ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
அவுஸ்த்திரேலியாவிற்குப் படகுகளில் வந்தவர்களுள் புலிகளும் நிச்சயம் இருக்கிறார்கள் - விக்டர் ராஜகுலேந்திரன் அவுஸ்த்திரேலியாவிலிருக்கும் தமிழ் அமைப்புக்களில் ஒன்றான AFTA எனும் அவுஸ்த்திரேலிய தமிழ் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் என்று கூறப்படும் கலாநிதி விக்டர் ராஜகுலேந்திரன் என்பவர் அவுஸ்த்திரேலியன் எனப்படும் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில், படகுகளில் வந்துள்ள தமிழர்களில் பல முன்னாள்ப் போராளிகளும் நிச்சயமாக இருப்பதாக அடித்துக்க் கூறியுள்ளார்.அப்பேட்டியின் இரு இடங்களில் தனது கூற்றை ஆணித்தரமாக சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாலையில் வெளிவந்த இப்பத்திரிக்கைச் செவ்வியைத் தொடர்ந்து அவுஸ்த்திரேலியாவிலியங்கும் பிரபல தொலைக்காட்சிகளான சனல் 7 , ஏ.பீ.சீ, எஸ்.பீ…
-
- 41 replies
- 3.4k views
- 1 follower
-
-
தமிழ்மணி, மட்டக்களப்பு 31/10/2009, 19:40 மட்டக்களப்பில் கைக்குண்டு வெடித்ததில் இரு சிறுவர்கள் படுகாயம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள் குடியமர்த்தப்பட்ட ஊறுகாமம் பகுதியில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த இரு சிறுவர்களும் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. காயமடைந்த இருவரும் உடன்பிறப்புகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசத்தில் குறித்த சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த வேளையே குறித்த கைக்குண்டு வெடித்துள்ளது என மட்டக்களப்பு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன பதிவு
-
- 0 replies
- 376 views
-
-
1987ம் ஆண்டு சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், இந்திப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் வைத்து , விஜேமுனி எனும் சிங்கள இராணுவச் சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்குகின்றார். கைது செய்யபபட்ட அவர் வழக்கில், சூரிய ஒளித் தாக்கத்தினால் ஏற்பட்ட மனப்பிறழ்வு காரணமாக தாக்கினார் எனக் காரணம் கட்டப்பட்டு பின்னர் அவர் விடுதலை செய்யப்படுகின்றார். இந்த விடுதலைக்கான நீதி, அந்தத் தாக்குதலை நிகழ்த்திய விஜேமுனி மனநிலை பிறழ்ந்தவராக இருந்தார் என்பதே. ஒரு நாட்டின் பிரதமரைத் தாக்கிய வழக்கில் இந்த நீதியின் அடிப்படையில் தாக்கிய நபர் விடுவிக்கப்பட்ட நாட்டில்தான், பலபேர் முன்னிலையில் பொது இடமொன்றில் மனப்பிறழ்வு அடைந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 30/10/2009, 16:59 பம்பலப்பிட்டியில் இளைஞர் ஒருவர் காவல்துறையின் நடவடிக்கையினால் நீரினுள் மூழ்கி மரணம்! பம்பலப்பிட்டிக் கடற்கரையில் சிறீலங்காக் காவல்துறையினரின் நடவடிக்கையினால் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை ஒருவர் சிறீலங்கா குற்றத்தடுப்பு பிரிவினரால் பம்பலப்பிட்டிய காவல் நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஏனைய காவல்துறையினரையும் அடையாளம் காணும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று வியாழக்கிழமை மதியம் பம்பலப்பிட்டி கடற்கரையில் நின்ற இளைஞன் வீதியில் சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசியுள்ளார். இதனால் இரு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அத்துடன் கடற்கரையால் ச…
-
- 5 replies
- 955 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு. கேள்வி: “பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?” பதில்:- “இந்தியாவும்,இலங்கையும் அந்த மர்மத்தை அறியத்தான் அலைந்து கொண்டிருக்கின்றது. பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாராகி வருகிறார் என்பதை ம…
-
- 0 replies
- 1.4k views
-
-
.எஸ்.பி." வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுகள் முடி வடைந்துவிட்டன என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேர்னார்ட் சவேஜ் பிரிட்டனின் "பினான்சியல் டைம்ஸ்" செய்தித்தாளுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: "பேச்சுக்கான காலம் முடிவடைந்து விட்டது. இந்தக் கட்டத்தில் இலங்கை தனக்கு சார்பான பிரசாரங்களை மேற்கொள்வதை விடுத்து விவகாரங்களைக் கையாள்வதற்கு முயலவேண்டும் என நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம். இரண்டு வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம், இலங்கை 2005 ஆம் ஆண்டு "ஜி.எஸ்.பி." வர்த்தகச் சலுகைக்கு விண்ணப்பித்தவேளை தான்…
-
- 0 replies
- 624 views
-
-
பிரித்தானியாவில் திஸ்ஸ விதாரண தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார் on 31-10-2009 02:17 திஸ்ஸ நாயகத்தின் பிரச்சினையானது ஊடகப் பிரச்சினையல்ல. அது பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினை. இதுகுறித்து நாங்கள் அமைச்சரவையில் கலந்துரையாடினோம். இது பயங்கரவாத செயற்பாடாக இல்லாவிட்டால் இதில் தனக்கு தலையிட முடிந்திருக்கும் என ஜனாதிபதி கூறினார் என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தக் கருத்தரங்கு ஈ.பி.டி.பி அமைப்பின் துணைச் சங்கமொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் பிரதான விரிவுரையாளராக திஸ்ஸ விதாரண கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய திஸ்ஸ விதாரணவின் உரையானது, ப…
-
- 1 reply
- 872 views
-
-
தயா மாஸ்டர் , ஜோர்ஜ் மாஸ்டர் குறித்து மீண்டும் விசாரணை வீரகேசரி இணையம் 10/31/2009 9:54:30 AM - விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இருவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக கொழும்புக் குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகள் நேற்று இடம்பெற்றுள்ளது. .அரசாங்கத்திற்கு எதிரான வகையில் குறித்த இருவரும் செயற்பட்டுள்ளனரா என்பது குறித்து ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 497 views
-
-
நீண்டகால மௌனத்தின் பின்னர் சர்வதேச சமூகம் மஹிந்தர் அரசிற்கு நடைமுறை அழுத்தத்தினைக் கொடுக்க தொடங்கிவிட்டது. இலங்கையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சர்வதேச சக்திகள் என்பவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், இந்தியா என்பவைதான். இவையனைத்தும் தனித்தும் கூட்டாகவும் அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. கூட்டு அழுத்தம் பொதுவாக ஐக்கிய நாடுகள் சபை மூலம்தான் கொடுக்கப்படுகின்றது. அமெரிக்கா, இலங்கை விவகாரம் தொடர்பான அறிக்கையை செனற்சபையில் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் தென்ஆசியாவிற்கான இராஜாங்கச் செயலாளர் பிளேக் இது தொடர்பாகக் கடுமையான அறிக்கைகளை விடுத்துவருகின்றார். ஐரோப்பியி யூனியன் “ஜி.எஸ்.பி. பிளஸ்’ சலுகையை நிறுத்தும்படி தனது உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசு செய்துள்ளது. இத…
-
- 0 replies
- 585 views
-
-
எப்போதுதான் பெரியவரே அரசியல் ஆக்குவது? அரசியல் ஆவது? ‐ அருந்ததி. இந்திய மொழிகளிலேயே மூத்த மொழி. தென்னிந்திய மொழிகளின் தொட்டில். உலகப் பொதுமறையை உவந்த தமிழ். யாதும் ஊரே யாரும் கேளீர் என்று மானுடப் பொதுமையை பகர்ந்த மொழி.என்றெல்லாம் சிறப்புப் பெற்ற மொழி தமிழ். ஆனால் தமிழர்கள். அவர்கள் அறுபதுகளில் மொழிக்காக போராடியவர்கள். ஈழத்தில் எழுபதுகளில் போராடினார்கள். தமிழகத்தில் கிளர்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தன் சந்தர்ப்பவாத பதவி அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள் அறிஞர் அண்ணாதுரையும் முதல்வர் கருணாநிதியும். அப்போது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காட்டிக் கொடுத்தது திமுக இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. முதல்வர் கருணாநிதி பேசிய இனம்…
-
- 1 reply
- 766 views
-
-
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! ஆங்கிலநாளிதழ் ஒன்றின் மூத்த இதழியலாளர் ஒருவரை ஈழத்து மக்களின் அரசியல் பிரச்சனை குறித்து உரையாடி விவாதிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தேன். கடந்த வார இறுதியில் அது சாத்தியமாயிற்று. பிரித்தானிய தமிழ் மன்றம் (இழ்ண்ற்ண்ள்ட் பஹம்ண்ப் எர்ழ்ன்ம்) வெளிக்கொணர்ந்த "விடுதலைப் போராட் டத்தின் சுருக்கமான வரலாறு' ஆங்கில ஆக்கத்தை அவரிடம் கொடுத்தேன். அனைத்து பக்கங்களையும் வேகமாகப் பறவைப் பார்வையில் புரட்டியவர், "மிக நன்றாகச் செய்திருக்கிறார்களே... இதுபோன்ற ஆக்கங்களை முன்பே ஏன் வெளியிடவில்லை? என் போன்ற பலருக்குப் பயன்பட்டிருக்குமே...' என்றார். என்னைப் பேசச் சொல்லி சுமார் அரை மணி நேரம் பொறுமையாகக் கேட்டார். அடிப்படையில் ச…
-
- 12 replies
- 2.9k views
-
-
மலையக தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானவர்கள் தமிழ் நாடு சென்று அங்கு மகிந்தவின் செயற்பாடுகளை நியாப்படுத்தியதோடு அதற்கு ஆதாரமாக தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து பார்த்தததையும் ஆதாரமாக்கி உறுதிப்படுத்தி உள்ளார். அதாவது தடுப்பு முகாம் தொடர்பில் இன்னமும் 2 லட்சம் மக்கள் அங்கு இருக்கின்றார்கள் என்றும் அவர்கள் பருவ மழை காலத்தில் சிரமபட போகின்றனர் என பத்திரிகையாளர் கேட்டதற்கு தொண்டமான் அவர்கள் பதிலளிக்கும் போது கண்ணிவெடி அகற்றிய சான்று வந்தால் உடனடியாகவே மக்களை அனுப்ப முடியும் என மகிந்த பாணியில் கூறியுள்ளார். தவிர தான் தமிழர் என்றும் தடுப்பு முகாம் களுக்கு தான் நேரடியாக சென்று பார்த்ததாகவும் கூறினார். தொடந்து இலங்கை அரசு பத்திரிகையாளரை முகாம்க…
-
- 3 replies
- 738 views
-
-
இலங்கையில் மீண்டும் போர் மூளும்-வைகோ வெள்ளிக்கிழமை, அக்டோபர் 30, 2009, 14:38 [iST] திருச்சி: கற்பனையில்கூட கட்சிக்கு துரோகம் நினைக்காத என்னை கொலைப் பழி சுமத்தி தூக்கி எறிந்தவர் கருணாநிதி. அவரை காலம் மன்னிக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து மறுகுடியமர்த்தக் கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டம் திருச்சியில் நடந்தது. அதில் பேசிய வைகோ, இலங்கையில் தமிழர்களை அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் மீண்டும் குடியேற செய்ய வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. அதுவே நிரந்தரத் தீர்வு அல்ல. இதை உணர்ந்து கொள்ள வேண்டும். 6 மாதங்களாக போடப்பட்டு…
-
- 5 replies
- 1.1k views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை மாணவர்கள் பரீட்சையில் தோல்வியடைந்திருந்தால் அவற்றை மீள்பரிசீல னைக்கு உட்படுத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும். எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொண்டு தமது இலக்கை அடையும் வல்லமையுள்ளவர்களாக எமது மாணவர்கள் திகழவேண்டும். இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்தில் நிகழாத வகையில் விழிப்புடன் நடந்து கொள்ளுமாறு ஆசிரிய சமூகத்திடம் வேண்டுகிறோம். மாணவர்களின் மனங்களையும் நிலை மைகளையும் புரிந்துகொண்டு செயற்பவதுடன் அவர்களது பலன்களையும் பல வீனங்களையும் கண்டறிந்து அவற்றுக் குரிய வகையில் கல்வியை வழங்க வேண்டும். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் விக்னராஜா கௌரிபாலனின் மறைவு குறித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவா…
-
- 0 replies
- 585 views
-
-
ஆஸ்திரேலியாவால் திருப்பி அனுப்பப்பட்ட 78 இலங்கைத் தமிழர்களையும் தனது கடல் பகுதியிலிருந்து திருப்பி அனுப்பி விட இந்தோனேசியா முடிவெடுத்துள்ளது. இதனால் அவர்களின் நிலை பெரும் கவலைக்கிடமாகியுள்ளது. கடந்த 11 நாட்களாக கப்பலில் தவித்துக் கொண்டிருக்கின்றனர் இந்த அப்பாவித் தமிழர்கள். சுமத்ரா தீவுக்கு அருகே அவர்கள் கப்பலில் உள்ளனர். கப்பலை விட்டு இறங்க அவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதையடுத்து அடையாள பரிசோதனைக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அல்லது வெளியேறப்பட நேரிடும் என இந்தோனேசியா எச்சரித்துள்ளது. 11 நாட்களுக்கு முன்பு இவர்கள் ஆஸ்திரேலியாவுககுள் நுழைய முயன்றபோது ஆஸ்திரேலிய சுங்கத்துறை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்களை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பி…
-
- 0 replies
- 703 views
-
-
நேற்று கொழும்பு பம்பலபிட்டி பொலிஸ் நிலயத்திற்கு அருகாமையில் கடற்கரை பகுதியில் இளைஞர் ஒருவரைகடலிற்குள் தள்ளி விட்டு சிலர் தடியால் அடித்து கொலை செய்ய முற்படும் காட்சி ஒன்றினை தனியார் தொலை காட்சி ஒன்றி படம் பிடித்து ஒளிபரப்பி கொண்டிருந்தது.இந்த கொலை பம்பலபிட்டி பொலிசாரின் உதவியுடன் பேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவலை பொலிசார் தர மறுத்துள்ளனர். http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை வழிநடத்திவரும் 57 ஈழவாதிகள் தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்பாளர் கே.பி என்ற குமரன் பத்மநாதன் தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் இந்தப் பட்டியல் இதுவரை அறியப்பட்டிருக்கவில்லை எனவும் திவயின தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் தலைவர் கதிர்காமர்தம்பி அரவிகன், அமெரிக்காவிலுள்ள இராஜேந்திரன் பாலசிங்கம், உலக ஈழ தமிழ் இளைஞர்களின் அமைப்பின் தலைவர் அன்டுவெல்மன், கனடாவிலுள்ள சேரன் உருத்திரமூர்த்தி, பிரித்தானியாவில் பி.இளங்கோ, கனடாவிலுள்ள வீ.இளங்கப்பிள்ளை, அர்ஜூனன் எதிரிவீர சிங்கம், வினிபரா என்ற ரஞ்சித் பெர்னாண்டோ, சுவீடனிலுள்ள ஜெகன்மோகன், நோர்வேயிலுள…
-
- 1 reply
- 1.4k views
-
-
நீண்டகால மௌனத்தின் பின்னர் சர்வதேச சமூகம் மஹிந்தர் அரசிற்கு நடைமுறை அழுத்தத்தினைக் கொடுக்க தொடங்கிவிட்டது. இலங்கையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சர்வதேச சக்திகள் என்பவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், இந்தியா என்பவைதான். இவையனைத்தும் தனித்தும் கூட்டாகவும் அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. கூட்டு அழுத்தம் பொதுவாக ஐக்கிய நாடுகள் சபை மூலம்தான் கொடுக்கப்படுகின்றது. அமெரிக்கா, இலங்கை விவகாரம் தொடர்பான அறிக்கையை செனற்சபையில் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் தென்ஆசியாவிற்கான இராஜாங்கச் செயலாளர் பிளேக் இது தொடர்பாகக் கடுமையான அறிக்கைகளை விடுத்துவருகின்றார். ஐரோப்பியி யூனியன் "ஜி.எஸ்.பி. பிளஸ்' சலுகையை நிறுத்தும்படி தனது உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசு செய்துள்ளது. இ…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையில் வவுனியா அகதிமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் நடமாட்ட சுதந்திரத்தை வலியுறுத்தி, அந்த விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, இந்த வருடத்துடன் பருவமழை முடிந்த கையோடு அகதிகளுக்காக இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத் தப்போவதாக பிரிட்டன் மீண்டும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறது.இலங்கைக்கு அழுத்தம் தர அதுவே சிறந்த வழி என்கிறது பிரிட்டன். இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இதுதான் ஒரே வழி என கூறியிருக்கும் பிரிட்டன், தனது இந்த முடிவைப் பின்பற்றி ஒட்டுமொத்தமாக நிதியுதவியை நிறுத்தி அழுத்தம் கொடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இலங்கை அகதிமுகாம்கள் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்த…
-
- 0 replies
- 474 views
-
-
புலம்பெயர் தமிழீழ மக்களுக்கான அவசர வேண்டுகோள் சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி சலுகையை நிறுத்தக் கோரும் இந்த மனுவில் உங்கள் அனைவரையும் கையொப்பம் இடுமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கின்றோம். உங்கள் கடமையை செய்வதற்கு இங்கே சுடக்கவும் http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=81 இதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் கையெழுத்து இடுமாறும் கேளுங்கள். http://www.meenagam.org/?p=14709
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 29/10/2009, 12:45 உறுதிமொழிகளை விட செயல்வடிவத்தையே வலியுறுத்துகிறோம் - ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்களுக்கு உறுதிமொழிகளை வழங்குவததை விடுத்து செயல் ரீதியான நடவடிக்கைகளை எதிர்ப்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின், தெற்காசிய உறவுகள் பிரதிநிதிகளின் தலைவர் ஜீன் லம்பெர்ட் தெரிவிக்கையில்: மனித உரிமை மீறல் மற்றும் ஊடக அடக்குமுறை போன்ற சம்பவங்கள் தொடர்பில் சிறீலங்கா காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள், இலங்கை தொடர்பில் அதீத கண்டனத்தை சந்தேகம் இன்றி தெளிவுப்படுத்தியுள்ளது. ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சல…
-
- 0 replies
- 429 views
-
-
வெள்ளிக்கிழமை, 30, அக்டோபர் 2009 (11:50 IST) ராஜபக்சே நாளை திருப்பதி வருகிறார்:வரலாறு காணாத பாதுகாப்பு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் கடந்த சில மாதங்களாக கடும் போர் நடந்தது. இதில் விடுதலைப்புலிகளை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறி வருகிறது. 3 லட்சம் தமிழர்களை இலங்கை அரசு கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு நாளை வர திட்டமிட்டுள்ளார். இதன்படி அவர் சிறப்பு விமானம் மூலம் கொழும்பில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை காலை 11 மணிக்கு வருகிறார். பின்னர் அவர் கார் மூலம் திருப்பதி மலைக்கு செல்கிறார். இதையடுத்து அவர் மதியம் …
-
- 1 reply
- 754 views
-
-
70 பேர் கொண்ட தனது பரிவாரங்களுடன் நேபால் சென்றுள்ள மகிந்த அவர்கள் நேபால் தலை நகர் காத்மண்டுவில் நேபால் மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமால் டால் பிரசாந்தா அவர்களை சந்தித்துள்ளார். 30 நிமிட நேரம் நடந்த சந்திப்பில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வு தொடர்பாக பிரசாந்தா அவர்களுக்கு மகிந்த விளக்கி கூறினாராம். பதிலுக்கு பிரசாந்தா இலங்கையின் கல்வி, சுகாதார முறைபற்றி கேட்டறிந்துள்ளாராம்.http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 640 views
-
-
கொழும்பு பம்பலபிட்டி பொலிஸ் நிலயத்திற்கு அருகாமையில் கடற்கரை பகுதியில் இளைஞர் ஒருவரைகடலிற்குள் தள்ளி விட்டு சிலர் தடியால் அடித்து கொலை செய்ய முற்படும் காட்சி ஒன்றினை தனியார் தொலை காட்சி ஒன்றி படம் பிடித்து ஒளிபரப்பி கொண்டிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையில் பம்பலபிட்டிய பொலிசாரும் சம்பந்தபட்டு இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இது தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் கூறுகையில் தாக்கப்பட்ட நபர் ஒரு மன நோயாளி என்று தெரிவித்துள்ளார். அவர் முன்பு பொலிசாருக்கு கல்லால் எறிந்துள்ளார் எனவும் கூறியுள்ளார். எவ்வாறு எனினும் ஒரு மன நோயாளிக்கு கூடவா இலங்கையில் இந்த நிலை என ஊடகக்ங்கள் கேள்வி எழுப்பி உள்ளது. <object wi…
-
- 0 replies
- 657 views
-
-
உடன்பிறப்பே என்று தனது ரத்தத்தின் ரத்தங்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில்,ஈழத்து மொழியறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி செம்மொழி மாநாட்டிற்கு வருவது சந்தேகமே என்று ஒரு ஆங்கில நாளிதழும், வரவே மாட்டார் என்று இன்னொரு ஆங்கில நாளிதழும் சில நாளிதழ்களும் சிவதம்பி இந்த மாநாட்டிற்கு வந்து விடக்கூடாது என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செய்தி வெளியிடுகிறார்கள். திமுக தமிழுக்காக ஆண்டாண்டுகாலமாக அரும்பணியாற்றினாலும் இவர்கள் தங்களின் திருவிளையாடலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சிறு நரிக் கும்பல் ஒன்றும். இந்த சிறு நரிக்கூட்டத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் விபீடணக் கூட்டமொன்றும். சில நெடுமறங்களும் ( நெடுமாறனைச் செல்கிறார்) நமக்கு எதிராக செயல்படுக…
-
- 19 replies
- 2.5k views
-