ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142965 topics in this forum
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜசிகரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ஊடகவிலாளரும் 20 வருட கடூழிய சிறைக்குட்பட்டவருமான திஸ்ஸநாயகம் வெளியிட்ட நோர்த் ஈஸ்ட்டர்ன் கரல்ட் என்ற சஞ்சிகையின் வெளியீட்டாளராகவும் அந்த அச்சகத்தின் உரிமையாளராகவும் விளங்கிய ஜசீகரனும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பல சித்திரவதைகளுக்கு உள்ளாகியதாக அடிப்படை மனித உரிமைகள் வழக்கை தாக்கல் செய்திருந்தார்கள். இந்த நிலையில் இந்த வழக்கை வாபஸ் பெற்றால் அவர்களை விடுவிக்கலாம் என அரச தரப்பினர் சட்டமா அதிபரூடாக …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக கருதமுடியாது என அவுஸ்ரேலியாவின் பிரபல அரசியல் விமர்சகர் புறூஸ் ஹை அவர்கள் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஒலிபரப்பு கூட்டுதாபனத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திரு புறூஸ் அவர்கள் தென் ஆசியா, மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பலகாலம் சேவையில் ஈடுபட்டவர். அனைத்து அரசியல் விடயங்களையும் ஆழமாக புரிந்து வைத்திருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புறூஸ் தமது நேர்முகத்தில் மேலும் குறிப்பிடுகையில், அவுஸ்ரேலியாவில் தமிழர்களும் இருக்கின்றனர் சிங்களவர்களும் இருக்கின்றனர். சிங்களவர்களும் தமிழர்களைப்போல் செயற்படுகின்றனர். நிதி சேர்க்கின்றனர், அரசியல் செய்கின்றனர் ஆனால் இவை அனைத்தும் ஆட்களை கொல்லத்தான் அவர்கள் செய்கின்…
-
- 3 replies
- 957 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், மாவோயிஸ தீவிரவாதிகளும் இணைந்து செயற்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். இந்தியாவின் தென் மற்றும் மத்திய பிரதேசங்களில் உள்ள காடுகளில் புலிகளும், மாவோயிஸ் கெரில்லாக்களும் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் இடையில் பல்வேறு மட்டத்தில் தொடர்புகள் காணப்பட்டமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம், தமிழகம், சட்டிஸ்க்ரா மற்றும் ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் விடுதலைப் புலிகளின் ஊடுறுவல் காணப்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், புலிகள் மற்றும் மாவோயிஸ தீவிரவாதிகள் இணைந்து மேற்கொள்ளும் தீவிரவாத நடவடிக்கைகள் கடு…
-
- 4 replies
- 885 views
-
-
எதிர்பார்த்த அளவுக்குப் பெரும் வெற்றிகளைக் கொடுக்காத தென் மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து, அடுத்த வருட முற்பகுதியில் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை நடத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இதனை நோக்கிய அணி சேரல்கள், தேர்தல் கூட்டுக் காய்நகர்த்தல்கள், எதுவித அரசியல் கோட்பாடுகளுமற்ற திசை நோக்கி நகர்கின்றன. இதில் வருகிற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஏகமனதான தெரிவாக யாரைக் களமிறக்கலாமென்கிற போட்டியில், எந்தக் கட்சியையும் சாராத ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தினால் அவருக்கு ஆதரவளிப்போமென்று சிங்களக் கடும் போக்காளர்கள் கூறுகின்றார்கள்.தான் போட்டியில் குதித்தால் தோல்வி நிச்சயமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவா…
-
- 0 replies
- 732 views
-
-
இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை ஊடகங்களில் ,தடுப்பு முகாம்களில் இருந்து மீழ்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் புள்ளி விபரங்களுக்கும் அதே நேரம் அர்சசாங்க கச்சேரி, கிராம சேவகர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனங்களின் புள்ளி விபரங்களுக்கும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக கடந்த செப்டெம்பர் மாதம் கச்சேரி அறிக்கையின் படி வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் 238,057 மக்கள் இருப்பதாக பதிவுகள் கூறுகின்றன. அதன் பின்னர் வவுனியா கச்சேரி புனர்வாழ்வு திட்ட திணைக்கள பிரிவினால் அதன் இயக்குனர் திரு பரந்தாமன் என்பவரால் கையெழுத்திட்டு 14.10.2009 அன்று வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின்படி 230,974 பேர் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகின்றது. இதன்படி உண்மையில் 7,000 மக்கள…
-
- 0 replies
- 610 views
-
-
ஜி.எஸ்.பி வரிசலுகையினை பெறுவதற்கு மகிந்தவினால் அமைக்கபட்ட விசேட குழு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆத்திரம் ஊட்டிய விடயமாக கருதும் விசாரணைகுழுவினை அனுமதிப்பதில்லை என்ற முடிவினை மாற்றி அவர்களை அனுமதிப்பது என்றும் வரும் நவம்பர் மாதம் அவர்களை அனுமதிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இக்குழுவினரின் இலங்கை வருகைக்கு முன்னர் இங்கு மனித உரிமை விடயங்களில் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவது குறித்து அரசு தீவிரமாகவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலைமைகளை நேர்சீர் செய்யும் எத்தனங்களின் ஒரு கட்டமாகவே கடந்த வாரம் வன்னி அகதிகளில் 40 ஆயிரம் பேரை மீளக் குடியேற்றும் நடவடிக்கை என்ற திட்டம் ஆரவாரமாக மேற்கொள்ளப்பட்டது எனவும் தகவல்க…
-
- 0 replies
- 529 views
-
-
தொல்.திருமாவளவனுக்கு மலேசியத் திருமாவளவன் கேள்வி மதிப்பிற்குரிய விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தமிழ்த்திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு, வணக்கம். அண்மையில் தாங்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை கொலை வெறி அரசால் வன்னி மண்ணில் படுகொலை செய்யப்பெற்று சொல்லொணா துன்பத்திற்கு ஆளான தமிழ் மக்களில் எஞ்சியவரைக் கொத்தடிமைக் கொட்டடிக்குள் சந்தித்து உரையாடி வந்தமையினை ஊடகங்கள் வாயிலாக படித்தறிந்தேன். தமிழின வீரத்தின் மொத்த வடிவமாகவும் தமிழினத்திற்குக் காலம் கொடுத்த அருங்கொடையாகவும் வாய்க்கப் பெற்ற அரும்பெறல் தலைவர் மேதகு பிரபாகரன் கரங்களைக் குலுக்கிய கைகள் தமிழனின் குருதிக் கறைகள் படிந்த கொலை வெறியன் மகிந்தவின் கரங்களைக் குலுக்கியதையும் அவனோடு சிரித்து மகிழ்ந்து உணவுண்டதையும்…
-
- 0 replies
- 962 views
-
-
வணக்கம் உறவுகளே, நலமாக இருப்பியள் எண்டு நினைச்சு அந்த கடவுளை கும்பிட்டுக்கொண்டு கடந்த கிழமை தாயகத்திலயும், புலத்திலையும் எம்மவர் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை இங்க தொகுத்திருக்குது. My link ஒருக்கால் நீங்களும் போய்ப்பாருங்கோவன் அப்ப நான் வரட்டே. கொஞ்சக்காலத்துக்கு முதல்ல இருந்து எங்களுக்குச்சார்பா கதைக்கிறமாதிரி எல்லா நாடுகளும் சிறிலங்காக்கு எதிராக கதைச்சவை அல்லோ. இதை நம்பிக்கொண்டு சும்மா இருந்திராதேங்கோ சரியே, செய்யிற வேலைகளை தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை கிடைக்கும் வரைக்கும் செய்யோணும் எண்டுறது என்னோட கடைசி ஆசைகளில ஒண்டு. சரி நான் போய்ட்டு வாரன் என்ன?
-
- 0 replies
- 1.5k views
-
-
கடந்த ஒக்.22ஆம் திகதி வியாழக்கிழமை சண்டே லீடரின் ஆசிரியரான பெரட்றிக்கா ஜான்ஸ்,செய்தி ஆசிரியரான முனாஸ் முஸ்தாக் ஆகிய இருவருக்கும் கையால் எழுதப்பட்ட இரண்டு மரண அச்சுறுத்தல் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரண்டு சிவப்பு நிற மையால் எழுதப்பட்டுள்ள இரண்டு கடிதங்களும் 2009 ஒக்.21ஆம் திகதி தபாலிடப்பட்டுள்ளது. இதேபோன்றே சண்டே லீடரின் ஆசிரியராக இருந்த லசந்த விக்ரமதுங்க கொல்லப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் இதேபோன்று சிவப்பு நிற மையால் எழுதப்பட்ட மரண அச்சுறுத்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சண்டே லீடர் பத்திரிகை தனது இந்தப் 15 வருட காலத்திலும் தொடர்ச்சியாகப் பலமுறை தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. அது எரிக்கப்படடடிர…
-
- 0 replies
- 515 views
-
-
இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அந்நாட்டு கிறீன் கட்சித் தலைவர் பொப் பிறவுண் தெரிவித்துள்ளார். நாட்டுத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தடைகள் விதிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலமாக நிலவி வந்த யுத்தம் காரணமாக சுமார் 250000 பொதுமக்கள் இன்னமும் முகாம்களில் தங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்கள் உரிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படையெடுப்பினால் அவுஸ்திரேலியா எதிர்நோக்கி வரும் பி…
-
- 0 replies
- 582 views
-
-
இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமையை அடுத்து, அமெரிக்காவில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்கு ஏற்கனவே அவருக்கு விடுக்கப்பட்டிருந்த உத்தியோக பூர்வ அழைப்பை அந்த நாட்டு அரசு ரத்துச் செய்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப் படுபவை வருமாறு: அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமைக்கு உரித்தான பச்சை அட்டையைக் கொண்டவரான ஜெனரல் சரத் பொன் சேகா கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டன் பயணமானார். சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமற்றும் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்கின்றார் என்றே முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சரத் பொன்சேகா அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான உத…
-
- 0 replies
- 622 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார் 24 October 09 04:28 pm (BST) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வியட்நாம் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வியட்நாமுக்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி இன்று மாலை நாடு திரும்பியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வியட்நாம் அரசாங்கத்துடன் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வியட்நாமில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அமெரிக்க படைவீரர்களினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பான புகைப்படங்களை பார்த்து ஜனாதிபதி அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்க துருப்பினருக்கும் வியட்நாம் போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்த காலத்தி…
-
- 5 replies
- 2.4k views
-
-
இந்த ஆண்டின் மே மாதம் 2ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது சுமார் 170 யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா 68 பக்கங்களைக் கொண்ட அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. ஊடகங்கள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செய்மதிப் படங்கள் மற்றும் அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாகவும், அரசாங்கத்தின் எறிகணைத் தாக்குதல்களின் காரணமாகவும் அ…
-
- 1 reply
- 986 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு இனப்பிரச்சினைக்கு உகந்த தீர்வு ஒன்றை இலங்கை அரசு காணத் தவறின்இஅந்த நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகள் மந்தமடையும். அதன் பலனாக பொருளாதார நிலை எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு உலக வங்கி தனது பிந்திய அறிக்கை ஒன்றில் எச்சரிக்கை செய்யும் தொனியில் கருத்து வெளியிட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவித்து வந்த போர் முடிவுற்றது பொருளாதார வளர்ச்சிக்கு உரிய பின்னணியைத் தோற்றுவித்துள்ளது. ஆனால் தமிழர் பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணப்படாவிட்டால் போர் முடிவுற்றதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் கைக்கு எட்டமாட்டா. குறைந்த வருவாய் உள்ள நாடாக விளங்கும் இலங்கை நடுத்தர வருவாய் பெறும் நாடாக மாறும் சந்தர்ப்பம் சூழ்நிலை உருவாகியுள்ளது உ…
-
- 1 reply
- 599 views
-
-
இலங்கையின் மனிதாபிமான தேவைகள் பொருட்டானஇ உதவி வழங்குனர்களின் பொறுப்புக்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி நீல் பூனே தெரிவித்துள்ளார். மனிதாபிமனத் தேவைகள் தொடர்பான எமது கோரிக்கைகளுக்கு நன்கொடையளர்களிடமிருந்து கிடைத்த பிரதிபலிப்பு சிறப்பாக இருந்தது.ஆனால் முகாம்களில் அடைக்கப்பட்ட நிலைமை குறித்து அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். முகாம்கள் தொடர்ந்தும் சுதந்திரமற்று மூடப்பட்டுள்ள நிலையிலேயே இருக்கின்றமை வருத்தமளிப்பதாக இணையத்தளம் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். பொது மக்கள் முகாம்களில் இருந்து வெளியேற்றப்படாமை மற்றும் பெருந்தொகையானவர்கள் விடுவிக்கப்படாமை போன்ற காரணங்களால்இ பெரும்பாலான உதவி வழங்குனர்கள் அடுத்து 3…
-
- 0 replies
- 416 views
-
-
இலங்கையில் ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் அதற்காக தாம் புதிய கூட்டணியினை உருவாக்க போவதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுதலைவர் அனுரா குமார திஸ்ஸ நாயக்க தெரிவித்துள்ளார். இதே நேரம் தாம் எதிர்கட்சி தலைமையில் கூட்டியுள்ள புதிய எதிரணியினரின் கூட்டணியில் ஜே.வி.பி இணைய போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதன் படி ஜனாதிபதி முறைமையினை ஒழிக்கவேண்டும் என சிந்திப்பவர்கள் தம்முடன் இணைய முடியும் எனவும் கூறியுள்ளார். அனுரா அவர்கள். இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 410 views
-
-
தகுதி வாய்ந்த சட்ட ஆலோசகர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தீpவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் போதியளவு தகுதியுடைய நபர் ஒருவரை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பாக அண்மைக்காலமாக சர்வதேச நாடுகள் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலான ஓர் சட்ட ஆலோசனை மிகவும் இன்றியமையாததென தெரிவிக்கப்படுகிறது. தகுதி வாய்ந்த சட்ட ஆலோசகர்களின் சேவை பெற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வெளிவிவகார அமைச்சின் முன்னாள் சட்ட ஆலோசகரின் செயற்திறன் இண்மையும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை திட்டம் தொடர்பான சர்…
-
- 0 replies
- 568 views
-
-
இலங்கையின் ஓய்வு பெற்ற நீதியரசர் சரத் என் டி சில்வா மீது விரைவில் ஊழல் மோசடி விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் மகிந்தவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியில் நிற்க கூடியவர்கள் என்ற வகையில் இரண்டு சரத் நபர்கள் உள்ளனர். ஒருவர் சரத் பொன்சேகா மற்றவர் சரத் என் சில்வா. சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபட முடியாதவாறு தற்போது பொதுவான தடை கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்த தாக சரத் என் சில்வா மீது ஊழல் வழக்கை விசாரணை ஆரம்பித்தால் அவரும் தன்னுடன் போட்டியிட வரமுடியாது என்பது மகிந்தவின் திட்டம். இது இவ்வாறு இருக்க சரத் என் சில்வா முன்பே பாலியல் மற்றும் நிதி மோசடிகளில் குற்றம் சாட்ட பட்டவர் என்பது குறிப்பிடதக்கது. தற்போது iஇரண்டு வழக்குகள் அவர்மீது தாக்…
-
- 0 replies
- 587 views
-
-
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் திருமாவளவன் சந்தித்திருக்கும் வெளிப்படையான முதல் நெருக்கடி இதுவே. இனியும் திமுகவிற்குப் பணி காங்கிரஸ் கட்சியிடம் கைகட்டி நிற்க வேண்டுமா? அல்லது தோள்தட்டி தன் மானத்தோடு விலகி தனித்து அரசியல் செய்யலாமா? என்கிற மில்லியன் டாலர் கேள்விகளால் திருமாவளவனுக்கு உருவாகியிருக்கும் ஆசிட் டெஸ்ட் இதுதான். இலங்கைக்கு கூட்டணி எம்பிக்களை அனுப்ப மட்டுமே முடியும் அரசுக் குழுவை அனுப்ப முடியாது என மத்தியா அரசு கைவிரித்த போது திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமே செல்லலாம் திருமாவளவன் வேண்டாம் அவர் வந்தால் தர்மசங்கடமாக இருக்கும் என்று அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் காங்கிரசார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியோ திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்…
-
- 2 replies
- 1.6k views
-
-
வடக்கு இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மீள் குடியேற்றப்பட்டு வருவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், உண்மையில் சிலர் மீண்டும் வேறும் முகாம்களில் தடுத்து வைக்கப்படுவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பிரமாண்டமான விழா ஒன்றின் மூலம் மாந்தைப் பகுதியில் 6000 இடம்பெயர் மக்கள் விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும், உண்மையில் இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்தோர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அரசாங்கம் அறிக்கை வெளியிட்ட போதிலும், சொந்த இடங்களுக்குச் செல்லவில்லை என குறிப்பிடப்படுகிறது. சிலர் மீண்டும் அதே முகாம்க…
-
- 0 replies
- 544 views
-
-
சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆழ் கடல் மீன் பிடி வள்ளமொன்று நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டம் பெரிய கல்லாறு கடலோரம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வள்ளத்தில் பயணம் செய்ததாகக் கருதப்படும் 30 முதல் 40 பேர் வரை வள்ளத்தை விட்டு இறங்கி தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர்வாசிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.வள்ளத்தில்"நீர்கொழும்பு" என சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து அந்த இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் வள்ளம் சோதனையிடப்பட்ட போது மருந்துப் பொருட்கள் ,தண்ணீர்ப் போத்தல்கள் ,பிஸ்கட்கள் மற்றும் சில உணவ…
-
- 0 replies
- 593 views
-
-
இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு மிக விசேடமானது. ஏனெனில் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த உறவு பிணைக்கப்பட்டு இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் உறவு எமக்கு அதிக பலனை தந்திருக்கின்றது.இவ்வாறு சிங்கபூர் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இலங்கை வெளி நாட்டு அமைச்சர் திரு ரோகித போகொல்லாம தெரிவித்துள்ளார். இதே நேரம் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் ஏதாவது பாதுகாப்பு இணைப்பு உள்ளதா என கேட்டபோது அவ்வாறு இல்லை எனவும் கூறியுள்ளார். இலங்கை இந்தியாவுடன் தான் பாதுகாப்பு தொடர்பிலான உறவுகளை மேம்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 519 views
-
-
இலங்கை அரசாங்கம் ஆயுதப்படைகளின் அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவதனை தடை செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவதோ அன்றி அவர்களது பெயர்களை அரசியலுக்கு பயன்படுத்துவதோ தடைசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தி யுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சில ஊடகங்கள் இராணுவ அதிகாரிகளின் பெயரினை அரசியலில் தொடர்புபடுத்தி வருகின்றனர். இவர்கள் மீது கடும் நடவைக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார் இராணுவ பேச்சாளர் உதய நாணய கார அவர்கள். இராணுவ அதிகாரிகளை ஆளும் கட்சியும் எதிரணிகளும் அரசியலுக்கு பாவிப்பது வழமையான ஒன்று ஆனால் தற்போது சரத் பொன்சேகாவின் பெயரே ஆளும் கட்சிக்கு பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது எனவே…
-
- 0 replies
- 785 views
-
-
இலங்கை முகாமில் இருந்து சொந்த இடத்திற்கு புறப்பட்ட தமிழர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ’’வாழ்க்கையின் புதியதோர் ஆரம்பத்திற்கான நுழைவு வாயிலில் நீங்கள் நிற்கின்ற இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் நான் இதனை உங்களுக்கு எழுதுகின்றேன். இன்று நீங்கள் உங்கள் முந்தைய வீடு அமைந்திருந்த, உங்களுக்கு மிகவும் பரிச்சயமான சூழலுக்கு அல்லது அதற்கு சமீபமாக வந்துள்ளீர்கள். உங்கள் குடும்பம் நீண்ட காலமாக பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியது என்பதை நான் அறிவேன். இவை ஈவு இரக்கமற்ற ஓர் அமைப்பு அதன் குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக உங்கள் மீதும் ஏனைய தமிழ் மக்கள் மீதும் திணித்…
-
- 0 replies
- 772 views
-
-
கனடாவில் கைது செய்யப்பட்ட 76 இலங்கையர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் எஞ்சிய 75 பேரும் தொடர்ந்தும் வன்குவார் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற நீண்ட சிவில் யுத்தத்தில் பாரிய இழப்புக்களை சந்தித்தவர் என உறுதியானதைத் தொடர்ந்தே அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் விடுதலைப் பெற்றவர் தொடர்பான எவ்வித தகவல்களையும், கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் சபை வெளியிடவில்லை. ஏற்கனவே அவர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட, கனேடிய ஊடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. விசாரணைகளுக்காக 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்படுவர் என அறிவித்து இன்றுடன் அவர்கள் 7…
-
- 0 replies
- 436 views
-