாதிபதி மகிந்த ஆவேசம் எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்கும் இந்த நாட்டின் தேசத்துரோகி களுக்கு காட்டிக் கொடுக்கும் செயற்பாடு என ஜனாதிபதி மகிந்த ராஜபக்¬ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், 27ஆம் திகதியும் ஐக்கிய இலங்கையாகக் காணப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்¬ஷ தெரிவித்துள்ளார். தேசத்தின் பெயரில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப சகலரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமக்கு வாக்களிக்காமல் எதிர்க் கட்சியினருக்கு வழங்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்கும், தேசத்துரோகிகளுக்கு வழங்கப்படுகின்ற வாக்குகளாகவே அமையும் என அவர் த…
-
- 1 reply
- 507 views
-
-
வடக்கில் மக்கள் வாக்களிக்க இலவச பஸ் சேவை வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக இலவச பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். தேர்தல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். தேர்தல் ஆணையாளர் மேலும் கூறுகையில், "வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக வவுனியாவில் விசேட செயலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்தவர்கள் இலகுவாக வாக்களிக்கக் கூடிய வகையில் சகல ஏற்பாடுகளையும் இச்செயலகம் கண்காணிக்கின்றது. தனியார் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான 1000 பஸ்கள் இந்த இலவச சேவையில் ஈடுபடுத்தப்படும்" என்றார். http://beta.virakesari.lk/article.aspx?id=1…
-
- 0 replies
- 477 views
-
-
கிளிநொச்சியில் மக்கள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் : அரச அதிபர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள பொது மைதானத்தில் 67 கொத்தணி வாக்குச் சாவடிகளும் கரச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 8 வாக்குச் சாவடிகளும் பூனகரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் 13 கொத்தணி வாக்குச் சாவடிகள் உட்பட 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விண்ணப்பத்தை…
-
- 0 replies
- 384 views
-
-
‘‘ஈழம் எங்கும் சிங்களம்!’’ வல்வெட்டித்துறை பயணம்; வேதனைப்படும் திருமாவளவன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளையின் மரணச் செய்தி கேட்டதும், உலகத் தமிழர்களுக்கெல்லாம் கண்ணீர் கிளம்பியது! செய்தி கேட்ட சில நிமிடங்-களிலேயே ஈழம் சென்று வேலுப்-பிள்ளைக்கு தமிழகம் சார்பாக அஞ்சலி செலுத்துவதென முடிவெடுத்து கிளம்பிவிட்டார் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன். தான் மதிக்கும் தலைவனின் தந்தைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தமிழகம் திரும்பிய திருமா-வளவன்... தன் தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போக... அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். தந்தையை பார்த்து விட்டு மர…
-
- 0 replies
- 662 views
-
-
யாழ் நகரில் சீரழியும் தமிழர் கலாச்சாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களின் பாரம்பரியங்கள் சீரளிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். யாழ் அராலியில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் இதனைத் தெரிவித்துள்ளார். திறந்துவிட்ட யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை காலாச்சாரம் பரவத்தொடங்கியுள்ளது. தற்போது யாழ்மாவட்டத்தில் தமிழ் மக்களின் காலாச்சாரம் சீரழியும் நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இருந்து மீண்டு தமிழ் பாரம்பரியங்களை பாதுகாக்கும் பொறுப்பு இளைய சமூகத்திடம் உண்டு. தமி…
-
- 6 replies
- 2.1k views
-
-
வாக்களிப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றர் வரையிலான தூரம் வாக்களிப்பு நிலையத்திற்கு உரித்துடையது. இந்த பகுதிக்குள் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்துவோம். அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அல்லது வன்முறைகள் இடம்பெற்று வாக்களிப்பு சூனியமாக்கப்பட்டால் ஒருவாரத்திற்கு பின்னரே தேர்தல் நடத்தப்படும். இதனால், இறுதிப் பெறுபேறு வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். வாக்காளர் ஒருவர் வாக்களிப்பின்போது தவறு இழைத்து விட்டால் மற்றொரு வாக்குச் சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். தவறிழைக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளும் தனியாக பொதி செய்யப்பட்டு வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் என்று அவர் சொன்னார். …
-
- 0 replies
- 569 views
-
-
தனக்கு வந்தால்தான் தெரியும்...! அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவதும் அவற்றைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி அக்கறைப்படுவதும் ஆட்சியதிகாரத்தில் இல்லாத வேளைகளில்தான். அதிகார மமதையில் இருக்கும் போது அரசியல்வாதிகளிடம் ஜனநாயகம் பற்றிப் பேசினால் கிலோ என்ன விலை என்று கூட அவர்களில் சிலர் கேட்கவும் கூடும். இலங்கையின் வரலாற்றில் படுமோசமான ஜனநாயக விரோதச் செயற்பாடுகளும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுவந்த கடந்த 4 வருட காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவச் சீருடையைக் களைந்துவிட்டு இருமாதங்களுக்கு முன்னர் அரசியலில் பிரவேசித்தபிறகு ஜனநாயகத்தைப் பற்றி தாராளமாகப் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கி…
-
- 1 reply
- 835 views
-
-
திருக்கோணமலையில் அனல்மின் நிலையம்: இந்தியாவுடன் உடன்பாடு சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னர் திருகோணமலையில் அனல்மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு இந்திய நிறுவனத்துடன் உடன்பாடு கைச்சாத்திடப்படவுள்ளது. இந்தியாவின் தேசிய வெப்ப சக்தி கூட்டுத்தாபனமும் National Thermal Power Corporation (NTPC), சிறிலங்கா மின்சார சபையும் கூட்டுமுயற்சியாக இந்த அனல்மின் நிலையத்தை அமைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த மின்நிலைய கட்டுமானம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த 3 வருடங்களாகப் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு மூன்று வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்…
-
- 0 replies
- 384 views
-
-
யேர்மனியில் வாக்களிப்பவர்களுக்கான தகைமைகளும்: வாக்கெடுப்பு மையங்களின் முகவரிகளும் தகைமைகள் 1. ஈழத்தைப் பூர்வீகமாகவும் ஈழத்தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த யேர்மனியில் வசிக்கும் (யேர்மனி வதிவிட உரிமைஇ யேர்மனியக் குடியுரிமை பெற்றவர்கள்) அனைத்து தமிழ்பேசும் மக்களும் வாக்களிக்கத் தகைமை கொண்டவர்கள். 2. 2010 ஆம் ஆண்டு சனவரி 24ஆம் நாள் 16 அகவையுடையவர்களும் அதற்கு மேற்பட்டவர்களும் வாக்களிக்கத் தகைமை கொண்டவர்கள். 3. ஈழத்தமிழரை சட்டப்படி திருமணம் செய்த பிறநாட்டவரும்இ 16 மற்றும் அதற்கு மேற்பட்ட அகவைகொண்ட அவர்களுடைய பிள்ளைகளும் வாக்களிக்க தகைமைகொண்டவர்கள். 4. மேற்குறிப்பிட்ட தகைமைகளைக் கொண்டவர்கள் வாக்குப்பதிவு நாளன்று (24-01-2010) யேர்மனியில் அமைக்கப்பட்டுள்ள ஏதாவதொரு வாக…
-
- 1 reply
- 831 views
-
-
சரத் இப்பிடி சொல்கிறார் என்பதல்ல செய்தி. ஆனால் இப்பிடிச் சொல்லித்தான் சிங்கள மக்களிடம் ஓட்டுக் கேட்கவேண்டுமெனில் இப்படி சொன்னால்த்தான் சிங்கள மக்கள் ஓட்டுப் போடுவார்கள் எனில் என்ன மயிருக்கு இன ஐக்கியமும் மண்ணாங்கட்டியும் --------------- தென் இலங்கை மக்களிடையில் சிங்கள மொழியில் பிரசுரிக்கப்பட்ட கை ஏட்டின் தமிழாக்கம் இரண்டாம் போர்.... என் அன்பார்ந்த இலங்கை மக்களே, முப்பது வருட காலமாக இலங்கையில் நிலைத்திருந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து மக்களுக்கு சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்காக இருக்கும் அதிர்ஷ்டம் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் எமது நாட்டில் சர்வாதிகாரம் பெற்ற ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட எல்லையில்லாத அதிகாரத்தை அவர் தவறான செயலில் ஈடுபடுவதனா…
-
- 20 replies
- 2.9k views
-
-
முல்லைத்தீவு ‐ கிளிநொச்சியில் இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி ராஜபக்ஷவுக்கு சாதமான நிலைமை ஏற்படுத்த முயற்சி? முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் உள்ள சில இராணுவ சோதனைச் சாவடிகள் மீது எதிர்வரும் 24 ஆம் 24 ஆம் திகதிகளில் தாக்குதல் நடத்தி, அதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சாதமான நிலைமை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேக்கா தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் போலி உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் மீண்டும் விடுதலைப்புலிகள் உயிர்பிக்கப்பட்டுள்ளதாக வெளிகாட்டும் நோக்கில் இந்த சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 2k views
-
-
அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து தேர்தல் வன்முறைச் சம்பவங்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இன்று காலை மேற்கொள்ளப்பட்டக் குண்டுத் தாக்குதலினால் சேதமடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் செயலாளர் டிரான் அலஸின் வீட்டைப் பார்வையிடுவதற்கு சென்றபோதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இதனைத் தெரிவித்தார். ஜனநாயக விரும்பிகள் எவராலும் இவ்வாறான செயல்களை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட சந்திரிக்கா குமாரதுங்க, தேர்தல் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக ஜனநாயக வழிநடக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறினார். படங்கள்......... ht…
-
- 0 replies
- 851 views
-
-
இலங்கையில் இராணுவ ஆட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றது - அரசியல் ஆய்வாளர் இலங்கையில் இராணுவ ஆட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருவதாக ஆசியாவின் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பாதுகாப்பு தரப்பினர் அரசியலில் அதிகளவில் ஈடுபாடு காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதிக்கு சார்பான படைவீரர்கள் ஒரு அணியிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதிதக்கு ஆதரவான படையினர் மறுபுறமுமமாக அணிவகுத்துள்ளனர். இவர்களின் விகிதாசாரங்களில் கடை நிலை சிப்பா…
-
- 2 replies
- 700 views
-
-
இது ஸ்ரீ லங்கா இனவாத ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக அண்மையில் ஒரு சிங்கள NGO ஆல் செய்யப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
-
- 0 replies
- 889 views
-
-
ஊடகவியலாளரின் கேள்வியால் ஆத்திரமடைந்த மகிந்த "ராஜபக்சா குடும்பத்தினருக்கு எதிராக பல ஊழல், மோசடிகள் குறித்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன" இதுகுறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என லக்பிம நியூஸ் பத்திரிகையின் ஆசிரியர் ராஜபால் அபேநாயக்க ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பியதாகவும், இதனால் கோபமடைந்த மகிந்த குழப்பமடைந்து சத்தமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சனாதிபதியினால் நேற்று ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போதே கேள்விகள் எழுப்பப்படும் சந்தர்ப்பத்திலேயே அபேநாயக்க ஜனாதிபதியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார். கோபமடைந்த ஜனாதிபதியை அமைதிபடுத்த அவரது ஆங்கில ஊடகப் பணிப்பாளர் லூசான் ராஜகருணாநாயக்க பலத்த முயற்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அகதிகளை நிபந்தனையுடன் விடுவிக்க கனடா திட்டம் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 ஈழத்தமிழ் அகதிகளையும் விடுதலை செய்வதற்கு கனடா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கடந்த 3 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 25 அகதிகளையும் விடுதலை செய்வதற்கு கனடா இணக்கம் தெரிவித்துள்ளது. பல நிபந்தனைகளின் அடிப்படையில் தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு கனடா சம்மதித்துள்ளதாக தமிழ் மக்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் டக்ளஸ் கனன் தெரிவித்துள்ளார். கப்பல் மூலம் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் நாள் வன்கூவர் கடற்பகுதியை வந்தடைந்த அவர்கள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் அடிப்டையில் தடுத்த…
-
- 0 replies
- 599 views
-
-
அந்த இருண்ட நாட்களை மறக்கத் தயாராக இல்லை – வெளிவரும் அதிர்வுகள் ‐ GTN ற்காக ‐ பரப்பிரம்மா‐ (ஜி.ரி.என்) அன்றாட செய்தி சேகரிப்புக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின், யாழ் அலுவலகத்தையும் எட்டிப் பார்ப்பது வழமை. பெரும்பாலும் அது மதிய நேரமாக இருக்கும். அந்த அலுவலகத்துள் கடந்துபோகும் நேரத்தில், வெறிச்சோடிப்போன முகங்களுடன் அவர்களை கண்டுள்ளேன். யாழ்ப்பாணத்தில் காணாமல் போதல்கள் கணக்கு வழக்கற்றிருந்த காலமது. வேலைக்குப்போகும் வழியில் இரவுகளில் வீடுகளினில், பாடசாலைக்கோ, பல்கலைக் கழகத்திற்கோ செல்லும் வழியிலென பல இடங்களில் அவர்கள் காணாமல் போனார்கள். வீதிகளிலும், காவலரண்களிலும் ஏன் இரவு வேலைகளில் வெள்ளை வான்களிலும் ஆட்பிடிக்கும் ஆவிகள் நடமாடியதாக மக்கள் அச்சங்கொண்டிருந்தனர்.அதி…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தியாவுக்கு வந்து போகும் விமானங்கள் இலங்கை விமானங்கள் உட்பட கடத்தப்படலாம் என இந்தியா எச்சரித்துள்ளது. அனைத்து விமானங்கள் விமான நிலையங்கள் ஆகியவை அதி உயர் பாதுகாப்பு உசார்படுத்தலில் இருக்க வேண்டும் என இந்தியா எச்சரித்துள்ளது. பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லெற் எனும் தீவிரவாத அமைப்பே இந்த விமான கடத்தல்களை மேற்கொள்ளலாம் என கூறியுள்ளது இந்தியா. www,eelanatham.net
-
- 1 reply
- 628 views
-
-
சந்திரிகா ஜனாதிபதித் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் முக்கிய தனியார் தொலைக் காட்சிகள் மூலம் அவருடைய விசேட உரை ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் பண்டாரநாயக்கா குடும்பத்தின் ஆதரவாளர்கள் மற்றும் சுதந்திர கட்சியின் அபிமானிகள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து அவருடைய உரை அமையவுள்ளதாக தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/news/5197/54//d,view.aspx
-
- 0 replies
- 725 views
-
-
வன்னியில் புதிதாக 25 படை முகாங்கள் நிறுவப்படவுள்ளன – திவயின நாளேடு வடக்கில் புதிதாக 25 படை முகாங்களை அமைக்கவுள்ளதாக திவயின என்ற சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இருந்த மல்லாவி, இரணைமடு, பூநகரி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலேயே புதிய படை முகாங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பயன்படுத்திய வானூர்த்தி ஓடு பாதைகளும் புனரமைக்கப்பட்ட சிறீலங்கா வான்படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அச்செய்தி மேலும் கூறியுள்ளது. http://www.pathivu.com/news/5201/54/25.aspx
-
- 0 replies
- 419 views
-
-
பூசா வதை முகாமில் தடுத்து வைக்கப்படிருந்த 50 பேர் நேற்று விடுதலை பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூசா வதை முகாமில் தடுத்து வைக்கப்படிருந்த 50 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்ட சிலரை பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டு பின் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேவேளை இன்று வெள்ளிக்கிழமையும் சில கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.அ http://meenakam.com/?p=3847
-
- 0 replies
- 391 views
-
-
கொழும்பு: அதிபர் தேர்தலில் வாக்களிக்க இதுவரை யாழ்ப்பாணத்தில் வெறும் 32 சதவீதம் பேருக்கு மட்டுமே வாக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளனவாம். தமிழர்கள் மட்டுமே பெருமளவில் வசிக்கும் முக்கியப் பகுதி யாழ்ப்பாணம். ஆனால் இங்கு இதுவரை 32 சதவீதம் பேருக்கு மட்டுமே வாக்களிக்கும் அட்டை தரப்பட்டுள்ளதாம். யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 7,21,389. இவர்களில் கடந்த 16-ம் தேதி வரை 2,30,761 பேர் மட்டுமே வாக்கு அட்டையைப் பெற்றுள்ளனர். எஞ்சியவர்களின் நிலை குறித்து யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையர் பி.குகநாதன் கூறுகையில்,பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் சிலர் இலங்கையை விட்டு வெளியேறியிருக்கலாம் அல்லது அகதிகளாக முகாம்களில் தங்கியிருக்கலாம். இருப…
-
- 0 replies
- 396 views
-
-
கொழும்பு: அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் நாட்டை விட்டு வெளியேற மகிந்தா ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவருடைய குடும்பத்தினரை இலங்கையிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்ல விமானம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஈழ தமிழ் இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் அதிபர் தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ராஜபக்சே தோல்வி அடைவார் என்று இலங்கை முழுவதும் பலமாக பேசப்பட்டு வருகிறது. பொன்சேகாவுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ராஜபக்சே சுரத்திழந்து போய்க் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தேர்தலில் தோல்வியுற்றால் பாதுகாப்பான முறையில் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேற ராஜபக்சே திட்டமி…
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை வன் முறையற்ற முறையில் நடத்துவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டு மென ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைச் சம்பவங்களின் உயர்வு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் செயற்படவேண்டும். குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் பிர தான வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக் மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிபுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் நீண்டகால சமாதானத்தை ஏற்படு…
-
- 0 replies
- 355 views
-
-
கொழும்பு: உலகிலேயே மிகப் பெரிய அளவில் மன நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஒரே நபராக மகிந்தா ராஜபக்சேதான் இருப்பார். அந்த அளவுக்கு அவரைச் சுற்றிலும் ஏகப்பட்ட நெருக்கடிகள். அத்தனயையும் சமாளிக்க முடியாமல் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ள ராஜபக்சே இடையில் நிறுத்தி வைத்திருந்த மதுப் பழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளாராம். அதிபர் தேர்தலில் கிட்டத்தட்ட தோல்விதான் கிடைக்கும் என்ற நிலையில் உள்ளார் ராஜபக்சே. காரணம் அவருக்கு எதிராக பல விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றனவாம். போரில் கிடைத்த வெற்றியைத்தான் பிரதானமாக நம்பியிருந்தார் ராஜபக்சே. அது ஒண்டி போதும், ஈசியாக ஜெயித்து விடலாம் என்ற மிதப்பில் இருந்து வந்தார். ஆனால் போரின் நாயகனாக சிங்களர்களால் வர்ணிக்கப்பட்ட பொன்சேகா பொளேர்…
-
- 8 replies
- 1.5k views
-