ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
வன்னி மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் நடந்து முடிந்த மடுமாத திருக்கோவில் வருடாந்த திருவிழாவை ஒரு தொகுதி கத்தோலிக்க குருமார்கள் புறக்கணித்துள்ளனர். மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 கத்தோலிக்க குருமார்கள் திருவிழாவை புறக்கணித்தனர் என அருட்தந்தை விக்டர் சூசை தெரிவித்தார். முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும் மதகுருமார்களுக்கும் தமது ஆதரவைத் தெரிவிப்பதற்காகவே திருவிழாவை புறக்கணித்தார்கள் என அவர் கூறினார். ஒரு புறத்தில் இருந்து, மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் மக்கள் மடு மாதா திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களால் வழிபாடு நடத்த முடிந்தது. ஆனால் மறுபுறத்தில், தேவாலயத்தைச் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களும் …
-
- 1 reply
- 753 views
-
-
அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. இலங்கையின் வட பகுதியில் தற்போது பெய்து வரும் கடும் மழையினால் அகதி முகாம்களில் உள்ள அப்பாவி பொதுமக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டிக்காட்டப்பட்
-
- 0 replies
- 598 views
-
-
வவுனியா முதல் பருத்தித்துறை வரையுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நேற்று நிராகரித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு உயிரூட்ட முயற்சிப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தாம் ஒருபோதும் இராணுவ முகாம்களை அகற்ற தயாரில்லை என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுமானால் அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார்.இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா அரசாங்கத்திடமும…
-
- 0 replies
- 831 views
-
-
சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளைப் புறக்கணிக்குமாறு அமெரிக்க மக்களையும் விற்பனையாளர்களையும் கோரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக நியூயோர்க் - மன்ஹற்றன் நகரில் அமெரிக்கா வாழ் தமிழர்களால் கடந்த சனிக்கிழமை பெரும் பரப்புரைப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 461 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுபவர்களை சட்டவிரோதமான மிரட்டல்கள் மூலம் ஒடுக்கிவிட முயல்வது ஒருபோதும் வெற்றி பெறாது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 460 views
-
-
வன்னியில் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒரு சிறுவனும் அடங்கும். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 499 views
-
-
வன்னியில் மழை தொடர்ந்தால் முகாம்களின் நிர்வாகம் கட்டுப்பாட்டை இழந்துவிடும் என்றும் அது பின்னர் பாரியளவிலான பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 500 views
-
-
பருவ மழையால் வன்னி தடுப்பு முகாம்களில் மக்கள் வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்களை உடனடியாக விடுவிக்குமாறு, அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 495 views
-
-
தனித் தமிழ் ஈழத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் .. .. தொல்.திருமாவளவன் எம்.பி.யின் 48 வது பிறந்த நாளையொட்டி நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழர் எழுச்சி நாள், எழும் தமிழ் ஈழம்' இன விடுதலை அரசியல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் 48 வது பிறந்த நாளையொட்டி நேற்று தமிழர் எழுச்சி நாள், எழும் தமிழ் ஈழம்' இன விடுதலை அரசியல் மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம், இலங்கையில் முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்திருக்கும் 3 லட்சம் தமிழர்களை அவரவர் வாழ்விடங்களில் குடியமரச் செய்ய விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை …
-
- 0 replies
- 831 views
-
-
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவது என்பன தொடர்பில் உள்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மட்டுமல்ல வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் சிறிலங்கா அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா தனது அரச அதிகாரங்களை சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் பகிந்து கொள்ளத் தவறியிருப்பது மீண்டும் வன்முறைகளுக்கு வழியேற்படுத்திவிடும் என அமெரிக்க வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் எச்சரித்துள்ளார் பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த பிளேக், அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தாமதப்படுவது விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதற்கான புதிய சந்தர்ப்பத்தை வழங்கிவிடும் என்றார்.…
-
- 0 replies
- 547 views
-
-
வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்களுக்கு என அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உருவாகியிருக்கும் வெள்ளப்பெருக்கிற்கு ஐக்கிய நாடுகள் சபையே பொறுப்பு என சிறிலங்கா அரசு சுமத்தியிருந்த குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஐ.நா. சபை, வடிகால் முறையில் ஏற்பட்டுள்ள சேதத்துக்கு தாம் எந்தவகையிலும் பொறுப்பாளிகள் அல்ல எனத் தெரிவித்திருக்கின்றது. இடம்பெயர்ந்த வன்னிப் பிரதேச மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கடந்த சில நாட்களாக தொடரும் மழை காரணமாக மக்கள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கிலான பல கூடாரங்கள் மழையால் சேதமடைந்துள்ள அதேவேளையில், தாழ்வான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இந்த நிலைமை காரணமாக சுமார் ஒரு லட்சம் வரையி…
-
- 1 reply
- 621 views
-
-
நாட்டின் கடற்கரைப் பிராந்தியத்தில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும், கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளைத் தொடர வேண்டியதன் தேவையையும் சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி திசாரா சமரசிங்க வலியுறுத்தியிருக்கின்றார். மன்னார் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்படையின் வடமேற்கு கட்டளைத் தலைமையகத்துக்குப் பயணம் ஒன்றை முதல் தடவையாக மேற்கொண்டிருந்த கடற்படைத் தளபதி, அங்கு கடற்படை அதிகாரிகளுடன் கருத்துப் பரிமாறியபோதே இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பெருமளவுக்குக் காணப்பட்ட மன்னார் கடற்பகுதியின் பாதுகாப்பு தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அவர், இந்தப் பகுதியில் தொடர்ந்தும் கடலோரக் கண்காணிப்பு …
-
- 0 replies
- 393 views
-
-
சிறிலங்காவில் அரச தலைவர் ஆட்சி முறை ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அந்த ஆட்சி முறையை உடனடியாக இல்லாது ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் ஜே.வி.பி. கட்சி, அரச தலைவர் தேர்தலை நடத்துவதற்கு அரசு முயற்சித்தால் அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடப்போவதாகவும், அதனை நடத்த அனுமதிக்கப்போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றது. மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணாக அரச தலைவர் தேர்தலை நடத்துவதற்கு முனைந்தால் மக்களின் ஆதரவுடன் ஜே.வி.பி. வீதியில் இறங்கிப் போராடும் எனவும், இது தொடர்பாக ஏனைய கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தப்போவதாகவும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். நிறைவேற்ற…
-
- 0 replies
- 432 views
-
-
வடபகுதியில் தற்போது சுமூகமான ஒரு நிலை காணப்படுகின்ற போதிலும் எந்தவொரு சூழ்நிலையிலும் அந்தப் பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைக்கப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை பயணம் ஒன்றை மேற்கொண்ட சரத் பொன்சேகா, அஸ்கிரிய பிரிவு மகாநாயக்க தேரரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியபோது, "பயங்கரவாதிகள் இன்னும் முழுமையாக படையினரால் அழிக்கப்படவில்லை. தீவிரமான பயங்கரவாதிகள் கூட பலர் உள்ளனர்" எனத் தெரிவித்தார். எதிர்காலத்தில் வடபகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கும் தான் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள…
-
- 0 replies
- 445 views
-
-
தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகும் என்று தமிழ்நாடு அரசு நேற்று திங்கட்கிழமை எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 453 views
-
-
போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு என இந்தியா வழங்கிய நான்காவது தொகுதி நிவாரணப் பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புனேயிடம் கையளிக்கப்பட்டது. 3 மில்லியன் டொலர் பெறுமதியான 600 தொன் நிவாரணப் பொருட்களே கையளிக்கப்பட்டன. கடந்த 8 ஆம் நாள் இவை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்திருந்தன. அதில் 6 லட்சம் தொகுதி பலசரக்குப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், நெகிழி விரிப்புகள், சிறுவர்களுக்கானவை உள்ளிட்ட துணிமணிகள், காலணிகள், சுகாதாரப் பொருட்கள் என்பன அடங்கியுள்ளன. பெரும்பான்மையான பொருட்கள் வடக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் குடும்பங்களின் தேவையை நிறைவு செய…
-
- 0 replies
- 481 views
-
-
வவுனியாவில் விரைவில் முழு வசதிகளுடன் கூடிய சிறைச்சாலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. சிறைத்துறை ஆணையாளர் நாயகம் வி.ஆர்.டி.டி.சில்வா இந்தத் தகவலைத் தெரிவித்தார். சிறை வளாகத்துக்குள் கட்டங்கள் மற்றும் தேவையான வசதிகளை அமைக்கும் பணிகள் முடிவுக் கட்டத்தை நெருங்கிவிட்டன எனவும் அவர் தெரிவித்தார். சிறைக் காவலர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. எதிர்வரும் நாட்களில் பயிற்சி பெற்ற சிறைக் காவலர்கள் 167 பேர் சேவையில் இணைந்து கொள்ளவுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று செவ்வாய்க்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெறுகின்றது. இந்த புதிய காவலர்கள் அனைவருக்கும் நவீன ஆயுதங்களைக் கையாள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு…
-
- 0 replies
- 465 views
-
-
இன்று காலை(17/08/2009) கலைஞர் தொலைக் காட்சியின் செய்தி ஒளிபரப்பை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. செய்தியில் முதலமைச்சர்கள் மாநாட்டில் ஸ்ராலின் கலந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தனர். செய்தியில் இடைத் தேர்தல் வாக்குப் பதிவுகளைப் பற்றி தெரிவித்தனர். செய்தியில் கலைஞர் ஆட்சியின் மகத்தான சாதனைகள் பற்றித் தெரிவித்தனர். செய்தியில் மது அருந்திய சாமியார் கத்தியின் மேல் நின்று அருள் வாக்கு சொல்வது பற்றித் தெரிவித்தனர். செய்தியில் சென்னையில் நடந்த கிருஸ்தவ சமயக் கூட்டம் பற்றியும் தெரிவித்தனர். செய்தியில் இரசிய நாட்டில் விமானங்கள் மோதியமை பற்றித் தெரிவித்தனர். செய்தியில் ஜேர்மனியில் நடந்த தடகளப் போட்டி பற்றியும் தெரிவித்தனர். செய்தியில் ஜேர்மனியில் நடந…
-
- 3 replies
- 1.7k views
-
-
இந்த கட்டுரை சொல்பவை ஏராளம் விடுதலை உணர்வை, சலுகைகள் சமப்படுத்தாது. யாழ் மக்களை கேவலமாக பேசுபவர்கள் இனி வாய் மூடட்டும் இணைப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....13329&cat=5
-
- 4 replies
- 1.7k views
-
-
வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உருவாகியிருக்கும் வெள்ளப்பெருக்கிற்கு ஐ.நா. சபையே பொறுப்பென சிறிலங்கா அரசாங்கம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஐ.நா. சபை, வடிகால் முறையில் ஏற்பட்டுள்ள சேதத்துக்கு தாம் எந்தவகையிலும் பொறுப்பாளிகளல்ல எனத் தெரிவித்திருக்கின்றது. இடம்பெயர்ந்த வன்னிப் பிரதேச மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கடந்த சில தினங்களாகத் தொடரும் மழை காரணமாக மக்கள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கிலான பல கூடாரங்கள் மழையால் சேதமடைந்துள்ள அதேவேளையில், தாழ்வான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இந்த நிலைமை காரணமாக சுமார் ஒரு லட்சம் வரையிலான மக்க…
-
- 0 replies
- 566 views
-
-
கனடியத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகிய அரசியற்களம். தமிழ்நாதம் இணையத் தளத்திலிருந்து. ஒலிவடிவில் கேட்பதற்கு..... http://www.tamilnaatham.com/arasiyal_kalam.html நன்றி - தமிழ்நாதம் இணையம்.
-
- 0 replies
- 969 views
-
-
ஈழத்து தமிழ் பேசும் மக்களின் அதிஉயர் அரசியல்பீடமாக - உலகத் தமிழர்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து - நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தினை திடமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கு முன்வருமாறு அந்தத் திட்டத்தின் உருவாக்கச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உலகத் தமிழ் அமைப்புகளுக்கு வேண்கோள் விடுத்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டச் செயற்குழுவின் சார்பாக அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். "உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தத் திட்டத்துக்கு தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது இந்தத் திட்டத்துக்கு வலு…
-
- 2 replies
- 868 views
-
-
திங்கட்கிழமை, 17, ஆகஸ்ட் 2009 (20:19 IST) ராமேஸ்வரத்தில் இலங்கை மீனவர்கள் கைது ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் உள்ள இந்திய கடற்படை முகாம் அருகில் பகல்11 மணிக்கு இலங்கையை சேர்ந்த இரண்டு மீன்பிடிப்படகுகள் கரை ஒதுங்கின. இதிலிருந்த இலங்கை மன்னார் வங்காளபாடை சேர்ந்த மீனவர்கள் அன்டன் லம்பட்(45), பிரான்சிஸ்(18), சந்திரபாட்(25), கோபிநாத்(20) ஆகியோர் கடற்படையினரிடம் சரண் அடைந்தனர். படகில் சீலா, வாளை மீன்கள் அதிகளவில் இருந்தன. இவர்களிடம் கடற்படை ஏரியா கமாண்டர் திவாரி விசாரணை செய்தார். அப்போது அவர்கள் , மன்னார் கடல் பகுதியில்மீன்பிடித்து கொண்டிருந்த போது இன்ஜின் பழுது மற்றும் டீசல் இல்லாமல் நடுக்கடலில் படகு நின்றது. இதன் பின் கடல் நீரோட்டத்தில் இந்திய கடல் பகுத…
-
- 0 replies
- 567 views
-
-
இலங்கை அரசாங்கம் 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய கூட்டுப்படை தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேக்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். சரத் பொன்சேக்கா மின்னஞ்சல் மூலம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 13வது அரசியல் திருத்தம் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், இலங்கையில் வாழும் சகல இனங்களின் எதிர்பார்ப்பிற்கு முரணாகவே இதனை நாட்டு மக்கள் மீது சுமத்தியிருக்கின்றன. 13வது அரசியல் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், போரினால் வெற்றிகொள்ள முடியாதுபோன ஈழத்தை அவர்களுக்கு வழங்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னார் நகர பஸார் பகுதியில் இன்று (17.08.2009) மனித எச்சங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நகரப்பகுதியில் வடிகாண் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக நகரத்தின் பல இடங்கள் தோண்டப்பட்டு பாரிய காண்கள் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு வடிகான் அமைப்பதற்காக மன்னார் நகர பஸார் பகுதியில் நிலத்தை தோண்டும் பொழுது சுமார் 6 அடி ஆலத்தில் மனித எலும்புகள் மண்டைஓட்டுப்பகுதி , மற்றும் பல பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த மன்னார் மாவட்ட பொலிஸார் மேற்படி எச்சங்களை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றிருக்கின்றனர். இதே வேளை சம்பவ இடத்தை அண…
-
- 0 replies
- 705 views
-