ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142960 topics in this forum
-
ஈழப்போராட்டம் முடிந்தாகி விட்டது என்றெல்லாம் இந்தியாவும்இ இலங்கையும் சொல்கிறது. ஆனால் இன்னும் ஈழ விடுதலைப்போராட்டம் முடியவில்லை. 5 வது ஈழப் போராட்டம் நிச்சயம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இலங்கையில் முள் வேலி முகாம் களில் உள்ள 3 லட்சம் தமிழர்களை அவர்களுடைய சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று திருச்சியை நோக்கிய பிரச்சார ஊர்தி பயணம் தொடங்கியது. சென்னையில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும்இ கோவையில் பழ.நெடுமாறன் தலைமையிலும்இ ராமநாதபுரத்தில் வைகோ தலைமையிலும்இ கன்னியாகுமரியில் ஆர்.நல்லக்கண்ணு தலைமையிலும் இன்று தொடங்கிய இந்த பிரச்சார ஊர்தி பயணம் 29 ம் தேதி திருச்ச…
-
- 1 reply
- 921 views
-
-
ராணுவத்தினருக்கான உபசரிப்புகள் குறித்து தற்போது புதிய கதைகள் ஆரம்பமாகியுள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும், மகிந்த ராஜபக்ஷ நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் வெளிப்படையான மோதலாக மாறியுள்ள பின்னணிக்குள் இந்தக் கதைகள் ஆரம்பமாகியுள்ளன. லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வெளியாகிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் செய்தி இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். இதற்கு முன்னர் இரணுவத்திலுள்ள இராணுவத் தளபதிகள் தமது பதவிகளில் இருக்கும்போதே ஓய்வு பெற்றிருந்தனர். எனினும், நாம் அந்த முறைமையை மாற்றியமைத்தோம். இராணுவத்தினர் ஓய்வுபெற்றுச் செல்லும் போது அவர்கள் உயர் பதவிகள் வரை செல்ல முடிந்தது. பலருக்கு தூதுவர் பதவிகளை வழங்குவது குறித்தும் நான் அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். என…
-
- 0 replies
- 967 views
-
-
இந்தோனேசிய கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓசியன் வைகிங் என்ற படகில் இருக்கும் மக்கள் தொடர்பில் அவுஸ்ரேலிய அரசு பாராமுகம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் அவுஸ்ரேலிய அரச பாராளுமன்றில் விவாதங்கள் தான் நடக்கின்றதே தவிர முடிவு எதுவும் எட்டப்படுவதில்லை என அவுஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் படகில் இருக்கும் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். நிலமை இவ்வாறு தொடருமானால் தாம் அனைவரும் தீமூட்டி தற்கொலை செய்வதனை தவிர வேறு வழிகள் எதுவும் இல்லை என எச்சரித்துள்ளனர். தொடர்சியாக நான்கு ஐந்து வாரங்களாக பாதுகாப்பற்ற படகில் இருப்பதால் நிறுவர்இ பெண்கள் ஆகியோருக்கு கடல்வியாதி வந்துள்ளதாகவும் இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 614 views
-
-
இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கைத் தலைவர்களை போர்க் குற்றவாளிகளாக நிறுத்த வேண்டும் என முன்னாள் மலேசிய பிரதமர் துன் மகதீர் முகமட் தெரிவித்துள்ளார். போரின் மூலம் மனித படுகொலைகளை செய்தவர்கள் நீதி விசாரணைக்கு கொண்டு வரப்பட வேண்டும். பயங்கரவாததிற்கு எதிரான போர் என ஈராக் மீது அமெரிக்க படையெடுத்த போது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் குறிப்பாக அந்த நாட்டுத் தலைவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை எனவும் மகதீர் முகமட் கூறியுள்ளார். அதேவேளை இவ்வாறான அட்டூழியம் புரிந்த தலைவர்களின் வரிசையில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக மனித தர்மத்தை மீறி போர் நடத்தி ஆயிர…
-
- 1 reply
- 974 views
-
-
இலங்கையில் இறுதிப் போரின்போது இலங்கை ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதா என விசாரிக்க உத்தரகவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே. அவரது இந்த திடீர் உத்தரவு இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு மூன்று தசாப்த காலமாக விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர். சமாதான வழியில் தங்கள் கோரிக்கை நிறைவேறாது என்பது தெரிந்ததால், பிரபாகரன் தலைமையில் ஆயுதம் ஏந்தி இலங்கை ராணுவத்துடன் போரிட்டனர். இதன் இறுதிக்கட்ட போர் கடந்த மே மாதம் வன்னிப் பெருநிலத்தில் அரங்கேறியது. இதில் 20000 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களும், ஏராளமான விடுதலைப் புலிகளும் கொடூரமான முறையில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச ஏஜென்ஸிகள் தெரிவிக்கின்றன. சர்வதேச போர் நியாய…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கையில் சமீபத்தில் சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போர் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறிவருகிறது. இந்த நிலையில் போரில் உயிர் தப்பிய தமிழர்களை இலங்கை அரசு திறந்த வெளியில் அடைத்து வைத்து அவர்களை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளது. இந்த கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அமெரிக்கா, நார்வே, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் கம்பி வேலிக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்கா விட்டால் தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீ…
-
- 71 replies
- 5.3k views
-
-
படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த வேளையில், இந்தோனேசியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 78 இலங்கையர்களை சிங்கப்பூருக்கு அருகிலுள்ள இந்தோனேசியத் தடுப்பு முகாமொன்றில் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இந்தோனேசியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழர்களை மனித நேய அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இந்தோனேசிய அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இணைய இணைப்பு http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16466&cat=1
-
- 0 replies
- 742 views
-
-
கடந்து சென்ற வாரம் சிறீலங்காவில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்கா அரசின் மீது மேற்குலகம் மேற்கொண்டுவரும் கடும்போக்கு நடவடிக்கையின் ஒரு முக்கிய திருப்பமாக கடந்த திங்கட்கிழமை (19) ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகை தொடர்பான அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையானது சிறீலங்கா அரசிற்கு அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்காவில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள், தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பெருமளவான மக்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அதிக கவனங்களை தனது அறிக்கையில் செலுத்தியுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலுவான கருத்தை கொண்டுள்ளது. ஐரோப்ப…
-
- 0 replies
- 676 views
-
-
சிறுபான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளை பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றி வருகின்றனர் ‐ சம்பந்தன் 24 October 09 03:26 am (BST) கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறுபான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும், அரச காணிகளையும் பெரும்பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றி வருகின்றனர் என்றும் இந்நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டவிரோதக் குடியேற்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் இல்லையேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
-
- 1 reply
- 392 views
-
-
முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள விடுதலைப் புலிகளை இனம்கண்டு கைது செய்யும் நடவடிக்கை இடம் பெறுவதை இராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது. "திருகோணமலையில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளவர்கள் மத்தியில் உள்ள விடுதலை புலிகள் இனங்கானப்படுகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு வவுனியா முகாம்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படுகின்றனர்.'' என இராணுவத்தின் பதில் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க பி.பி.சி யின் சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். திருகோணமலை சேனையூர், ஈச்சிலம்பற்று மற்றும் குச்சவெளி ஆகிய பகுதிகளில் சமீபகாலமாக, அகதிமுகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட பலர் காணாமற் போகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இணைய…
-
- 1 reply
- 542 views
-
-
இந்தியா இலங்கை மீது போர் தொடுத்து தமிழர்களுக்கு தமிழீழத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் நடத்தப்பட்ட தமிழீழ வாழ்வுரிமை மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பில் "தமிழீழ வாழ்வுரிமை மாநாடு" உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மாநில செய்தித் தொடர்பாளர் ஜீயர் வெங்கட்ரமணன் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் அர்ஜூன் சம்பத், "இனி ஈழம்?" என்ற தலைப்பில் பேசினார். இந்த மாநாட்டிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. * 70 ஆயிரம் ஈழத் தமிழர்கள் உயிரிழக்கவும் 5 லட்சம் தமிழர்கள் அகதிகளாக மாறவும் 3 லட்சம் தமிழர்கள் முட்கம்பி வேலிகளுக்குள் சிறை வைக்கப்படவும் காரணமான ராஜபக்ஷவை சர்வ…
-
- 0 replies
- 966 views
-
-
பிள்ளையானின் பாதுகாப்பு பிரிவினர் பயணம் செய்த வாகனமொன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த இராணுவத்தினைச் சேர்ந்த மூவர் ஸ்தலத்திலேயே பலியானார்கள் . வாகன திருத்த வேலைகளுக்காக குறித்த இராணுவ வீரர்கள் இவ் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை குருநாகல் மாவட்ட கோக்கரல்ல என்னுமிடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனம் பாதைய விட்டு விலகி மரமொன்றுடன் மோதியுள்ளதாக சம்பவம் தொடர்பாக விசாரனை நடத்தி வரும் பொலிசார் தெரிவிக்கின்றனர் இணைய இணைப்பு http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=18598
-
- 0 replies
- 767 views
-
-
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகமெங்கும் கலந்தாய்வு கூட்டம், பொதுக்கூட்டம் நடத்திவருகிறார் சீமான். இன்று புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் தீலீபன் திடலில் பொதுக்கூட்டம் நடத்துகிறார். இன்று மாலை 6.30 மணிக்கு இக்கூட்டம் தொடங்கியது. சீமான் இக்கூட்டத்தில், ‘’பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் முதன் முதலில் பேருந்துகளை ஓடவிடாமல் தடுத்து நிறுத்திய மண் இந்த வடகாடு மண். அது மட்டுமல்ல; இது பாவாணன் உளவிய மண். இந்த மண்ணில் தம்பி சீமான் பேசுவதை பெருமையக நினக்கிறேன். சுதந்திர இந்தியாதான். ஆனால் நாம் சுதந்திரமாக இருக்கிறோமா? நம் இனம் சுதந்திரமாக இருக்கிறதா? இல்லையே. இது எப்போது மாறும். ஈழம் அவ்வளவுதானா. பிரபாகரன் செத்துட்டார்…
-
- 1 reply
- 1.7k views
-
-
சிங்களப்பகுதியில் கனிமொழிவாங்கிய தேயிலை தோட்டத்தை பார்க்க சென்றீர்களா திருமாவளவரே ?: தமிழ்நாட்டிலிருந்து கு.கண்ணன் தந்தைப்பெரியாரை தலைவராக ஏற்று நடப்பவர்கள் நாங்கள், ஆனால் பெரியார் ஒருபோதும் தன்னை தலைவன் என கூறிக்கொண்டதில்லை. எப்பொழுதும் தன்னை தோழர் என்றே அறிவித்துக்கொண்டிருந்தார் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆகையால்தான் அவர் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் தலைவனாக உள்ளார் என்பது வரலாற்றுண்மை. அப்படிபட்ட தலைவன் வழியிலேதான் நாங்கள் நேர்மையுடன் வீறு நடை போட்டுக்கொண்டிருக்கின்றோம். தந்தைப்பெரியாரை தலைவராக ஏற்றுக்கொண்ட எங்களால் வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள எங்கள் மனதில் இடமில்லை, ஆனாலும் தந்தைப்பெரியாருக்கு அடுத்த இடத்தில் “மாவீரன்” பிரபாகரனுக்கு நிறந்தர இடம் கொடுத்துள்ளோ…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையில் வன்னி முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள சற்றேறக்குறைய 3 இலட்சம் தமிழர்களில் ஒரு பகுதியினர் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 12,000 குடும்பங்களைச் சேர்ந்த 41,685 பேர் விடுவிக்கப்பட்டு, அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்ற செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வந்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி - எப்போதும் போல எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதிலளித்து - அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதி, முகாம்களில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படுவதில் இதற்கு மேலும் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளார். ஈழத் தமிழர்கள் அவர்கள் வாழ்ந்…
-
- 1 reply
- 918 views
-
-
இடம் பெயர்ந்தோர் முகாம்கள் எதுவும் தமிழர்கள் வாழ முடியாத சூழலில் உள்ளன என்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இலங்கை சென்று திரும்பிய தமிழக எம்.பிக்கள் குழு , முகாம்களைப் பார்வையிட்ட பின், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் முகாம் வசதிகள் திருப்தி தருவதாக இருக்கிறது எனத் தெரிவித்திருந்தனர். இலங்கையில் பத்திரிகையாளர்களிடம் முகாம் நிலைமைகள் குறித்துப் பேச மறுத்தனர். இக்குழு சென்னை திரும்மிபய பின் செய்தியாளர்களைச் சந்தித்த போது முகாம்களின் நிலை, ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போன்று மோசமான நிலையில் இல்லை என்றே தெரிவித்திருந்தது. அங்கு இடப்பட்டடுள்ள முட்கம்மிகள் கூட வெறும் பாதுகாப்புக்கானதே எனத் தெரிவித்தனர். இந்நிலையில், உதகமண்டலத்தில் நட…
-
- 1 reply
- 1.1k views
-
-
50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை – தமிழன்பன் தெற்காசியாவில் மனிதவுரிமைகள் மீறல்கள் என்ற கருத்தரங்கு (25/10/2009) நடைபெற்றது. நிகழ்வில் தெற்காசியாவின் மனிதவுரிமை மீறல்களை எடுத்து வைத்து பேசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் 50000 ஈழத்தமிழர்கள் மீள்குடியேற்றம் என்பது சுத்த பொய் என்றும் வன்னிமுகாமிலிருந்து ஜப்னா முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதே உண்மை என்று குற்றம் சுமத்தினர். ஈழத்தில் நடைபெற்ற மனிதபேரவலங்கள் தெற்காசியாவின் மனித உரிமை மீறல்களை மேலும் ஊக்குவிக்கும் என்றும் ஈழத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட சோதனைகள் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் காஷ்மீரிலும் நடைபெறுவதற்கான அபாயங்கள் அதிகம் உள்ளன என்று கவலை தெரிவித்தனர். தெற்காசிய…
-
- 1 reply
- 693 views
-
-
இலங்கை முகாம்களில் இருந்து தமிழர்கள் வீடு திரும்புகிறார்கள். சண்டை ஒழிந்தது சாந்தி தழைக்கின்றது! சகோதர யுத்தம் ஓடிஒளிந்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்! என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பருவ மாற்றங்களைப் பற்றிக் கவலைப்படாமல், இலங்கைத் தீவில் ஆடிக்காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்தி வானத்திலே சிவப்பு; அந்தப் பூமியெங்கும் பரவியிருந்தது. அந்த வண்ணத்தை அந்தத் தீவின் தெருக்களில் தீட்டுவதற்கு தமிழ் ஈழ உரிமைப் போரில் ஈடுபட்ட இலங்கை வாழ் மக்களின் படைவரிசை இருபக்கமும் நின்று குருதி பொழிந்தவண்ணம் இருந்தன. சகோதர யுத்தத்தை, பாண்டவர்கள் கௌரவர்கள் கதையிலே படித்த மக்கள்; கடந்த சில…
-
- 20 replies
- 1.9k views
-
-
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் விடுதலைப் புலி பெண் உறுப்பினரொருவரும் அவருக்கு தஞ்சமளித்து உதவியதாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவனும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த யாமினி எனப்படும் இந்திரராஜா பவரீட்டா (வயது 26) என்ற விடுதலைப் புலி உறுப்பினரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் தென். கிழக்கு பல்கலைக்கழகத்தின் 3 ஆம் ஆண்டு மாணவன் ரி.வினோதரன் என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தம்பிலுவிலைச் சேர்ந்த குறித்த மாணவனிடம் கடந்த ஏப்ரில் மாதம் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதிகளின் ஒருவரான நகுலன் குறித்த பெண் விடுதலைப் புலி உறுப்பினரை முல்லைத்தீவிற்கு அனுப்பி வைக்க…
-
- 0 replies
- 841 views
-
-
அவுஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் சட்ட விரோதமாக செல்ல முற்பட்டுஇ தற்போது கரையோர பாதுகாப்பு படையினரால் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தமது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர். 78 இலங்கையர்கள் அடங்கிய அவுஸ்திரேலிய கப்பல் இன்று பிற்பகலில் இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியை சென்றடையுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் சிறந்த முறையில் பராமரிக்கப்படுவர் என அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பிரிண்டன் ஓ கோனர் தெரிவித்தார். வருடல்...
-
- 0 replies
- 636 views
-
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜசிகரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ஊடகவிலாளரும் 20 வருட கடூழிய சிறைக்குட்பட்டவருமான திஸ்ஸநாயகம் வெளியிட்ட நோர்த் ஈஸ்ட்டர்ன் கரல்ட் என்ற சஞ்சிகையின் வெளியீட்டாளராகவும் அந்த அச்சகத்தின் உரிமையாளராகவும் விளங்கிய ஜசீகரனும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பல சித்திரவதைகளுக்கு உள்ளாகியதாக அடிப்படை மனித உரிமைகள் வழக்கை தாக்கல் செய்திருந்தார்கள். இந்த நிலையில் இந்த வழக்கை வாபஸ் பெற்றால் அவர்களை விடுவிக்கலாம் என அரச தரப்பினர் சட்டமா அதிபரூடாக …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக கருதமுடியாது என அவுஸ்ரேலியாவின் பிரபல அரசியல் விமர்சகர் புறூஸ் ஹை அவர்கள் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஒலிபரப்பு கூட்டுதாபனத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திரு புறூஸ் அவர்கள் தென் ஆசியா, மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பலகாலம் சேவையில் ஈடுபட்டவர். அனைத்து அரசியல் விடயங்களையும் ஆழமாக புரிந்து வைத்திருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புறூஸ் தமது நேர்முகத்தில் மேலும் குறிப்பிடுகையில், அவுஸ்ரேலியாவில் தமிழர்களும் இருக்கின்றனர் சிங்களவர்களும் இருக்கின்றனர். சிங்களவர்களும் தமிழர்களைப்போல் செயற்படுகின்றனர். நிதி சேர்க்கின்றனர், அரசியல் செய்கின்றனர் ஆனால் இவை அனைத்தும் ஆட்களை கொல்லத்தான் அவர்கள் செய்கின்…
-
- 3 replies
- 956 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், மாவோயிஸ தீவிரவாதிகளும் இணைந்து செயற்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். இந்தியாவின் தென் மற்றும் மத்திய பிரதேசங்களில் உள்ள காடுகளில் புலிகளும், மாவோயிஸ் கெரில்லாக்களும் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் இடையில் பல்வேறு மட்டத்தில் தொடர்புகள் காணப்பட்டமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம், தமிழகம், சட்டிஸ்க்ரா மற்றும் ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் விடுதலைப் புலிகளின் ஊடுறுவல் காணப்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், புலிகள் மற்றும் மாவோயிஸ தீவிரவாதிகள் இணைந்து மேற்கொள்ளும் தீவிரவாத நடவடிக்கைகள் கடு…
-
- 4 replies
- 884 views
-
-
எதிர்பார்த்த அளவுக்குப் பெரும் வெற்றிகளைக் கொடுக்காத தென் மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து, அடுத்த வருட முற்பகுதியில் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை நடத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இதனை நோக்கிய அணி சேரல்கள், தேர்தல் கூட்டுக் காய்நகர்த்தல்கள், எதுவித அரசியல் கோட்பாடுகளுமற்ற திசை நோக்கி நகர்கின்றன. இதில் வருகிற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஏகமனதான தெரிவாக யாரைக் களமிறக்கலாமென்கிற போட்டியில், எந்தக் கட்சியையும் சாராத ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தினால் அவருக்கு ஆதரவளிப்போமென்று சிங்களக் கடும் போக்காளர்கள் கூறுகின்றார்கள்.தான் போட்டியில் குதித்தால் தோல்வி நிச்சயமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவா…
-
- 0 replies
- 732 views
-
-
இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை ஊடகங்களில் ,தடுப்பு முகாம்களில் இருந்து மீழ்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் புள்ளி விபரங்களுக்கும் அதே நேரம் அர்சசாங்க கச்சேரி, கிராம சேவகர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனங்களின் புள்ளி விபரங்களுக்கும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக கடந்த செப்டெம்பர் மாதம் கச்சேரி அறிக்கையின் படி வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் 238,057 மக்கள் இருப்பதாக பதிவுகள் கூறுகின்றன. அதன் பின்னர் வவுனியா கச்சேரி புனர்வாழ்வு திட்ட திணைக்கள பிரிவினால் அதன் இயக்குனர் திரு பரந்தாமன் என்பவரால் கையெழுத்திட்டு 14.10.2009 அன்று வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின்படி 230,974 பேர் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகின்றது. இதன்படி உண்மையில் 7,000 மக்கள…
-
- 0 replies
- 609 views
-