Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் : சந்திரிக்கா வீரகேசரி இணையம் 8/1/2009 12:35:37 PM - நமது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இயற்கையாகவே பெண்கள் மிகவும் சிறந்த ராஜதந்திரிகளாகவும், பேச்சுவார்த்தை நடத்தக் கூடியவர்களாகவும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 13 வீதமான பெண்களே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 'இந்திய அரசியலில் பெண்களின் வாக்குகள்' என்ற தொனிப்பொருளில் இந்தியாவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகின் ஏனை…

  2. சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் படையினர் தவிர்ந்த வேறு எவரும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கிழக்குப் பிராந்திய பிரதி காவல் மா அதிபர் எடிசன் குணதிலக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 335 views
  3. சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போது எல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள்; செய்வார்கள். அவர்கள் முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி பற்றிப் பேசினார்கள். இப்போது அதனைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்றே எதிர்காலத்தில் அதுவும் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய்விடும். சிறிலங்கா அரசு தமிழர்கள் விடயத்தில் பாராமுகமாக இருந்தால் கடந்த 30 வருடங்களில் அது சுற்றிவந்த சுழற்சியை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டி இருக்கும் என்று இந்தியாவின் அரசியல் ஆய்வாளரும் இலங்கை அரசியல் பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான கேணல் ஹரிகரன் இவ்வாறு தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார். இந்தியப் பட…

    • 0 replies
    • 515 views
  4. சிறிலங்காவில் மேலும் இரண்டு பேருக்குப் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்நாள் உறுதி செய்யப்பட்ட இந்த இரண்டு பேருடன் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இறுதியாகக் கண்டறியப்பட்ட இருவரும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் தொடர்பான முதல் அறிக்கை ஜூன் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. அவுஸ்திரேலியரான 8 வயது சிறுவன் ஒருவனே கண்டறியப்பட்ட முதல் நோயாளி. அவனது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கும் நோய்த் தொற்று இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது…

    • 0 replies
    • 356 views
  5. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நடைபெறலாம் என்று அதனை உருவாக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 374 views
  6. தாயகத்தில் வதைமுகாமில் வாடும் மக்களின் விடுதலைக்கும், மீள் குடியேற்றங்களுக்கு ஆவன செய்யக் கோரியும் தமிழ் மக்களுக்கான நியாயபூர்வமான உரிமைகளுக்ககாக உடனடியாக செயற்படக் கோரியும், கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியுவில் அமைந்திருக்கும் அமெரிக்க துணைத்தூதரகத்தின் முன்னால் தொடர்ந்து கனெடியத் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்புக் போராட்டம் 100வது நாளைத் தாண்டி நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளாந்தம் 24 மணிநேரமாகத் தொடரும் இக்கவனயீர்ப்புப் போராட்டம் யூலை மாதம் 31ம் நாள் 100வது நாளை பூர்த்தியாக்கி மேலும் தொடர்கிறது. இனிவரும் காலங்களிலும் இக்கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்ந்தும் நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 9 மணிக்கு தீபம் ஏந்தி…

  7. இடைத்தங்கல் முகாம் என்ற பெயரில் ராஜபட்சேவின் இனவெறி அரசு அமைத்துள்ள திறந்தவெளிச் சிறைச்சாலைகளில், கம்பிவேலிகளுக்குப் பின் அடைத்துவைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களின் நிலை நாளுக்குநாள் மோசமாகிவருகிறது. வாரத்துக்கு 1400 பேர் இறந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறது இலண்டனிலிருந்து வெளியாகும் "டைம்ஸ்" பத்திரிகை. இந்த வேகத்தில் போனால் மொத்த சனமும் செத்து முடிக்க நீண்டகாலமாகாது. நாளைக்குப் பிணமாக்குவதற்காக இன்றைக்கு தமிழர்களுக்கு நடைப்பிணப் பயிற்சி அளிக்கிறது சிங்கள அரசு. மருந்து மாத்திரை கொடுக்காமல் இழுத்தடிக்கிறது. குடிநீருக்காக கியூவில் நிறுத்துகிறது. சோற்றுக்காகக் கையேந்த வைக்கிறது. பசியோடுகூட கியூவில் நின்றுவிடலாம் அவசர அவசரமாக கழிப்பறைக்குப் போகும்…

  8. ஈழத் தமிழர்கள், அவர்களின் வேட்கையான தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இந்திய நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார். இந்தியாவில் இருந்து வெளிவரும் 'டெக்கான் குரோனிக்கல்' நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், "பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை" எனவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாக வைகோ, பழ.நெடுமாறன் …

    • 3 replies
    • 790 views
  9. எல்லாவற்றுக்கும் சட்டம் உண்டு... சண்டை போடுவதற்கும்! வெட்டுக் குத்துக்கும் விதிமுறைகள் வைத்திருக்கிறோம். அதை 'மீறாத' தாக்குதல்கள் முறையானதாகக்கூட அங்கீகாரம் பெற்றுவிடும். ஆனால், இலங்கை அரங்கேற்றி இருக்கும் யுத்தம் உலகின் அத்தனை தார்மீக நெறிமுறைகளையும் கொன்று குவித்து ஓய்ந்திருக்கிறது! 30 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் முடிவாக புலிகள் அமைப்பு கொன்று தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால், மனித உரிமை பேசுவோர், சமாதானம் குறித்துக் கவலைப்படுவோர், அமைதிக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என அனைவரும் 'இலங்கையில் நடந்தது இந்நூற்றாண்டின் மிகப் பெரிய படுபாதகச் செயல்!' எ…

  10. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் சிறிலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 435 views
  11. நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான விமானப்படையினரின் விமானசேவைக் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, விமானப் படையினரின் விமானத்தில் பயணிக்கும் பொதுமக்களிடமிருந்து, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 17 ஆயிரம் ரூபா கட்டணம் அறிவிடப்படவிருப்பதாகவும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அத்துடன், தினமும் 5 தடவைகள் விமானப்படையினரின் விமானசேவை நடத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான விமானப் படையினரின் விமானசேவை கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விமானப்படையினரின் விமானசேவையானது வாரத்த…

  12. எல்லாவற்றுக்கும் சட்டம் உண்டு... சண்டை போடுவதற்கும்! வெட்டுக் குத்துக்கும் விதிமுறைகள் வைத்திருக்கிறோம். அதை 'மீறாத' தாக்குதல்கள் முறையானதாகக்கூட அங்கீகாரம் பெற்றுவிடும். ஆனால், இலங்கை அரங்கேற்றி இருக்கும் யுத்தம் உலகின் அத்தனை தார்மீக நெறிமுறைகளையும் கொன்று குவித்து ஓய்ந்திருக்கிறது! 30 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் முடிவாக புலிகள் அமைப்பு கொன்று தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால், மனித உரிமை பேசுவோர், சமாதானம் குறித்துக் கவலைப்படுவோர், அமைதிக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என அனைவரும் 'இலங்கையில் நடந்தது இந்நூற்றாண்டின் மிகப் பெரிய படுபாதகச் செயல்!' எ…

  13. பொட்டம்மான் தமது முற்றுகைக்குள்ளிருந்து தப்பி விட்டார் - ராணுவம் அரசுக்கு அறிவிப்பு ! Military informs government that Pottu Amman is unharmed 2009-07-30 | 4.40 PM Military sources reportedly say that although the security forces managed to defeat the LTTE and kill its leader Velupillai Prabhakaran and several other senior leaders of the organization, its intelligence unit head, Pottu Amman, had managed to escape unharmed. One of LTTE’s Eastern leaders, Ram had telephoned Karuna Amman during the final stage of the war and informed that he was ready to surrender to the security forces and requested for safe passage to two senior LTTE l…

  14. வணக்கம் அனைவருக்கும், எங்கள் மக்களின் இன்றைய அவல நிலையை மையப்படுத்தி, யேர்மன் மொழியிலான செய்தித்தாள் ஒன்றை (சிறப்பிதழாக) வெளியிட உள்ளோம். இது தொடர்பாக யாழ் இணையத்தில் நான் ஏற்கனவே இணைத்த விபரத்தை மீண்டும் கீழே இணைத்துள்ளேன். மீண்டும் இதனை இங்கே இணைப்பதற்கு காரணம் உங்களின் ஒத்துழைப்பு வேண்டியே. இரண்டு விடயங்களில் உங்களின் (குறிப்பாக யேர்மன் வாழ் தமிழ் மக்கள்) ஒத்துழைப்பு எமக்குத் தேவை. 1. செய்தித்தாள் அச்சிடுவதற்கான பணத்தை இன்னும் எம்மால் முழுமையாக புரட்டமுடியவில்லை. முடிந்தவர்கள் உங்களால் இயன்ற சிறிய பங்களிப்பாயினும், கீழே குறிப்பிட்டுள்ள வைப்பகக்கணக்குக்கு அனுப்பி உதவலாம். 2. செய்தித்தாளை உங்கள் நகரங்களில் விநியோகிப்பதற்கான உதவி. செய்தித்தாள் இலவசம…

  15. மகிந்தவுக்கு மனைவி வீசும் மரணக்கயிறு - வி.சேந்தன் - தமிழினத்துக்கு எதிராக கடும்போர் நடைபெற்று வந்ததால் இவ்வளவு காலமும் வெளியில் புலப்படாமல் இடம்பெற்றுவந்த இன்னொரு போர் சிறிலங்காவில் தற்போது மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறது. அதுதான் மகிந்த குடும்பத்துக்குள் இடம்பெறும் அதிகாரப்போட்டி. குடும்பத்துக்குள் நடைபெறும் இந்த குடுமிப்பிடி சண்டை. இது நாளையே மகிந்தவுக்கு மரணக்கயிறாக மாறப்போவது நிச்சயம் என்று மகிந்தவின் குடும்ப வட்டாரங்களே முணுமுணுக்க தொடங்கிவிட்டன. இந்த குடும்ப உட்பூசல் எவ்வாறு ஆரம்பித்து ஆரோகணித்தது என்பதை ஆராய்ந்தால், அங்குதான் மகிந்தவின் மனைவியின் அரசியல் ஆசையும் அவரது உள்வீட்டு நடவடிக்கைகளும் தெரியவரும். மகிந்தவின் அரசியல…

  16. காணும்பொழுதெல்லாம்உணர்வாளர

    • 0 replies
    • 1.9k views
  17. சிறப்புச் செய்தியாளர் 31/07/2009, 15:29 சிங்களப் பிரதேசத்திற்கு பாதையிடும் இந்தியாவின் நடவடிக்கை தென் தமிழீழத்தில் 66 மில்லியன் ரூபா செலவில் இந்தியா அமைத்துவரும் தொடரூந்துப் பாதைகள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள “ரயில்பஸ்” எனப்படும் தண்டவாளத்தில் இயங்கும் பேரூந்து சேவை, பொலனறுவை மாட்டத்தின் ஊடாக இடம்பெறவுள்ளது. இதனால் மட்டக்களப்பு – திருகோணமலைக்கு இடையில் பயணிக்கும் தமிழ் மக்கள் சிங்களப் பிரதேசத்தின் ஊடாகப் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்கும் மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளபட்டுள்ளதுடன், மேலும் பல குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு வரு…

  18. செய்தியாளர் தாயகன் 31/07/2009, 15:35 சிறீலங்காவிற்கு மேலதிக உதவிகள் செய்ய தயார் - இந்தியா வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களிற்கு மேலதிக உதவிகளை வழங்க, தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களிற்கென இந்திய மத்திய அரசு 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 500 கோடி ரூபாவையும், தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாவும் வழங்கியுள்ளன. 500 கோடி ரூபாவிற்கு மேலதிகமாக நிதியுதவி வழங்க, பிரதமர் மன்மோகன் சிங் தயாராக இருப்பதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 15ஆம் நாள் எகிப்தில் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகச் சந்தித்தபோது, இடம்பெயர்ந்து மூன்று இ…

  19. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படும் சிங்கள மருத்துவர் ஒருவர் வெளிநாடு செல்ல முயற்சித்தபோது கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  20. நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதில் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் பங்கு உண்டு என்று தெரிவித்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன், தமிழ் மக்களின் அரசியலில் நாடு கடந்த அரசே அதியுயர் அமைப்பாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூஜேர்சி மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.07.09) அமெரிக்க இலங்கை தமிழ் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'உயிர்த்தெழுவோம்' நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு, அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை [united States Political Action Counvil], அமெரிக்க தமிழ் இளைய…

    • 4 replies
    • 887 views
  21. சிங்கள கடற்படையின் தொடர் தாக்குதலால் ராமேசுவரம் மீனவர்கள் ராமேசுவரம் கடற்பகுதியில் மீன் பிடிக்க இயலாமல் உள்ளது. அவர்களை காக்கும் முயற்சியில் இந்திய தமிழக அரசும் அக்கறை காட்டுவதில்லை. இந்நிலையில் நாகை பகுதியில் மீன் பிடிக்க சென்ற இவர்களை நாகை மீனவர்களும் எதிர்ப்பதால் அகதியாக உள்ளனர். இலங்கையில் புலிகள், ராணுவம் இடையே நடைபெற்ற போருக்குப் பிறகு அந்நாட்டுக் கடற்படையினர் கடல் வழியாக மீண்டும் புலிகளுக்கு தொடர்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால், இலங்கை வடமேற்கு கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும், தாக்கியும் வருகின்றனர். ஜூன், ஜூலை மாதங்களில் ராமேசுவரம் மீனவர்களிடம் இருந்த…

    • 1 reply
    • 537 views
  22. ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க டேலவின் ஏற்பாட்டில் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இருந்து பால் குடிமறவாத இரு கொம்பன் யானைக் குட்டிகள் கடந்த சனிக்கிழமை அவற்றின் தாய் யானைகளிடம் இருந்து பலவந்தமாக பிரிக்கப்பட்டு கண்டிக்குக் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. தலதாமாளிகையின் மத வைபவங்களில் பயன்படுத்துவதற்கு கொம்பன்யானைகள் போதாமல் இருப்பதால் சிறுபராயத்தில் இருந்தே பயிற்சியளித்து வளர்ப்பதற்காக இரு குட்டிகளையும் சரணாலயத்தில் இருந்து கொண்டுவந்ததாக தியவதன நிலமே தரப்பில் கூறப்படுகிறது. அவரின் வேண்டுகோளுக்கு இணங்க விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குட்டிகளை சரணாலயத்தில் இருந்து வெளியே கொண்டு செல்வதற்கு உத்தரவிட்டு ஒத்துழைத்ததாகவும்…

  23. யாழ்ப்பாணம் ஓர் சுற்றுலா புரியாக மாற்றப்பட உள்ளதாக சுற்றுலா மேம்மாட்டு அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ கரையோரப் பகுதி சுற்றுலாத் தள அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் யுத்த களமாக அன்றி யாழ்ப்பாணத்தின் பல்வகைமையை பிரச்சாரம் செய்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கிலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய அரசாங்கம் அதிக நாட்டம் காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர அதிக ஆர்வம் காட்டுவதாகவும், இதன் மூலம் சுற்றுலாப் பயணி…

    • 12 replies
    • 1.4k views
  24. அரசு என்ற போர்வையில்...............! தமிழினத்தைப் பயங்கரவாதிகள் என்ற முத்திரையோடு ஆங்காங்கு அடைத்துவிட்டுத் தமிழினத்தினது அனைத்து வளங்களையும் சிங்களப் பயங்கரவாதம் அரசு என்ற போர்வையில் சுரண்டுகிறது. ஆனால் அந்தப் பூமியின் சொந்தக்காரர்களான எமது சகோதர சகோதரிகள் செய்வதறியாது இரத்தக் கண்ணீர்வடித்தவாறு நடைபிணமாக இருக்கிறார்கள். திருகோணமலையென்ன இனி சிங்களவர்கள் இரணைமடுவிலும் மீன்வாடியமைப்பார்கள். இந்த நிலையிலே நாங்கள் ஒரு சிலநாள் கோசங்களோடு ஒய்ந்து விடப்போகிறோமா என்ற கேள்வியே புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழரதும் கேள்வியாக நிற்கிறது. இந்தத் திட்டமிட்ட பயங்கரவாத அரசினது நடவடிக்கைகளை ஏற்று ஒத்தூதும் அரசுகளுக்கு மனிதர்கள் பற்றியோ மனிதாபிமானம் பற்றியோ அக்கறையேதும் கிடையாது. தம…

    • 0 replies
    • 843 views
  25. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் சர்வாதிகார ஆட்சி முறைமை ஒன்றை நோக்கி நகர்வதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு தன்னார்வ தொண்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் ஓர் கட்டமாகவே அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல்களை கட்டம் கட்டமாக நடாத்தி எதிர்க்கட்சியை வலுவிழக்கச் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுயாதீன தேர்தல் ஆணைக்குழு உருவாக்கப்படும் வரையில் இலங்கையில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களை எதிர்பார்க்க முடியாது என பிரபல மனித உரிமை ஆர்வலர் நிமால்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 17 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியல் சாசன சபை உருவாக்கப்பட்டு ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்கள் விரைவில் நிறுவப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.