ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
தமிழீழம் மலர ஆதரவைத் திரட்டுவோம் – மதிமுக மண்டல மாநாட்டில் தீர்மானம் இலங்கையில் தனித் தமிழீழம் மலர, உலக மக்கள் ஆதரவைத் திரட்ட மதிமுக அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடும் என, திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதிமுக மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இந்திய அரசு ஒப்புக்குக்கூட போரை நிறுத்தச் சொல்லவில்லை. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இனப் படுகொலையை விவாதிக்க, மனித உரிமைகளைக் காக்க ஐநா மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்கும் வேலையிலும் இந்திய அரசு ஈடுபட்டது. இப்போது, இலங்கையில் 3 லட்…
-
- 0 replies
- 648 views
-
-
இலங்கையின் கிழக்குப் பகுதியில் பண்டாரநாயக்க குடும்பத்திற்கு 50 ஏக்கர் காணி இருப்பதாக அதிகாரிகள் இப்போது தெரிவிக்கிறார்கள். வாகரையில் அந்த காணி காணப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 409 views
-
-
இலங்கைக்கான பயண எச்சரிக்கை தளர்வு : பிரிட்டன் தெரிவிப்பு வீரகேசரி இணையம் 9/16/2009 10:38:02 AM - இலங்கைக்கான பயண எச்சரிக்கையைப் பிரித்தானியா தளர்த்தியுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார மற்றும் பொதுநலவாய திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை விஜயங்கள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமென்று பிரித்தானிய அரசாங்கம் முன்னர் பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது அந்த எச்சரிக்கையை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் மார்க் கொடிங் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாக இதுவரை காலமும் விடுக்கப்பட்டுள…
-
- 0 replies
- 559 views
-
-
நாட்டின் இனப் பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிக் குழு முன்வைத்துள்ள அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 309 views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத் திருத்தத்தை இனப் பிரச்சினைக்கான தீர்வாக நடைமுறைப்படுத்தப் போவதாக அரசு கூறிவரும் நிலையில், அதனை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி ஜே.வி.பி.யினர் நேற்று செவ்வாய்க்கிழமை 'லிப்டன்' சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 526 views
-
-
இலங்கையில் மோதல்கள் முடிவடைந்து நான்கு மாதங்கள் ஓடிவிட்டபோதும் நாட்டில் இனங்கள் இடையே கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று 'சிறிலங்காவின் துன்பப்படும் தமிழர்கள்' அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்து விட்டபோதும் அதன் வெளிநாட்டு வலையமைப்பு இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கின்றது எனக் கருதும் சிறிலங்கா அரசு, அதனை அழித்தொழிப்பதற்கான இராஜரீக ரீதியான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 243 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்து விட்டபோதும் அதன் வெளிநாட்டு வலையமைப்பு இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கின்றது எனக் கருதும் சிறிலங்கா அரசு, அதனை அழித்தொழிப்பதற்கான இராஜீய ரீதியான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 309 views
-
-
யாழ்ப்பாண குடாநாட்டில் இளைய வயதில் திருமணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக யாழ். சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 344 views
-
-
"சிறிலங்காவில் எனது கட்சிதான் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றது. ஆனால் நான் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட்டால் எனது உயிருக்கு அஞ்சவேண்டிய ஒரு ஆபத்தான நிலை அங்கு காணப்படுகின்றது" என சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க இந்தியாவில் தெரிவித்திருக்கின்றார். தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதநாதனை சந்தித்துப் பேச்சுக்களை நடத்திய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே, சிறிலங்காவில் பொதுவாகவே ஒரு அச்சநிலை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார். வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போது அமைதியான நிலை ஒன்று காணப்படுவதாகத் தெரிவித்த சந்திரிகா குமாரதுங்க, இருந…
-
- 0 replies
- 714 views
-
-
போரினால் இடம்பெயர்ந்து வடபகுதி முகாம்களில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக நேரடியாக ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அரசியல்துறை அதிகாரியான லைன் பாஸ்கோவே கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் அனுப்பிவைக்கப்பட்ட இவர் இன்று கொழும்பு சென்றடைவாரென செய்திகள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய செயலாளர் நாயகம் பான் கீ மூன், தனது சிறப்புப் பிரதிநிதியாக பாஸ்கோவேவை கொழும்புக்கு அனுப்பிவைப்பதற்கு தீர்மானித்ததாக ஐ.நா. செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்கிழமை தான் கொழும்புக்குப் புறப்படவுள்ளதாக நியூயோர்க்கில் ஐ.நா. …
-
- 0 replies
- 443 views
-
-
நோர்வேயின் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி, சோசலிச இடதுசாரிக் கட்சி மற்றும் மத்திய கட்சி ஆகிய முக்கட்சிக் கூட்டணி மீண்டும் வெற்றியீட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 295 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளக்ககோவை தொடர்பாக செயற்குழு இணைப்பாளர் வி உருத்திரகுமார் நேர்காணல்(15.09.2009) கேட்பதற்கு நன்றி:தமிழ்நாதம்
-
- 0 replies
- 658 views
-
-
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் தனது முதுகில் ஏற்பட்ட ஊபாதை காரணமாக, பிரதான உரையை நிகழ்த்தவிருந்த ஜனாதிபதி சிகிச்சைக்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். முன்னதாக சம்பிரதாய முறைப்படி குத்துவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, தனது ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர சென்ற போது, அவரது ஆசனம் பின்பக்கமாக சரிந்துள்ளது. உடனடியாக ஜனாதிபதி தூக்கிய அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வேறு ஒரு ஆசனத்தில் அமரச் செய்துள்ளனர். இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களிடம…
-
- 10 replies
- 2.3k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 13, செப்டம்பர் 2009 (22:47 IST) ஈழத்துக்காக அனைவரும் குரல் கொடுக்கும்போது பாரதிராஜாவின் மௌனம் கலையும்: சேரன் தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது கண்டு பாராதிராஜா மௌனம் காக்கிறார் என்றும், ஈழத்தமிழர்களுக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கும்போது பாரதிராஜாவின் மௌனம் கலையும் என்றும் இயக்குநர் சேரன் கூறியுள்ளார். அமீர் தயாரித்து நடித்துள்ள யோகி படத்தின் இசை வெயியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சேரன், எங்களை போன்ற இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனரான பாரதிராஜா, இந்த நிகழ்ச்சியில் மேடை ஏறாமல் கீழே அமர்ந்திருக்கிறார். அவர் சமீப காலமாக எந்த பொது மேடை மற்றும் திரையுலக நிகழ்ச்சி மேடைகளிலும் ஏறாமல் மௌனம் காத்து …
-
- 12 replies
- 1.6k views
-
-
"ஆனையிறவு நுழைவாயிலில் பெளத்த மடாலயம் கட்டப்படுவதாக அறிகின்றோம். கிளிநொச்சியில் படையினருக்கான நினைவாயலங்கள் கட்டப்படுகினறன. இதனால் பொதுமக்களின் வீடுகள், கட்டங்கள் அழிக்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் கலாசாரம் அழிக்கப்படுகின்றது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை நேற்று தெரிவித்த சம்பந்தன், "இதுதான் தமிழ் மக்களின் விடுதலையா? இவ்வாறான நடவடிக்கைகளைச் செய்வதற்காகவா விடுதலைப் புலிகளை அழித்தீர்கள்?" எனவும் கேள்வி எழுப்பினார். "எமது மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்துவிட்டனர். துருப்புக்களின் இருப்ப…
-
- 27 replies
- 1.9k views
-
-
விடுதலைப்புலிகளுடன் போரிட்ட இலங்கை ராணுவத்துக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. எனவே சிங்கள ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டது. ராணுவம் என்ன செய்தாலும் அதை அரசு தட்டிக்கேட்பது இல்லை என்ற நிலை இருந்தது. இப்போது போரில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து விட்டது. எனவே ராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த அதிக அதிகாரங்களை குறைக்க அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கியிருந்த அதிக அதிகாரத்தை குறைக்கும் வகையில் அவருக்கு கூட்டு படை தலைமை அதிகாரி என்ற புதிய பதவி வழங்கப்பட்டது. இப்போது ராணுவத்துக்கு உள்ள மற்ற அதிகாரங்களை குறைக்க உள்ளார். இதன்மூலம் மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். இதனால் அதிபர் தேர்தலில் எளித…
-
- 0 replies
- 3k views
-
-
இலங்கை துறையில் விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் என்று நம்பப்படுகின்ற ஒரு தொகுதி ஆவணங்களை தாம் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் அத்துல சேனாரத்ன குறிப்பிட்டுளார். இன்றுகாலை கடற்படையினரின் புலனாய்வு பிரிவால் கடற்கரையில் மெழுகு சீலைகளால் சுற்றி பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.parantan.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
ஹவாய் இல் தலைமையகத்தினை கொண்டிருக்கும் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் மருத்துவ குழு ஒன்று திருமலை வந்துள்ளது. அமெரிக்க விமானப்படை, கடற்படை,தரைப்படை ஆளணிகளை உள்ளடக்கிய இவ் மருத்துவகுழு திரு மலையில் சிலகாலம் தரித்து நின்று தமது சேவைகளை வழங்கும் என தெரிய வருகின்றது. http://www.parantan.com/
-
- 0 replies
- 806 views
-
-
விடுதலைப் புலிகளால் தமிழ்ச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள போராட்டத்தின் இன்றைய வடிவமே நாடு கடந்த அரசாங்கம்: விளக்கக் கோவை வெளியீடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான (Transnational Government of Tamil Eelam) கருத்தினை – தமிழீழ விடுதலைப் புலிகள் முன்மொழிந்து தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளனர். வரலாற்றின் இந்த இயங்கியல் போக்கைப் புரிந்துகொண்டு – தனித்துவமானதும், பொதுமைத்தன்மை கொண்டதும், தமிழ் பேசும் மக்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஓர் அமைப்பாக அதனை அமைக்க தமிழ் இனம் முன்வரவேண்டும். இது மேல் இருந்து திணிக்கப்படும் ஒன்று அல்ல; முற்றாக – கீழ் இருந்து மேல் நோக்கி கட்டி எழுப்பப்படும் ஒரு ஜனநாயக அமைப்பு என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செய…
-
- 0 replies
- 633 views
-
-
தியாகி திலீபன் அண்ணா எம்மவரிற்காக ஒரு துளி தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து பன்னிரண்டாம் நாள் உயர்நிலை எய்தினார். அதாவது 1987 ஆம் ஆண்டு ஜப்பசி 15 தொடங்கி ஜப்பசி 26 இல் உயர்நிலை எய்தினார். லெப்டினன் கேணல் திலீபன் (பார்த்திபன் இராசையா - ஊரெழு, யாழ்ப்பாணம்) அன்னை மடியில் - 27.11.1963 மண்ணின் மடியில் - 26.9.1987 தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாக த்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத் தான் திலீபன் செய்திருக்கிறான் - தமிழீழ தேசியத்தலைவர் தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம்…
-
- 0 replies
- 551 views
-
-
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் (2009 - 2012) ஜோதிடபானு "அதிர்ஷ்டம்" சி சுப்பிரமணியம் கன்னி ராசிக்கு மாறும் சனி பகவான் இதுவரை சிம்மராசியில் இருந்த சனிபகவான் 26-9-2009, விரோதி ஆண்டு, புரட்டாசி மாதம் 10-ஆம் தேதி, சனிக்கிழமை பகல் 3-30 மணிக்கு உத்திரம் 2-ஆம் பாதம் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆவணி 24-ல் (9-9-2009) சனிப் பெயர்ச்சி. என்றாலும், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப் பஞ்சாங்கப்படி 26-9-2009-ல்தான். சனீஸ்வரருக்குரிய அதிகாரப்பூர்வமான தலம் திருநள்ளாறு. ஊர் ஊருக்கு அய்யப்ப சுவாமிக்கு கோவில் கட்டினாலும் கேரளத்தின் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலே அதி…
-
- 42 replies
- 11.8k views
- 1 follower
-
-
''புலிப்படை 2000'' The group threatens not only the domestic stability of Sri Lanka and India but also the security of the international system as a whole. http://www.fas.org/irp/world/para/docs/com77e.htm LIBERATION TIGERS OF TAMIL EELAM’S (LTTE) INTERNATIONAL ORGANIZATION AND OPERATIONS - A PRELIMINARY ANALYSIS Peter Chalk Winter 1999 Unclassified Editors Note: The author Peter Chalk is a professor at Queensland University in Australia. Considered to be an authority on South-East Asian security issues, Professor Chalk works for the RAND Corporation in Washington. Disclaimer: Publication of an article in the COMM…
-
- 4 replies
- 2.4k views
-
-
சொகுசு வாகனத்தில் ஏறிச்சென்ற ஜோர்ஜ் மற்றும் தயா மாஸ்டர் எழுதியவர்பகலவன் ழn ளுநிவநஅடிநச 12இ 2009 பிரிவு: சிறப்புச்செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரை நேற்று சிறிலங்கா நீதிமன்றம் ஒன்று நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுதலை செய்துள்ளது. சுமார் 25 லட்சம் ரூபா பிணையில் வெளிவந்த இருவரும் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இன்டர் கூலர் சொகுசு வாகனத்திலேறிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கடந்த 3 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர்இ அரச தொலைக் காட்சியில்…
-
- 11 replies
- 2.2k views
-
-
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகளவிலான விளையாட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறிலங்காவுடன் விளையாடுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு நெம்புகோல் தேவைப்படுகிறது. அதற்குப் பயன்படுத்தவதற்கான சிறந்த ஆயுதமாக பிரபாகரன் இருந்தார். அதேபோன்று ஸ்கண்டிநேவிய நாடுகள் புலிகளுக்கான ஆயுத வழங்குனர்களாக இருந்தார்கள் என இந்திய ஊடகவியலாளர் நிதின் ஏ.கோகல் தெரிவித்துள்ளார். அண்மையில் இவர் 'சிறிலங்கா: போரில் இருந்து அமைதிக்கு' எனும் நூலை எழுதி வெளியிட்டிருந்தார். நான்காவது ஈழப் போரில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை விளக்கி இருந்தார். வலிந்த தாக்குதலுக்கான ஆயுதங்களை சிறிலங்காவுக்கு தரமாட்டோம் என புதுடில்லி வெளிப்படையாகத் தெரிவித்து வந்தபோதும் அத்தகைய ஆயுத தளபாடங்கள் மறைமுகமாக வழங்…
-
- 1 reply
- 1k views
-