Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவம் மிகப் பெரும் துரோகம் ஒன்றை சந்தித்துள்ளது - ஜகத் ஜெயசூரிய ஸ்ரீலங்கா இராணுவம் மிகப் பெரும் துரோகம் ஒன்றை சந்தித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இன்று காலை படையினர் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எனினும் இந்த துரோகம் யாரால் இழைக்கப்பட்டது என்பது குறித்தோ எவ்வகையான துரோகம் என்பது குறித்தேர் அவர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. http://www.pathivu.com/news/4603/68//d,view.aspx

  2. விடுதலைப்புலிகளும் அவர்களது இறுக்கமான கலாச்சார கட்டுப்பாடுகளும் இருந்த வரையில் யாழ்ப்பாணம் தலை நிமிர்ந்திருந்தது. இப்போது கரையுடைத்த காட்டாற்று வெள்ளம் போல் கலாசார சீரழிவு தலைவிரித்து ஆடுகின்றது. இவ்வாறு புலம்பெயர் உறவுகளுக்கு யாழிலிருந்து சனீஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் உறவுகளுக்குயாழ்.சனீஸ்வரன் விடுத்துள்ள அன்பான வேண்டுகோள்:- அன்பான உறவுகளே! இன்று மானமுள்ள ஈழத் தமிழனின் ஒரேயொரு பற்றுக் கோடாயிருப்பது நீங்கள் மட்டும்தான். உங்கள் செயற்பாடுகளால் மட்டும்தான் இன்று தாய் தமிழ் ஈழ அன்னை உவகை கொண்டிருக்கின்றாள். உலகப்பந்தில் எமக்கொரு நாடு வேண்டும். கல்தோன்றி மண்தோன்றாக்காலத்து மூத்த தமிழுக்கென்று ஒரு நாடு வேண்டும். ஒரு அங்கீ…

  3. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எதிர்க்கட்சிகளின் சார்ப்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் அதனையடுத்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் பதவியேற்கும் இடைப்பட்ட காலத்திற்குள் உடனடியாக கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இவ்விடயங்களில் தமிழ் மக்கள் தொடர்பிலான உ…

  4. சுயநலமிக்க உலக நடைமுறைக்குள் எமது இனத்தின் விடுதலை முடக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலைமையில், அதிலிருந்து உடனடியாக மீளவேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது. உலக வரலாற்றில் எந்தவொரு தேசத்தின் விடுதலையும் மிக இலகுவாக கிடைத்ததாக சரித்திரம் இல்லை. அனைத்து விடுதலைப் போராட்டங்களும் பல தியாகங்களையும், சோதனைகளையும், சவால்களையும் தாண்டியே வெற்றி பெற்றன. சவால்களையும், சோதனைகளையும் தாண்டமுடியாத பல விடுதலைப்போராட்டங்கள் தோற்றுப்போன வரலாறுகளும் உண்டு. இதுவரை நமது தமிழீழ விடுதலைக்காக நாம் இழந்தவை அதிகம். விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் பன்மடங்கு வரலாம். ஆனால், இறுதிவரை நம் விடுதலை உணர்வினைமட்டும் சிறிதளவேனும் இழக்கக் கூடாது. சவால்களை எதிர்கொண்டு, இழப்புக்களையும் வலிகளையும் தாங…

  5. இலங்கை அகதிகள் போலித் தரகர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென மலேசிய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வேறும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்து அனேக இலங்கையர்கள் மலேசியாவிற்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்வாறு மலேசியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களில் பெரும்பாலானோர் போலி முகவர்களினால் ஏமாற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. வேறும் நாடுகளுக்கு செல்லும் நோக்கில் பல இலங்கையாகள் சட்டவிரோதமான முறையில் மலேசியாவை சென்றடைவதாகக் குறிப்பிடப்படுகிறது. அவுஸ்திரேலியாஇ நியூசிலாந்து கனடா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து போலி முகவர்கள் இலங்கை அகதிகளை ஏமாற்றுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வா…

  6. பிரான்சில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு - 30000ஐயும் தாண்டியுள்ளது! திகதி: 14.12.2009 // தமிழீழம் பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது. தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கிடைத்த தகவலின் படி 30000 ற்கும் மேற்பட்ட வாக்குகள் "ஆம்" என்று வாக்களிக்கப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர். மேலதிக த…

  7. கூத்தமைப்பாகும் கூட்டமைப்பு! தமிழர் தேசம் மீது தாயகம் மீது இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் தொடுக்கப்பட்ட ஈவிரக்கமற்ற குரூர கொடூர யுத்தத்தின்போது அரங்கேறிய மிக மோசமான சம்பவங்களின், அட்டூழியங்களின் பின்னால் புதைந்து கிடக்கும் இரகசியங்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. முறையற்ற போரை மூர்க்கமாக முன்னெடுத்த இராணுவ அரசியல் தலைமைகளுக்கு இடையில், யுத்த வெற்றியின் பின் னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இப்படிக் கூட்டுச் சேர்ந்து புரிந்த அராஜகங்களின் ஒளிவு, மறைவான பக்கங்களை வெளிச் சத்துக்குக் கொண்டுவரும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. அந்த எதிர்பார்ப்பு சாத்தியமாகத் தொடங்கியிருக்கின்றது. இவ்வரிசையில் முதல் துப்பை எதிரணியின் பொதுவேட்பாளராக ஜ…

  8. தமிழ் பேசும் மக்களின் பொது வேட்பாளர் ‐ GTNற்காக தனபாலசிங்கம். 14 December 09 05:48 am (BST) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயக்கங்களும், இலட்சியத்தை கைவிடாத தமிழ் பேசும் மக்களின் நீண்ட வரலாறும்! ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதில்லை என்ற முடிவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இது உண்மையாயின் இம்முடிவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பதே பல்வேறு தரப்பிலும் காணப்படும் விருப்பமாய் உள்ளது. இதேசமயம், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்ற முடிவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் மேற்கொள்ளவில்லை. இரு…

  9. திராவிட அரசியலால் தமிழனுக்கு ஒரு பயனுமில்லை குறைந்தஅதி சிறந்த சிறைவாசம், வழக்குகள் என ஆட்சியாளர்களின் அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி, ஈழத் தமிழர்களின் நலனுக்காக உரக்க குரல் எழுப்புவர்களில் முக்கியமானவர் இயக்குனர் சீமான். மக்களைவைத் தேர்தலின்போது இவர் வெளியே இருந்தால் தங்கள் வெற்றிக்கு ஆபத்து என்று அஞ்சிய ஆளும் வர்க்கம் முடிந்தவரை இவரை உள்ளே வைத்திருக்கப் பார்த்தது. அந்தளவிற்கு பேச்சாற்றலால் தமிழகத்தின் பெரும்பான்மை இளைஞர்களை வசீகரிப்பவர். தற்போது நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி தமிழ்த் தேசிய சிந்தனைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அண்மைக்காலமாக அவரைச் சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்தான கேள்விகளோடு கீற்றிற்காக இரண்டாம் முறையாக சீமானைச் சந்த்தித்தோம். பேட்டியில…

    • 35 replies
    • 3.7k views
  10. நிறைய விஷயங்கள் கடந்த பத்து நாட்களில் நிகழ்ந்திருக்கின்றன. நல்லனவும், அல்லாதனவும். மே 17-க்குப்பின் ஈழமக்கள் தொடர்பாக இந்தியாவில் நடந்த மிக முக்கியமான முன்னேற்றம் கடந்த வாரத்தின் பாராளுமன்ற விவாதம்தான். இதனை நேர்மையான அக்கறை யுடன் முன்னெடுத்த பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இன்னபிற கட்சிகள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள். பாராளுமன்ற விவாதத்தின் எதிரொலியாக இலங்கையின் உயர்மட்டக் குழு ஒன்று -அதில் ராஜபக்சேவின் சகோதரர்கள் கோத்தபய்யா, பசில் இருவரும் உள்ளடக்கம் -புதுடில்லி வந்து -அல்லது வரவழைக்கப்பட்டு, தமிழ் மக்கள் மீள் குடியமர்வு, அரசியல் தீர்வு தொடர்பாக முக்கிய விவாதங்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. அனைத்துலக மனித உரிமை நீதி விசாரணையாளர் ஒருவர் கூறியுள…

  11. கல்முனை சிறைச்சாலையில் இருந்து சித்திரவதை தாங்கமுடியாது தப்பி ஓடிய 23 வயதான தமிழ் இளைஞர் ஒருவர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டபோது தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார். கல்முனை சிறைசாலையில் இருந்து தப்பியைந்த 23 வயதான இளைஞர் வீட்டிலிருப்பதாக தமக்கு தகவல் கிடைத்ததாகவும் அதனை தொடர்ந்து தாம் சென்றபோது தம்மை வெடிகுண்டு மூலம் தாக்குவேன் என அச்சுறுத்தியதாகவும் பொலிசார் கூறியுள்ளனர். அதன்பின்னர் விசேட அதிரடிப்படையினரை அழைத்து கதவினை உடைத்து உள்ளே சென்ற போது அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  12. பெரும் தொகையான ஆயுதங்களுடன் வடகொரியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் தடுத்து வைத்து பறி முதல் செய்யப்பட்டதாக நேற்றிரவு பரபரப்பான தகவல்கள் வெளியாகின. தாய்லாந்தின் டொன்மியூங் விமான நிலையத்தில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது. எரிபொருள் நிரப்புவதற்காக தரை இறக்கப்படுவதாகத் தெரிவித்து அவசரஅவசரமாக தரையிறங்கிய விமானத்தை தாய்லாந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் 35 தொன் ஆயுதங்கள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விமானம் இலங்கைக்கு சொந்தமான ஆயுதங்களை சுமந்து வரவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது. ஆனால் விமான ஓட்டி மற்றும் விமான சிப்பந்திகளின் தகவல்களின் படி இந்த விமானம் இலங்கைக்கே வந்தன என தெரிவிக்கப்ப…

  13. கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யுடன் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 11ம் திகதி மாலை பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்க்ஷவின் வெற்றிக்கு ஆதரவளிக்குமாறு கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கே.பி.யிடன் கோரியுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்க்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கான பிரசாரப் பணிகளுக்கு விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான நிதியைப் பயன்படுத்தினால் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியு…

    • 0 replies
    • 1.3k views
  14. தாங்கள் மிகுந்த கஷ்டப்பட்டு படித்து இன்று வேலையொன்றை அதுவும் அரசாங்க வேலையொன்றை பெற்றுக் கொள்வதற்காக படும் கஷ்டங்கள் சொல்லில் அடங்காததுதான். சிங்கள அரசின் இன அழிப்பின் மத்தியில் சில வருடங்களில் பூர்த்தியடையும் கல்வி பல வருடங்களாக இழுபட்டு இப்போது ஒருவாறாக பட்டம் பெற்றாலும்கூட அரச உத்தியோகம் எதுவும் கிடையாது நீங்கள் படும் அவலம் கொஞ்ச நஞ்சம் அல்ல. ஆனால் அரசின் அடிவருடிகளான சில தமிழ் ஏஜன்டுகள் தங்கள் சுயநல கேடித்தனமான அரசியலை வைத்துப் பிழைப்பதற்கு நீங்கள் பலிக்கடா ஆக்கப்படுவதுதான் ஜீரணிக்க முடிவதில்லை. பட்டதாரிகள் என்று நெஞ்சை நமிர்த்திக் கொள்ள வேண்டிய நீங்கள் எல்லாம் தியேட்டர் ஒன்றிலிருந்து அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் முன்னால் கூனிக்குறுகி அவர்களது ஊர்வலங்கள், பேரணி…

  15. முன்னாள் இராணுவத் தளபதியும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டுமென சுதந்திர ஊடக அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. freemediaஜெனரல் சரத் பொன்சேகா ஊடக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சரத் பொன்சேகா ஊடகங்களின் மீது அடக்குமுறையை பிரயோகித்ததாக அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. சரத் பொ…

  16. இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற வானூர்தி தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்து வைப்பு!!! வடகொரியாவில் இருந்து கனரக ஆயுதங்களை சிறீலங்காவுக்கு எடுத்த சென்ற விமானம் ஒன்றை தாய்லாந்து அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். அதில் பயணம் செய்த சிப்பந்திகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆயுதங்களில் பெருமளவான ஏவுகணைகளும், கிறனைட் லோஞ்சர்களும் இருப்பதாக தாய்லாந்து தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆர்.பி.ஜி உந்துகணைகள், உந்துகணை செலுத்திகள், விமான எதிர்ப்பு சாம் ஏவுகணைகள், வெடிபொருட்கள் பெருமளவில் விமானத்தில் உள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. விமான சிப்பந்திகளில் ஐந்து வெளிநாட்டவர்கள் அடங்கியுள்ளதுடன், விமானத்தில் 35 தொன் கனரக ஆயுதங்களும் காணப்பட்டுள்ளதாக தெர…

  17. இலங்கை அரசியலில் இராணுவம் ஒரு தவிர்க்க டியாத சக்தியாக மாறியிருக்கிறது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தின் பங்கு அரசியலில் இன்னும் அதிகமாகியிருக்கிறது.ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. அதேவேளை அவரது அரசியல் பிரவேசத்தின் பின்னர் இராணுவம் இன்னம் அரசியல் மயப்படுத்தப்படும் நிலை தோன்றியிருக்கிறது. இது அரசியலில் இராணுவத்தின் பங்கு எவ்வளவுக்கு அதிகத்துள்ளது என்பதை உணர்த்தப் போதுமான உதாரணமாகும். கடந்த ஐந்து வாரங்களுக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவைகள் வன்னிப் பகுதிக்குப் பயணம் மேற்கொண்டிருக் கிறார். அவரது தலாவது பயணம் கடந்த மாதத் தொடக்கத்தில் இடம்பெற்றது. துணுக்காய், முழங்காவில் பகுதிகளு…

  18. கடந்த புதன் கிழமை பாகிஸ்தான் - வங்க தேச கடல் எல்லையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கப்பல் ஒன்று நடமாடியதனை கண்ட இந்திய கரையோர காவல் படையினர் அந்த கப்பலை பிடிப்பதற்கு உசார்படுத்தப்பட்டனர். அந்த கப்பல் தலைமறைவாகும் முயற்சியில் ஈடுபட்டது. சரியான அடையாளங்களை தெரிவிக்க மறுத்ததால் அந்த கப்பல் பிடிக்கப்பட்டது. அந்த கப்பலில் 11 பாகிஸ்தானியர்கள் இருந்தது மட்டுமன்றி பெருமளவான ஆயுதங்கள் அதற்குள் இருந்தன ஆனால் இந்த கப்பல் பற்றிய விபரங்களை இந்திய அரசு தெரிவிக்க மறுத்து விட்டது. அதற்கு என்ன நடந்தது என்ற விபரம் தெரியவில்லை. இதே போல கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் சந்தேகத்திற்குடமான முறையில் பயணித்து கொண்டிருந்த ஒரு வடகொரியாவுக்கு சொந்தமான கப்பலும், சிறு ரோலர் படகும் அந்தமான…

  19. இந்திய கரையோரக் காவல் படையினர் இருவரை பணயக் கைதிகளாகச் சிறை பிடித்த இலங்கை மீனவர்களின் "வின்ட் மரையன்8" என்ற மீன்பிடிப் படகு. தற்சமயம் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்தப் படகு வங்களா விரி குடாவில் தீப்பற்றி எரிவதை கடந்த பதினோராம் திகதி அவதானித்ததாக கடற்படைப் பேச்சாளர் பி.வி.சத்தீஸ் கூறியதாக மிகப் பிந்திய தகவல்கள் தெரிவித்தன. படகின் மேல்பகுதி எரிந்ததால் அதில் இருந்தவர்கள் தப்புவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார் என பி.ரி.ஐ. நேற்றிரவு தகவல் வெளியிட்டது. இந்தக் கப்பலைத் தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் இந்திய இலங்கைக் கடற்படையினர் கூட்டாக ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது. கடந்த புதன்கிழமை…

    • 0 replies
    • 1.3k views
  20. உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் சீரழிந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.இந்த மக்களின் உடனடி விடிவுக்காகவும் எமது மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கோட்பாட்டில் உள்ளோம். இவ்வாறு கூறியுள்ளது பிள்ளையான் கட்சி இன்று எல்லாவற்றையும் இழந்து அரசியல் தலைமைத்துவம் இன்றி தமிழ்ச் சமுகம் நிர்க்கதியான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் எம்மக்களின் இழந்த வாழ்வினை மீட்டெடுத்து, எமக்கான உறுதியான அரசியல் தீர்வை தரக்கூடிய கட்சியைப் பின்புலமாக கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டும். இன்று எம் மக்களுக்கு உள்ள அரசியல் ரீதியான ஒரே நம்ப…

    • 14 replies
    • 1.2k views
  21. இலங்கை அரசாங்கம் உருத்திரகுமாரன் தொடர்பான போதிய தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும் அமெரிக்காவுக்கு அதனை நாம் வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். முன்னதாக திரு ரொபேட் பிளேக் அவர்கள் குறிப்பிடும்போது உருத்திரகுமாரன் புலி உறுப்பினர் அல்லர் எனவும் அவர் நீண்டகாலம் அமஎரிக்காவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே உருத்திரகுமாரன் அவர்கள் புலி என் உறுதிப்படுத்த தம்மிடம் ஆதாரம் இருப்பதாக பாதுகாப்பு பேச்சாளர் ரம்புக்வெல குறிப்பிடுள்ளார். குமரன் பத்ம நாதன் அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் படி இந்த ஆதாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் கேகலிய ரம்புக்வெல.

    • 7 replies
    • 1.2k views
  22. இந்திய கடலோர காவற்படையின் கடத்தலின் பின்னணியில் நிலவும் மர்மம் கடந்த புதன் கிழமை இந்திய கடலோர காவற்படையினர் இருவரை இலங்கை மீனவர்கள் கைது செய்ததாக செய்திகள் வெளிவந்தன. அதில் எந்தளவுக்கு உண்மைத்தன்மை இருக்கின்றது இலங்கை மீனவர்களால் தானா இந்திய காவற்படையினர் கைது செய்யப்பட்டனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மீனவன் ஒருவன் இந்திய கடலோர காவற்படையை கைதியாக பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும், அப்படி கடலோர காவற்படை இல்லாத சாதாரண மீனவனைத்தான் இலங்கை மீனவர்கள் பிடித்திருந்தாலும் சாதாரண மீனவர்களை மீட்க கடற்படை வரவேண்டிய அவசியமில்லை. அப்படி வந்திருப்பினும் மீனவர்களை இந்திய காவற்படையிடம் இலங்கை ஒப்படைத்திருக்கும். இப்படியான சாதாரண நிகழ்வுகள் எதுவுமே இங…

  23. நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற் குழுவின் இணைப்பாளரும், அமெரிக்கச் சட்டவாளருமான விசுவநாதன் உருத்திரகுமாரனை அமெரிக்காவின் உதவியுடன் கைது செய்வதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணித்துத் திரும்பிய தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ரொபேட் பிளேக் உருத்திரகுமாரனைக் கைது செய்வதற்கு உதவுவார் எனக் கொழும்பு எதிர்பார்த்திருந்தது. ஆனால், உருத்திரகுமாரனைக் கைது செய்வதற்குப் பதிலாக மீண்டும் பேச்சுக்களைத் தொடங்குவது குறித்து அவருடன் கலந்துரையாடுமாறு சிறிலங்கா அதிகாரிகளுக்கு பிளேக் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஏற்கெனவே - மாவீரர்…

    • 3 replies
    • 1.3k views
  24. ஐரோப்பாவுக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க கடந்த 10 ஆம் திகதி இரவு இலங்கை திரும்பியுள்ளார். இலங்கை திரும்பியுள்ள அவர் எதிர்வரும் நாட்களின் முக்கிய அரசியல் தீர்மானங்களை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரிக்கா பண்டாரநாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக் கூடும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.globaltamilnews.net

  25. இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்புவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமது கண்காணிப்பாளர்களை இலங்கை;கு அனுப்பி வைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களின் போது கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளார். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களின் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என குறித்த குழு அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.