ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
'ஈழத் தமிழரின் எதிர்காலம் இனி எப்படி அமையும்?' என்ற சிந்தனையுடன் அமெரிக் காவின் அட்லாண்டா நகரிலிருந்து லூப்தன்சா விமானத்தில் சென்னையை நோக்கிப் பயணித்த என் கைகளில் வில்லியம் ஷைரர் எழுதிய காந்தியைப் பற்றிய புத்தகம் விரிந்து கிடந்தது. 'வீரம் செறிந்த பயணத்தில் துன்பம் விளைவது, மூக்கு துவாரங்களில் சுவாசம் நிகழ்வது போல்... மிகவும் இயல்பானது. ஆனால், எந்தத் துன்பத்துக்கும் ஓர் எல்லை உண்டு. துன்பத்தின் எல்லையில் நிற்கும்போதும் விழிப்படையாமல், மேலும் அதே பாதையில் பயணத்தைத் தொடர் வது விவேகமற்றது!' என்ற காந்தி யின் விளக்கத்தில் பார்வை படர்ந்தது; யோசனையில் மனம் ஆழ்ந்தது. வார்த்தைகளில் விளக்க முடியாத சோகங்களைச் சுமந்தபடி வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைந்து கிடக்கும் ஈழத…
-
- 3 replies
- 1.4k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் இருந்து முதன் முறையாக அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறிய ராஜா ரட்ணம், தமது 75ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமானதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜா ரட்ணம், கடந்த 1953 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமது 19ஆவது வயதில், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாகச் சென்று குடியேறினார். அமெரிக்காவில் வெளியாகிய முதலாவது இலங்கை செய்தித் தாளையும் கலிபோர்னியா மாநிலத்தில் வைத்து இவர் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழ்., வவுனியா வாக்காளர்கள் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுக்கும்- அதற்காகப் போராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 319 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்காக, தமிழக அரசு சார்பில் 4-வது முறையாக ரூ.15 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. நாளை, எம்.சி.பி. ஆம்ஸ்டர்டாம் என்ற கப்பல் மூலம் இந்த உணவு பொருட்கள் இலங்கைக்கு செல்கிறது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவின் பேரில், தமிழக அரசு சார்பில் கடந்த 3 முறை இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் தவணையாக உணவு பொருட்கள் மற்றும் துணி வகைகள் அடங்கிய சுமார் 10.07 கோடி மதிப்புள்ள பொருட்கள் சென்னை துறைமுகத்த…
-
- 4 replies
- 583 views
-
-
-
காலத்தின் தேவைகருதித் தமிழ் தேசியத்தின் இருப்புக்காக…. ! ------------------------------------------------------------------------------------------ இன்றைய காலத்தின் தேவைகருதி தமிழினத்தினது விடிவுக்காக உண்மையாக உழைப்பவர்களாயின் தமது ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கேயென்று கூறி அவர்களை வெற்றி பெறவைக்க அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் முன்வருவதே நன்மை பயக்கும். தமிழினத்தினது சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் அல்லது ஏற்கமறுக்கும் எந்த ஒரு அதிகாரப்பரவலாக்கமும் தமிழினத்தை வளப்படுத்தாது என்பதே உண்மையாகும். எந்த அதிகாரமும் அற்ற மாநகரசபை தேர்தலைப் பெரிதாகக் காட்டி தம்மைப் பலப்படுத்தித் தமிழ்தேசியத்தைப் பலவீனப்படுத்த முனையும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவாகக் களத்திலே …
-
- 0 replies
- 921 views
-
-
சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் தளபதியும் கூட்டுப்படைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்று கூறப்படும் ஐந்து சிங்கள ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 612 views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடி ரூபா நிதி உதவி அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 665 views
-
-
சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் தளபதியும் கூட்டுப்படைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா செல்வதற்கு தீர்மானித்துள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னை நடத்தும் விதம் குறித்து அதிருப்தி அடைந்திருப்பதாலேயே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரச படையினர் வெற்றி பெற்றதன் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்துப் பயந்த காரணத்தாலேயே மகிந்த, அவரை தரைப் படைத் தளபதி பதவியில் இருந்து நீக்கிவிட்டார் என்றும் அவரது பாதுகாப்பைக் குறைத்துவிட்டார் என்றும் ஆங்கில இணையத் தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகா…
-
- 7 replies
- 1.4k views
-
-
வவுனியா பிரதேசத்தில் தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை அங்கிருந்து வெளியில் எடுத்து விடுவதாக கூறி அரச புலனாய்வு குழுக்கள், காவல்துறை,மற்றும் இராணுவத்தரப்பினை சேர்ந்தவர்கள் பல்வேறு முகாம்களிலும் தமது தமிழ் முஸ்லிம் உளவாளிகளை விட்டுள்ளனர். இது தொடர்பாக நம்பகமான பலரிடமிருந்து பெற்ற தகவல்கள் எம்மிடம் உள்ளது என தடுப்பு முகாம் விழிப்பு குழு தெரிவித்துள்ளது. இங்கு மூன்று முக்கிய குழுக்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றன என்றும் முதலாவது பாதுகாப்பு துறையின் அதி உயர் தலைமையின் கீழ் வவுனியாவில் இயங்கும் ஒட்டுக்குழு மூலமும், இரண்டாவதாக புனர்வாழ்வு மைச்சர் தலைமையிலான முஸ்லிம் குழு, மூன்றாவதாக வசந்ததிற்கு பொறுப்பான முக்கியமான அமைச்சு பொறுப்பிலுள்ளவர் தலைமையிலான …
-
- 0 replies
- 837 views
-
-
செட்டிக்குளம் வைத்தியசாலையை பொறுப்பேற்குமாறு இந்தியா சுகாதார அமைச்சிடம் கோரிக்கை. (வீரகேசரி இணையம் 8/5/2009 12:00:20 PM) செட்டிக்குளம் வைத்தியசாலைப் பணிகளை மீளவும் பொறுப்பேற்குமாறு இந்தியா, சுகாதார அமைச்சிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் யுத்தத்தில் காயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செட்டிக்குளம் வைத்தியாலையின் பணிகளை இந்திய வைத்தியர் குழாம் பொறுப்பேற்றுக் கொண்டது. செட்டிக்குளம் வைத்தியசாலையை பொறுப்பேற்குமாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத், சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு கடிதம் மூலம் கோரியுள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதியுடன் குறித்த வைத்தியசாலையின் பணிகள…
-
- 2 replies
- 650 views
-
-
டிபிஎஸ் ஜெயராஜ் என்ற தமிழ்த்தேசிய விரோதியும் தமிழரது விடுதலைப் போரை கொச்சைப்படுத்துவதையே தனது எழுத்துலகக் கடமையாக மேற்கொண்டுவருபவரது ஆக்கம் வேறொருதிரியில் ஆங்கில மொழியில் இணைக்கப்பட்டிருந்தாலும் உதயன் இணைவலையத்தினது தமிழ் மொழிபெயர்ப்பைத் தனியானதொரு திரியில் இணைத்துள்ளேன். உண்மையிலேயே நாம் எமக்கிடையே தெளிவு பெற வேண்டியது அவசியமாக உள்ளது. பல ஊடகர்கள், ஊடகர்களாகவன்றி ஊடக விபச்சாரகர்களாகவே உள்ளனர். எடுத்துக்காட்டுக்காக நாம் குடிப்பதற்காகத் தண்ணியை அடுப்படியில் உள்ள குழாயில் எடுப்போம். ஆனால் மலசலகூடத்திலிருந்து குடிப்பதற்கு எடுப்தில்லை. ஆனால் இரண்டுக்குமான தண்ணீர் ஒரே குழாய் இணைப்பூடாகவே செல்கிறது. எந்தத் தண்ணியைப் பருக வேண்டுமென்பதை நாமே தீர்மானிக்கிறோம். கே.ப…
-
- 31 replies
- 5.9k views
-
-
தமிழர்களின் அடிப்படை உரிமைக்குப் போராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வாக்காளர்களிடம் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. எதிர்வரும் சனிக்கிழமை (08.08.09) வாக்குப் பதிவு இடம்பெறும். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 408 views
-
-
வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு என வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளத்தில் அமைக்கப்பட்ட இந்திய கள மருத்துவமனையை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு சிறிலங்கா அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகர சபைகளுக்கு நடத்தப்படவுள்ள தேர்தல்கள் குறித்த செய்திகளைச் சேகரிப்பதற்கு அனைத்துலக ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் அப்பகுதிகளுக்குச் செல்வதற்கான அனுமதி தொடர்பில் இன்னும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 311 views
-
-
சிறிலங்காவின் தமிழ் இன அழிப்புக்கு சீன மக்கள் குடியரசு வழங்கி வரும் ஆயுதம், நிதி மற்றும் இராஜதந்திர உதவிகளை கண்டித்து அமெரிக்க, கனடிய தமிழர்களினால் நேற்று முன்நாள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 334 views
-
-
ஊவா மாகாண சபை உட்பட யாழ்., வவுனியா உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில் அடுத்துவரும் சில நாட்களில் வன்முறைச் சம்பவங்கள் மோசமடையலாம் என தேர்தலைக் கண்காணிப்பதற்கான 'பவ்ரல்' அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடைந்திருப்பதையிட்டுச
-
- 0 replies
- 413 views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நடைபெறவிருக்கும் யாழ். மாநகர சபைத் தேர்தலிலும் வவுனியா நகரசபைத் தேர்தலிலும் தமிழ் மக்களின் அரசியல் அடையாளமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது. சிங்கள ஆட்சியாளர்களின் நேர்மையற்ற அரசியல் கொள்கைகளில் இருந்தும், இன அழிப்பு நடவடிக்கைகளில் இருந்தும் தம்மை மீட்டுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் நடத்திய ஆயுதப்போராட்டம் அனைத்துலக, பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் கைகோர்ப்போட…
-
- 0 replies
- 385 views
-
-
வெளிநாட்டுக்கு விமானம் ஏற இருந்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களை வாலிபர் ஒருவர் திடீரென பறித்துச் சென்றது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிய மனமில்லாத காதலர்கள் நடத்திய நாடகம் என பின்னர் தெரியவந்தது. இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் xxxxx சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர். மனைவி xxxx (45), மகன் xxx (23), மகள் xxx (19) ஆகியோருடன் வசித்து வருகிறார். சுவிட்சர்லாந்தில் பள்ளி ஆசிரியையாக விஜிதா பணியாற்றுகிறார். பிள்ளைகளுடன் xxxx ஒரு மாதம் முன்பு இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். சென்னை போரூரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அதே பகுதியில் வசிப்பவர் xxxx (24). சென்னையில் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரும் யாழ்ப்பாணத்தை சேர…
-
- 8 replies
- 2.3k views
-
-
என்னதான் மறுக்கின்றபோதும் சிறிலங்காப் படையினரும் அரசைச் சேர்ந்தவர்களும் முழுத் தமிழர்களையும் எதிரிகளாகவே பார்க்கின்றனர் என்று சரத் குமார என்கிற சிங்கள ஊடகவியலாளர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். உலக பொதுவுடமைவாதிகள் இணையத்தளத்தில் இலங்கையின் இன்றைய கள நிலவரம் குறித்து எழுதியுள்ள கட்டுரையின் விபரம் வருமாறு: உள்நாட்டில் கடும் எதிர்ப்பு - குறிப்பாக தமிழர்களிடம் இருந்து எதிர்ப்புத் - தெரிவிக்கப்படுகின்றபோதும் இறுதிக்கட்டப் போரின்போது சிறைப்பிடிக்கப்பட்ட 3 லட்சம் தமிழ் மக்களையும் அரசு தொடர்ந்து முகாம்களில் தடுத்து வைத்திருக்கப்போகிறது. அந்த மக்களை விடுவிக்குமாறு அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கையை, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புறந்த…
-
- 0 replies
- 451 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1,500 பேர் நாளை அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள அனுப்பப்பட உள்ளனர். அவர்கள் தொடர்பிலான பாதுகாப்புச் சோதனைகளை அதிகாரிகள் முடித்து விட்டதை அடுத்து, அவர்களை மீளக்குடியமர்த்துவது என்று அரசு முடிவு எடுத்துள்ளதாக மீள்குடியமர்வுத் துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1,445 பேரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 54 குடும்பங்களின் உறுப்பினர்களுமே சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர். இதற்கான அறிவுறுத்தல்கள், சிறிலங்கா அரச தலைவரின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்சவினால் எமக்கு வழங்கப்பட்டுள்ளனர். இந்த 1,500 பேரும் கிழக்கும் மாகாணம் மற்றும் யாழ்ப்பாணத்தைச்…
-
- 1 reply
- 397 views
-
-
தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஈழத் தமிழர்களுக்கும் மேற்குலக நாடுகளில் வழங்கப்படுவது போன்று அகதித் தகுதிநிலை வழங்கப்பட வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் தலைவர் சிறீ சிறீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். வீடுகள் வைத்திருக்கின்றனர். குறிப்பாக அவர்களின் வாழ்க்கை நிலை நன்றாக இருக்கின்றது. ஆனால் 1983 இல் இருந்து தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மட்டும் அகதி முகாம்களில் சோர்ந்து போய்க் கிடக்கின்றனர். அவர்களும் இந்த நாட்டுக்குள் படிப்படியாக உள்வாங்கப்பட வேண்டும் என்றார் ரவிசங்கர். சிறீ சிறீ ரவிசங்கர் தமிழ்நாட்டில் ஒருவார கால சுற்றுப் பயணம் …
-
- 0 replies
- 426 views
-
-
யாழ் நகரில் இடம்பெறவுள்ள மாநகரசபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் அரைவாசிக்கும் மேல் பிரதம தபாலகத்தில் விநியோகிக்க முடியாமல் தேங்கியுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் கணேஸ் தெரிவித்துள்ளார்.தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மொத்த வாக்காளர்களில் அரைவாசி மக்களே தமது வாக்காளர் அட்டைகளைப் பெற்றுள்ளனர். மிகுதி அரைப்பங்கினரின் வாக்காளர் அட்டைகள் அவர்களுக்கு விநியோகிக்க முடியாதுள்ளது. யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் மொத்தம் 94 ஆயிரத்து 86 வாக்களர்களின் வாக்காளர் அட்டைகளும் மக்களுக்கு விநியோகிக்கவென தபால் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த போதும் 54 ஆயிரத்து 339 வாக்காளர் அட்டைகள் …
-
- 0 replies
- 492 views
-
-
மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் ஒருங்கிணைப்புச் செயலர் சான் ஜெயசிங்க கடத்தப்பட்டுள்ளார். வெள்ளை வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத சிலரால் அவர் கடத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுகின்றது. அவரது தற்போதைய நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை. சான் ஜெயசிங்க, அவரது பிரதேசமான களுத்துறை மாவட்டத்தில் உள்ள மத்துகமவில் பாதாள உலகக் குழுவின் தலைவராகச் செயற்பட்டவர் என்று ஆங்கில இணையத் தளம் ஒன்று தெரிவிக்கின்றது. அதேசமயத்தில் மனித உரிமைகள் அமைச்சரின் செயலாளராகவும் அவர் செயற்பட்டார் என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. அண்மைக் காலமாக, சிறிலங்கா அரசு பாதாள உலகக் குழுவினருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 416 views
-