ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
வன்னி தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை பருவ மழைக்கு முன்னதாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து கலந்துரையாடல்களில் ஈடுபடும்படி அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், அரசாங்கப் படைகள் அதிகாரங்களை அதீத துஷ்பிரயோகம் செய்து,போர்க்குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உண்மை கண்டறியப்பட்டாக வேண்டும்.அதனை கம்பளத்தின் கீழ் ஒளித்து வைத்து மறைத்துவிடலாம் என்று நினைப்பது குறுக்கு வழி. அவ்வாறு செய்தால் சில காலத்தின் பின்னர் அதற்கு அதிக விலை கொடுக்க நேரிடும். இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளியன்று இங்கு திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் லியன் பாஸ் கோவின் விஜயம் தொடர்பாக ஐ.நா. நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த விவகாரத்தில் இலங்கை உண்மையைக் கண்டறிவ…
-
- 0 replies
- 619 views
-
-
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான குளிர் வசதி சொகுசு பேருந்து கட்டணம் திடீரென 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1,900 ரூபாவாக இருந்த கட்டணம் இப்போது 2 ஆயிரத்து 400 ரூபாவாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான குளிர் வசதி சொகுசு பேருந்து கட்டணம் திடீரென 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1,900 ரூபாவாக இருந்த கட்டணம் இப்போது 2 ஆயிரத்து 400 ரூபாவாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 280 views
-
-
எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சி முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று எதிர்வரும் 27 ஆம் நாள் நிறைவேறுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இது தொடர்பான முடிவுகளை எடுப்பது பின்போடப்பட்டுள்ளதாகவும் அவை தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 377 views
-
-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 64 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் சிறிலங்கா குழுவினருக்கு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தலைமை தாங்குகிறார். நியூயோர்க்கில் செப்ரெம்பர் மாதம் 22 ஆம் நாள் கூட்டத்தொடர் தொடங்குகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
சிறிலங்காவில் உயிரிழந்த இந்தியப் படையினரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி இந்தியாவின் அக்கறையின்மை காரணமாக பணிகள் முடிந்து ஒரு வருட காலமாகியும் திறக்கப்படவில்லை. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 297 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் மக்கள் தான் இப்போது அரசியல் விளையாட்டுக் களத்தில் பகடைக் காய்களாகியுள்ளனர். இலங்கை அரசின் மீது அதிருப்தி கொண்டிருக்கின்ற சர்வதேச சமூகம் அதனை தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான கருவியாகவும், சலுகைகளை வழங்குவதற்கான திறவுகோலாகவும் இடம்பெயர்ந்த மக்களைப் பயன்படுத்தி வருகிறது. இன்னொரு புறத்தில் இடம்பெயர்ந்து முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை வைத்து அரசியல் நடத்தப் புதிது புதிதாகப் பலர் கிளம்பி வருகின்றனர். முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக ஐ.தே.க.வும், ஜே..வி.பி.யும் இப்போது வலுவாகக் குரல் கொடுக்கின்றன. அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடு…
-
- 0 replies
- 578 views
-
-
கிழக்கு மாகாணத்தில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் புதிய அலுவலகங்களைத் திறப்பதற்கு சிறிலங்கா அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
முகாம்களில் உள்ள உறவினர்களை விடுவிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள வவுனியா பிரதேச செயலகம் மறுத்ததைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (18.09.09) செயலகம் முன்பாக மக்கள் சிறிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 495 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதிய (யுனிசெஃப்) சிறிலங்கா பேச்சாளர் ஜேம்ஸ் எல்டருக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட தொலைபேசி மிரட்டல்களை அடுத்து அவர் திட்டமிட்டதற்கு முன்னதாக நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை அன்றே கொழும்பை விட்டுப் புறப்பட்டுவிட்டார். நாளை வரை அவர் நாட்டில் தங்கியிருப்பதற்கு அவருக்கு அனுமதி இருந்தது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 673 views
-
-
இங்கிலாந்திலிருந்து ஈழத்திற்கு சென்று அங்கு நடந்த இறுதிச்சமரில் சிக்குண்டுடிருந்த தமிழ்வாணி என்கிற பெண்மணி சொல்வதை கேளுங்கள்.
-
- 32 replies
- 3.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி முதல் தடவையாக தேசிய கீதம் ஒலிக்கும் போது அதற்கு கௌரவமளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நடாத்தப்படும் நிகழ்வுகளில் தேசிய கீதம் ஒலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், முதல் தடவையாக வவுனியா உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போது தேசிய கீதம் ஒலித்ததாகவும், கட்சி உறுப்பினர்கள் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் எழுந்து நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேசியப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினைத் தேட ஈ.பி.டி.பி …
-
- 18 replies
- 1.6k views
-
-
தமிழர்கள் ஜனநாயக முறைப்படி 1977 இல் தமது குரல்களை உயர்த்திய போது, தமது தாயகத்தில் சுதந்திரமான, கௌரவமான தமிழீழ உருவாக்கத்துக்கான தெளிவான ஆணையை தமது சுய தீர்மானத்தின் அடிப்படையில் எடுத்திருந்தனர். தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக தம்மைக் கூறுகின்ற தமிழர் தேசியக் கூட்டணி அல்லது பிற அரசியல் கட்சிகள் என்பன இந்தியாவை அல்லது மகிந்த ராஜபக்சாவை அல்லது எந்தவொரு அதிகார வர்க்கத்தையும் திருப்திப்படுத்துவதற்காக மக்களின் இந்த ஆணையிலிருந்து விலகிவிட்டதாக வெளிப்படையாகக் கூற உரிமை அற்றவர்கள் என தமிழநெற் இணையத்தளம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு: மிருகத்தனமான ராணுவ வெற்றியும், மனிதத்தன்மையற்ற தடுத்து வைத்தல்களும் ஈழத் தமிழர்களின் தேசிய அபிலாசைகள…
-
- 0 replies
- 890 views
-
-
18 - 9 - 2009 வெள்ளிக்கிழமை கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியு வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 149 நாட்களைக் கடந்தும் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம். நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கவனயீர்ப்பு மாலை 9 மணிக்கு சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்து நிறைவுபெறுகின்றது. 150 நாளான 19 - 9 - 2009 சனிக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மாலை 9 மணிவரை இக்கவனயீர்ப்பு நிகழ்வு நிகழும் எனவும் அத்தோடு மாலை ரொரன்டோ மத்திய பகுதியில் பேரணியும் இடம்பெறும் என்பதை தொடர்ந்து அங்கு இக்கவனயீர்ப்பை நடாத்திவரும் தன்னார்வத் தொண்டர்கள் அறிவித்தூள்ளா…
-
- 3 replies
- 789 views
-
-
சின்னம்மை கொப்பளிப்பான் நோயால் நூற்றுக்கணகான முகாம் மக்கள் மீண்டும் அவதி வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமில் தற்போது அதிகரித்த வெப்பம் காரணமாக சின்னம்மை, கொப்பளிப்பான் நோய் மிக வேகமாக பரவி வருகின்றது. அத்துடன் மேலும் பல நீர் தொற்று நோய்களும் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாரம் மட்டும் குறிப்பிட்ட தடுப்பு முகாமில் மட்டும் 160 பேர் சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈழ நாதம் குறிப்பிட்டுள்ளது.இன்று வவுனியா தடுப்பு முகாம்களில் ஒன்றான இராமனாதபுரம், வலயம் 27 ம் தடுப்பு முகாமிற்கு சென்ற தமது செய்தியாளர். அந்த முகாம் தொடர்பான விடயங்களை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்த வெய்யில் காரணமாக முகாமில் இருக்கும் 1600 மக்களும் தொற்று நோய்தாக்கங்களுக்கு உள்ளாக…
-
- 0 replies
- 774 views
-
-
இங்கிலாந்தில் இலங்கைத் துணைத் தூதர் ஹம்சாவின் முதல் குறி : கேசவன் (இனியொரு இணையத்தில் இருந்து பிரதிபண்ணப் பட்ட கட்டுரை) இலங்கை இந்திய அரசுகள் இணைந்து வன்னி மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகக் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் மனிதக் கொலைகளை எதிர்ப்பின்றி நடத்தி முடிக்க தமிழகத்தில் இலங்கை அரசின் கைக்கூலியாகப் பணிபுரிந்தவர் தான் ஹம்சா என்ற இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதர். வரலாறு முழுவதும் சீர்திருத்தப் போராட்டங்களை முன்நிறுத்திய திராவிடக் கட்சிப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு மட்டங்களிலும் தனது தொடர்பை வளர்த்துக்கொண்ட ஹம்சா, இவர்களின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு பணத்தை வாரியிறைத்தவர். ஜூனியர் விகடனிலிருந்து அதன் நிர்வாக ஆசிரி…
-
- 8 replies
- 1.9k views
-
-
யுத்தத்தின் பின்னான இலங்கைப் பொருளாதாரம் பாரிய சரிவை நோக்கிச் செல்கிறது: ஜுலை வரையான ஏழு மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி 18.9 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது அதேபோல் இறக்குமதியும் 35.3 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலைமை காரணமாக துண்டுவிழும் தொகை 6.5 வீதமாக அதாவது 1883 மில்லியன் அமெரிக்க டொலர்களாக ஆகியுள்ளது. கடந்த வருடத்தின் அதிகரித்த வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஜுலை மாதத்தில் ஏற்றுமதி 23.1 வீதமாக 652.2 மில்லியனாக வீழ்ச்சி கண்டுள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தேயிலை ஏற்றுமதியும் 21.9 வீதமாக 112.2 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது. கைத்தொழில் துறை ஏற்றுமதியும் 22.4 வீதமாக 486.3 மில்லியனான வீழ்ச்ச…
-
- 0 replies
- 920 views
-
-
இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெயர்ந்த மக்களில் 80 வீதமானவர்களை ஆறு மாத காலத்திற்கு அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு எவ்வித உறுதிமொழியும் அரசாங்கம் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் (17) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீன் மூனிடம், இடம்பெயர்ந்தவர்களின் 80 வீதமானவர்களை உடனடியாக குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உறுதியளித்திருந்தாக உள்ளுர், சர்வதேச ஊடகங்களுக்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீன் மூன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக ஊடகவிய…
-
- 0 replies
- 676 views
-
-
புலிகள் என நினைத்து 9 குமரி மீனவர்கள் கேரளாவில் கைது சனிக்கிழமை, செப்டம்பர் 19, 2009, 16:51 [iST] நாகர்கோவில் குமரி மாவட்ட மீனவர்கள் 9 பேரை விடுதலை புலிகள் என சந்தேகப்பட்டு கேரள போலீசார் சிறை பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கடலுக்குள் வாரக்கணக்கில் மீன்பிடிக்க செல்வார்கள். குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்த ராபர்ட் கென்னடி, வாணியக்குடி வில்பிரட், மண்டைக்காடு புதூர் ராம்போ, கிங்ஸ்லி, அந்தோணி, சூசை, ஜான்சன், குளச்சல் ஸ்டான்லி, ராமநாதபுரம் மாவட்டம் வேர்காடு ஜான் கென்னடி ஆகிய 9 பேர் கேரளாவ…
-
- 0 replies
- 679 views
-
-
இந்தியாவின் நெறிப்படுத்தலுடனும், பல்வேறு உலக நாடுகளின் யுத்த வளங்களுடனும் சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும், அந்த யுத்த களத்திலிருந்து தப்பிப் பிழைத்த தமிழீழ மக்களின் அவலங்கள் 120 நாட்கள் கடந்த நிலையிலும் தீர்ந்தபாடில்லை. முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த அவலங்களிலிருந்து மீள வகையின்றித் தவிக்கும் 300,000 தமிழர்கள் இன்று வதை முகாம்களுக்குள் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்படு
-
- 4 replies
- 873 views
-
-
கிழக்கு மாகாணத்தில் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைகள் மோதலாக உருவாகும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணாவும் பிள்ளையானும் ஜனநாயக வழிக்கு திரும்பி விட்டதாக அறிவித்து, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு, அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இருவரும் இணைந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்தனர். கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இந்தக் கட்சியில் கருணா விலகிக் கொண்டதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து அதன் பிரதித் தலைவராக செயற்பட்டு வருவதுடன் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராகவும் பணியாற்றி வருகிற…
-
- 3 replies
- 691 views
-
-
செல்வன், வவுனியா 19/09/2009, 14:09 சிறீலங்கா கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைப்பு கடந்த புதன்கிழமை பாக்குநீரிணையில் சிறீலங்கா கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 21 தமிழக கடற்தொழிலாளர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழன் - வெள்ளி ஆகிய இரு நாட்களில், இரு குழுக்களாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட இவர்களை ஒக்ரோபர் மாதம் 1ஆம் நாள் வரை அனுராதபுரம் சிறையில் விளக்கமறியலில் வைப்பதற்கு சிறீலங்கா காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே இவர்களின் உடனடி விடுதலையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தமிழகம் இராமேஸ்வரம் பிரதேசத்தில் கடற்தொழிலாளர்களால் தொழிற் புறக்கணிப்பு…
-
- 1 reply
- 459 views
-
-
இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கான ஐ.நா. பிரதிநிதி வோல்டர் கெலின் எதிர்வரும் 23ஆம் நாள் சிறிலங்காவிற்கு வரவுள்ளார். அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் அழைப்பின் பேரில் அவர் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்கிறார் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 524 views
-
-
விரிவான அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்கும் பணியில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்துள்ளது. உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் கைகோர்த்துக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சகல முஸ்லிம் கட்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த அழைப்பை விடுத்துள்ளார். சகல தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டிய ஓர் தேவை ஏற்பட்டுள்ளதாகவும், வன்முறை வழியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 668 views
-