ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
மீளக்குடிமர்த்தப்பட்ட மக்கள் அவர்கள் இறுதியாக குடியிருந்த பகுதிகளில் குடியமர்த்தப்படவில்லை – வாசுதேவ 14 November 09 10:24 am (BST) வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் மக்கள் மீளக் குடியேற்றப்படுவதாகக் கூறினாலும் அவர்கள் இறுதியாக குடியிருந்த பகுதிகளில் அவர்கள் குடியமர்த்தப்படவில்லையென ஜனாதிபதியின் ஆலோசகரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாததால் பாரிய அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். வடபகுதிக்கு விஜயம் செய்து அவற்றைக் கண்காணித்த பின்னரே வாசுதேவ நாணயக்கார இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்குச் சென்ற போ…
-
- 2 replies
- 543 views
-
-
கொழும்பில் இருந்து வவுனியா சென்ற நிருபரை, வவுனியாவில் இருந்து MI- 24 ரக உலங்கு வானூர்தி முல்லைத்தீவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. வவுனியாவில் இருந்து புறப்பட்ட இந்த உலங்கு வானூர்த்தி தாழ்வாகவும், மிகவும் வேகமாகவும் பறந்து சென்றதாகக் கூறும் இந்த நிருபர், அடர்ந்த வன்னிக் காடுகளில் விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்கள் கனரக ஆயுதங்களுடன் இன்னமும் உலாவிவருவதாக வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார். இவர்களைத் தேடி அளிக்க பல மாதங்கள் ஆகலாம் என இராணுவத்தினர் தெரிவித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டுவிட்டது என்ற ஒரு செய்தியை புலம்பெயர் மக்களுக்கு பரப்புரையாக மேற்கொள்ள இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்ட ஊடகமே இந்த நியூஸ் X ஆகும். இந்த காணொளி முழுவதும் …
-
- 0 replies
- 1.9k views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு கிடைக்க போகும் சிங்கள வாக்குகளை பிரிப்பதற்காக எதிரணிகளின் கூட்டு திட்டம் தீட்டி வருவதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. அதாவது எதிரணியின் ஜோசனைகளுக்கு தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணங்கி வராவிடில் எதிரணியினரின் சார்பாக இரு ஜனாதிபதி வேட்பாலர்களை நிறுத்துவதே அந்த முடிவு. தமிழ், முஸ்லிம் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்குகளை வழங்க மாட்டார்கள் என்பது தெரியும். அதே நேரம் ரணிலுக்கு இவர்கள் தமது வாக்குகளை வழங்குவர் என்பது நம்பிக்கை. அடுத்ததாக ரணிலுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகள் கட்டாயம் கிடைக்கும். ஆகவே எதிரணியினரின் பிரச்சினை மஹிந்தவின் வாக்குகளை பிரிப்பது ஆகும். இதற்கு சரத் பொன்சேகாவினால் தான் முடியும் என எதிரணி நம்புகின்றது. ஆகவே சர…
-
- 0 replies
- 470 views
-
-
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலையா அல்லது பாராளுமன்ற தேர்தலையா முதலில் வைப்பது என்பதில் மஹிந்த குழப்பம் அடைந்திருப்பதாக தெரியவருகின்றது. இதனால் இன்று நடைபெறும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் இது விடயத்தில் தீர்மானம் எடுக்கப்படமாட்டாது எனவும் தெரியவருகின்றது. சரத் பொன்சேகாவின் தலையிடியை போக்குவதற்காக முதலில் பாராளுமன்ற தேர்தலினை நடத்த மஹிந்த தீர்மானித்துள்ளதாகவும் ஆனால் அதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. முதலில் ஜனாதிபதி தேர்தலினை வைத்து வெற்றி பெறுவதன் ஊடாகவே பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பது அமைச்சர்கள் விருப்பம் ஆனால் சரத் பொன்சேகாவினை முறியடிப்பதற்கு முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்பது மஹிந்த விருப்பம…
-
- 0 replies
- 608 views
-
-
ஜெனரல் சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் இந்திய அரசாங்கம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடும் என்ற சந்தேகம் காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே சேபாகிஸ்தானுடனான உறவுகளை வளர்க்குமாறு வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான திடீர் விஜயமும் இந்த நடவடிக்கைக்கு மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது. இதனடிப்படையில் பசில் ராஜபக்சேஜெனரல் சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் இந்திய அரசாங்கம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடும் என்ற சந்தேகம் மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 20ம் திகதிக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளத் திட்டமிட்டுள்ளதாகத்…
-
- 0 replies
- 618 views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பின்னர் சிக்கலடைந்து போயிருக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் சர்வமயப்படுத்துவதிலும் எந்த அரசியல் வட்டத்திற்குள்ளும் சிக்காமல் தனித்துவமான முறையில் தமது பல்கலைக்கழக புலமைசார் துறையின் வழி மிகக் காத்திரமான பங்களிப்புக்களை நல்கி வரும் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியேர்களைக் கொண்ட ஆய்வாளர் குழு பிரத்தியேகமான நேர்காணல் இது. கேள்வி : நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையை – குறிப்பாக அதன் செயலாளர் நாயகத்தை வன்னிப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு தற்போது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள் இளைஞர்களும் யுவதிகளும் சொல்லொணாத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக சிறில்ஙகா கார்டியன் தனது வவுனியா நிருபரை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக வன்னியிலுள்ள முதலியார் குளம் என்னுமிடத்தில் இருக்கும் முகாமில் நடக்கும் கொடுமைகள் இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்போர் காலையில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வின் போது வரிசையில் வந்து நிற்க வேண்டுமென்றும் தேசியக் கொடியேற்றப்படும் போது தமது மரியாதையைச் செலுத்த வேண்டுமென்றும் இதனை தடிகளுடன் திரியும் இராணுவத்தினர் கண்காணித்து விட்டு தினமும் சரியாக மரியாதை …
-
- 0 replies
- 1k views
-
-
கடந்த அக்டோபர் நடுப்பகுதியில், இலங்கையில் இராணுவப் புரட்சி நடத்தப்படலாம் என்ற அச்சத்தில், இலங்கையினால் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இந்திய படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15 ஆம் திகதியே இந்த தயார்நிலை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டுப்படை தலைமையதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ள, ஜெனரல் சரத் பொன்சேகா இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை கடந்த புதன்கிழமையன்று ஜனாதிபதிக்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, குறித்த இராணுவப்புரட்சி விடயம்,கொண்டு வரப்பட்ட போது சரத் பொன்சேகா அதனை மறுக்கவில்லை. இதேவேளை, இந்தியாவில் பொற்கோயில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இராணுவப் புரட்சி நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறி மகிந்த ராஜபக்ச இந்திய அரசின் உதவியைக் கோரியதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது என்ற சரத் பொன்சேக்காவின் கூற்று ஆதாரமற்றது என இந்திய அமைச்சர் சசி தரூர் கருத்து வெளியிட்டிருக்கிறார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவிப்பது அவசியமற்றது எனக் குறிப்பிட்ட அவர் எனினும் இந்திய இராணுவம் உசார் நிலையில் இருந்தது என்ற கருத்து முழுக்க முழுக்க தவறானது என்பதை மட்டும் தன்னால் உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார் http://www.tamilstar.org
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறீலங்காவின் முப்படைகளின் பிரதான அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல் நலகுறைவு அவரை கடமைகளை மேற்கொள்ள அனுமதிக்கவில்லை எனவும் அதன் காரணமாக அவர் பதவியில் இருந்து வெளியேறியுள்ளதாக சிறீலங்கா அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலியா ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜெனரல் சரத் பொன்சேகாவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவை தவறானவை. அவரின் பதவி விலகலை பொறுத்தவரையில் ஒரு சாதாரண அரச பணியாளர் பதவி விலகியுள்ளார். அவ்வளவு தான். அவரிற்கு நல்ல உடல்நலம் இல்லாமல் இருக்கலாம் எனவே அவரால் தனது கடமையை மேற்கொள்ளமுடியாது பதவி விலகியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். நன்றி சங்கதி
-
- 3 replies
- 1.1k views
-
-
வருகிறார் பொட்டு… – விகடன் போர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!’ என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார். புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அந்த நேரத்துக்காகத் தவம் இருப்பார்கள். அதற்கு முந்தைய 26-ம் தேதிதான் பிரபாகரனின் பிறந்த நாள். கடந்த ஆண்டு போர்க் கால நெருக்கடி சூழ்ந்த நேரத்திலும், பிரபாகரன் தோன்றினார். ”சமாதானத்துக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனாலும், எம் எதிரி போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவை நட்பு சக்தியாகத்தான் நினைத்தோ…
-
- 10 replies
- 3.5k views
-
-
சரத் பொன்சேகாவின் பதவி விலகல் கடிதத்தினை மஹிந்த ஏற்று கொண்டதாக அறிவித்தாலும் அதனை இன்னமும் உத்தியோக பூர்வமாக சமர்ப்பிக்கப் படவில்லை என சரத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே நேரம் சரத் பொன்சேகாவை உடனடியாக பதவியில் இருந்து விலக்கும் வகையில் கடிதத்தினை அனுப்புமாறு மஹிந்த கோபத்துடன் கூறியதாகவும் கூறப்படுகின்றது. இதற்கு காரணம் சரத் பொன்சேகா திட்டமிட்டுள்ள அவரது பிரியாவிடை வைபவத்தினை தவிர்ப்பதற்காகவே என சரத் பொன்சேகா வட்டாரம் தெரிவிக்கின்றது. எனினும் சரத் பொன்சேகாவின் கடிதம் பெரும் அரசியல் சூட்சுமங்களை கொண்டிருப்பதால் அதற்கு முறையாக பதில் கூற வேண்டியுள்ளது ஆகவே தான் காலதாமதம் ஆகின்றது என மஹிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
- 1 reply
- 537 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் 16 ஆயிரத்து 394 பேர் மீளக்குடியேறியுள்ளனர் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஏ-ஜி சந்திரசிறி தெரிவித்துள்ளார். 20 கிராமசேவையாளர் பிரிவு கொண்ட துணுக்காய் பகுதியில் 4415 குடும்பங்களும், மல்லாவியில் 1575 குடும்பங்களும் நிவாரண கிராமங்களிலிருந்து மீளக்குடியேறியுள்ளனர். மீள்குடியேறிய மக்களுடைய தேவைகள் குறித்த கலந்துரையாடலில்போது மேற்கண்டவாறு ஆளுநர் தெரிவித்துள்ளார். 65 வது படை பிரிவு இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் முல்லைத்தீவு அரச அதிபர், தேசத்தை கட்டி எழுப்பும் அமைச்சின் செயலாளர் மற்றும் சிரேஸ்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். மீள்குடியேறிய மக்களுடைய பாவனைக்கு இரண்டு பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவும…
-
- 4 replies
- 715 views
-
-
பொன்சேகாவின் இராஜனமா கடிதமானது இலங்கை இராணுவ வரலாற்றில் மிக நீண்ட இரஜனமா கடிதமாக பார்க்கப்படுகின்றது மட்டுமன்றி வழமைக்கு மாறாக அந்த கடிதம் பகிரங்கமாகவும் ஊடகங்களுக்கு விடப்படுகின்றது. இதற்கு காரணம் இந்த கடிதத்தில் பொதிந்துள்ள அரசியல் உட்கிடக்கைகள் எனலாம். சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் மழுப்பலாக செவ்வி வழங்கினாலும் அவரது அரசியல் எதிர்காலத்தினையும் திட்டத்தினையும் வைத்தே கடிதம் எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது அந்த கடிதத்தில் குறிப்பிட்ட காரணங்களில் முக்கியமாக இடம்பெயர்ந்த மக்கள் பற்றிய கரிசனையே தற்போதைக்கு முக்கியமாக பார்க்கப்படவேண்டியுள்ளது. அதாவது நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக படையினரின் மிகப்பெரிய தியாகத்தால் பெறப்பட்ட வெற்றி இ…
-
- 2 replies
- 708 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகளை சிறை வத்திருக்கும் வெலிகந்த முகாமில் இன்று கைகலப்பும் கலவரங்களும் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறை வைக்கப்பட்ட போராளிகளுக்கு இடைலேயே இரு குழுக்களாக இந்த மோதல் இடம்பெற்றதாக சிறைச்சாலைக்கு பொறுப்பான அபையகோன் என்பவர் தெரிவித்துள்ளார். ஒரு குழுவில் இருந்த உறுப்பினர் மற்ற குழுவில் இருந்தவருக்கு கல்லால் எறிந்ததாகவும் அதனை தொடர்ந்தே இந்த கை கலப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் மேலதிக விபரங்களை தெரிவிக்க சிறைசாலை அலுவலர் மறுத்து விட்டார்.
-
- 8 replies
- 2k views
-
-
நெறிமுறைகளுக்கு முரணாக சரத் பொன்சேக்கா செயற்படுகிறார் - மகிந்த சமரசிங்க குற்றச்சாட்டு இரணுவச் சீருடையை இன்னமும் அணிந்துள்ள நிலையில் ஜனாதிபதிக்கு தான் எழுதிய கடிதத்தை பகிரங்கப் படுத்தியதன் மூலம் கூட்டுப்படைத் தளபதி சரத் பொன்சேக்கா நெறி முறைகளுக்கு முரணாக நடந்து கொள்கிறார் என அமைச்சர் மகிந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார். இராணுவத்தின் மீது சந்தேகம் தெரிவித்தமை, தன்னை துரோகி என்று எண்ணுமளவிற்குச் செயற்பட்டமை, தமிழ் மக்களை தடுத்து வைத்துள்ளமை உள்ளிட்ட பல காரணங்களால் தான் பதவி விலகுவதாக சரத் பொன்சேக்கா குறிப்பிட்டு எழுதிய கடிதம் பல ஊடகங்களிலும் வெளியாகியமை குறித்தே அவர் இந்த விசனத்தை வெளியிட்டார். இந்தக் கடிதம் யாரால் பகிரங்கப்படுத்தப்பட்டது என்பது இதுவரை உறுத…
-
- 0 replies
- 856 views
-
-
எங்கள் தாயக உறவுகள் இருக்க இடமின்றி இடம் பெயர்ந்து, உண்ண உணவின்றி அந்தரித்த படி ஆகாயப் பந்தலின் கீழ் அண்ணார்ந்து பார்த்திருக்க எங்கள் கந்த புராணக் கலாசார மரபினை ஒட்டிய யாழ்ப்பாணத்தில் என்ன நடந்ததென்று தெரியுமா? கரந்த சிங்க…இலகு காலட்படைப் பிரிவு சொல்லுவது: அம்மோ புத்தா… கடவுலே….நாமளே எப்போ கன்காட்சி ஆவோன்னு தெரியாது… அதுக்க இந்த மினிஸ்ரர்சுக்கு இப்ப இது தேவயா? உறவுகள் உயிர் வாழ உலகையே இரந்து கேட்கும் நேரமதில் எங்கள் யாழ் மண்ணில் ”யாழ்ப்பாணத்தின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் குத்தாட்டமும். கன்டியன்(kandiyan Dance) நடனமும் கலக்கலாய் நடைபெற்றதாம்? என்ன உலகம் இது? யாராவது சிந்தித்துப் பார்த்தார்களா? இந்த நேரத்தில் இது தேவை தானா என்று? (யாழ் மக்கள் சொல்வது:…
-
- 0 replies
- 1k views
-
-
பரீட்சையில் சித்தியடைவேன் என்ற நம்பிக்கை இருந்த போதும் 175 புள்ளிகள் பெற்றுச் சாதனை படைப்பேன் என எண்ணவில்லை வன்னியில் இடம்பெற்ற போரழிவுகளுக்குள் சிக்கி நாளுக்கு நாள், இடப்பெயர்வுகளைச் சந்தித்து உயிர் மட்டும் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் அங்கிருந்து வெளியேறி வவுனியா அருணாச்சலம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைச் சொந்த இடமாகவும் தற்போது யாழ்.பழைய பூங்கா வீதியைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மாணவி செல்வி செலஸ்ரின் சதுர்சியா 2009ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகளைப்பெற்று முல்லைத்தீவு மாவட் டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். தற்போது சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் இணைந்து கல்வியைத் தொடரு…
-
- 4 replies
- 930 views
-
-
மீன் பிடிக்க வந்தால் சுட்டுக்கொன்று விடுவோம் - சிறீலங்காக் கடற்படையினர் தமிழக மீனவர்களுக்கு மிரட்டல் திகதி: 14.11.2009 // தமிழீழம் கச்சதீவு, தனுஷ்கோடி இடையே மீன் பிடிக்க வந்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என சிறீலங்காக் கடற்படையினர் மிரட்டினர் என்று தமிழக மீனவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று முன்தினம் மீனவர்கள் சார்பில் இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. அந்த முறைப்பாட்டில்: நாங்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையிலான பகுதியில் இருந்தபோது அங்கு ஆறு படகுகளில் சிறீலங்காக் கடற்படையினர் வந்தனர். இனிமேல் இங்கு மீன் பிடிக்கக் கூடாது என்று கூறி துப்பாக்கிகளைக் காட…
-
- 0 replies
- 435 views
-
-
சனிக்கிழமை, 14, நவம்பர் 2009 (10:14 IST) இந்தியாவில் இலங்கை விளையாட தடை கோரி மனு இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிவருவதால், அந்நாட்டுக் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. ஜோயல்பவுல் ஆண்டனி தாக்கல் செய்துள்ள மனுவில், இலங்கை கிரிக்கெட் அணி கலந்து கொள்ளும் 20:20 போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது. 16.11.2009 முதல் 27.12.2009 வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்களை துன்புறுத்தி மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு …
-
- 0 replies
- 348 views
-
-
நேற்று வெள்ளிக்கிழமையன்று தமிழ் அரசியல் கைதிகள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளமை அதிகாரிகளால் மறைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். கொழும்பு வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக கூறுகையிலேயே சமல் ஜயநித்தி இவ்வாறு தெரிவித்தார். இத்தாக்குதலானது ஏதேச்சையாக நடைபெறவில்லை. நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கடமைபுரிந்த சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்…
-
- 0 replies
- 719 views
-
-
துரோகி என்ற பட்டம் உங்களுக்கு வேண்டாம் இனத்துக்கே துரோகம் செய்துகொண்டிருக்கும் தமிழ் அமைச்சர்களே உங்களுக்குத்தான் எழுதுகிறேன்। கண்ணாடி முன் நின்று "நான் ஒரு உண்மையான அரசியல்வாதியா?" என ஒரு முறை கேட்டுப்பாருங்கள்। மனச்சாட்சி இல்லாத உங்களுக்கு உங்கள் கண்களாவது உண்மை சொல்கின்றனவா எனப் பார்ப்போம்। இப்போதுதான் புரிகிறது ஒரு மிருகத்தின் பெயரைக்கூறி மக்கள் உங்களைத் தூற்றுவதற்கான காரணம்। சமுதாயத்தை காவல் காத்துக்கொண்டிருப்பதாக நீங்கள் சொல்லிக்கொள்வதால்தானே? தேர்தல் வரப்போகிறது. இனி நீங்கள் உசாராகப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்து தான் இதை எழுதத் தொடங்குகிறேன். இனிவரும்நிச்சயமாக உங்களுக்கு பாடத்தை கற்பிக்கும்। எந்தப் பத்திரிகைக்கும் எழுதவேண்டாம் எ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஏ-9 வீதி வழியாக யாழ்ப்பாணத்திற்கு செல்ல முன்னர் இருந்த பாதுகாப்பு அமைச்சின் பயண அனுமதி நீக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செல்ல பயண அனுமதி தேவையில்லை பயணம் செய்வோர் தமது தேசிய அடையாள அட்டையின் இரண்டு போட்டோ பிரதிகளை சமர்ப்பிக்கவேண்டும். இன்று வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயர்மட்ட உத்தரவுக்கு அமையவே இன்று ஈரற்பெரியகுளம் பஸ் பயணத்திற்கு சென்றவரிடம் பாதுகாப்பு அமைச்சு அனுமதி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் போகலாம் என்ற நிலை வந்துள்ளது. இதே நேரத்தில் கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் இருவழி நேரடி பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏ-9 வீதியில் திருமுருகண்டியில் பிள்ளையாரை தரிசிக்கவும் பஸ்கள் நிறுத்தப்பட…
-
- 0 replies
- 617 views
-
-
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது 10 November 09 02:05 am (BST) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்னேரிய காட்டுப்பகுதியில் நடத்தப்பட்ட பாரிய தேடுதல் வேட்டையின் போது ராம் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பொலன்னறுவை கிரித்தலை பகுதியில் மறைந்திருந்த போது ராமை படையினர் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் கிழக்குத் தலைவர் ராமை தேடும் பணிகளில் சுமார் மூவாயிரம் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கருணா புலிகள் இயக்கத்திலிருந்து பிளவடைந்ததனைத் தொடர்ந்து, ராம் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த…
-
- 43 replies
- 6.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவ அனுமதி பெற்று வந்தவர்கள் மட்டுமே வவுனியாவில் இருந்து ஏ-9 வீதியூடாக பஸ்களில் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்லாமல், நாட்டின் எப்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் செல்பவர்களும் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் தமது அடையாள அட்டையின் போட்டோ பிரதி ஒன்றைக் கொடுத்து, அதில் இராணுவ அதிகாரியின் கையெழுத்து முத்திரையைப் பதித்துக் கொண்டு பிரயாணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறை இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இபோசவின் யாழ். பொதுமுகாமையாளர் எஸ்.கணேசபிள்ளை தெரிவித்துள்ளார். இந்த…
-
- 0 replies
- 653 views
-