ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.,க்களுக்கு ராஜபட்சே அழைப்பு இலங்கை அதிபர் தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 22 எம்.பி.,க்களுக்கு ராஜபட்சே தனித்தனியே அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜபட்சே சார்பில் பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த இக்கடிதங்களை எழுதியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அதிபர் ராஜபட்சே இரு நாட்களுக்கு முன்னர் தனியே சந்தித்துப் பேசியதாகவும், இந்நிலையில் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து எம்.பி.,க்களுக்கும் கடிதம் எழுதப்பட்டிருப்பது அதன் ஒற்றுமையை சீர்குலைக்கும்…
-
- 0 replies
- 503 views
-
-
முகாம்களில் உள்ளவர்களை இலங்கை அரசு வெளியேற்றியது தமிழக எம்பிக்கள் பயணத்தால் அல்ல: சிவாஜிலிங்கம் சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாகவே முகாம்களில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு வெளியேற்றியதே தவிர, தமிழக எம்.பி.க்கள் குழுவின் பயணத்தால் அல்ல என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், இலங்கையில் போர் முடிவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. முள்வேலி முகாம்களில் உள்ள எந்த தமிழர்களையும் அவர்களுடைய வாழ்விடங்களில் இலங்கை அரசு மறு குடியமர்த்தம் செய்யவில்லை. …
-
- 0 replies
- 576 views
-
-
அகதிகள் தொடர்பில் அவுஸ்த்திரேலியா அரசு மேற்கொண்டுவரும் கடும்போக்கை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) சிட்னி நகரில் அவுஸ்திரேலியா மக்களினால் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய அவுஸ்திரேலியா அரசு அகதிகள் தொடர்பாக கடைப்பித்துவரும் கடும்போக்கு கொள்கைகளை கைவிட வேண்டும், இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. 150 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த பேராட்டத்தில், தற்போதைய அவுஸ்திரேலிய பிரதமரின் கொள்கையானது இனவாதம் மிக்கது எனவும், சிறீலங்கா அரசின் பிடியில் தமிழ் மக்கள் கடும் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ்தீவில் உள்ள தடுப்பு ந…
-
- 0 replies
- 802 views
-
-
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் செல்வதற்கு நாடொன்று இருக்கின்றா என்பதை ஆராயவே தான் வெளிநாடு சென்றதாக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது தான் ஆறு நாடுகளுக்குச் சென்றதாகவும் அந்த நாடுகளில் எந்த நாடும் மகிந்தவை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனவும் சோமவங்ச கூறியுள்ளார்.ஆத்துடன், பொது வேட்பாளர் சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைக் கிடைக்கும் என்பது உறுதி எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டுப் பயணத்தின் பின்னர் நேற்று நாடு திரும்பிய அமரசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையைப் பெறுவது தொடர…
-
- 0 replies
- 928 views
-
-
» ஜனாதிபதி - சம்பந்தன் சந்திப்பில் சாதகமான சமிக்ஞை எதுவுமில்லை 2009-12-04 05:57:50 கூட்டமைப்பு வட்டாரங்கள் பெரும் அதிருப்தி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் அலரி மாளிகைக்கு அழைப்பித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டிய விடயங்கள் குறித்து அவருடன் பேச்சு நடத்தினார் என அறியவந்துள்ளது. எனினும், இந்தப் பேச்சுகளின் பெறுபேறு குறித்து கூட்டமைப்பின் உயர் வட்டாரங்கள் அதிருப்தியே தெரிவித்தன. ஜனாதிபதி தரப்பிலிருந்து காட்டப்பட்ட சமிக்ஞைகள் தமிழர் தரப்பின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பைக் கூட நிறைவு செய்வனவாக அமையவில்லை என்று அவை குறிப்பிட்டன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கூட்…
-
- 4 replies
- 791 views
-
-
அர்ஜூன ரணதுங்க ஐ.தே.கட்சியில் இணைகிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா கிறிக்கெற் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜூன ரணதுங்க ஐ.தே. கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக அறிய வருகிறது. அவருக்கு கோட்டை தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக பண்டாரநாயக்கா ஆகியோர் அரசுடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. மூலம் : http://www.tamilstar.org
-
- 6 replies
- 1.4k views
-
-
சனாபதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவுள்ளார், அதுவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மூத்த நீண்ட அனுபவம் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் சனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் இருவருக்கு பலத்த கவலை ஏற்பட்டுள்ளது. தமது கவலையை போக்க அவரசமாக நேரடி பேச்சுக்கு வருமாறு இரு தரப்பும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பல தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். சனாதிபதி செயலகத்திலிருந்தும், எதிர்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்தும் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். சனாதிபதி மகிந்தராஜபக்ஷவும், எதிரணியின் தரப்பில் பொது கூட்டமை…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா "தப்பான யுத்த கதாநாயகன்" எனவும் அவர் "இராணுவ மேதாவி" என்று உரிமை கோர முடியாதென்றும் ஏனென்றால் கடந்த காலத்தில் அவர் பல தடவைகள் தோல்வி கண்டவர் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். அவரின் தலைமையின் கீழ் அதிகளவு தோல்விகள் ஏற்பட்டன. உண்மையிலேயே 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து படையினரை வாபஸ் பெறும்படி உத்தரவிட்டவர்களில் இவர் ஒருவர் என்று ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கோதாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள்-3 தாக்குதலை நடத்திய போது யாழ்ப்பாணத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் அகப்பட்டிருந்தனர். பட…
-
- 5 replies
- 1.5k views
-
-
கனடாவில் நடந்தது என்ன?-சீமான் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 4, 2009, 14:41[iST] சென்னை: ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் [^] கிழித்திருக்கிறார். போஸ்டர் கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகி விட்டது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான் கூறியுள்ளார். கனடாவில் கைது செய்யப்பட்டது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரபாகரன் போஸ்டர்களைக் கிழித்தது, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக ஜூனியர் விகடன் இதழுக்கு சீமான் பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்... வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி…
-
- 0 replies
- 821 views
-
-
தடுப்பு முகாமில் இருந்து யாழ் சென்ற சிறார்கள் காய்ச்சல் மற்றும் ஈர்ப்புவலி காரணமாக சோதனை செய்யப்பட்டபோது அவர்களின் உடலில் துப்பாக்கி சன்னங்களும் பீரங்கி சிதறல்களும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 13 சிறார் மாணவர்களுக்கு பரிசோதனை செய்து குண்டு சிதறல்கள் உடலினுள் இருந்தமை கண்டு பிடித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை மருத்துவர் எஸ்.ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். 10 - 15 வரையான சிறார்களுக்கே இவ்வாறு எக்ஸ்றே மூலம் பரிசோதனை செய்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் மருத்துவர் எஸ் ஜமுனானந்தா அவர்கள். இன்னமும் பல மக்களுக்கு இவ்வாறான கதி ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஆனால் பரிசோதனைகள் செய்யாது இருக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். வன்னியில் இருந்தபோது போரில் ச…
-
- 0 replies
- 671 views
-
-
இலங்கையில் வெளிநாடொன்றின் சதி இடம்பெற்றுவருகின்றது. இந்த சதியின் பின்னணியில் தான் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் பங்குபற்றுகின்றார். இவர் ஜனாதிபதி தேர்தலில் முப்படைகளுக்கும் கட்டளை இட்டவர்களையே எதிர்த்து நிற்கின்றார். ஜனாதிபதி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அவரை இராணுவ துறையில் இருக்கும் ஊழியர் ஒருவர் எதிர்த்து நிற்க முனைவது வெளி நாடு ஒன்றின் சதி என குறிப்பிட்டுள்ளார் ரோஹித போகொல்லாம.
-
- 0 replies
- 815 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து அரசுத் தரப்புடன் பேச்சு நடத்து வதற்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் இருபத்தியிரண்டு நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும் ஆளும் பொது மக்கள் ஐக்கிய முன்னணி அழைப்பு விடுத்திருக்கின்றது. பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளர் என்ற முறையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பான அழைப்புக் கடிதங்களைக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். அரசுத் தரப்புடன் பேசுவதற்கான வசதியான திகதி மற்றும் நேரத்தைக் கூட்டமைப்பு எம்.பிக்களே முடிவு செய்து தமக்குத் தகவல் தரலாம் என அவர் அந்த அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என அறியவந்தது. தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைக்கு அல்லது அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அழைப்பு வ…
-
- 0 replies
- 484 views
-
-
ஜனரல் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சேவை வெறுப்பேற்றி அறிக்கைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி, ஊடகவியலாளர்களிடம் கோரியுள்ளார். கொழும்பு ஹில்டன் விடுதியில் கடந்த வாரம் ஊடகவியலாளர்களுடனான இரவு நேர விருந்துபசாரத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த சுமார் 400 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இந்த இரவு நேர விருந்துபசாரத்தில், சரத் பொன்சேக்காவுடன் நெருங்கிய தொடர்புகொண்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் ஞாயிறு லங்காதீப பத்திரிகையில் கோதாபய ராஜபக்சேயின் விசேட செவ்வி வெளியாகியிருந்தமை குறித்து கருத்து தெரிவித்தபோ…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 9ம் திகதி காலை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இலவச பாடப்புத்தக விநியோகத்தை ஆரம்பித்து வைக்கும் அவர், பின்னர் யாழ். மத்திய கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணம் செல்லும் அதிபர் மகிந்த ராஜபக்ஸவிடம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை மீளக்குடியமர அனுமதிக்க வேண்டும் என்று நேரில் வலியுறுத்தவுள்ளனர். கடந்த வாரம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வலி-வடக்கு இடபெயர்ந்தோர் சங்க பிரதிநிதிகள் இதுபற்றி கலந்தோலோசனை நடத்திய…
-
- 2 replies
- 1k views
-
-
வெளிநாடுகளில் இருந்து தமது உறவினர்களை பார்க்க வவுனியா செல்லும் மக்களிடம் அண்மை காலமாக வவுனியாவில் உள்ள ஈபிடிபி துணை இராணுவ குழுவினை சேர்ந்தவர்கள் கப்பம் அறவிடுகின்றனர். தரமறுப்பவர்களை கடத்தி சென்று துன்புறுத்தி கப்பம் அறவிடப்படுகின்றது. அண்மையில் இத்தாலியில் இருந்து சென்ற ஒருவர் வவுனியாவிற்கு தனது குடும்பத்தினை பார்க்க சென்றுள்ளார். இவர் அண்மை காலத்தில் தான் இத்தாலிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் தடுப்பு முகாமிலிருந்து பணம் கட்டி தப்பி வந்த தனது மனைவியையும் குழந்தையையும் பார்க்க சென்றுள்ளார். சென்ற அடுத்த நாள் ஈபிடிபி இனரிடம் மாட்டிக்கொண்ட இவர் நிதி தருமாறுவற்புறுத்தப்பட்டுள்ளார்.இவரது மனைவியும் குழந்தைகளும் ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் காயப்பட்டு வந்ததனையும…
-
- 4 replies
- 1.4k views
-
-
பிரபல சிங்கள வர்த்தகர் உள்ளிட்ட நான்கு பேர் நேற்றைய தினம் வத்தளையில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகிறது. இவர்கள் கடத்தப்பட்ட மோட்டார் வாகனம் கொழும்பில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும் கடத்தப்பட்டவர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர். இதுவரை தமிழர்களைச் சுற்றி இடம்பெற்று வந்த கடத்தல் நாடகம் இப்போது புதிய பரிணாமம் எடுத்துள்ளமை பிரபல வர்த்தகர்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilstar.org
-
- 2 replies
- 784 views
-
-
வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976ஐ மீண்டும் வலியுறுத்தும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு உலகில் உள்ள புலம்பெயர் தமிழர்கட்கு அவசியமா? 15 ஆடி 2009 பொருளடக்கம் 1. வட்டுக்கோடடைத் தீர்மானம் என்பது 2. முகவுரை 3. இராஜதந்திர முறையிலான போராட்டம் 4. திட்டமிட்ட தமிழின அழிப்பு 5. வடக்கு-கிழக்கு பகுதிகளில் திட்டமிட்ட அபிவிருத்திக் குறைப்பு 6. தமிழரது நிலம் திட்டமிட்டு சிங்கள மயமாகிறது 7. தற்போது தமிழரின் நிலமை 8. உலகம் மௌனமாகப்பார்துக்கொண்டிருந்ததோடு இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இருந்தது 9. …
-
- 0 replies
- 923 views
-
-
அரசுடன் பேரம் பேசும் தமிழ் தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு சில தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரம் பேசலில் இறங்கியுள்ளதாக அறிய முடிகிறது. சில காலமாகவே அரசுடன் நெருங்கிச் செயற்பட்டு வரும் சிறிகாந்தா, கிசோர் ஆகியோருடன் அண்மைக் காலம் வரை வெளிநாடுகளில் அரசிற்கெதிரான பிரச்சாரங்களைத் தீவிரமாக முன்னெடுத்த மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரும் இந்தப் பேரத்தில் இறங்கியுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கிடைத்துள்ளது. மூலம் : http://www.tamilstar.org
-
- 5 replies
- 1.5k views
-
-
இன்று மாற்று வலுவுள்ளோர் தினம் இந்த நாளில் மாற்று வலுவுள்ளோர்கள் பற்றிய விழிப்புணர்வுகளை உலக மக்களுக்கு தெரிவித்து அவர்களின் ஆதரவுகளை மாற்று வலுவுள்ளோர்களுக்கு திசை திருப்பி சமூகத்தில் சம அந்தஸ்த்தையும் மதிப்பினையும் மாற்று வலுவுள்ளோர்களுக்கு வழங்குவதே இந்த நாளின் நோக்கம். இலங்கையில் இந்த மாற்றுவலுவுள்ளோர்களை பொறுத்தவரை மிகவும் கூடுதலானவர்கள் தமிழ் மக்களே அத்துடன் எண்ணிலடங்கா துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிப்பதுடன் அவர்களிற்கான சாதாரண உரிமைகள் கூட வழங்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலேயே இன்னமும் இருக்கின்றனர். சிங்கள அரசினால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பேரில் தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட மிகக்கொடிய போரில் சிக்கி கிட்டதட்ட 50,000 மக்கள் வரையில் தமது உடல்…
-
- 0 replies
- 941 views
-
-
தடுப்பு முகாம்களுக்கு ஊடகவியலாலர்கள் செல்வதற்கு தனிப்பட்ட முறையில் அனுமதி பெற்று செல்ல முடியும் என ரிசாட் பத்தியூன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவரும் முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதியினை பெற்று செல்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார். இதே நேரம் நேற்று முந்தினம் ரோஹித போகொல்லாம அவர்களும் இலண்டனில் இது தொடர்பாக கூறும்போது ஊடகவியலாளர்களுக்கு எதுவித தடையும் விதிக்கவில்லை என கூறியமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 578 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத்பொன்சேகா தனிப்பட்ட ரீதியில் ஒரு நாள் பயணம் ஒன்றினை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். நேற்று இரவு இலங்கையில் இருந்து சென்ற சரத் பொன்சேகா நாளை காலை மீண்டும் இலங்கை வந்தடைவார் என பொன்சேகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்ன நோக்கத்திற்காக சென்றார் என்ற விடயங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
-
- 0 replies
- 1k views
-
-
பிரான்ஸ்: வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள்வலியுறுத்தி பிரான்ஸ் தழுவிய வாக்கெடுப்பு. http://www.pathivu.com/news/4424/69//d,art_full.aspx
-
- 0 replies
- 524 views
-
-
தென்னிலங்கை முழுக்க வாழும் தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்படவிருக்கும் சரத் பொன்சேகாவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மனோ கணேசன் எம்.பி. கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அடுத்து இறுதி முடிவு தேர்தல் நியமன தினத்திற்கு முன் அறிவிக்கப்படும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணியினது அரசியல் குழு எடுத்துள்ள முடிவை கட்சியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கொழும்பில் இன்று (03.12.2009) காலை கிராண்ட் ஒரியன்டல் விடுதியில் நடத்தப்பட்ட ஊட…
-
- 0 replies
- 724 views
-
-
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினராக இருந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட கருணாவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை விட சரத்பொன்சேக்காவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பல மடங்கு குறைவானது என்று சரத் பொன்சேக்காவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதன் காரணமாக அவருடைய உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாகவும் இது அவருடைய அடிப்படை மனித உரிமையை மீறுவதாகவும் குறிப்பிடட வழக்கறிஞர் விடுதலைப் புலிகளால் மட்டுமன்றி வேறு பல தரப்புகளாலும் பொன்சேக்கா உயிரச்சுறுத்தலை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டார். மூலம் : http://www.tamilstar.org
-
- 0 replies
- 682 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுடைய அசையும் அசையா சொத்துக்களின் பெறுமதியினை அரசாங்கம் அவர்களுக்கு மீளச் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வன்னியில் போர் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது உடைமைகள், கால்நடைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்களை மீளக் குடியமர்த்தும்போது சாதாரண வாழ்க்கை நடைமுறையை பின்பற்றக் கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இந்தப் பொறுப்பினை அரசாங்கம் தட்டிக்கழிக்கக் கூடாது என செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 414 views
-