ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 17/08/2009, 15:29 எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணிந்து ஏதிலிகளை விடுதலை செய்ய முடியாது - கோத்தபாய ராஜபக்ச உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஏதிலிகள் முகாமில் உள்ள மக்களை விடுதலை செய்ய முடியாது என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்து்ள்ளார். ஏதிலிகள் முகாமில் உள்ள விடுதலைப் புலிகள் வெளியே வந்து மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி படையினர் மீது மீண்டுத் தாக்குதலை நடத்திவிடுவார்கள் எனக் கூறியுள்ளார். ஏதிலிகள் முகாமில் உள்ள 3 இலட்சம் மக்களையும் அவர்களின் விருப்…
-
- 1 reply
- 685 views
-
-
உலகளாவிய ரீதியில் தமிழர்களுக்காக குரல்கொடுப்பதாக உரிமை கோரும் திராவிட முன்னேற்றக்கழகம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக பங்களிப்பை வழங்குவதில் தோல்வி கண்டுவிட்டதாகவும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான தாயகத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான பாரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சியின் இராஜ்ஜியசபா எம்.பி.யான டாக்டர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் முன்னணிப் பங்காளியாக திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 6 ஆண்டுகளாக இருந்துவருகின்ற போதிலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்திருப்பது தொடர்பாக திராவிடக் கட்சியை நாச்சியப்பன் குற்றஞ்சாட்டியிருக்கிறார் என்று ஸ்ரேற்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னியில் இறுதிகட்ட யுத்தம் இடம்பெற்றதன் பின்னர் தொடர்சியாக எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் மூலம் பாரிய மனித புதைகுழிகள் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது அரசாங்கம் பாரிய ஆயுதங்களை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்பதற்கு சவாலாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித புதைகுழிகளும் மோட்டார் எறிகனை தளங்களும் மக்கள் தங்கியிருந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றமையே இந்த செய்மதி படங்கள் காட்டுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. செய்மதி படங்களின் படி மூன்று பாரிய புதைகுழிகளும் அதனை தவிர மொத்தமாக ஆயிரத்து 346 மனித புதைகுழிகளும் காணப்படுவதாக மன்னப்புச் சபை தெரிவித்துள்ளது. …
-
- 14 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் இராணுவ அடையாள அட்டையைப் பயன்படுத்தியே அநுராதபுரம் நகருக்குள் நுழைந்தார் என சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரியான ஜானக பெரேரா பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கடந்த வட மத்திய மாகாண சபைக்கான பிரதான போட்டியிட்டு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அத்துடன் கட்சியின் வட மத்திய மாகாண அமைப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் 2008 அக்டோபர் மாதம் அநுராதபுரம் நகரில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் கூ…
-
- 0 replies
- 536 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா அரசியலில் பிரவேசிப்பாரா என்பது தொடர்பாக கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்த சர்ச்சைகளுக்கு முடிவுகட்டுவது போல அரசியலில் இறங்குவதற்கான தனது விருப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான மின்னஞ்சல் ஒன்று அவரால் அவரது நண்பர்கள் பலருக்கும் அனுப்பிவைகப்பட்டிருக்கின்ற
-
- 0 replies
- 714 views
-
-
வவுனியா தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 300 ஆயிரம் உறவுகளை காக்க அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்டுவரும் 300 கிலோமீற்றர் நடைபயணப் போராட்டம் நாளை அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் உள்ள நாடாளுமன்றம் முன்பாக முடிவுக்கு வரவிருக்கின்றது. நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள இரு இளைஞர்களும் நாடாளுமன்றப் பகுதியை வந்தடைவார்கள் என்பதால், அந்த வேளையில் அதாவது - முற்பகல் 11:00 மணி தொடக்கம் 2:00 மணிவரை நாடாளுமன்றம் முன் பெரும் திரளாக கூடி எமது உறவுகளை வதை முகாம்களில் இருந்து விடுவிக்க குரல் கொடுப்போம் என்று அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்ச…
-
- 0 replies
- 516 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் மோசமான வாழ்க்கை நிலை மற்றும் பருவமழை காரணமாக நோய்கள் பரவ தொடங்கியிருப்பது காரணமாக சிறிலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படப் போகின்றது என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். கட்சியின் தேர்தல் அமைப்பாளர்கள் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் 80 விழுக்காட்டினரை இந்த ஆண்டு இறுதிக்குள் மீளக்குடியமர்த்தி விடுவார் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தபோதும், இதுவரையில் சிறிய எண்ணிக்கையானோரே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார் ரணில். இந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் தொடக்கம் அடுத்த ஆண்டு பெப்ரவ…
-
- 0 replies
- 508 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனங்களே காரணம் என்று சிறிலங்கா அரசு குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 527 views
-
-
தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் இருந்து சிறிலங்காப் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒரு பகுதியினரை அவர்களது பெற்றோர்கள் பார்வையிட்டுள்ளனர். கடந்த மே மாதத்தில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த சுமார் 3 லட்சம் மக்களில் இருந்து, விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து இயங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு தொகுதியினர் அம்பேபுசவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறுவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு வேண்டிய பயிற்சிகள் முகாமில் வழங்கப்பட்டு வருவதாக அ…
-
- 0 replies
- 733 views
-
-
கிழக்கு மாகாணத்துக்கான சிறிலங்காவின் ஆளுநர் மொகான் விஜயவிக்கிரமவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு முதல்வரும் அவரது மாகாண அமைச்சர்கள் நால்வரும் இது தொடர்பில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். அரசியல் உயர் வட்டாரங்களின் தகவல்படி, அந்தக் கடிதம் ஜூலை மாதம் 15 ஆம் நாள் அரச தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாகாண சபை உறுப்பினர்களைப் புறக்கணித்துவிட்டு சபையின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் ஆளுநர் இடையீடு செய்கிறார் என கிழக்கு முதல்வரும் அமைச்ச…
-
- 0 replies
- 569 views
-
-
தனது பொருளாதார நலன்களை மனதில் வைத்து சிறிலங்காவின் அரசியலமைப்பைத் திருத்துவதில் அல்லது மாற்றுவதில் இந்தியா தீவிர ஆர்வம் காட்டுகிறது. ஆனால் இது அந்த நாட்டின் இறைமையையும் நில ஒருமைப்பாட்டையும் மோசமாகப் பாதிக்கும் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக சிலாபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த விவகாரம் இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். எமது அரசியலமைப்பை மாற்றுவதில் தானும் ஒரு பங்காளியாக வேண்டும் என இந்தியா நினைக்கிறது. அதற்கு ஊடாகப் பொருளாதார நலன்களையே இந்தியா எதிர்பார்க்கிறது. சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றுவது இந்தியாவின் இறைமைக்கும் நில ஒருமைப்பாட்டுக்கும்கூ…
-
- 0 replies
- 442 views
-
-
"வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டு இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் இருந்து விடுதலை செய்ய முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, "அவ்வாறு அவர்களை விடுதலை செய்தால் அகதிகளுடன் மறைந்திருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வெளியே வந்து வன்னியில் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடங்கிவிடுவார்கள்" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு முரணான வகையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா
-
- 0 replies
- 593 views
-
-
கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், புலிகளின் சர்வதேச வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளதாக சிறிலங்காவிளது தேசிய செய்தி ஸ்தாபனமான லங்காபுவத் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியின்படி, 1582 வங்கிக் கணக்குகள் புலிகளால் பராமரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்குகளைத் தாம் சரிபார்த்து வருவதாகவும், இந்த வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை ஒன்று சேர்த்துக் கூட்டும்போது இலகுவாக இரு பில்லியன் டொலர்களைக் காட்டுவதாகவும் பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்கவல கூறியுள்ளார். இதோடு, சர்வதேச வலையமைப்புகளாக ‘கே.பி’ திணைக்களம் என்ற பிரிவும் ‘அரியண்ணா’ குழு என்ற பிரிவுமாக இரு வலையமைப்புகள் இய…
-
- 3 replies
- 2.1k views
-
-
வீரகேசரி நாளேடு - வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களை 6 மாதங்களிற்குள் மீளக் குடியேற்றுவதாக உறுதியளித்த அரசாங்கம் 3 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எவரையும் மீளக் குடியேற்றவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். நம்பி வந்த தமிழ் மக்களை இன்று வெள்ளத்திற்கு மத்தியில் கூடாரங்களில் தங்க வைத்து அரசாங்கம் பழிவாங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வவுனியா இடைத்தங்கல் முகாம்களின் நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே தமிழ் மக்கள் வவுனியா வந்துள்ளார்கள். மூன்று இலட்சத்திற்கும் மேலான இம்மக்களை 6 மாதங்கள…
-
- 0 replies
- 779 views
-
-
எனது மகனின் கொலைக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை !! ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 4 replies
- 1.7k views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 14/08/2009, 15:27 வெளிநாடுகளில் அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுவோர் பண்டாரநாயக்க வானூர்தி நிலையதில் வைத்துக் கைது செய்ய சிறப்புப் பிரிவு அனைத்துலக நாடுகளில் சிறீலங்காவுக்கு எதிராக செயற்படுவோர் சிறீலங்காவுக்கு வரும்போது அவர்களை பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்ய சிறப்புப் பிரிவு ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கத் தீர்மானித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குறிப்பிட்ட நபர்களை இவ்வாறு கைது செய்யப்போவதாக எச்சரித்துள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருவோர் தங்களது உறவினர்களைப் பார்வையிட …
-
- 5 replies
- 1.2k views
-
-
நண்பர்களே, இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்த காலங்களின்போது உலகமே சனங்கள் சனங்கள் என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது.. இப்போது யுத்தம் முடிவடைந்து விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பிறகான காலத்திலும் அந்தச் சனங்களின் வாழ்நிலையில் மாற்றமேதும் வந்துவிடவில்லை - சாவின் கரங்கள் மூர்க்கமான எறிக்ணைகளாகத் தம்மைத் தாக்கிச் சிதைக்கும் என்ற பயத்தில் மருளத் தேவையில்லை என்பதைத் தவிர்த்துப்பார்த்தால்.. ஆனால் போரின் கடைசிக் கணம்வரை பெருங்குரலெடுத்துக் கதறிக் கொண்டிருந்த உலகு சட்டென்று மௌனமாகிக் கிடப்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.... இதைப்பற்றிப் பேசுபவர்கள் அதற்குக் கபடத்தனமான அரசியற் சாயம் பூசியே அதைச் செய்கிறார்கள்.. 260, 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்…
-
- 2 replies
- 2.4k views
-
-
தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பாரே தவிர உரிமைகள் எதனையும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுக்க மாட்டார் என்று சிங்கள இனத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' குழுமத்தின் வாரம் இருமுறை வெளிவரும் 'குமுதம் றிப்போட்டர்' ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையின் இன்றைய உண்மை நிலை என்ன? "இலங்கையில் இன்று அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது. போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்தாலும் கூட உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட முடியாத அளவிற்கு கட்டுப்பாடு இருக்கிறது. 'சண்டே லீடர்' என்…
-
- 13 replies
- 1.2k views
-
-
வன்னியில் யுத்தம் தீவிரமடைந்திருந்த இறுதி காலகட்டத்தில் "சுடர் ஒளி' ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டாரா இல்லையேல் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டாராவென பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன. மே மாதம் 18 ஆம் திகதிக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் உள்ளாராவென்கிற அலசல்களும் ஆய்வுகளும் ஊடகப் பரப்பை ஆக்கிரமித்திருந்தன. இன்னமும் இந்த விவாதம் முற்றுப் பெறாமல் நீடிக்கையில் புதிய சர்ச்சையொன்றும் இம்மாத ஆரம்பத்தில் வெளிக்கிளம்பியுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலராக பிரகடனப்படுத்தப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனின் கைது குறித்து வெளிவரும் ஊகங்களும் வதந்திகளும் புலம்பெயர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை தொடர்வதற்கு தேவையான உதவிகளை வழங்கத் தயார் என இந்தியா அறிவித்துள்ளது. வடக்குப் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழுவொன்றை இந்தியா அனுப்பி வைக்கவுள்ளது. இந்திய விவசாய ஆய்வுப் பேரவையின் விஞ்ஞானிகளைக் கொண்ட விசேட குழுவொன்று இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது. நிலத்தின் தன்மை, காலநிலை, என்ன வகையான பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து இந்த விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடாத்த உள்ளனர். எதிர்வரும் பருவ காலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்திய விஞ்ஞ…
-
- 1 reply
- 863 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இல்லத்திற்கு சென்ற கே.பி, பிரபாகரன் மீது குற்றம் சுமத்தினார் ‐ லங்காதீப: கே.பி மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அன்று பாதுகாப்பமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கே.பி அங்கு பிரபாகரன் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார் என்று ஞாயிறு லங்காதீப பாதுகாப்பு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுதங்களை கைவிட்டு விட்டு சமாதான வழியில் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று தான் பல தடவைகள் பிரபாகரனிடம் தெரிவித்ததாகவும், அவர் அதனை செவிமடுக்கவில்லை என்றும் கே.பி தெரிவித்ததாக அப்பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் முக்கிய இடமொன்றில் வைத்து கே.பி விசாரணைக்குட்பட…
-
- 0 replies
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அணுவாயுதங்களையும் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததாக பிரபல சிங்கள வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அணுவாயுதங்கள் மற்றும் அணு சக்தியைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச தீவிரவாதிகளின் உதவியைக் கோரியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேற்குலக நாடுகளுடன் இணைந்து உயிரி ஆயுதங்களை உற்பத்தி செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குமரன் பத்மநாதனிடம் நடைபெற்று வரும் விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கப் பெற்ற பாரியளவு சர்வதேச உதவிகள் குறித்தும் தகவல்கள் கிடைக்…
-
- 9 replies
- 2k views
-
-
இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்காது விட்டால் இலங்கையில் மீண்டும் ஆயுத மோதல்கள் உருவாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்க ளுக்கான துணை அமைச்சருமான ரொபட் ஓ பிளெக் தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப் பட்டுள்ளனர் என நம்பப்படுகின்ற போதும் இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான எந்தவிதமான நடவடிக்øககளையும் மேற்கொள்ளாதது மேற்குலகத்தை பெரும் விசனமடைய வைத்துள்ளது. இலங்கையில் மோதல்கள் நிறைவுபெற்ற பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சி னைக்கான தீர்வு என அரசு ஆலோசனை செ…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையின் அரசியல் நிலைமை குறித்து புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒரு இறமையுள்ள அரசாங்கத்திற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் பாடம்புகட்டத் தேவையில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் அமெரிக்க ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடாத்தியமை குறித்து கருத்து வெளியிடும் போதே அது இவ்வாறு தெரிவித்துள்ளது. இலங்கையின் மனிதாபிமான நிலைமை மற்றும் அரசியல் மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் 16 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது, தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களு…
-
- 0 replies
- 1.9k views
-
-
வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளக்குடியமர்த்துவது அத்தியாவசியமானது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் அனைத்துலக உறவுகளுக்கான துணைக் குழுத் தலைவர் றொபேர்ட் காசேயை நியூயோர்க்கில் உள்ள சிறிலங்கா தூதுவர் கடந்த வாரம் சந்தித்துப் பேசியபோது இந்த அழுத்தம் வழங்கப்பட்டது. காசே தலைமையிலான துணைக் குழுவே தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் அனைத்துலக விவகாரங்களைக் கவனித்து வருகின்றது. சமூகங்களுக்கு இடையிலான பிணக்குகளைச் சரி செய்வதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை என்பன பற்றி இந்தச் சந்திப்பின்போது சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய விளக்கினார். விடுதலைப் புலிகளின் தோல்வியைத்…
-
- 0 replies
- 509 views
-