Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடு கடந்த அரசாங்கமும் அரசியல் தீர்வு முயற்சிகளும் கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் இலங்கையில் தமிழ் அரசியல் என்பது சுவையானதும் முக்கியமானதுமான ஒரு காலகட்டத்தில் இருப்பதினாலும், தென்னிலங்கையில் கூறிக்கொள்ளக்கூடிய நிகழ்வுகள் எதுவும் இன்மையினாலும் தவிர்க்க முடியாதபடி தமிழ் அரசியல் பற்றியே கவனம் செலுத்த வேண்டிய ஒரு அவசியம் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் செயற்பாடுகளின் எதிர்காலம் அல்லது எதிர்கால செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்று அவசியப்படுகின்ற பின்னணியில் இவ்விடயம் பற்றிய ஆவுகள் பயனற்றவையாக இருக்கப்போவதில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழ் சமூகத்தினுள் காணப்பட்ட மாற்றுக் கருத்துகள் மென்மையான ஒரு முறையிலேயே முன்வைக்கப்பட்டிருந்தன. மாற்றுக் கருத்துகள் உரத்து…

  2. 30 ஆண்டுகளுக்கு முன்னால் உங்களின் யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. இவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஆனந்த விகடன்' வார இதழில் கருணாநிதிக்கு பகிரங்க கடிதம் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகிரங்க கடிதத்தின் முழு விபரம் வருமாறு: தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் …

    • 2 replies
    • 845 views
  3. வன்னியில் இறுதிவரை நின்று மருத்துவ சேவை வழங்கியதாகச் சொல்லப்படும் 5 டாக்டர்களும் தாம் முன்னர் விட்ட அறிக்கைகள் அனைத்தும் விடுதலைப்புலிகளின் தூண்டுதலால் சொல்லப்பட்ட மிகைப்படுத்திய பொய்கள் என்றும்.. வன்னிப் போரில் ஆஸ்பத்திரிகள் தாக்கப்படவோ பொதுமக்கள் பெருமளவில் தாக்கப்படவோ இல்லை என்றும் சில நூறு பேர் மட்டும் உயிரிழந்திருக்கலாம் என்றும், அதுவும் புலிகள் சுட்டுத்தான் அதிகம் பேர் இறந்தனர் என்றும் இன்று சிறீலங்கா அரச ஏற்பாட்டில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சர்வதேச உள்ளூர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மேற்படி வைத்தியர்கள் கூறியுள்ளனர். S Lanka medics recant on deaths The doctors, who are still in detention, said they were threatened by rebels Five doctors …

    • 38 replies
    • 4.3k views
  4. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 09/07/2009, 23:14 அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த உத்தேசம் இல்லை சிறீலங்கா அதிபரது ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அதிபர் தேர்தல் நடத்துவது பற்றி இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என, சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசு இந்த ஆண்டு நவம்பரில் அதிபர் தேர்தலை நடத்தக்கூடும் என முன்னர் வெளியான தகவலை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரும், விவசாய அமைச்சருமான மைத்திரிபால சிறீசேன நிராகரித்துள்ளார். படைத்துறை வெற்றியை முன்னிட்டு தேர்தலை முன்கூட்டியே நடத்த அரசு திட்டமிட்டு வருவது பற்றி பல்வேறுபட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. அதிபர் தேர்தல், மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நிறைவு பெற்ற பின்னரே, தமிழ் மக்கள…

  5. சீமானின் செவ்வி (ஜேர்மனியில்)

    • 3 replies
    • 1.4k views
  6. தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் நிலை என்ன: யூலை 11 இல் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் (IMHO)விளக்கக் காட்சி தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் நிலை என்ன, அவர்களின் தேவைகள் என்ன என்பது பற்றி யூலை 11 இல் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO) நேரடியாக அறிந்த நம்பத்தகுந்த அறிக்கைகள் பற்றிய விளக்க காட்சி நிகழ்வு. நிகழ்வு பற்றிய விபரம்: காலம்: சனிக்கிழமை, ஜுலை 11, 2009 நேரம்: மாலை 6.00 தொடக்கம் 9.00 வரை இடம்: South Beach Psychiatric Center, 777 Seaview Avenue.Staten Island, NY 10305. (718) 667-2300, IMHO – (347) 208 – 7930 மேலதிக தகவலுக்கு IMHO வலைத்தளத்தைப் பார்க்கவும் (theIMHO.org) —————————————————————- * IMHO விளக்கக் …

  7. சிறிலங்கா அரசின் உத்தரவிற்கமைய பணி நடவடிக்கைகள் குறைப்பு: சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க சர்வதேச செஞ்சிலுவை சங்கமானது தமது பணிகளை குறைத்துக் கொண்டுள்ளதாக அதன் பேச்சாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பான ஜெனிவா தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே இடம்பெற்ற தீவிர மோதல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இந் நாட்டில் அதன் பணிகளை குறைத்துக் கொள்ளும்படி செஞ்சிலுவை சர்வதேசக் குழுவை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. 1989 முதல், இலங்கையில் ஜசிஆர்சி நிரந்தர பிரசன்னமாகி இருந்துள்ளது. மாறி வரும் தேவைகளுக்கேற்ப கடந்த பல வருட காலங்களாக ஜசிஆர்…

  8. செய்தியாளர் மயூரன் 09/07/2009, 17:07 கொழும்பு மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டுக்கொலை கொழும்பு மாளிகாவத்தைப் பிரதேசத்தில் முஸ்லிம் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உடலம் மாளிகாவத்தை எபல்வத்தையில் இன்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர் 40 அகவையுடைய மொஹமட் இம்தீயாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் உடலில் தலையிலும் காலிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகச் சிறீலங்காக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இக்கொலைக்கான காரணங்கள் இதுவரை காவல்துறையினர் நடத்திய விசாரணைகள் மூலம் தெரிய வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு

  9. பாதாள உலகக் கோஷ்டியை சேர்ந்த இரண்டு முக்கியஸ்தர்கள் கொழும்பில் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் 7/9/2009 9:14:21 PM - கொழும்பில் இருவேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருவரின் சடலங்களை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள இவர்கள் இருவரும் பாதாள உலக் கோஷ்டிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புறக்கோட்டை, பழைய சோனகத் தெருவில் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் காணப்பட்ட சடலமொன்று இன்று காலை 5.30 மணியளவில் கொட்டாஞ்சேனை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் மாளிகாவத்தையைச் சேர்ந்த ஆனுமாலு இம்தியாஸ் …

  10. எதிர்வரும் வடக்குத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமோக வெற்றியீட்டும் என தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களது கொள்கைகளை மாற்றி வருவதாகவும், இதனால் மக்கள் ஆதரவு வலுவிழந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இனவாத கொள்கைகளை பின்பற்றி வருவதாகவும், ஈழம் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோருக்கு உரிய நிவாரணங்களை அரசாங்கம் வழங்குவதில்லை என பலர் குற்றம் சுமத்தி வருகின்ற போதிலும், இடம்பெயர்ந்தோர் முகாம் நிலவரங்கள் பற்றி எவரும் சரிவர புரிந்துகொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு இடம்பெயர்ந்த…

  11. பிரபாகரன் மரணம் இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் எஸ். எம்.கிருஷ்ணா : இலங்கை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பாராளுமன்றத்தில் பதிலளித்துப் பேசிய இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா மே 18‐ஆம் தேதி புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவித்தது இலங்கை அரசு. அதை ஒட்டி இலங்கை சென்ற இந்தியத் தூதர்கள் பிரபாகரனின் மரணச் சான்றிதழையும் பொட்டம்மானின் மரணச்சான்றிதழையும் கேட்டனர். அனால் இன்று வரை இலங்கை பிரபாகரன், பொட்டம்மானின் மரணத்தை இந்தியாவுக்கு உறுதி செய்யவில்லை. இது தொடர்பாக இலங்கை அரசின் பதிலுக்காக இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது. இது தவிர முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் மறு வாழ்வு குறித்து இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளது…

    • 0 replies
    • 997 views
  12. முள்ளிவாக்காலில் இலங்கை இராணுவம் நடத்திய இறுதித் தாக்குதலில் மட்டும் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலநூறு பேர் படுகாயமுற்றும், உடல் ஊனமுற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு கண்காணிப்பு முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுகின்றனர். இப்படி தட்டிக்கேட்க ஆளின்றி இலங்கை அரசு நடத்திவரும் அட்டூழியங்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஆத்திரத்தை தோற்றுவித்து அவர்களும் மேலைநாடுகளில் தொடர்ச்சியாக போராடி வந்தனர். இது இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவு நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதை தணிப்பதற்கு மேலைநாடுகள் முயன்றபோது கை கொடுத்ததுதான் ஐ.நா.சபை தீர்ம…

    • 2 replies
    • 1.1k views
  13. வன்னி மக்களுக்காக ஐரோப்பாவில் இருந்து 'வணங்கா மண்' கப்பலில் கொண்டுசெல்லப்பட்ட உணவுப் பொருட்கள் 'கப் கொலராடோ' என்ற கப்பலின் மூலமாக இன்று காலை சிறிலங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1k views
  14. செய்தியாளர் மயூரன் 09/07/2009, 13:13 யாழ் கடற்பரப்பில் மீன் வளங்களைச் சூறையாடும் சிங்களக் கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் சிங்களக் கடற்தொழிலாளர்கள் மீன் வளங்களைச் சூறையாடுகின்றனர் என விசனம் தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு தென்னிலங்கையிலிருந்து வரும் 100-க்கும் அதிகமான இழுவைப் படகுகள் ஆழ்கடலிலும் மற்றும் கரையோரங்களிலும் மீன்பிடியில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ்க் கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான தடை நீக்கப்பட்ட போதும் தமிழர்கள் கடற்தொழில் ஈடுபடுவதற்கு சிறீலங்காப் படையினர் கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். ஆனால் சிங்களக் கடற்தொழிலாளர்கள் இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும்போது, பாஸ் நடைமுறையோ அல்லது சோதனை நடைமுறையோ எதுவ…

    • 1 reply
    • 498 views
  15. சிங்களவர்களைக்கண்டு தமிழகம் நடுங்குகிற மாயை:வைகோ கலைஞர்மீது சாடல் on 09-07-2009 06:15 Published in : செய்திகள், தமிழகம் சிங்களவர்களைக் கண்டு தமிழகம் நடுங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டார் கலைஞர் : வைகோ குற்றச்சாட்டு - 'சிங்களவர்களைக் கண்டு தமிழகம் நடுங்குவது' போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது. 'நம்மைக் கண்டு தமிழக முதல்வரே பயப்படுகிறார்'என சிங்கள வெறியர்கள் கொண்டாடக்கூடிய சூழல், கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டு விட்டது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு …

    • 1 reply
    • 444 views
  16. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வரையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தேடுவதனை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் ஹிந்து பத்திரிகைக்கு அளித்த செவ்வி தொடர்பான கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினை காரணமாக ஆயிரக் கணக்கான உயிர்கள் காவு கொல்லப்பட்டதாகவும், அண்மையில் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும…

    • 1 reply
    • 650 views
  17. முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் மீள்குடியேற்றம் இன்னும் 3 வருடங்கள் கடந்தாலும் சாத்தியமாகாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு கூறினார். இந்த மக்கள் 180 நாள்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றப்படுவார்களென இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதுடன், எனினும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லையெனவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார். அத்துடன், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் தாமதமடைந்துவருவதாகவும் அவர் கூறினார். எனவே, இடம்பெயர்ந்திருக்கும்…

    • 0 replies
    • 395 views
  18. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கையை ஸ்ரீலங்கா மண்ணில் நிறுத்தும் படி அதன் அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக ICRC அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. எங்களையும் கிளம்பட்டாமாம்

    • 0 replies
    • 832 views
  19. தன் முனைப்பை விட்டு எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்றுங்கள் அருட் தந்தை ஜெகத் கஸ்பர் அடிகளாரின் பேட்டி. அவுஸ்த்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய அறைகூவல். ஒன்றிணைந்து பணியாற்றுவோம் நன்றி தமிழ் நாதம்

    • 0 replies
    • 832 views
  20. பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் அமைச்சர்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் நிறைவடைந்துவிட்டது இனி பாதுகாப்பு ஏற்பாடுகளில் தளர்வினை மேற்கொள்ளலாம் என எந்தவொரு அமைச்சரும் நினைக்க வேண்டாம் எனவும், தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் தலைநகர் கொழும்பிற்குள் ஊடுறுவிய விடுதலைப் புலிப் போராளிகள் தொடர்ந்தும் மறைந்திருக்கக் கூடிய அபாயம் நிலவுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒன்றரை மா…

    • 1 reply
    • 661 views
  21. பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதை உலக்கு தெரியாமல் மறைத்த ‘இந்து’ பார்ப்பானின் அடங்காத் திமிர் – பெரியார் முழக்கம் ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது இலங்கை அரசு. அவர்களை நிரந்தரமாகவே அடைத்து வைக்க முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளில் தமிழ் அகதிகளையே ஊதியமில்லாத வேலைக்காரர்களாக அரசு வேலை வாங்குகிறது. ‘மெனிக்பாம்’ பகுதியில் இத்தகைய நிரந்தர கட்டுமான வேலைகள் தொடங்கியுள்ளன. - இது மனிதாபிமானப் பணியாளர்களின் அறிக்கை விடுதலைப் புலிகளை வீழ்த்தி விட்டதாக வெற்றி விழாக்களை நடத்தி வரும் இலங்கை அரசு, போர் முடிந்து 6 வாரங்களுக்குப் பிறகும், அகதிகள் முகாமைப் பார்வையிட, அய்.நா.…

    • 2 replies
    • 1.2k views
  22. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ்ந்து அரோகரா கோஷம் எழுப்ப நயினை நாகபூஷணி அம்பாள் தேர் ஏறி வீதிவலம் வந்து அடியார் களுக்கு அருள் காட்சி வழங்கினார். நேற்றுமுன்தினம் மாலைமுதல் நேற்றுக் காலை வரை அலை அலை யாகச் சென்றடைந்த பக்தர்கள் பக்திபூர்வமாக தேர் உற்சவத்தில் பங்குபற் றினர். காவடிகள் எடுத்தும் பிரதிட்டை செய்தும் அடிஅழித்தும் தமது நேர்த்திகளை அவர்கள் பூர்த்தி செய்தனர். நேற்று அதிகாலை முதல் இடம்பெற்ற பூøசகளை அடுத்து 8.30 மணிக்கு வசந்த மண்டப பூøச நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 9.30 மணியளவில் அம்பாள் விநாயகர், முருகன் சகிதம் தனித்தனியான தேர்களில் வீதிவலம் வந்து காட்சி கொடுத்தனர். நேற்றைய தேர்த்திருவிழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்…

    • 24 replies
    • 2.8k views
  23. இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாண குடாநாட்டுக்குச் சென்றிருந்த சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் தலைமையிலான உயர்மட்டக்குழுவுக்கு அதி உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இரண்டாவது நாளாக குடாநாட்டில் நேற்று புதன்கிழமை தங்கியிருந்த இந்தியத் தூதுவர் தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் பெருமளவுக்கு மத நிகழ்ச்சிகளிலேயே கலந்துகொண்டதாக குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் பருத்தித்துறைப் பகுதிக்கும் இவர்கள் நேற்று புதன்கிழமை சென்றிருந்தனர். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் அலோக் பிரசாத்தை பொன்னாடை போர்த்தி வரவேற்ற சிறிலங்காவின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவரை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். நல்லூருக்குச் …

    • 1 reply
    • 628 views
  24. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களில் கொல்லப்பட்டுவிட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்த போதிலும், அது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவித்தல் எதனையும் சிறிலங்கா அரசு தரவில்லை எனவும், அதனை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் இந்தியா அறிவித்திருக்கின்றது. "ராஜீவ் காந்தியின் கொலை வழக்கைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோரின் மரணங்களை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசிடம் கேட்டிருந்தோம். அது தொடர்பில் சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வமான பதிலை எதிர்பார்த்துள்ளே…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.