ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
மலையக எழுச்சி நடைபயணத்தின் நிறைவு நாள் நிகழ்வுகள் நாளை மாத்தளையில் ஏற்பாடு! 11 Aug, 2023 | 11:23 AM 'மாண்புமிகு மலையக மக்கள்’ கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட மலையக எழுச்சிப் பயணத்தின் நிறைவு நாள் நிகழ்வு மாத்தளையில் நாளை சனிக்கிழமை ஆகஸ்ட் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பில் அருட்திரு செங்கன் தேவதாசன் தெரிவிக்கையில், 'மலையகம் 200' எழுச்சிப் பயணத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் மாத்தளை ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் ஆகஸ்ட் 12ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமா…
-
- 0 replies
- 491 views
-
-
ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் 11 Aug, 2023 | 11:34 AM முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர, நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது பாலத்தின் மையப்பகுதியில் உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றது. ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் ப…
-
- 0 replies
- 423 views
-
-
10 AUG, 2023 | 09:20 PM யாழ்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்து சிதைவடைந்த நிலையில் சிசு ஒன்றின் உடற்பாகம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி அயலவர்களினால் உடற்பாகம் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாண பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் யாழ் போதான வைத்தியசாலை சட்ட வைத்தியஅதிகாரியும் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார். முதல் கட்ட விசாரணையில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள கோம்பயன்மணல் இந்து மயானபகுதியில் புதைக்கப்பட்ட சடலம் விலங்குகளால் எடுத்துவரப்பட்டிருக்குமா? என்ற கோணத்தில் பொலிஸா…
-
- 1 reply
- 249 views
- 1 follower
-
-
ஜப்பான் அரசினால் யாழிற்கு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பு ஜப்பான் அரசின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இன்றைய தினம் இந்நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொசி மற்றும் அவரது தூதரக அதிகாரிகள் இணைந்து இதனை வழங்கி வைத்த நிலையில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையினரால் யாழ் இசைக்கருவி நினைவு சின்னமாக வழங்கப்பட்டு தூதுவர் கௌரவிக்கப்பட்டார். தொடர்சியாக மூளாய் வைத்தியசாலையின் அனைத்து வசதி வாய்ப்புக்கள் குறித்தும் தூதுவர் ஆராய்ந்த நிலையில் தனது வருகையின் ஞாபகார்த்தமாக மரமொன்றினையும் வைத்தியச…
-
- 0 replies
- 502 views
-
-
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரால் பாலியல் தொல்லைக்குள்ளான 12 வயது சிறுமி தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி தற்கொலை செய்துகொள்ள முயன்றவேளை வீட்டில் உள்ளவர்களால் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த சிறுமி சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறிய பின்னர், அவருக்கு உளவள சிகிச்சை அளிக்கப்பட்டபோது, தனக்கு 21 வயதுடைய இளைஞன் ஒருவர் தொலைபேசி குறுந்தகவல்கள் ஊடாக ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதாகவும், அவர் தவறான தொடுகைகள் மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாலும், தான் கடும் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக சிறுமி தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 628 views
-
-
13வது திருத்தத்தின் கீழ் பொலிஸ் அதிகாரம் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்தி;ப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிலாந்து இந்தியா போன்ற நாடுகளில் கூட அதிகாரப்பகிர்வு மிகச்சிறந்த முறையில் நடைமுறையில் உள்ளதாக தெரிவித்ததுடன் அத்தகைய முறையை இலங்கையிலும் பயன்படுத்த முடியும் என விளக்கமளித்தனர் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் டிரான் …
-
- 0 replies
- 239 views
-
-
Published By: VISHNU 10 AUG, 2023 | 02:02 PM கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்து-பசுபிக் பிராந்தியம் தொடர்பான 'ஆசியான்' அமைப்பின் தொலைநோக்கு பார்வைக்கு தான் உடன்படுவதாகவும், அந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற 56…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 AUG, 2023 | 02:31 PM கங்குவேலி பிரதேசத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறு மூதூர் பிரதேச சபை செயலாளர் திருமதி.வீ.சத்தியசோதி கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலையில் உள்ள வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு 07.08.2023 அன்றைய திகதி இடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மூதூர் - கங்குவேலி பிரதேசத்தில் 1985ம் ஆண்டுக்கு முன்னர் விவசாயங்களை மேற்கொண்டு, யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களின் 76 ஏக்கர் காணிகளை வன இலாகா திணைக்களம் தங்களுக்கு சொந்தமான …
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு (படங்கள்) வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றை திருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாசார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி…
-
- 3 replies
- 882 views
- 1 follower
-
-
10 AUG, 2023 | 11:42 AM யாழ்ப்பாணத்தில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் முக நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனுக்கு ஆசிரியர் முகத்தில் கைகளால் அறைந்துள்ளார். அதனால் முகத்தில் கடும் வலி ஏற்பட்ட நிலையில் மாணவனை பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது, மாணவனின் முகத்தில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டமை வைத்தியர்களால் கண்டறியப்பட்டு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு வைத்தியசாலை ஊடாக …
-
- 4 replies
- 739 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 AUG, 2023 | 11:19 AM யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியின் கீழான பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ்.நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள உணவகங்கள் திடீர் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் போது யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றும், பண்ணை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டு, பொது சுகாதார பரிசோதகரால், யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 10 AUG, 2023 | 11:07 AM படகு என்ஜின் பழுதடைந்ததால் எல்லை தாண்டி தமிழகத்தின் ஆறுகாட்டுத்துறை கடல் பகுதிக்கு சென்ற இலங்கை மீனவர்கள் 3 பேரை வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து 2 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகொன்று நிற்பதாக வேதாரண்யம் கடலோர பொலிஸாருக்கு நேற்று புதன்கிழமை (9) தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், கடலோர பொலிஸார் படகொன்றில் சென்று, அங்கு நின்றிருந்த இலங்கை ஃபைபர் படகை கைப்பற்றி, அதிலிருந்த 3 பேரையும் வேதாரண்யம் கடலோர பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். யாழ்ப்பாண…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
குருந்தூர்மலை பொங்கலை ஜனாதிபதி நிறுத்த வேண்டும் : சரத் வீரசேகர எச்சரிக்கை! முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார வீழ்ச்சிக்கு நாம் முகம் கொடுத்துள்ள நிலையில், இதனைப் பயன்படுத்தி தமிழ் அரசியல்வாதிகள் பிரிவினைக்கு முற்படுகிறார்கள். குருந்தூர்மலை என்பது வடக்கிலுள்ள பௌத்த மத்தியஸ்தலமாகும். இதனை பு…
-
- 0 replies
- 312 views
-
-
எமது கரங்களுக்கு அதிகாரங்கள் தரப்பட வேண்டும்: சாணக்கியன் வலியுறுத்தல்! நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவையில் ஒரு தமிழர் ஒருவர் அமைச்சராக அங்கத்துவம் வகித்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இக் காரணத்தினாலேயே, தமிழர்கள் அதிகாரப் பரவலாக்கலை கோருகிறார்கள். உண்மையில் மீன்பிடித்துறை அமைச்சரிடம் கிழக்கு மாகாணம் தொடர்பாக பல பிரச்சினைகளை முன்வைத்திருந்தாலும் இதுவரை வெற்றிற்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பில் அதிகூடிய மீன்பிடித் தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவ…
-
- 0 replies
- 391 views
-
-
யாழில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு யாழ் மாவட்டத்தில் 15 சிறுவர்கள் பிறப்பு பதிவற்ற நிலையில் காணப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்” கடந்த காலாண்டில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 104 ஆக காணப்பட்டபோதும் பல்வேறு பட்ட முயற்சிகளுக்கு பின்னர் 89 பேருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவற்ற …
-
- 0 replies
- 355 views
-
-
வடக்கிற்கு அதிகாரங்களைக் கொடுப்பதால் தீர்வு கிடைக்குமா? : அத்துரலிய ரத்தனதேரர்! வடக்கிற்கு அதிகாரங்களைக் கொடுப்பதால் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தனதேரர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சூழல் 50 வீதம் தற்போது உள்ளது. எஞ்சிய 50 வீதம், நாட்டிலுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்தால் கிடைத்துவிடும். இதனை தான் ஜனாதிபதி முதலில் சிந்திக்க வேண்டும். வறுமையால் இன்று அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை கதைப…
-
- 0 replies
- 283 views
-
-
யாரும் காலை வாரிவிடக் கூடாது : மனோ கணேசன்! அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் நிலைப்பாட்டில் உள்ளவர் என்று பிரசன்ன ரணதுங்க கூறினார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, நாங்கள் உங்களை சந்தித்தபோது, அதிகாரத்தை பரவலாக்கி அரசியல் பிரச்சினைக்குத் தீர்வினைக் காணுமாறு வலியுறுத்தினோம். ஆனால், அவர் செய்யவில்லை. இப்போது மீண்டும் ஒரு சந்தர…
-
- 5 replies
- 322 views
-
-
09 AUG, 2023 | 04:55 PM யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தின்போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாத காலப்பகுதிக்குள்ளேயே 33 சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும் 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையா…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரி இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியாகின்றன. கடந்த யுத்தகாலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரி வடகிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது இரத்த உறவுகளை கோரி இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியை தொடர்ந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தலமையில் இன்று (09) காலை இடம் பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இடம் பெற்றதுடன் பிரதான வீதி வழியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு திருக்கோவில் மணிகூண்டு கோபுரத்தினை வந்தடைத்ததுடன்…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
09 AUG, 2023 | 01:10 PM கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து வெறும் ஒன்றரை மீற்றர் உயரமே கொண்ட இயக்கச்சி பிரதேசத்தின் ஆற்று சமவெளி பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான மணல் அகழப்பட்டு யாழ்ப்பாணத்தை நோக்கி கொண்டு செல்வதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மணல் அகழ்வை உடனடியாக தடுக்காவிட்டால் மிக விரைவில் இயக்கச்சி பிரதேசத்தின் நிலங்களும் மாற்றமடைந்து மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குறித்த விடயத்தை சம்பந்…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
சிறையில் 56 மதகுருக்கள்; 48 பேர் பிக்குகள் துஷ்பிரயோகம், பெண் பாலியல் வல்லுறவு நிதி மோசடி, புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 48 பேர் பௌத்த பிக்குகள் என்று நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது சுயாதீன எதிரணி எம்.பி.டலஸ் அழகபெருமவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார். 2023 ஜூன் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் பல்வேறு குற்றச் சாட்டுக்களின் கீழ் 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளி…
-
- 3 replies
- 495 views
-
-
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் ஜனாதிபதிக்கு முன்மொழிவு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் ஜனாதிபதிக்கு தமது முன்மொழிவினை அனுப்பியுள்ளனர். 1988 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் 5/6 பெரும்பான்மையுடன் 13 ஆவது அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஏற்கனவே அரசியலமைப்பின் ஒரு பகுதிய…
-
- 0 replies
- 414 views
-
-
யாழ். ஆலயங்களில் குழந்தைகளுடன் யாசகம் பெற தடை! adminAugust 9, 2023 யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஆலய மஹோற்சவ திருவிழாக்களில், குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்ட போது, திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோர், ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுபடுவதுடன் , ஆலயங்களுக்கு வருவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் ம…
-
- 1 reply
- 369 views
-
-
வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை : விமல் வீரவன்ஸ! வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு- கிழக்கு மாகாணங்களின் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேசுவதாக ஜனாதிபதி கூறினார். முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேசுவதாகக் கூறினார். ஆனால், அந்த மாகாணங்களில் வாழும் சிங்கள மக்களின் பிரச்சினைகள் க…
-
- 0 replies
- 541 views
-
-
நாட்டில் இதயநோயாளிகளுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஸ்டென்ட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், காலாவதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு தொகுதி ஸ்டென்ட்களை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் போது, பழைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் நோயாளிகளின் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, அரச மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைக்கு, காலாவதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஸ்டென்ட்கள் இதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படாது என்றும் அமைச்சர் …
-
- 0 replies
- 184 views
- 1 follower
-