Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அனைத்துலகத்தின் நிதி உதவிகளை தாமதப்படுத்தும் முயற்சிகளை அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. அவர்கள் அரசியல் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்துலக நாணய நிதியத்தின் உதவிகள் இல்லாது சிறிலங்காவால் வாழமுடியும் என அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அனைத்துலக நாணய நிதியத்தின் உதவிகள் இல்லாது சிறிலங்காவால் வாழமுடியும், சிறிலங்காவின் வெளிநாட்டு கையிருப்பு மிகவும் குறைவடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சிறிலங்கா அரசு அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லியன் டொலர்களை கடனாக கோரியிருந்தது. சிறிலங்காவின் வெளிநாட்டு கையிருப்பு ஆறு கிழமைக்கு தேவையான இறக்குமதிகளை…

  2. வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் மூளைக்காய்ச்சல் தொற்று நோய் வேகமாகப் பரவுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் 34 பேர் கடந்த மூன்று மாத காலத்தில் உயிரிழந்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 317 views
  3. அரச தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற பின்னரே இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 421 views
  4. தமிழீழப் போராட்டம் மீண்டும் தொடங்கும்: பழ. நெடுமாறன் தமிழ் ஈழப் போராட்டம் மீண்டும் தொடங்கும் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அவர் மேலும் பேசியதாவது: தனி ஈழத்துக்காக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்களும் ஒன்றுபட்டோம், போராட்டம் நடத்தினோம், ஆர்ப்பாட்டம் நடத்தினோம், ஆனால், மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. சீக்கிய மதத் தலைவர் ஐரோப்பாவில் கொல்லப்பட்டதற்காக பஞ்சாப் மாநிலத்தில் அந்த மாநில மக்கள் நடத்திய போராட்டத்துக்கு, மத்திய அரசு அடிபணிகிறது. மும்பையில் பிகார் இளைஞர் தாக்கப்பட்டதற்கு, அந்த மாநில மக்கள் நடத்திய போராட்டத்த…

    • 4 replies
    • 1.5k views
  5. முதல் கரும்புலி கப்டன்.மில்லர் http://www.vakthaa.tv/play.php?vid=4613 ஈரமும் வீரமும்... http://www.vakthaa.tv/play.php?vid=4618

    • 14 replies
    • 1.8k views
  6. சிறிலங்கா படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள முல்லைத்தீவு நகரப் பகுதியை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக அரசு பிரகடனம் செய்திருக்கும் அதேவேளையில் முல்லைத்தீவு நகரைச் சேர்ந்த மக்களை மாங்குளத்தில் குடியேற்றுவதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க செயலகமும் மாங்குளத்துக்கு இடமாற்றம் செய்யப்படவிருக்கின்றது. முல்லைத்தீவு நகரப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீணடும் தமது பழைய இடங்களில் குடியமர்த்தப்படமாட்டார்கள் எனத் தெரிகின்றது. இவர்கள் அனைவரையும் மாங்குளத்தில் குடியேற்றுவதற்கே அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. இதன்மூலம் முல்லைத்தீவு நகர் முழுமையாக இராணுவ …

    • 0 replies
    • 588 views
  7. சிங்கள அரசு ஈழத் தமிழர்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து கொடுமைப்படுத்தும் நிலை தொடர்கதையாகி வருகிறது. தமிழர்களை அடியோடு கொல்ல ராஜபக்ச அரசு சதித் திட்டம் தீட்டுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய அரசுக்கே இலங்கை அரசு சவால் விடும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இதை இந்திய அரசு உணர வேண்டும். ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிட முதல்வர் கலைஞர் அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் தமிழர்கள் ஓரணியில் நிற்பது காலத்தின் கட்டாயம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு: கண்ணீர் விட்டு அழச் செய்கிறது இலங்கையில் போர் முடிந்து உள்நாட்டுத் தமிழர்களுடன் தான் போர் வெளிநாடுகளுடன் அல்ல ஏறத்தாழ…

    • 6 replies
    • 850 views
  8. கொலரோடா கப்பல் சென்னை செல்வதில் தாமதம்: நிவாரண பொருட்கள் செவ்வாய் அன்று கொழும்பு நோக்கி புறப்படும் நேற்று சென்னைக்கு வரவேண்டிய கொலராடோ கப்பல் தாமதமாக இன்று மதியம் சென்னைக்கு வரவிருப்பதால் நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு நாளை (செவ்வாய்) மதியம் கொழும்பு நோக்கி புறப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். இலங்கை தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் 884 டன் நிவாரணப் பொருட்களை வணங்கா மண் கப்பலில் அனுப்பினர். அந்த கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. அதன்பின், சென்னை கடல் பகுதியில் பல நாட்களாக வணங்காமண் கப்பல் காத்திருந்தது. வணங்கா மண் கப்பல் கடந்த 2ம் தேதி சென்னை துறை முகத்துக்குள் வந்தது. தீவிர சோதனைக்குப் பிறகு, கப்பலில் இருந்த நிவாரணப் பொருட்கள், கன்டெய்னர்களில் அட…

  9. பெங்களூரில் ஈழத்தமிழர் உயிர்த்தெழு நாள் உலக தமிழ் இளைஞர் வழிகாட்டும் தளம் என்ற அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் உயிர்த்தெழு நாள் நிகழ்ச்சி பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமையை பெற்று தரும் பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த இந்த கூட்டத்துக்கு சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழ் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழுக்கு வரலாற்றில் மிகப்பெரிய நாகரீகம், பண்பாடு, கலாசாரம் உள்ளது. இதற்கு சான்றுகளும் உள்ளன. ஆனால், உலகில் தமிழன் மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் உள்ளான். ஏன் இந்தியாவிலேயே தமிழன் தரம் தாழ்ந்…

  10. தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசு முறியடித்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ள சீனா அரசு சிறிலங்காவின் ஒருமைப்பாட்டையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்போவதாக தெரிவித்துள்ளது. சீனாவுக்கு பயணத்தினை மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரை சந்தித்த பின்னர் சீனாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜாங் ஜெச்சி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: திபெத் மற்றும் தாய்வான் பிரச்சனைகளில் ஒரு சீனா என்ற கொள்கையை சிறிலங்கா வலுவாக ஆதரிப்பது பாராட்டத்தக்கது. ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை சீனா வன்மையாக எதிர்க்கின்றது. மனித உரிமை விவகாரங்களில் சீனா சிறிலங்காவுக்கு ஆதரவுகளை வழங்கும். சிறிலங்கா அரசு தற்போது மேற்கொண்…

  11. அகதி முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள் வீரகேசரி நாளேடு 7/4/2009 10:38:55 PM - வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி முகாம்களில் விடுதலைப்புலிகளின் சுவரொட்டிகள் பல மர்மமான முறையில் ஒட்டப்பட்டிருப்பதாகவும், இதனால் பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சுவரொட்டிகள் கையால் எழுதப்பட்டவை எனவும் இவை எங்கிருந்து வந்தன, யாரால் ஒட்டப்பட்டன என்பது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். இந்த முகாம்களில் 24 மணி நேரமும் இராணுவ கண்காணிப்பு உள்ளபோதும் இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டியிருப்பதால், இந்த முகாம்களில் விடுதலைப்புலிகள் ஊடுருவல் இருக்கலாம் என படைத்தரப்பு சந்தேகிப்பதாகவும் அறியவருகிறத…

  12. ''உயிர்த்தெழுவோம்” எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராகியுள்ளனர். தமிழீழ மக்களின் விடிவுக்காக தம்மை ஆகுதியாக்கி, காவியமாகிப்போன கரும்புலி மறவர்களின் நினைவு நாளான இன்று, புலம்பெயர் நாடுகளில் “உயிர்த்தெழுவோம்” எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக முக்கிய கால கட்டத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கலந்துகொண்டு, தமது விடுதலை வேணவாவை, பன்னாட்டு சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்துகொள்ள வேண்டும் என, தமிழின உணர்வாளர்கள் பழ.நெடுமாறன், மற்றும் சீமான் ஆகியோரும் அழைப்பு விடுத்திருந்தனர். இதேவேளை, பிரித்தானியாவில் “உயிர்த்தெ…

  13. தமிழீழ தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து, சத்தியத்தின் சாட்சியாக நின்று எம்மை வழிகாட்டும் உயிர்ப்பூக்களாகிய மாவீரர்களின் தியாக வரலாறு மீதும், எமது கலங்கரை விளக்காகத் திகழும் பெருந்தலைவர் - தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழ தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும் ஆணையிட்டு, புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம், எமது அரசியல் வேணவாவை உலக சமூகத்திற்கு இடித்துரைக்கும் வண்ணம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்:- 1. தலைமுறை தலைமுறையாக தமது வரலாற்று வாழ்விடமாக விளங்கிய தமிழீழ மண்ணை விட்டு ஆயுதமுனையில் எமது உறவுகளை சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றுவதற்கு உதவியும் இடமளித்தும், வதைமுகாம்களுக்குள் அவ…

    • 0 replies
    • 632 views
  14. செய்தியாளர்:,05/07/2009, 22:45 விசாரணை எதுவுமின்றி 33 தமிழர்கள் 13 வருடங்களாக தடுப்புக்காவலில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ், வெலிக்கட சிறைச்சாலையில் கடந்த 13 வருடங்களாக எவ்வித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 33 தமிழர்கள் தமது வழக்குகளை எடுத்து விரைவில் தம்மை விடுதலை செய்யுமாறு மனித உரிமைகள் அமைப்புகளுக்கு முறையிட்டுள்ளனர். இவர்கள், சில பெண்கள் உட்பட, யாவரும் வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் மேல் பிரதேசத்தில் குடியிருந்தவர்களே. அவர்கள் செய்த முறையீடு உடனடி ஆலோசனைக்காக அது தொடர்புபட்ட அரசு அதிகாரியிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேநேரம், சட்ட நீதிமன்றத்தில் பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் குற்றமுள்ளவர்கள் என்று சிறையில் இருத்தப்பட்ட வேறு 7 தமிழ…

  15. கடந்த 02.07.2009 அன்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களிற்கும் ஐ.சி.ஆர்.சி. உயர் மட்டத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இன்னும் இரண்டு வாரத்திற்குள் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஐ.சி.ஆர்.சி.யின் அனைத்து அலுவலகங்களையும் மூடிவிடுமாறு கூறியுள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து ஐ.சி.ஆர்.சி. பாதுகாப்பு செயலாளரிடம் காரணம் கேட்டபோது, ஐ.சி.ஆர்.சி இன்னமும் இலங்கையில் உள்ளதால், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் இன்னமும் பிரச்சனை தீரவில்லை என கருதுகின்றன என்று கோத்தபாய ராஜபக்ச சொன்னதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் உடனடியாக 2 வாரத்திற்குள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பு, மற்றும் அக்கரைப்பற்று …

    • 0 replies
    • 534 views
  16. முஸ்லிம் மக்களுக்கென தனியான ஓர் அரசியல் கட்சியொன்று அவசியமில்லை என கிழக்கு மாகாண அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், உரிமைகளையும் வென்றெடுக்க தனி முஸ்லிம் கட்சியொன்று தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னணி கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே முஸ்லிம்களின் நியாயமான அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் முஸ்லிம் மக்களின் தேவைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்றி வைப்பார் என்பதில் பூரண நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இலங்கையை ஆட்சி செய்த தலைவர்க…

    • 0 replies
    • 666 views
  17. கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டுவரும் இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதக்குழுக்கள் தமது ஆயுதங்களைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்று சனிக்கிழமை மாலையுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பெருமளவு ஆயுதங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடியில் உள்ள மீரா மொஹதீன் பள்ளிவாசலில் வைத்து கையளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த அமைப்புக்களிடம் மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் எனக் கருதும் காவல்துறையினர், அவற்றை களைவதற்கான தேடுதல் நடவடிக்கை ஒன்று வெகுவிரைவில் தொடங்கப்படும் எனவும் அறிவித்திருக்கின்றனர். ஆயுதப் படைகளுடன் இணைந்தே காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொள்வார்கள். ஆயுதங்களை கையளிக்குமாறும், அவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்கும் ஜிஹாத் அமைப்ப…

    • 2 replies
    • 631 views
  18. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங் கியிருக்கின்ற செட்டிக்குளத்தில் உள்ள மனிக்பாம் முகாமில் நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக சர்வதேசமனிதாபிமான அமைப்புகள்சுட்டிக்காட்டுகி

    • 1 reply
    • 657 views
  19. 04/07/2009, 12:58 [செய்தியாளர் தாயகன்] வவுனியா முகாம்கள் நிரந்தரமாகும் அபாயம் - பிரித்தானிய நாளேடு வவுனியா தற்காலிக தடுப்பு முகாம்களில் அங்கு நிரந்தர கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருவதால், அவை நிரந்தர முகாமாக மாறும் அபாயம் இருப்பதாக, பிரித்தானிய ரைம்ஸ் நாளேடு நேற்றைய தனது பதிப்பில் எச்சரிக்கை செய்துள்ளது. முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைக் கொண்டே, எந்தவித சம்பளமும் வழங்கப்படாது இந்த கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருவதாகவும், இது ஐ.நா விதிமுறைகளை மீறும் செயல் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அடிப்படை வசதிகளை மிகக் குறைவாகக் கொண்டுள்ள வவுனியா நகரம், கொழும்பிற்கு அடுத்த படியாக சனத்தொகை மிக்க நகராமாக மாறியுள்ளதையும் இந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டுகின…

  20. ஞாயிற்றுக்கிழமை, 5, ஜூலை 2009 (13:35 IST) சிறையில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம் இலங்கை தமிழர்கள் சிவகிருஷ்ணன், சுப்பிரியா, ராஜேந்திரன், சேவியர், விஜய், இலங்கை நாதன் ஆகியோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது செங்கல்பட்டு கிளை சிறை சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் அவர்கள் தங்கள் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தங்களை சொந்த நாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

  21. யாழ்தேவி இன்ரசிற்றி ரயிலில் தீ;பயணிகளுக்கு சேதமில்லை சாலியபுர பகுதியில் சம்பவம் வீரகேசரி இணையம் 7/5/2009 11:33:35 AM - கொழும்பிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற யாழ் தேவி இன்ரசிற்றி ரயிலில் சாலியபுரம் பதியில் தீப்பற்றியதாகவும் எனினும் பயணிகளுக்கு உயிர்ச்சேதமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா – தாண்டிக்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ரயில் அனுராதபுரத்தைக் கடந்து சாலியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 10.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலில் இணைக்கப்பட்டிருந்த உணவு வண்டியில் பயன்படுத்தப்பட்ட காஸ் சிலிண்டர் வெடித்ததனால் தீவிபத்து ஏற்பட்டதாகவும், உணவு வண்டியும், முதலாம் வகுப்புப் பெட்டியும் தீயினால…

  22. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட யுத்தத்தின் போது சீனா ஆயுதங்களை விநியோகம் செய்ததாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். 1957ம் ஆண்டு முதல் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் மிக நெருங்கிய இராஜதந்திர உறவுகள் பேணப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், படை முன்நகர்வுகளின் போது ஆயுதம் விநியோகிக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த வலயத்தில் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்ள சீனா காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ளது எனவும், இதனை மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின…

    • 0 replies
    • 571 views
  23. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நாளை திங்கட்கிழமை சந்திக்கவுள்ள ஜாதிக ஹெல உறுமய அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாக முக்கிய பேச்சுக்களை நடத்தவிருக்கின்றது. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறப்போவதாக ஹெல உறுமய கடந்த வாரம் அறிவித்திருந்த போதிலும், மகிந்தவுடனான சந்திப்பு முடிவடையும் வரையில் அது தொடர்பாக கருத்து வெளியிடுவதை பின்னர் தவிர்த்துக்கொண்டது. "13 ஆவது திருத்தம் தொடர்பான எமது முன்னைய நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை. அரசாங்கத்தின் ஒரு பகுதியாக நாம் இருப்பதால் இது தொடர்பாக மகிந்தவுடன் பேச்சுக்களை நடத்துவது அவசியம் என நாம் கருதுக…

    • 0 replies
    • 308 views
  24. இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை ஏற்படுத்தி கொடுத்துள்ளது: பழ.நெடுமாறன் எச்சரிப்பு இந்தியாவைத் தாக்கும் வழியை சீனாவுக்கு, இலங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எனவே, இலங்கையினால் இந்தியாவுக்கு ஆபத்து என்ற நிலை உருவாகியுள்ளது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் எச்சரித்துள்ளார். திண்டுக்கல், தேனி மாவட்ட மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில், “தமிழ் ஈழம் மலரும்’ என்ற ஆய்வரங்கம் மற்றும் “ஐயம்தீர் அரங்கம்’ நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கலந்துகொண்டு பழ. நெடுமாறன் பேசியதாவது: இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கூடாது என்பதற்காக, சிங்கள இராணுவத்திற்கு உதவி செய்வதன் மூலம் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது என்பது இந்தியாவின் பாதுகாப்பிற்…

  25. தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுவழி இராணுவ கட்டமைப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளதால் சீற்றமடைந்துள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சிறிலங்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் சில ஊடுருவல்களை மேற்கொள்ளலாம் என்ற சாத்தியப்பாட்டின் அடிப்படையில், வடபகுதியின் இராணுவக் கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் பிரகாரம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளில் இராணுவ தலைமையகங்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கான படையணிகள் ஓதுக்கமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவை மேலும் தெரிவித்திருப்பதாவது: கிளிநொச்சியில் …

    • 0 replies
    • 523 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.