ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பு இன்னும் தோற்கடிக்கப்படாமல் இருக்கின்றது என்றும் அதனாலேயே சிறிலங்கா அரசு மீது அடிக்கடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 262 views
-
-
விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பு இன்னும் தோற்கடிக்கப்படாமல் இருக்கின்றது என்றும் அதனாலேயே சிறிலங்கா அரசு மீது அடிக்கடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 362 views
-
-
ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் இந்திய உளவாளிகள் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று பலத்த பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாழ்ப்பாண நகரில் உள்ள விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் இந்தியாவில் இருந்து பல உளவாளிகள் ஊருடுவியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்களின் பணி அங்குள்ள மக்களின் மன நிலையை அறிந்து அதை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றுவதுதான் என்று அறியப் படுகிறது. இது போல இலங்கையின் பல பாகங்களிலும் இந்திய உளவாளிகள் செயற்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புலம் பெயர்ந்த நாடுகளில் வெளிவரும் வானொலி தொலைக் காட்சி சேவைகளின் நேயர் நேரங்களில் இதுவரை பங்கு பற்றி தகாத வார்த்தைப் பிரயோகம் வீண் வாதம் விடுதலை புலிகள்மீது வசை பாடுதல் போன்…
-
- 8 replies
- 1.9k views
-
-
இன்று என்ன தேவை! இந்திய, தமிழ் நாட்டு அரசியல் எமக்கு தேவையற்ற ஒன்று. அதனுள் தலையை நுளைப்பது எமது வேலை அல்ல! அதனை தமிழ் நாட்டு மக்களே தீர்மானிக்கவேண்டும்!! நாம் எதிரிகதை; தேடுவதா? அல்லது நண்பர்களைத் தேடுவதா?? எது முக்கியம்??? உதாரணத்துக்கு ஒரு கதை..... நான் சிறு வயதில் படித்தது.... இது வெறும் கதையாகவே இருந்தாலும் இதனுள் உள்ள கருத்தை தயவுடன் நோக்கவேண்டுகிறேன். அக்பர் என்றொரு மாமன்னர் இருந்தார். அவர் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டுவந்தார். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது. அவருடைய நாட்டைச் சுற்றியிருந்த சிற்றரசர்களெல்லாம் ஒன்றுசேர்ந்து அவரது நாடு மீது படையெடுக்கத் திட்டமிட்டனர். இந்தச் செய்தி அக்பருக்கு ஒற்றர்கள் மூலமாகத் தெரிய வந்தது. அவர்…
-
- 14 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவில் மீண்டும் ஒருமுறை தீவிரவாதம் தலைதூக்குவதற்கு முயற்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க. நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 524 views
-
-
வன்னிப் பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் அரசின் நடவடிக்கைகள் மிக மிக மெதுவாகவே நகர்வதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறை கூறியுள்ளது. அத்துடன், இந்த விடயத்தில் அனைத்துலக சமூகம் வழங்கிய உதவிகளை சரியாகப் பயன்படுத்த அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாடி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 525 views
-
-
வறுமை ஒழிப்புப் போன்றே தீவிரவாத ஒழிப்புத் தொடர்பிலும் அனைத்துலக சமூகம் ஒன்றிணைந்து தெளிவான திட்டமிட்ட வழிவகைகள் ஊடாகச் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கோகன்ன அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 331 views
-
-
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் நிலையை அறிந்து வருவதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று ஐந்து நாள் பயணமாக நாளை சிறிலங்கா செல்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 356 views
-
-
வன்னி தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குடும்பங்களில் ஒன்றை விடுவிப்பது குறித்து உடனடியாக முடிவெடுக்குமாறு உயர் நீதிமன்றம் சிறிலங்கா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 393 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 'ஆவி' சிறிலங்காவை ஆள்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. அதிகரித்துவரும் அனைத்துலக அழுத்தங்கள் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 309 views
-
-
வன்னியில் தமிழ் மக்கள் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு வழங்கப்பட்ட கூட்டுத் தண்டனை என வர்ணித்துள்ளது அனைத்துலக மன்னிப்புச் சபை. இந்த முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அது சுட்டிக்காட்டி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 298 views
-
-
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய 300 பேர் வவுனியா, செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து இன்று காலை விடுவிக்கப்படடனர் என்று வவுனியா மாவட்ட செயலாளர் பி.சார்ள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சொந்த இடமாகக் கொண்டவர்களே விடுவிக்கப்பட்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். 300 பேரில் 275 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் எனத் தெரிவித்த மாவட்டச் செயலர், ஏனைய 25 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று கூறினார். செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத…
-
- 11 replies
- 1.3k views
-
-
ஈழ ஏதிலிகளுக்கு இந்தியக் குடியுரிமை தேவையா? – பொன்னிலா கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா தமிழகக் கட்சிகளுக்குமே ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம். ஆனால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை. ஏதாவது செய்து அதைச் சொல்லி உலகத் தமிழர்களிடம் இழந்த மதிப்பை மீண்டும் தூக்கி நிறுத்திவிடலாம் என்கிற உத்வேகத்தில் உதித்த ஐடியாதான் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் யோசனை. திமுக நடத்திய அறிஞர் அண்ணாதுறை நூற்றாண்டு விழா மாநாட்டில் ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. டில்லிக்கும் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் முதலில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியா நிரந்தரக் குடியுரிமை கொடுக்குமா? அப்படிக் கொடுத்தால் பர்மா, திபெத்…
-
- 3 replies
- 1.5k views
-
-
எமது மக்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமையுடன் 150 நாட்கள் ஆகின்றன. இதனை உலகிற்கு நினைவூட்டி நீதி கேட்கும் முகமாக லண்டனில் மாபெரும் பேரணிக்கு பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு லண்டன் எம்பாக்மண்ட் எனும் இடத்தில் தொடங்கும் இப்பேரணியானது ஹைட் பார்க்கில் முடிவடையும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். பிரித்தானியாவில் தொடக்கப்பட்ட திறப்புப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெறும் பேரணியில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும், அந்த மக்களை கொன்றொழித்த அனைத்து குற்றவாளிகளின் மீதும் போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அடிநாதமாக …
-
- 0 replies
- 643 views
-
-
உலகின் ஏனைய நாடுகளில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலறி கிளின்ரன் கவனம் செலுத்துவதற்கு முன்பாக சொந்த நாட்டிலேயே நிகழும் அத்தகைய வன்முறைகள் குறித்து அக்கறை காட்டட்டும் என சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 34 replies
- 3.4k views
-
-
கூட்டுப் படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்த போதிலும், அதனை சரத் பொன்சேகா நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி செயலக அலுவலகத்தின் சிரேஷ்ட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியி
-
- 6 replies
- 2.4k views
-
-
ஐ.நா.வின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது?: 'ஆனந்த விகடன்' கேள்வி [வியாழக்கிழமை, 08 ஒக்ரோபர் 2009, 03:25 பி.ப ஈழம்] [க.நித்தியா] ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார ஏடான 'ஆனந்த விகடன்' கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விகடன் குழுமத்தின் 'ஆனந்த விகடன்' வார ஏட்டில் நிஜ 'வில்'லன் யார்? எனும் தலைப்பில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமர் மன்மோகன்சிங்கும், ஆளும் காங்கிரசின் தலைவி சோனியா காந்தியும் தீமைக்கு எதிராக வில்லேந்தி நின்ற தசரா கொண்டாட்டக் காட்சி - தமிழனைப் பொறுத்தவரை- இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியாவின் தூதுவரும், இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியுமான அலோக் பிரசாத் இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 573 views
-
-
சிறிலங்காவில் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான யோசனை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை 70 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 584 views
-
-
சுவிஸ்முரசம் இலங்கை தமிழர்கள் அகதிமுகாம்கள் என்ற போர்வையில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது தொடர்பில் இன்று உலகின் கவனம் வெகுவாக தமிழர்களின் பக்கம் திரும்பியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவு மனித உரிமைகள் அமைப்புகளும் இது தொடர்பில் பல்வேறு அறிக்கைகளையும் விடுத்துவருகின்றன. நமது அண்டைநாடான இந்தியாவில் அதன் தலைநகரத்தில் உள்ள இன்னொரு நாட்டின் தூதரகம் தாக்கப்படும் அளவுக்கு இலங்கை தமிழர்களின் நிலை சர்வதேச நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழர்களின் அபிலாசையின் உருவாக்கமாக இயங்கவைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கிறது என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது. வடக்கு மாகாணசபை தேர்தலுக்காக வவுனியா,யாழ்ப்பாணம் என்று திரிந்தவர்கள் …
-
- 9 replies
- 1.6k views
-
-
தமிழகத்து தொப்பிள்கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்களின் இதயம் கனத்த மடல்! இந்திய – சிறிலங்கா கூட்டுச் சதிக்கு முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் இழந்துவிட்டு, யுத்தக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வதை முகாம்களுக்குள் வாழ்விழந்து போயுள்ள ஈழத் தமிழர்கள் மூன்று இலட்சம் பேர் சார்பாகவும் இந்த மடலை உங்களுக்கு எழுத நேர்ந்ததற்காக வேதனைப் படுகின்றேன். உலகம் முழுவதும் திரண்டு வந்தாலும் நீங்கள் உடன் இருக்கிறீர்கள் என்ற எங்களது கர்வம் இப்போது எங்களிடம் இல்லை. இப்போதெல்லாம் அந்த எண்ணத்தை எங்கள் மனதிலிருந்து முற்றாகத் துடைத்தெறிந்துவிட்டோம். நாங்கள் எங்களுக்கான பாதையை வகுப்பதில் உங்கள் குறித்த எங்கள் அதீத நம்பிக்கையே எங்களை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டது. இந்தியாவில் தமிழகம் இ…
-
- 33 replies
- 2.7k views
-
-
உலகத்தின் இரத்த வேட்கை: தீவிரவாதத்தின் பெயரால் – வெ. தனஞ்செயன் “இறப்பின் வலிமையை விட கொடியது, இழப்பிற்குப் பின் ஆறுதல் கூறுவதற்கு ஆளில்லா தனிமை” அந்தக் கொடுமையை இன்று ஈழத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு மூன்று லட்சம் மக்கள் முள்வேலி சிறைச்சாலையில் அடைப்பட்டு கிடக்கும் போதும், கண்டன அறிக்கைகள் கூட வெளியிடாமல், வெறும் கருத்துகளை மட்டுமே பதிவு செய்து கொண்டிருக்கிறது உலகம். செஞ்சோலைப் பள்ளியின் மீது குண்டு வீசியது சிங்களம், அறிக்கை வெளியிட்டார்கள். போர் நடத்தப் போகிறோம், சர்வதேச உதவி அமைப்புகளும், ஊடகங்களும் வெளியேற வேண்டும் என்றது சிங்கள அரசு. முனகலைத் தவிர வேறெதுவும் இல்லாமல் வெளியேறினார்கள். …
-
- 0 replies
- 972 views
-
-
நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையிலுள்ள சிங்கள தூதரக முற்றுகைப் போராட்டம் வாய்க்கொழுப்பெடுத்து பேசித்திரியும் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்றக்கோரி நாளை 08-10 -2009 வியாழன் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தை நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொழுது வாய்க்கொழுப்பெடுத்து பேசியுள்ளான். இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க ஏன் அனுமதிக்க வில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியேறச் செய்யமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடை பெற்ற செய்தியாளர் மானாடொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக அல்லது தமிழ் பிரதேசங்கள் தொடர்பாக எந்த அறிவோ தெளிவோ இன்றிய இந்திய வெளிவிகார அமைச்சர் கிருஸ்ணா இலங்கை அரசாங்கம் எடுக்கும் வாந்தியினை திரும்ப உள்வாங்கி தானும் எடுக்கின்றார் போல தெரிகின்றது. அல்லது இலங்கை அரசாங்கம் தாம் சொன்னால் நிதி கிடைக்காது என்பதற்காக இந்திய அரசாங்கத்தினை கொண்டு சொல்லப்படுகின்றனவா எனவும் ஐயம் எழுகின்றது. இந்தியா போரின்போது தமிழ் மக்களை க…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் பிறந்த விஞ்ஞானி இராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு கிடைத்து உள்ளது. நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் மேற்கொண்ட புதிய கண்டுபிடிப்புக்காக அவருக்கும், மேலும் இரண்டு விஞ்ஞானிகளுக்கும் கூட்டாக இந்த பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 881 views
-