ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் யுத்தத்தில் இந்தியா திரைமறைவில் முக்கியமான பாத்திரத்தை வகித்தது என புதிதாக வெளியிடப்பட்ட நூலொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் ஆயுதம் ஏற்றப்பட்ட குறைந்தபட்சம் ஒரு டசின் கப்பல்களை கண்டுபிடித்து அழிப்பதற்கு இந்திய கடற்படை முக்கிய புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாக அந்நூலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதின் ஏ.கோகலே என்பவர் எழுதிய `சிறிலங்கா: போரில் இருந்து அமைதிக்கு` (சிறீலங்கா புறம் வார் ரூ பீஸ்) எனும் தலைப்பில் எழுதிய நூலிலேயே இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்காவின் யுத்தத்தின் கடைசிக்கட்டம் தொடர்பான செய்திகளை என்.டி.ரி.வி. தொலைக்காட்சி அலைவரிசைக்காக சேகரித்தவர் இவர்.…
-
- 0 replies
- 853 views
-
-
நீர்கொழும்பு திம்ரிகஸ்கட்டுவ பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கைக்குண்டொன்றை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்பகுதியைச் சேர்ந்த சிசிர என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைக்குண்டொன்றை எடுத்துக்கொண்டு தனது மனைவியின் வீட்டுக்கு அருகில் சென்றவர், அதனை வெடிக்க வைத்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவருக்கும் வெளிநாட்டிலிருந்து வந்த மனைவிக்குமிடையில் ஏற்பட்ட மனகசப்பே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.parantan.com/
-
- 0 replies
- 895 views
-
-
-
இலங்கை அரசின் அடுத்த குறிஇ உருத்ரகுமாரன்? கூலிப் படைகளை வைத்தாவது அமெரிக்காவில் உருத்திரகுமாரனை கொலை செய்யத் திட்டம்:இ "அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார் அமெரிக்க அதிகாரி ஒருவர் ":- குமரன் பத்மநாதனைக் கைது செய்த கையோடு தங்களது அடுத்த இலக்கு உருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஜளுரனெயலஇ 2009-09-13 10:18:56ஸ குமரன் பத்மநாதனைக் கைது செய்த கையோடு தங்கள் அடுத்த இலக்கு நியூயோர்க்கில் இருந்து கொண்டு தமிழ் ஈழ அரசு பிரகடனம் செய்த வழக்கறிஞர் உருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது இந்தியாவிலிருந்து வெளிவரும் விகடன் நிறுவனத்தாரின் வார இதழான ஜூனியர் விகடன் சஞ்சிகையில் மேற்கண்டவாறு தகவல் வெளியாகியுள்ளத…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் விடயம், இனப்பிரச்சனை, ஊடக சுதந்திரம் என்பவை குறித்து ஒபாமா நிர்வாகம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களை இன்னமும் மீள்குடியேற்றாமல் தடுத்து வைத்திருப்பது, இனப்பிரச்சனைக்கான தீர்வு, மற்றும் ஊடக சுதந்திரம் என்பவை குறித்து ஒபாமா நிர்வாகம் அதிருப்தி கொண்டுள்ளதாக தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகார அமெரிக்க துணைச் செயலாளர் ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சார்பான அரசியல் தீர்வு குறித்து இலங்கை அரசு மிக சொற்பமான நடவடிக்கைகளையே எடுத்துள்ளது. ஜனாதிபதி என்ற ஒரு கடனுக்காக கடந்த திங்கட்கிழமை செப்ரம்பர் 6 ஆம் திகதி, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சந்திப்பை மேற்கொண்டார். ஆனால், நாட்டை ஒருமுகப…
-
- 1 reply
- 973 views
-
-
தமிழ்நாட்டு மக்கள் போராடவில்லையானால் ஈழத் தமிழர்களுக்கு நடக்கப்போவது எதுவும் இல்லை: சென்னையில் ஊடகவியலாளர்கள் ஜஞாயிற்றுக்கிழமைஇ 13 செப்ரெம்பர் 2009இ 04:51 பி.ப ஈழம்ஸ ஜதமிழ்நாடு நிருபர்ஸ ஊடகவியலாளர் திசநாயகத்துக்கு சிறிலங்கா நீதிமன்றம் வழங்கிய 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பினை கண்டித்து 'சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறை' எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள தியாகராஐ நகர் வெங்கட் நாராயண சாலையில் அமைந்துள்ள தெய்வநாயகம் பள்ளியில் நேற்று சனிக்கிழமை காலை 10:30 நிமிடத்துக்கு 'ளுயஎந வுயஅடை' என்னும் தகவல் தொழில்நுட்ப இளைஞர்களால் இக்கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. …
-
- 0 replies
- 709 views
-
-
இன்று இனம் மிகப் பெரிய நெருக்கடியிலும் எதிரிகளின் முற்றுகையிலும் சிக்கித் தவிக்கிறது. தாயக விடுதலைக்குப் போரிட்ட எம் தமிழ்ச் சொந்தங்கள் சொல்லொணாத் துயரத்திலும் இருக்கின்றனர். தாய்த் தமிழ்ச் சொந்தங்கள் தங்கள் தாய் நாட்டிலேயே சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் முள்வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அவலம். ஆனாலும் இன்னும் உலகின் கவனம் நம் மீது திரும்ப மறுக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஊடகங்களின் செயலற்ற போக்குத்தான். ஊடகங்கள் விருப்பு வெறுப்பற்றும் துணிச்சலாகவும் உண்மைநிலையை உலகுக்கு எடுத்துச் சென்றிருந்தால் இன்று இந்த இழிநிலை ஏற்பட்டிருக்காது. தாயக விடுதலையில் ஊடகங்கள் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது புலனாகும் . அதற்கு ஈழமுரசு…
-
- 3 replies
- 1k views
-
-
சிறிலங்கா அரசால் மலேசியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதனை ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) கேட்டுள்ள அதேநேரம் அவரைத் தாமும் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தானும் கோரி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீது பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னணியில் புலிகளின் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்ததை அடுத்தே பத்மநாதனை விசாரணை செய்வதற்கு பாகிஸ்தானியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சிறில…
-
- 8 replies
- 1k views
-
-
விக்ரம், கொழும்பு 13/09/2009, 13:36 மலையகம் பொகந்தலாவ பகுதியில் பெரும் பதற்றம்! சம்பள உயர்வு கோரி மலையகம் பொகந்தலாவ பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். சம்பள உயர்வு கோரி மலையகத் தொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்களில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி விலகிக் கொண்டுள்ள பொழுதும், தொடர்ந்தும் இவ்வாறான போராட்டங்களில் சனநாயக தொழிலாளர் முன்னணி ஈடுபட்டு வருகின்றது. இவ்வாறான பின்புலத்தில் இன்று பொகந்தலாவை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு தொகுதி தொழிலாளர்கள் தாக்குதலுக்கு இலக்காகியதில் ஐந்து பேர் காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். பதிவு
-
- 0 replies
- 923 views
-
-
விக்ரம், கொழும்பு 13/09/2009, 14:06 நவ-சிங்களப் பேரினவாதத்தின் பிதாமகனுக்கு பெருவிழா! கடந்த 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டில் முற்பகுதியிலும் சிங்களப் பேரினவாதத்திற்கு நவீன வடிவம் கொடுத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையாளர் அநாகாரிக்க தர்மபாலாவிற்கு பெருவிழா எடுப்பதற்கான ஏற்பாடுகள் தென்னிலங்கையில் இடம்பெற்று வருகின்றன. ஈழத்தீவை பௌத்தர்களின் புண்ணிய பூமியாக வர்ணிக்கும் மகாவம்சத்தின் தம்மதீப கோட்பாட்டிற்கு நவீன வடிவம் கொடுத்த அநாகாரிக்க தர்மபாலாவின் இனவிரோத சிந்தனைகளின் வெளிப்பாடாக கடந்த 1915ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாளன்று கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறைகளை சிங்கள தேசம் கட்டவிழ்த்து விட்டது. இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு யூன் மாதம்…
-
- 0 replies
- 601 views
-
-
கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகள் காரணமாக அமைச்சர்களும் மாகாண சபை உறுப்பினர்கள் பெரும்பாலானோரும் ஏமாற்றமடைந்துள்ளனர். நாம் புதிதாக எந்த அதிகாரத்தையும் கேட்கவில்லை. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவும் எமது மக்களின் ஒரு சில எதிர்பார்ப்புகளை மாத்திரமாவது பூர்த்தி செய்யவும் எமக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டுமென்றே கேட்கிறோம். எமது நியாயபூர்வமான பணிகளில் ஆளுநரின் தலையீடு எம்மை அதிருப்திக்கு உள்ளாக்குகின்றது. இவ்வாறு கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான முழு அமைச்சரவையும் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரான சிவனேசதுரை சந்த…
-
- 1 reply
- 714 views
-
-
இறுதிப் போரின் போது சிறிலங்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அதனது அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் சண்டை நடைபெற்ற சமயத்தில் செய்மதிகள் ஊடாக எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' அமைப்பு சேகரித்து வருகின்றது. அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களான சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் புரிந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கான சாட்சியங்களை 'இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு' தற்போது திரட்டி வருகின்றது. தமிழர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதற்கான சாட்சியங்களாக, போர் முடிவடைந்ததாக…
-
- 2 replies
- 756 views
-
-
-
இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்குடன் அனைத்துக் கட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டம் தொடர்பாகத் தனது கருத்துக்கள் எதனையும் தெரிவிக்காமல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நீண்ட காலமாக காலம் தாழ்த்தி வருகின்றார். அவரது பதிலுக்காக இன்னும் தான் காத்திருப்பதாகவும் தீர்வுத் திட்டம் தொடர்பில் அவரது கருத்துக்கள் இதுவரை தெரியவரவில்லை என்றும் அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவரும் அமைச்சருமான திச விதாரன தெரிவித்தார். தீர்வுத் திட்டத்தின் சாரம்சங்கள் அடங்கிய 100 பக்க அறிக்கை ஒரு மாத காலத்திற்கு முன்னரே அரச தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. "முதலில் தீர்வுத் திட்டத்தின் சாராம்சத்தை அரச தலைவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் பின்னரே…
-
- 0 replies
- 456 views
-
-
ருத்திரகுமாரன்-ஞானக்கோன்-அடேல்...இலங்கையி்ன் புதிய அச்சம்! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13, 2009, 10:50 [iST] நியூயார்க்: இலங்கை அதிகாரிகள் என்னைக் கைது செய்யும் முன் அவர்களைத் தீர்த்துக் கட்டிவிடுவேன் என புலிகளின் முக்கிய பிரமுகரான ஞானக்கோன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜூனியர் விகடன் இதழுக்காக நியூயார்க் நகரிலிருந்து மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம்.சுவாமி எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை: கே.பி-யை 'கைது' செய்த கையோடு தங்கள் அடுத்த இலக்கு நியூயார்க்கில் இருந்துகொண்டு தமிழ் ஈழ அரசு பிரகடனம் செய்த வழக்கறிஞர் ருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது! 'கே.பி-'யை தலைவராக அறிவித்து பிரபாகரன் மறைவுக்குப் பிறகு உலக அளவில் ஈழத்தம…
-
- 0 replies
- 1.1k views
-
-
சேரமான் 13/09/2009, 04:35 எரித்திரிய விமான நிலையம் புலிகளின் நிர்வாகத்தில்! பாகிஸ்தானில் புலிகளுக்கு இரகசிய மறைவிடமாம்! சிறீலங்கா புலனாய்வுத்துறையின் புதிய கண்டுபிடிப்பு!!! எரித்திரியத் தலைநகர் அஸ்மாராவில் அமைந்திருக்கும் பன்னாட்டு விமான நிலையம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாக சிறீலங்கா புலனாய்வுத்துறை தகவல் பரப்பிவிட்டுள்ளது. அத்துடன், எரித்திரிய அதிபர் இசையாஸ் அவ்வேர்க்கி அவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பேணி வந்ததாகவும், கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாளன்று கையொப்பமிடப்பட்ட தொலைநகல் ஒன்றை எரித்திரிய அதிபருக்கு தமிழீழ தேசியத் தலைவர் அனுப்பி வைத்ததாகவும் சிறீலங்கா புலனாய்வுத்துறை தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 916 views
-
-
மேற்குலக நாடுகளுக்கு சிறிலங்காப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த வரிச்சலுகையை (ஜி.எஸ்.பி. பிளஸ்) அது நீக்கிவிடும் என்று செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், அத்தகைய முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுள்ளது. ஒன்றியத்தின் இந்த நடவடிக்கையால் நாட்டின் ஏழை மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ள கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூர்ய, கூட்டுத் தண்டனை முறையில் முழுச் சமூகத்தையும் பாதிக்கும் வகையிலான இத்தகைய முடிவு இலங்கையில் ஜனநாயகத்தை கொண்டுவர உதவாது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கரு ஜெயசூர்ய நேற்று சனிக்கிழமை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்…
-
- 0 replies
- 521 views
-
-
ஊடகவியலாளர் திசநாயகத்துக்கு சிறிலங்கா நீதிமன்றம் வழங்கிய 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பினை கண்டித்து 'சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறை' எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 325 views
-
-
ஊடகவியலாளர் திசநாயகத்துக்கு சிறிலங்கா நீதிமன்றம் வழங்கிய 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பினை கண்டித்து 'சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறை' எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 394 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை அங்கிருந்து மீட்டெடுப்பதற்காக 2 ஆயிரம் விண்ணப்பங்கள் கடந்த இரண்டு நாட்களில் வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 409 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை நீக்கத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள சிறிலங்கா அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஒன்றியத்துடன் பேசி சலுகையை மீண்டும் பெறுவதற்கென நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்றை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவசரமாக நியமித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 427 views
-
-
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் அரசு தடுத்து வைத்துள்ள சுமார் 10 ஆயிரம் பேரை விசாரணை செய்வதற்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என சிறிலங்கா அரச தலைவர் செயலகம் தெரிவித்தது. "சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கு இந்த யோசனை உதவும். இதன் அர்த்தம் ஆயிரக்கணக்கான வழக்குகளை விரைவாக முடிக்க முடியும் என்பதாகும்" என அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட சமர்ப்பித்த இது தொடர்பான யோசனைகளுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அனுமதி வழங்கி உள்ளார் என அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான வழக்குகளை வ…
-
- 0 replies
- 527 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) சிறிலங்கா பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு விடுத்த உத்தரவை மீள்பரிசீலனை செய்யுமாறு பிரித்தானியா விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. பதிலாக எல்டர் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (21.09.09) வெளியேறிவிட வேண்டும் என்ற இரண்டாவது நினைவூட்டல் கடிதத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவிடம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். எல்டரின் வெளியேற்றம் குறித்து சிறிலங்கா மீண்டும் ஒருமுறை சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என அவர் அப்போது கேட்டுக்கொண்டார். ஆனால், எல்டரின் விவகாரம் குறித்து அரசு மீள்பரிசீலனை…
-
- 0 replies
- 461 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்கு பொறுப்பான எரித்திரிய பிரதிநிதியை குறிவைத்து சிறிலங்கா அரசு தனது அடுத்தகட்ட நகர்வினை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் முன்னணி ஆயுத விநியோக மையமாக எரித்திரியா செயற்பட்டு வந்துள்ளது. ஐயர் என அழைக்கப்படும் துரைராஜா என்பவரே அதற்கு பொறுப்பானவர் என சிறிலங்காப் படையினரின் புலனாய்வுத்துறையினர் கண்டறிந்துள்ளனர். ஐயாவை கைது செய்யும் நோக்கத்துடன் சிறிலங்கா அரசு எரித்திரியாவுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த முயற்சித்து வருகின்றது. எரித்திரியாவுக்கான சிறிலங்காவின் தூதுவராக மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 909 views
-