Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் தலைவர் SSP வாஸ் குணவர்ட்தென காவல்துறைத் தலைமயகத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளார். ஒரு தகவல் தொழிநுட்ப மாணவர் தாக்கப்பட்டமை தொடர்பில் திரு.வாஸ் குணவர்தென முழுமையான சர்ச்சைக்குள்ளாகியுள்ளதாகக

    • 0 replies
    • 666 views
  2. வன்னியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவை அமைதியே என்று அந்த முகாம்களில் பணியாற்றிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இப்போது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதரக கனேடிய சட்ட அதிகாரியாகப் பணியாற்றிவரும் டெனிசி ஒட்டிஸ் என்ற பெண்மணி, தூதரக வார ஏட்டுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். முகாம்களில் உள்ள மக்களின் நிலை மற்றும் சூழல் பற்றி அவர் விபரித்துள்ளார். அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் பணியாளர்கள் மத்தியில் பெரிதும் படிக்கப்படுவது இந்த வார ஏடு. வன்னி அகதி முகாம்களில் பணியாற்றிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரக அவசர உதவிக் குழுவின் உறுப்பினராக இருந…

    • 0 replies
    • 437 views
  3. சிறிலங்கா கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மற்றும் தரைப்படைத் தலைமையக அதிகாரிகள் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு திடீர்ப் பயணம் மேற்கொண்டனர். பலாலி வானூர்தி நிலையத்தில் வந்து இறங்கிய தளபதிகளை யாழ். மாவட்ட தரைப்படையின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி.பி.ஆர்.டி.சில்வா வரவேற்றார். கூட்டுப் படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இது ஆகும். பலாலி படைத் தளத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைவரம் குறித்தும், 'வடக்கின் வசந்தம்' திட்டத்துக்கு படையினர் வழங்கி வரும் ஆதரவு குறித்தும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி சில்வா விளக…

    • 0 replies
    • 610 views
  4. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மெதுவாக புலிகளுக்கு எதிரான விஷமப்பிரசாரம் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளது .... களத்தில் நடந்தது என்ன ? கடைசிக்கட்ட போர் நேரடி சாட்சி... முகாமில் இருந்து தப்பியவர்களின் சாட்சிய என்ற பெயர்களில் .. பல கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இவற்றின் நோக்கம் புலிகளின் மீது அவதூறு பரப்புவது , புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர், அவர்களெ மக்களின் அழிவுக்கு காரணம் என்ற எண்ணத்தை மக்களிடம் நிறுவுவதே.. என்றாவது ஒரு நாள் சிங்களன் செய்த கொடூர இன அழிப்பு வெளிப்படும் அப்போது அதற்கு காரணம் சிங்களன் அல்ல ,புலிகளே என்ற எண்ணத்தை மக்களிடம் இப்போதே விதைப்பதே இந்த விஷமக்கட்டுரைகளின் நோக்கம். புலிகளின் பலவீனங்களில் சில ... அவர்களின் பலவீனமான பரப…

  5. சென்னையிலிருந்து "கொலராடோ' கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் நிவாரணப் பொருட்களை கொழும்புத் துறைமுகத்தில் இருந்து வெளியகற்றுவதில் புதிய சிக்கல் தோன்றியுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார். இதன் காரணமாக, புலம்பெயர்ந்த மக்களால் இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பபட்ட நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு செல்வதில் மேலும் சில தினங்களுக்கு தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார். இந்நடவடிக்கை தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், புலம்பெயர்ந்த மக்களால் சேகரித்து அனுப்பப்பட்ட 880 மெற்றிக் தொன் நிறையுள்ள நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைம…

    • 0 replies
    • 715 views
  6. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பெளத்தலோக மாவத்தைக்கு அருகே உள்ள வாய்க்கால் ஒன்றில் மலையகத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களின் உடலங்கள் இன்று காலை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் கொல்லப்பட்டு உடலங்கள் இந்தப் பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். காவல்துறையினருக்கு கிடத்த தகவல் ஒன்றையடுத்தே இந்த இரு உடலங்களும் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டன. கொல்லப்பட்ட இரு பெண்களும் 17 மற்றும் 20 வயது உடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மலையகத்தின் மஸ்கேலியா பகுதியைச் சேர்ந்த இந்த இரு பெண்களும் இந்தப் பகுதியில் உள்ள இரு வீடுகளில் வேலை செய்து வந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணகள் தொடர்வதாக…

    • 0 replies
    • 785 views
  7. சிறிலங்காவில் சீனத் தொழில்நுட்பவியலாளர்களின் பிரசன்னம் படைத்துறை நோக்கங்களுக்கானது என்றும் அது வெறுமனே அபிவிருத்தித் திட்டங்களுக்கானது மட்டுமல்ல என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகம் ஒன்றை அமைத்து வருகின்றது. அந்த துறைமுகம் அருகிலேயே பெரும் எண்ணெய்க் குதங்களையும் அது அமைக்க உள்ளதாக சிறிலங்கா அரசு நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அதிருப்தி வெளியாகி உள்ளது. ஆனால், சீனாவின் நடவடிக்கைகள் படைத்துறை நோக்கங்களுக்கானது என்ற இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவின் கருத்தை சிறிலங்கா மறுத்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்கவே அவர்கள் (சீனர்கள்) இங்கு வந்திருக்கிறார்கள். அது ஒரு அபிவிருத்தித் திட்டம். …

    • 0 replies
    • 524 views
  8. வவுனியா ஏதிலிகள் தடுப்பு முகாமில் மக்களுக்கு சுதந்திரமான நடமாட்டம் இல்லை - பிரான்ஸ் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு வவுனியாத் தடுப்பு முகாங்களில் 2 இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடமாடுவதற்கு சுதந்திரம் இல்லை என பிரான்ஸ் எல்லைகளற்ற மருத்து அமைப்பின் (எம்.எஸ்.எவ்) நெதர்லாந்து பிரிவின் பொதுப் பணிப்பாளர் ஹான்ஸ் வான்டி வீர்ட் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு இணையம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்" வவுனியாத் தடுப்பு முகாங்களில் 2 இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடமாடுவதற்கு சுதந்திரம் இல்லை. இந்த மக்களால் முகாமை விட்ட…

  9. புலிகளை ஆயுத ரீதியாக தோற்கடித்துவிட்டதால் ஈழப்போர் முடிவதில்லை, ஈழமக்களின் விடுதலை வேட்கை என்றும் ஓய்வதில்லை. சிறி சிறி ரவிசங்கர் கூறிய உண்மைகளை மறுக்கவே சிங்களவருடியான நாராயணி பீடமானது சிறிலங்கா சென்று வந்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளது என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி கூறியுள்ளார். அவரது உரையின் காணொளி : http://www.meenagam.org/?p=7859

  10. நிமல்கா ஃபெர்னாண்டோ! சிங்களப் பெண்ணான இவர், சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க மனித உரிமை ஆர்வலர். சமூக சேவகர். மனித உரிமைகள் விஷயத்தில் நாற்பது ஆண்டு கால பழுத்த அனுபவம் கொண்டவர். கொழும்புவில் உள்ள `பிளாட்ஃபாரம் ஃபார் ஃபிரீடம்' என்கிற மனித உரிமைகள் அமைப்பின் தலைவராயிருக்கிறார். அனைவருக்கும் வாழ்வுரிமை, இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அதிகார பகிர்வளிக்க வேண்டும் ஆகியவையே `பிளாட்ஃபாரம் ஃபார் ஃப்ரீடத்தின்' நோக்கம். ராஜபக்ஷே உள்ளிட்ட பல சிங்களத் தலைவர்கள் அனைவருமே இவரது நண்பர்கள். 1980களில் தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் தொடங்கியபோது, சிங்கள அரசு அதை இரும்புக்கரம் கொண்டு நசுக்க முயன்றது. நாள்தோறும் எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் காணாமல் போய்க்கொண்டிருந்தபோது அவர்களுக்க…

    • 4 replies
    • 1.5k views
  11. மலேசிய அரசு வழங்கிய ஒரு லட்சம் அமெரிக்க டாலர் நிதி உதவியை கொழும்பில் உள்ள மலேசிய தூதுவர் ரொஸ்லி இஸ்மாயில், அமைச்சர் ரோகித போகல்லாகம வழியாக இலங்கை அரசிடம் அளித்தார். இது தொடர்பான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை வெளிவிவகாரத்துறையின் அமைச்சகத்தில் நடைபெற்றது. அங்கே அவர் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு மலேசிய அரசு வழங்கிய உதவிகளுக்கு அமைச்சர் அங்கு நன்றி கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ரோகித போகல்லாகம பேசினார். அப்போது, மலேசிய அரசின் உதவிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும். தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை 180 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தும் திட்டம் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு …

    • 0 replies
    • 1.2k views
  12. தென்செய்தியில் வெளிவந்த '' இராசபக்சே - பொன்சேகா மோதல்! இலங்கையில் இராணுவப் புரட்சி வெடிக்குமா? இலங்கைத் தரைப்படையின் முன்னாள் தலைமைத் தளபதியும் இப்போதைய கூட்டுப்படை தலைமைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை அதிபர் இராசபக்சே மெல்ல மெல்ல ஓரங்கட்டி வருகிறார். இருவருக்குமிடையே மோதல் வலுத்து வருகிறது. இலங்கைத் தரைப்படையின் தலைமைத் தளபதியாக இருந்த பொன்சேகா போர் வெற்றிக்குப் பிறகு - அவரைப் பாராட்டும் வகையில் - ஜெனரல் என்ற தகுதிக்கு உயர்த்தப்பட்டார். அதைப் போல கடற்படை, விமானப்படைத் தளபதிகளுக்கும் தகுதி உயர்த்தப்பட்டது. ஆனால் திடீரென பொன்சேகாவை தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் கூட்டுத் தலைமைத் தளபதியாக இராசபக்சே நியமித்தார். வெளிப்படையாகப் பார்த…

  13. ஸ்ரீஅரபிந்தோ அவர்களின் எழுத்துக்களில் இதனைப் படித்தேன்: ""ஏனைய தேசங்கள் போராட்டங்களாலும், யுத்தங் களாலும், வேதனைகளாலும், இரத்தக் கண்ணீராலும் வென்றவற் றை நாங்கள் பெரும் தியாகங்கள் செய்யாமல் பத்திரிகையாளர் களின் பேனா மையைக் கொண்டும், கோரிக்கை மனுக்கள் எழுதத் தெரிந்தவர்களின் உதவியுடனும், மேடைப் பேச்சாளர்களின் திற மையைக் கொண்டும் சுலபமாகச் சாதிக்க அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுவது வேடிக்கையும் வீண் கனவும் ஆகும்''. பிரசவ வலியின்றி பிள்ளை பிறக்குமா என்ன? சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா? சுக்கு மிளகு கூட இன்று சும்மா கிடைக்காது! ஈழம் மலர வேறொன்றும் நடக்க வேண்டுமென கடந்த இதழில் நிறைவு செய்திருந்தோம். நீதியான தீர்வொன்று உறுதி செய்யப்படும் வரை ஆயுதம் தாங…

    • 0 replies
    • 996 views
  14. ஒரு பனங்காய்தனமான போழ்.. http://www.southasianunion.info/sri-lanka-...ankans-t105.htm வேர்க் (ஒர்க்) ஆகுமா?

    • 0 replies
    • 1.2k views
  15. பொய்களைக் கையிலெடுத்து புலத்தையும் ஊடுருவ எண்ணும் சிங்கள மேலாதிக்கம் திகதி: 04.08.2009 // தமிழீழம் ஊடகவியல் என்பது ஒரு உன்னதமான துறை. உள்ளதை உள்ளபடி இயம்புவதே ஊடகத்தின் உன்னத பணி. ஆனால் அண்மைக் காலங்களில் புதிதாக பூத்து துர்நாற்றங்களை மட்டும் வீசும் சில ஊடகங்களில் எம் அழகிய தமிழ்மொழி எவ்வளவு இழிவாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கும்போது சிங்கள மேலாதிக்கத்தின் ஊடுருவுல் எவ்வளவுதூரம் புலம்பெயர்நாடுகளில் உருவெடுக்க முயல்கிறது என்பதை உணரமுடிகிறது. எமது இனம் பட்ட, இன்றும் படும் இன்னல்களை வெளிக்கொணரமுடியாது ஊடக சுதந்திரமற்ற தேசமாக எமது தாய்நாட்டை வைத்திருப்பதை எண்ணி பூரித்து மார்தட்டிக்கொள்ளும் மகிந்த, மறுபுறத்தில் புலம்பெயர்நாடுகளில் உள்ள ஊடக சுதந்திரத்தையும்…

    • 3 replies
    • 1.3k views
  16. பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான தெளிவான ஆதாரம் உண்டு: அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கம் [வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2009, 08:36 பி.ப ஈழம்] [பி.தெய்வேந்திரன்] வன்னியில் போர் உக்கிரமடைந்திருந்த இறுதி நாட்களில் சிறிலங்கா அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்துக்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததும், மக்களின் தற்காலிக தங்கும் இடங்களுக்கு மிக அருகிலேயே படையினரின் கனரக ஆயுதங்கள், மோட்டார் நிலைகள் இருந்ததும் மிகத் தெளிவாக செய்மதிப் படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கம் தனது முழுமையான அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க.. http://www.puthinam.com/full.php? நன்றி - புதினம்

    • 0 replies
    • 971 views
  17. வவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக மற்றொரு மனிதப் பேரவலம் தொடங்கியிருக்கின்றது. பெரும் வெள்ளம் மக்கள் வசிக்கும் கூடாரங்களுக்குள் புகுந்துகொண்டிருப்பதால் அதற்குள் இருக்க முடியாத சுமார் ஒரு லட்சம் மக்கள் வெளியே வந்து குழந்தைகள், நோயாளிகளுடன் கொட்டும் மழையில் நனைந்துகொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் மழை தொடர்வதால் முகாம்களில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக உணவும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்துள்ள மக்கள் முகாம்களில் இருந்து வெளியேறுவதற்கு முயற்சி செய்ததையடுத்து பெரும் தொகையான தரைப் படையினர் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டு மக்கள் எவரும் முகாம்களில் இருந்து தப்பிச் செல்லாதவாறு பாதுகாப்பைப…

    • 0 replies
    • 615 views
  18. சிறிலங்காவில் நெடுஞ்சாலை மற்றும் பாரிய எண்ணெய்க் குதங்களை அமைக்கும் இரு திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான 350 மில்லியன் டொலர் பெறுமதிமிக்க இரு ஒப்பந்தங்களில் சீனாவின் அரச வங்கியான எக்சிமும் சிறிலங்கா அரசும் கையெழுத்திட்டுள்ளன. சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டையில் சீனா ஏற்கனவே அமைத்து வரும் துறைமுகத்துக்கு அருகிலேயே புதிய எண்ணெய்க் குதங்கள் அமைக்கப்படவுள்ளன. துறைமுகத்தின் அடிப்படைக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கென சீன அரச வங்கியான 'எக்சிம்' ஏற்கனவே 360 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளது. சீன கட்டுமான நிறுவனங்கள் இப்போது துறைமுகத்தை அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈ…

    • 0 replies
    • 475 views
  19. கொழும்பும் புலம்பெயர் தமிழ் சமூகமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் [14 - August - 2009] * அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் பிளேக் அழைப்பு இலங்கையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் தற்போதைய மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் இலங்கையில் அமெரிக்க விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ஜேம்ஸ் மூரே ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் 16 பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள தமிழ் சமூகத்தின் கவலைகள், எதிர்பார்ப்புகள் குறித்து கேட்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை மற்றும் இலங்கையின் மனிதாபி…

    • 0 replies
    • 720 views
  20. சிறிலங்கா அரசு அதன் 'மெகா' அமைச்சரவையை சிறிதாக்கிக் கொண்டால் அதற்கு ஆதரவளிக்க தாம் தயாராக இருப்பதாக ஜே.வி.பி. இன்று அறிவித்திருக்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிலாபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, அமைச்சர்களின் எண்ணிக்கையை அரசு 30 ஆகக் குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் ஆளும் கட்சி பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்ட சோமவன்ச அமரசிங்க, உலகிலேயே மிகவும் பாரியளவிலான அமைச்சரவையைக் கொண்டிருக்கும் அரசு அதனைக் குறைப்பதன் மூலமாகவே மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் வலியுற…

    • 0 replies
    • 361 views
  21. இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்வதற்காக விசேட விசாரணைப் பிரிவொன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நபர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான முனைப்புகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் ஜெர்மனி, சுவிஸர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இலங்கை சென்றவர்கள், தமது உறவினர்களை பார்க்க செல்வதாக கூறி, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த இருவர் சுற்றுலா பயணிகளாக …

  22. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், இரக்கமற்ற அடக்குமுறை மற்றும் செய்திகளை வெளியிடுவதற்கு அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் என்பன சிறிலங்கா மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. போரால் இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் மதிப்பையும் இவை கேள்விக்கு உரியதாக்கி உள்ளன என மன்னிப்புச் சபை கூறுகின்றது. இது தொடர்பில் மன்னிப்புச் சபை இன்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் உள்ள முக்கிய விபரங்கள் வருமாறு: விடுதலைப் புலிகளுடன் இறுதியாக நடந்த சண்டை பற்றிய செய்திகள் வெளிவராமல் சிறிலங்கா அரசு செயற்திறனுடன் தடுத்துவிட்டது. இந்தப் போரில் இருதரப்பினரும் பொதுமக்கள் மீது கனரக…

    • 0 replies
    • 317 views
  23. ஐக்கிய தேசியக் கட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கொண்டுள்ள உறவு கட்சியையே அழித்துவிடும் என்று தேசிய விடுதலை முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச எதிர்வு கூறியிருக்கிறார். பதுளை மாவட்டத்தில் ஜே.வி.பி. நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது போன்ற மோசமான நிலை ஏதும் இல்லை என்று தெரிவித்த விமல், தென்மாகாண சபைத் தேர்தல்களின்போது அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவர்கள் இவ்வாறே மிக மோசமாகத் தோற்கடிக்கப்படுவார்கள் என்றார். மொனறாகல மாவட்டத்திலும் ஜே.வி.பி. அணமையில் மிகமோசமாக அடிவாங்கியிருந்தது. தனது கட்சி ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி.யை விடவும் நன்றாகவே செயற்பட்டுள்ளதாகவும் மொனறாகல மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து தனது கட்சி சார்பில் இரு உறுப்பினர்கள் ஊவா மாகாண சபை…

    • 0 replies
    • 520 views
  24. வன்னியில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளம் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், கொடூரங்களை தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்டுள்ளது. முகாம்களில் உள்ள இளம் பெண்கள் பிரித்தெடுக்கப்பட்டு தற்காலிகக் கூடாரங்களில் சிறிலங்காப் படையினருடன் தங்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்க

    • 0 replies
    • 530 views
  25. தமிழ்.னெற் இணையத் தளத்தில் வெளியாகி இருக்கும் Chinese identify Tamils conducive in breaking up India, என்னும் கட்டுரை நான் இது நாள் எழுதி வந்த விடயத்தையே கூறி இருக்கிறது.இந்தியாவைப் பலமிழக்க அல்லது இந்தியாவுடன் பேரம் பேச சீனா இந்தியாவின் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறப் போராடும் தேசியனங்களின் விடுதலைப் போரட்டங்களை ஊக்குவிக்கும்.இதனைத் தமிழர்கள் பயன்படுத்த வேண்டும். TamilNet, Tuesday, 11 August 2009, 04:36 GMT] A recent article appeared in a Chinese strategic think tank saying “If China takes a little action, the so-called Great Indian Federation can be broken up,” and its argument that China in its own interest and the progress of whole Asia, sh…

    • 15 replies
    • 3.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.