ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
நான்காவது ஈழப்போரின் போது தென்பகுதியில் உள்ள பொருளாதார மற்றும் இராணுவ இலக்குகள் மீது வான் புலிகள் நடத்திய அனைத்துத் தாக்குதல்களையும் இந்தியா வழங்கிய 'இந்திரா' கதூவீகள் படம் பிடித்திருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பான முறையில் தப்பிச் சென்றமையால் - அதற்கு 'இந்திரா' கதூவீகளின் குறைபாடுகளே காரணம் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் இதற்கு அந்த கதூவீகளின் குறைபாடுகள் காரணம் அல்ல எனவும் அங்கு ஏனைய குறைபாடுகளும், நெருக்கடிகளும் இருந்தமையே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 576 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மொனறாகல மற்றும் அதனையடுத்துள்ள காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியிருக்கும் சிறிலங்கா அரசு, இந்தப் பகுதியில் மறைந்திருப்பதாக கருதப்படும் விடுதலைப் புலிகளின் தளபதிகளான ராம், நகுலன் உட்பட மற்றும் பலரைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஏப்ரல் 12, 13 ஆம் நாட்ளில் மொனறாகலவில் இடம்பெற்ற சில சம்பவங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கும் மொனறாகல பிரிவு மூத்த காவல்துறை அத்தியட்சகர் அமரசிறி சேனரட்ன, இப்போது மொனறாகல பகுதியில் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனவும் குறிப்பிடுகின்றார். "இருந்தபோதிலும் விடுதலைப் புலிகளின் தளபதிகளான ராம், நகுலன் உட்பட புலிக…
-
- 0 replies
- 768 views
-
-
சிறிலங்கா அரசு மகிழ்ச்சியாகவும் நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கின்றது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்கு தூதுவர்களாகச் செயற்படுகிறார்கள்? என 'தினமணி' நாளேடு சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 348 views
-
-
இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக என அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளைக் குறைக்குமாறு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சிறிலங்கா அரசு உத்தரவிட்டிருப்பது ஒரு பாரதூரமான விடயமாகும் எனக் குற்றம் சாட்டியிருக்கும் 'லண்டன் ரைம்ஸ் ஒன்லைன்', "தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யும் பணியை தொடங்கும் வரையில் சிறிலங்காவை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக 'ரைம்ஸ் ஒன்லைன்' இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள கட்டுரையில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "போர்க் குற்றங்கள் தொடர்பாக தவறான தகவல்களைத் தெரிவிப்பதற்கு மருத்துவர்களை நிர்ப்பந்திக்கும் வெறுக்கத்தக்க சம்பவங்கள் சில நட…
-
- 2 replies
- 629 views
-
-
இறுதிகட்டப் போரில் 300 பேரே கொல்லப்பட்டுள்ளனர்: அரச தடுப்புக் காவலில் உள்ள வன்னி வைத்தியர்கள் திகதி: 09.07.2009 // தமிழீழம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் கடந்த நான்கு மாதங்களில் 700 வரையான மக்களே கொல்லப்பட்டும், 1300 வரையான மக்களே மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக சிறீலங்காவினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் வன்னியில் கடமையாற்றிய ஐந்து மருந்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை பிற்பகல் கொழும்பில் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், கிளிநொச்சி சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி முல்லைத்தீவு சுகாதார பணிப்பாளர் வரதராஜா, வைத்தியர் சிவபாலன், வைத்தியர் ரங்கநாதன், வைத்தியர் இளஞ்செழியன்,…
-
- 9 replies
- 1.4k views
-
-
அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் பெரும் தொகையான கப்பப் பணத்துக்காக கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் பின்னர் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கின்றது. கொக்குவிலில் உள்ள தனது இல்லத்தில் 26 வயதான இந்த இளைஞர் அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டார். கடத்திச் செல்லப்பட்ட பின்னர் அவரது விடுதலைக்காக பெரும் தொகையான பணம் கப்பமாகக் கோரப்பட்டு அவரது உறவினர்களுக்குச் செய்தி அனுப்பப்பட்டது. இராணுவப் புலனாய்வுத்துறையினரின் ஆதரவுடன் செயற்படும் துணை இராணுவக் குழு ஒன்றே இந்தக் கடத்தலை மேற்கொண்டதாக யாழ். வட்டாரங்கள் தெரிவித்தன. இதனையடுத்து, செல்வாக்கு மிக்க சிலர் மேற்கொண்ட முயற்சிகளையட…
-
- 0 replies
- 447 views
-
-
நான் பிரபாகரனாக இருந்தால் கொரில்லா யுத்தத்திற்கு மாறியிருப்பேன் மகிந்த கூறுகிறார் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமரச பேச்சுக்கு ஒரு போதும் வரமாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது.... இந்தியாவின் தேசியப் பத்திரிகையான ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார், இந்த நேர்காணலில் லலித் வீரதுங்கவும் உடனிருந்து சில கருத்துக்களை ஹிந்து ராமிடம் பகிர்ந்துள்ளார் ‘த ஹிந்து’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் என்.ராமுக்கு இலங்கை ஜனாதிபதி கடந்த ஜூன் 30 ஆம் திகதி அளித்த பேட்டியை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இங்கு தருகிறோம். என்.ராம்: 2005 இல் நீங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்த…
-
- 4 replies
- 1.4k views
-
-
புலிகள் தான் தடை! GTN ற்காக சங்கரன் சித்தார்த்தன் http://www.globaltamilnews.net/tamil_news....11722&cat=5
-
- 1 reply
- 2k views
-
-
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் "பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களுக்கு பேரிழப்பு" என புலிகளின் அழுத்தம் காரணமாக வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசின் மீது குற்றஞ் சுமத்திய சர்வதேசம், தற்போது வைத்தியர்கள் உண்மையை ஒப்புக் கொண்டுள்ள நிலையில் என்ன கூறப் போகின்றது? என்று... இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு யுத்தத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளின்போது பொது மக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது என பாதுகாப்பு வலயத்தில் இருந்த வைத்தியர்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இதனால் பல அசெளகரியங்கள் ஏற்பட்டன.…
-
- 5 replies
- 773 views
-
-
செய்தியாளர் நிலாமகன் 10/07/2009, 21:35 தமிழர் தாயக வளங்களைப் பயன்படுத்தும் காலம் கனிந்துள்ளது - மகிந்த ராஜபக்ச தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் உள்ள வளங்களைப் பயன்படுத்தும் காலம் கனிந்து வந்துள்ளது என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். பிலிந்தனையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக வடக்கு-கிழக்கில் காணப்பட்ட கனிய வளங்களைப் பயன்படுத்த முடியாதிருந்தது. நாட்டின் அபிவிருந்திக்கு தடையாக இருந்தவற்றை அழிவித்துவிட்டோம். தற்போது அவற்றைப் பயன்படுத்தக்கூடிய காலம் கனிந்து வந்துள்ளது எனக் கூறியுள்ளார். pathivu
-
- 1 reply
- 696 views
-
-
-
- 3 replies
- 1.8k views
-
-
..பேசாமல் பேச வைப்பார் பிரபாகரன் Wednesday, 03 June 2009 20:09 paranthan இலங்கை செய்தி .எங்கள் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களுக்கு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் அவர்களுடையதும் உங்களதும் செயற்பாடுகளை அன்றிலிருந்து இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண பொதுமகனின் வேதனை மிகுந்த வணக்கம்.தமிழ் ஈழ தேசியத்தலைவர் கொல்லப் பட்டார் என்பதை நாங்கள் நம்பவில்லை என்ற உண்மையை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் கூற்றுப் படியும் உங்கள் எஜமானர்களான சிங்கள ராணுவத்தின் கூற்றுப் படியும் அவர் இல்லை என்கிற சூழலிலேயே உங்களுடன் பேச விரும்புகிறேன். சரணடைய முன்வந்த புலிகளின் தலைமை நயவஞ்சகமாக கொல்லப் பட்டது என்று …
-
- 2 replies
- 2.3k views
-
-
ஈழப்பிரச்சனையில் உலக நாடுகள் ஆதரவு கிடைக்காததற்கு இந்திய அரசுதான் காரணம்: பழ.நெடுமாறன் திகதி: 10.07.2009 // தமிழீழம் ஈழத்தமிழர் பிரச்சனையில் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமல் பின்னடைவு ஏற்பட்டதற்கு மத்திய அரசின் முட்டுக்கட்டைதான் காரணம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். சென்னையில் தினப்புலரி நாளிதழின் முதன்மை ஆசிரியர் ஜோசப் கென்னடி எழுதிய ‘அநீதியின் காவலர்கள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பழ.நெடுமாறன், ஈழத்தமிழர் பிரச்சனையில் பின்னடைவு ஏற்பட்டதற்கு சர்வதேச அளவில் ஆதரவை திரட்ட முடியாததே காரணமாகும். இதற்கு மத்திய அரசின் முட்டுக்கட்டையும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அதன் நிலைப…
-
- 0 replies
- 465 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 10/07/2009, 19:52 கரையோரப் பாதுகாப்பு கோத்தபாயவின் கீழ் சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறீலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இந்தச் சட்டமூலத்தைச் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து அதன் மீதான விவாதம் இடம்பெற்று, சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கரையோர பாதுகாப்புத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை, அதற்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய சட்டத்தில் கடலோரப் பிரதேசங்களில் நீர் எல்லை, பொருளாதார …
-
- 0 replies
- 433 views
-
-
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஒரு பாரம்பரிய ஆங்கில நாளிதழில் தொடர்ந்து வந்த பேட்டியும், பல வாரப் பத்திரிக்கைகளில் வருகின்ற பரபரப்பு கட்டுரைகளும், தமிழ்நாட்டின் தலைவர்கள் சிலரின் பேச்சும் ஈழத் தமிழர்கள் மட்டுமின்றித் தமிழக மக்களின் மனத்திலும் ஒரு கருத்தை ஆழமாக பதிய வைக்கும் முயற்சியாக தெரிகின்றன. அது இதுதான்: "தமிழீழ விடுதலைப் போராட்டம் செத்துவிட்டது" ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டுவிட்டது’, ‘இதற்கு மேலும் தமிழீழ விடுதலை என்பது கனவு’, ‘ஈழத் தமிழர்கள் ஏதாவது ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டு போவதுதான் ஒரே வழி’, ‘இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமெனில் அதனை சிங்கள மக்களின் மூலம் தான் செய்ய முடியும்’ என்று மு…
-
- 1 reply
- 511 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவி பற்றிய அறிக்கை – 09 ஜூலை 2009 இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 6 வாரங்கள் ஆன நிலையில் ஐ.நா அமைப்பானது வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை தடுப்பு முகாம்களில் தமது சேவையைத் தொடந்து செய்து வருகிறது. மிகப்பெரிய தொகையான அதாவது கிட்டத்தட்ட 280,000 மக்கள் தங்கியுள்ள முகாம்களில் அநேக வசதிகள் மேம்படுத்தப்படவேண்டி இருக்கின்றபோதும் சில வசதிகள் சீர் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம், இலங்கையின் சகல பாகங்களிலும் உள்ள மக்கள் மற்றும் ஏனைய அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை கொடுத்த உதவிப் பொருட்களை முகாமில் உள்ள மக்களுக்கு ஐ.நா அமைப்பு விநியோகித்து வருகிறது. பெரும்தொகை மக்கள் உள்ள இந்த முகாம்களில் சில சிக்கல்கள் உடனும் தீர்க்கப்படக்கூடியவை எனினும் பல சிக…
-
- 0 replies
- 518 views
-
-
இனப் படுகொலையாளர்களை அம்பலப்படுத்துவோம். மறைக்கப்பட்ட கொலைகாரர்களான தமிழினப் படுகொலையாளர்களது ஐரோப்பிய வருகையையும் அவர்களது மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்துவோம். http://www.pathivu.com/news/2603/69//d,art_full.aspx
-
- 0 replies
- 1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காவல் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது ஏற்பட்ட பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக தாம் ஏற்கனவே தெரிவித்த எண்ணிக்கையை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய நாடுகள் சபை திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 375 views
-
-
சிறீலங்காவில், செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளுக்கு தடை திகதி: 10.07.2009 // தமிழீழம் சிறீலங்கா இராணுவதிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்திருப்பால் அனைத்துலக செஞ்சலுவைச் சங்கம் மேற்கொண்டுவந்த நடவடிக்கைகளை குறைக்குமாறு சிறீலங்கா அரசு அந்த அமைப்பை கேட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்: விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா இராணுவத்திற்கும் இடையிலான போர் தீவிரமடைந்திருந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு முதல் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வடக்கு கிழக்குப் பகுதியில் தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அப்போது முதல் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரசன்னம் நிரந்தரமாகவுள்ளது. தேவைக்கு ஏற்ற வகையில் தனது …
-
- 0 replies
- 434 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மற்றும் 36 பேரும் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்டதாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
ஒரு தமிழ் வீடும் தாக்கப்படவில்லை எந்தவொரு தமிழரும் அச்சுறுத்தப்படவில்லை [09 - July - 2009] [Font Size - A - A - A] இராணுவ வெற்றியைத் தொடர்ந்து ஒரு தமிழ் வீடும் தாக்கப்படவில்லை. எந்தவொரு தமிழரும் இம்சைப்படுத்தப்படவில்லை. தமிழர்களின் குடும்ப கலாசாரத்தை நான் எப்போதும் மதிப்பவன். அது மிகவும் முக்கியமானதாகும். ஆனால், அதனைப் புலிகள் அழித்துள்ளனர் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து வெளியாகும் ""இந்து' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். ராமுக்கு ஜனாதிபதி அளித்த பேட்டியின் இறுதிப் பகுதி நேற்று புதன்கிழமை வெளியாகியிருந்தது. அதனை இங்கு தருகின்றோம். என். ராம்: இராணுவ வெற்றியைத் தொடர்ந்து வெற்றிக்களிப்பு இலங்கையில் காணப்பட்டதாக இலங்கைக்கு வெளிப்…
-
- 1 reply
- 730 views
-
-
சிறிலங்காவின் அரச வங்கி ஒன்றின் உதவி முகாமையாளரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா இராணுவ கப்டன் ஒருவரும் ஐந்து படையினரும் கொழும்பு, கொள்ளுப்பிட்டிப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 516 views
-
-
சிங்கத்தின் தலைமையிலான சிங்கப் படையினரால் எந்தவொரு யுத்தத்தை இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என இராணுவப் படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். திஸ்ஸ ரவீந்திர பெரேராவினால் யாக்கப்பட்ட வன்னி இறுதிப் போராட்டம் என்ற நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இந்த நூல் வெளியீட்டு விழா இன்றைய தினம் நடைபெற்றது. படைத் தளபதி ஒட்டகமாகவும், படைவீரர்கள் சிங்கங்களாகவும் இருந்தால் ஒருபோதும் யுத்தத்தை வெற்றிகொள்ள முடியாதென அரேபிய பழமொழியொன்று இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இலங்கையை பொறுத்தவரையில் படைத்தளபதியும், படைவீரர்களும் சிங்கங்களாகவும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 953 views
-
-
இலங்கை அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் கடந்த காலங்களில் வடக்கில் இடம்பெற்ற உக்கிர மோதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள் குறித்த புள்ளி விபரங்களின் திருத்தங்களை ஏற்படுத்தும் திட்டமில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த பொதுமக்கள் குறித்த தமது புள்ளி விபரங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்கள் இழப்புக்கள் குறித்து தமது முன்னைய நிலைப்பாட்டில் எவ்வித திருத்தங்களும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளைப் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலங்களில் விடுதலைப் புலிகளின் அழு…
-
- 0 replies
- 648 views
-
-
இந்திய அரசிடம் சிறிலங்கா ஏற்கனவே உறுதியளித்தபடி, சிறுபான்மை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு வழங்குவதற்கு தேவையான அரசியல் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி மேல் சபையில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றியபோது மேலும் கூறியதாவது: "விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ளதை, அந்த நாட்டை மறுசீரமைப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக சிறிலங்கா அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள், மீண்டும் தங்கள் சொந்த ஊரில் குடியமர்த்தப்பட இந்தியா முழு ஒத்துழைப்பை வழங்கும். இதற்காக 500 கோடி ரூபா வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி உதவி…
-
- 4 replies
- 873 views
-