Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் யாழில் போராட்டம் written by adminJuly 31, 2023 வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில், தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண செயற்பாட்டின் 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் தயாரிக்கப்பட்ட மக்கள் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது https://globaltamilnews.net/2023/193522/

  2. இந்த வருடம் நேற்றுமுன்தினம் (28) வரை 57 நாடுகளைச் சேர்ந்த 1767 பேருக்கு பார்வை வழங்குவதற்கு இலங்கையர்கள் பங்களித்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான், எகிப்து, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் பார்வையற்றோருக்கான கண்களை இலங்கையர்கள் தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதராராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள கண் வைத்தியர்களின் பரிந்துரைகளின்படி, 541 இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளனர். மேலும், இலங்கையர்கள் கண் தானம் செய்வதற்கு அதிகூடிய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், 22 இலட்சம் இலங்கையர்கள் கண் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்து…

  3. ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/266053

  4. பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் வரும் வெள்ளி அன்று இலங்கை வருகிறார். பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும். இருநாடுகளுக்கிடையிலான உறவுகளைப் பலப்படுத்தவும் இலங்கை எதிர்கொள்ளும் பிராந்திய, சர்வதேச பிரச்சனைகள் பற்றி இலங்கை அதிபருடன் கலந்துரையாடப்படும் எனறும் தெரிவிக்கப்படுகிறது. https://www.francetvinfo.fr/politique/emmanuel-macron/info-franceinfo-emmanuel-macron-se-rendra-au-sri-lanka-pour-une-visite-historique_5973293.html

  5. வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல் அறிந்த தமிழக கடற்படையினர் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https:…

  6. 50 இலத்திரனியல் பஸ்கள் இறக்குமதி 50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மானியத்துடன் பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு நகருக்குள் மின்சார பஸ்களை இயக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த மாதம் அனுமதி வழங்கியது. வெளியேறும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலையின் தாக்கம் ஆகிய இரண்டையும் குறைக்கும் முயற்சியில் இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த பஸ்கள் இயக்கப்படும் எனவும், ஏனைய ப…

  7. 29 JUL, 2023 | 06:08 PM (நா.தனுஜா) உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் செயன்முறையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் முழுமையாகப் பெறவேண்டியது மிகவும் அவசியமென பலமுறை தான் அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியிருப்பதாக தேசிய சமாதானப்பேரவையின் தலைவரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். அரசாங்கம் ஸ்தாபிப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினருக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சிவ…

  8. இலங்கைக்கான அதிக கடன் வழங்குநர் என்ற வகையில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளினால் மேற்கொள்ளப்படும் கடன் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் முயற்சியில் இணைவதற்கு சீனா வரவேற்கப்படுவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய – ஜப்பான் மன்றத்தில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடன் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுக்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச மற்றும் உலக வங்கியின் பொதுவான கட்டமைப்பிற்குள்ளும், அதற்கு வெளியிலும் உள்ள சிக்கலைத் தீர்க்க சிறந்த மற்றும் விரைவான அணுகுமு…

  9. அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு சம்மதம், ஆனால் தன்கையில் முடிவு இல்லை – ஜனாதிபதி தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தினால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தான் இறுதித் தீர்வா என கொழும்பு ஊடகம் எலிப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். 13 ஆம் அரசியலமைப்பு திருத்தம் தான் இறுதித் தீர்வு என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையில், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான சூழல் இல்லை என்றும் இருக்கின்ற அதிகாரங்களைக்கொண்டு தற்காலிகத் தீர்வை வழங்குவதே எ…

    • 3 replies
    • 742 views
  10. Published By: VISHNU 30 JUL, 2023 | 06:43 PM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்களாணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம். ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து புறக்கணிக்க ஒருதரப்பினர் இன்றும் முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மொனராகலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உலகில் எந்த நாடும் சேதன பசளை திட்டத்தை விவசாயத்துறையில் முழுமையாக அமுல்படுத்தவில்லை. எமது அரசாங்கம் சேதன பசளை திட்டம் தொடர்பில் எ…

  11. அதிகாரப் பகிர்விற்கான நடவடிக்கைகள் குறித்து ஜப்பானுக்கு இலங்கை அரசாங்கம் தெளிவூட்டல் தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்ருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப்பகிர்வு என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்மொழிவு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்தும் இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நேற்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார். கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கலந்…

  12. 30 JUL, 2023 | 11:03 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எரிபொருள் விநியோக குழாய் திட்டத்திற்கான செயல்பாட்டு ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்த செயல்பாட்டின் ஆய்வை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கான ஒத்துழைப்பை முழுமையாக வழங்குவதாக ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க இந்தியாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்தியாவின் தென் பகுதியின் நாகப்பட்டினத்தை அண்மித்த பிரதேசத்திலிருந்து இலங்கையை நோக்கி எரிபொருள் விநியோக குழாய் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. கடலுக்கு அடியில் முன்னெடுக்கப்பட உள்ள இந்த குழாய் …

  13. 30 JUL, 2023 | 11:06 AM மன்னாரில் வீடொன்றில் கயிற்றால் கட்டி உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து வியாழக்கிழமை மாலை (27) மீட்டுள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டிக்கொட்டுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடலாமை மறைத்து வைக்கப் பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினருக்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டது. குறித்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் உரிய அதிகாரிகளுடன் சென்று குறித்த ஆமையை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கடலாமை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மீ…

  14. 29 JUL, 2023 | 05:36 PM (இராஜதுரை ஹஷான்) ஒரு தரப்பினரின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் தீர்வுகாண அரசாங்கம் முயற்சிப்பதை கடுமையாக எதிர்ப்போம். முதலில் 13 ஆவது திருத்த அமுலாக்க திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரட்டும், அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. நாட்டில் மு…

  15. ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோசிமசா அயாஸி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பான் நாட்டு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற் தடவையாகும். தற்போது இடம்பெற்று வரும் கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் இதன்போது ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 28 மற்றும் 29 ம் திகதிகளில் 24 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…

  16. 29 JUL, 2023 | 06:03 PM (நா.தனுஜா) இலங்கையிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்குப் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், அதற்கு தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வெவ்வேறு அடிப்படைகளில் ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றன. அதன் ஓரங்கமாக அண்மையில் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளினதும் இராஜதந்திரிகள் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர…

  17. தற்போது ஐநூறு ஆசிரியர்கள் சட்ட அங்கீகாரம் இன்றி வெளிநாடு சென்றுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகள் விடுப்பு எடுத்து வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வழங்கப்பட்ட சலுகையின் கீழ் விண்ணப்பித்தும், அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. வெளிநாடு செல்வதற்கு தேவையான ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள போதிலும் அனுமதி கிடைக்காத நிலையில் அவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக மேற்படி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு விடுமுறை அளித்து வெளிநாடு செல்ல வாய்ப்பு வழங்கப்படாதது அநீதி என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையால் அதிகமான ஆசிரியர்கள் வெளி…

  18. 29 JUL, 2023 | 10:37 AM வவுனியா பாலமோட்டை கோவில் குஞ்சுகுளம் பகுதியில் இளைஞன் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கோவில் குஞ்சுகுளம் பகுதியில் தோட்டம் செய்து வரும் ஓமந்தை வேப்பங்குளத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த இளைஞன் தோட்டம் செய்துவரும் பகுதியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலு, சடலத்தின் கழுத்துப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்தின் அடையாளம் காணப்படுவதுடன், கட்டுத்துப்பாக்கி ஒன்றும் குறித்த இளைஞரது மோட்டார் சைக்கிளும் அருகில் காணப்படுகிறது. குறித்த சம…

  19. மட்டு மாவட்டத்தில் கடந்த 6 மாத்தில் 79 பேர் தற்கொலை மட்டக்களப்பு வெல்லாஅவளி, கொக்குவில் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் நேற்று (28) தற்கொலை செய்துள்ளதுடன் மாவட்டத்தில் கடந்த 6 மாத காலப்பகுதில் 18 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்துள்ளதுடன் இந்த ஜூலை மாதம் முதல் நேற்று வரை 8 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மண்டூர் பிரதேசத்தில் 81 வயதுடைய பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதுடன் கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேச கடலில் 64 வயதுடைய ஆண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனவரி த…

    • 1 reply
    • 286 views
  20. Published By: DIGITAL DESK 3 29 JUL, 2023 | 09:54 AM தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம தேரருடன் இன்று சனிக்கிழமை (29) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், "திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கல…

  21. இந்தியக் கடற்படைக் கப்பலான ‘கஞ்சர்’ இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடையவுள்ளது. குறித்த கப்பல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின்போது இந்திய கடற்படைக் கட்டளை அதிகாரியான கொமாண்டர் என் வி எஸ் பானி குமார், கிழக்கு கடற்படைத் தளபதியை சந்திக்கவுள்ளார். இதன்போது, ஏவுகணை செயற்பாடுகள் குறித்தும் பல்வேறு தொழில்முறை தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளன. அத்துடன், நாளை மறுதினம் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய கடற்படையின் திறன்களை பாடச…

  22. செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை மனிதப் புதைகுழிகள் தொடர்கதை நீள்கின்றது – சுகாஷ் மனிதப் புதைகுழிகள் தொடர்கதை செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை நீண்டு செல்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த மனிதப் புதைகுழிகளுக்கான நீதி இற்றைவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த கனகரத்தினம் சுகாஷ், இனியும் நாம் நீதிக்காகக் காத்திருக்க முடியாது என க…

  23. 29 JUL, 2023 | 05:57 PM (நா.தனுஜா) வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகள் குறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வெள்ளிக்கிழமை (28) நாட்டின் 5 மாவட்டங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு இது வரையில் மொத்தமாக 21,374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், அவற்றிலிருந்து காணாமல்போன முப்படைகளைச்சேர்ந்தோர் பற்றிய 3742 முறைப்பாடுகளையும், ஒரேநபர் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவான 2644 முறைப்பாடுகளையும் கழித்ததன் பின்னரான தேறிய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 14,988 ஆகும். இத்தேறிய முறைப்பாடுகள் அவை இடம்பெற்ற…

  24. Published By: DIGITAL DESK 3 29 JUL, 2023 | 12:07 PM கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷ், நேற்று என் பக்கத்தில் இருந்தபடி பகிரங்கமாக, “கனடாவில் எங்களின் சொந்த அனுபவம் இருக்கிறது. ஆதிகுடிகள் தொடர்பில் கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆதிகுடிகளுடனான இனநல்லிணக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அது தொடர்பில் நாம் பணியாற்றுகிறோம். அது சுலபமல்ல. அது நீண்ட பணி.” என்று கூறினார். அதாவது தவறு, குற்றம் நிகழ்ந்ததை, அந்நாட்டு அதிகாரபூர்வ தூதுவர் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதிலிருந்து இலங்கை கற்க வேண்டிய பாடம் என்ன? வரலாற்றில் தவறுகள், குற்றங்கள் எங்கும் நிகழும். ஆனால் அந்த தவறுகள், குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, மு…

  25. மலையகம் 200 : மன்னாரில் நினைவுத்தூபி ! மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக தலைமன்னாரின் நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூறும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. தலைமன்னாரில் ஆரம்பித்துள்ள 252 கிலோமீற்றர் வரையான நடைபயணம், எதிர்வரும் ஒகஸ்ட் 12ஆம் திகதி மாத்தளையில் நிறைவு பெறவுள்ளது. பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தமிழகத்தில் இருந்து மலையக மக்கள் அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. தலைமன்னாரில் தரையிறங்கிய மக்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.