Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி ஆணைக்குழு, சமாதான செயலகம், சர்வகட்சி ஆணைக்குழு, அடுத்து என்ன..?

  2. கோத்தபாயவிற்கும் ஆளும் கட்சி அரசியல் பிரமுகர்களுக்கும் இடையில் முறுகல் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் சிறீலங்காவின் ஆளும் கட்சி அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளதாகத் தெரிய வருகின்றது. சிறீலங்காவின் படைத்துறை வெற்றியை தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தக்கூடாது என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை அடுத்து இந்த முறுகல் அதிகரித்துள்ளது. அரசியல் பிரமுகர்களின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பினாலேயே படையினர் போரில் வெற்றிகளை பெற முடிந்தது என்று தெரிவிக்கும் அரசியல் பிரமுகர்கள், பெரும் பொருண்மிய சுமையின் மத்தியிலும் தாம் போருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், தமிழின அழ…

    • 2 replies
    • 960 views
  3. 01/07/2009, 22:16 ] சீன வர்த்தகநிறுவனங்களுக்கு இலங்கையில் பிரத்தியேக வலயம் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நிறுவனமான சீனாவிடம் இருந்து முதலீட்டை கவரும் முயற்சியில் இலங்கை சீனாவிற்கு பிரத்தியேக வலயம் ஒன்றை வழங்கவுள்ளதாக தெரியவருகிறது. இவ்வலயம் சிறீலங்காவின் தலைநகர் கொழுப்பில் இருந்து சுமார் 55 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் மீரிகமவில், கொங்கொங்கில் இருந்து இயங்கும் ஹீய்ச்சென் இன்வெஸ்ட்மன்ட் ஹொல்டிங்க்ஸ் என்ற நிறுவனம் பொருளாதார வலயத்தை உருவாக்கும் என இலங்கையின் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல்தொழில்நுட்பம், தயாரிப்பு தொடர்பான சேவைகளை இவ்நிறுவனங்கள் வழங்கும் எனவும் வெளிநாடு ஒன்றுக்கு இத்தகைய வசதியை பெறுவது இதுமுதல்முறை எனவும் தெரியவருகிற…

    • 1 reply
    • 612 views
  4. 01/07/2009, 22:26 ] கொழும்பில் மூன்று தமிழ் இளைஞர்கள் கைது கொழும்பு கொட்டகேன தங்ககங்களில் இருந்த மூன்று தமழ் பொதுமக்கள் சிறீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் மூவரும் சிறீலங்hக படையினரின் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியில் வந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறதாக தெரியவருகிறது. காவல்துறையினர் இவர்கள் எவ்வாறு தப்பிசென்றார்கள் எனவிசாரித்து வருவதாகவும் இவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எனவும் நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக கொழும்பில் தங்கியிருந்ததாகவும் மேலும் தெரியவருகிறது. pathivu

    • 1 reply
    • 570 views
  5. வீரகேசரி இணையம் - கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்கு நாளை வரை வழங்கப்பட்டிருந்த இரண்டு வார கால அவகாசம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ம் திகதி மட்டக்களப்பு காத்தான்குடியில் முஸ்லிம் சமூக ,சமய பிரமுகர்களுடன் இடம் பெற்ற கூட்டமொன்றில் இந்த கால அவகாசம் பற்றி கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க அறிவித்திருந்தார்.. புதிய கால அவகாசத்தின் படி எதிர்ரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை ஆயுதங்களை கையளிக்க முடியும் என கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். சிலரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகின…

  6. 01/07/2009, 12:36 [செய்தியாளர் கயல்விழி] இலங்கையில் கால் பதிக்கும் இந்தியாவின் அடுத்த நகர்வு இலங்கையில் கால் பதிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியா நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடலடித்தள மின்சாரக் கம்பிகளை நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்காவுக்கும் தமக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழின அழிப்பு போரில் முன்னின்று உதவிய இந்தியா, தற்போது சிறீலங்காவின் சரிந்து செல்லும் பொருண்மியத்தைக் கட்டியெழுப்புவதாக தெரிவித…

    • 2 replies
    • 1.4k views
  7. பல தசாப்தகாலப் போருக்குப் பின்பாகவும் கூட, வெகு விரைவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்க்கப்படவோ தளர்த்தப்படவோ போவதில்லை ‐ சார்ள்ஸ் ஹாலான்ட் BBC: http://www.globaltamilnews.net/tamil_news....11351&cat=1

    • 0 replies
    • 719 views
  8. 01/07/2009, 15:28 மணி தமிழீழம் சிறிலங்காவால் தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - எலீ வீசல் ஐரோப்பிய யூத இனப் பேரழிவில் (Holocaust) பிழைத்தவரும், யூத இனச்சின்னமும், நோபல் விருது பெற்றவருமான, பேராசிரியர், எலீ வீசல் அவர்கள், தனது இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியொன்றில், “எங்கே சிறுபான்மையினர் அடக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம், நாம் எமது குரல்களை எழுப்பி எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும். நம்பத்தகச் செய்திகளின்படி, சிறிலங்கா அதிகாரிகளினால் தமிழ் மக்களினது உரிமைகள் பறிக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுகிறார்க

  9. மக்களின் பயணங்களைக் கண்காணிப்பு புதிய நடைமுறை திகதி: 01.07.2009 // தமிழீழம் இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் செல்வோர் பற்றிய விபரங்களைக் கண்காணிக்க, சிறீலங்கா அரசு புதிய நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. இதன் ஒரு அங்கமாக துறைமுகம், மற்றும் வானூர்தி நிலையத்தின் நிருவாகப் பணிகள் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திடம் கையளிக்கப்படுகின்றன. பொது நிருவாக சபையின் கீழ் இருந்த இந்த நிருவாகங்களைப் பெறுவதன் மூலம் மக்களை இலகுவாகக் கண்காணிக்க முடியும் என, குடிவரவு - குடியகல்வு திணைக்களப் பொறுப்பாளர் பி.பி.அயக்கோன் தெரிவித்தார். திருகோணமலை துறைமுகத்தின் நிருவாகம் இன்று கையளிக்கப்பட இருப்பதுடன், அதனைத் தொடர்ந்து ஏனைய துறைமுகங்களும், வானூர்தி நிலையமும் கைமாற்றப்படவுள்ளன.…

  10. 01/07/2009, 13:18 [செய்தியாளர் கயல்விழி] இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை – அவுஸ்திரேலியப் பிரதமர் இலங்கையில் நிலவி வரும் நிச்சயம் அற்ற நிலையும், தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையுமே, தமது நாட்டில் அவர்கள் தஞ்சம் கோருவதற்கான காரணம் என, அவுஸ்ரேலிய பிரதமர் கெவின் றுட் தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற தன்மையால் தமது நாட்டில் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவுஸ்ரேலிய கடற்படை மற்றும் கிறிஸ்மஸ் தீவின் குடிவரவு திணைக்கள காரியாலயம் என்பன, இவ்வாறு அதிகரித்த புகலிடக் கோரிக்கையை கையாள தயாராக உள்ளதாகவும், தாம் 10,000 வரையான புகலிட விண்ணப்பங்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவி…

  11. 01/07/2009, 13:13 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] மகிந்தவும் - அகாசியும் சந்திப்பு : நிதியுதவி பெற உதவுமாறு கோரிக்கை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், யப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி பேச்சவார்த்தை நடத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசிற்கும் இடையிலான பேச்சின்போது, யப்பானின் சிறப்பு தூதுவராகக் கடமையாற்றியதுடன், இணைத் தலைமை நாடுகளின் அங்கத்துவத்தையும் பெற்றுள்ள யசூசி அகாசி நேற்று முன்தினம் கொழும்பு சென்றிருந்தார். கொழும்பு சினமன் கிறான்ட் விடுதியில் இன்று ஆரம்பித்த பொருண்மிய மாநாட்டில் கலந்துகொள்ள கொழும்பு சென்ற அவர், நேற்று மாலை மகிந்தவைச் சந்தித்துப் பேசினார். அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறீலங்…

    • 2 replies
    • 509 views
  12. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பான தமது செயற்திட்டம் என்ன என்பதையிட்டு இந்திய அரசாங்கத்துக்கு உரிய முறையில் தெரியப்படுத்தப்பட்டிருந்ததாக சிறிலங்கா அரசு இன்று அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 324 views
  13. கடந்த யுத்தத்தின் போது, தமிழ் மக்கள் அதிகளவாக கொல்லப்பட்டது, தொடர்பாக சிறிலங்கா அரசே முதற்கட்ட விசாரணைகளை நடத்த வேண்டும் என சிலி வலியுறுத்தியுள்ளது. சர்வதேச குற்றவில நீதிமன்றத்தில் புதிதாக இணைந்து கொண்ட நிலையில் இதனை தெரிவித்துள்ள சிலி, 'சிறிலங்கா அரசினால் அதனை செய்யமுடியாவிடின் விசாரணை தொடர்பாக எந்தவொரு அங்கத்துவ நாடோ, அல்லது எந்தவொரு தனி நபரோ விசாரணைக்கான கோரிக்கையை விடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. சிலி நாட்டின் தலைமை அமைச்சர் ஜோங் அன்ரனியா வியரா கல்லோ, சிறிலங்கா விவகாரத்தை பற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் இதனை வலியுறுத்தியதுடன், கடந்த யுத்தத்தை 'தேசிய வாத கெரில்லா படைக்கு எதிரான யுத்தம்' என்று வர்ணித்திருக்கிறார். சிறிலங்காவின் இடைத…

    • 0 replies
    • 757 views
  14. வயதான தமிழர்கள் குடும்பத்தினருடன் இணைய இலங்கை அரசு அனுமதி புதன்கிழமை, ஜூலை 1, 2009, 12:13 [iST] கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள வயதான தமிழர்கள், முகாம்களிலிருந்து வெளியேறி தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இடம் பெயர்ந்தோர் முகாம்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை வெளியே நடமாட விடாமல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ள முதியவர்கள் முகாம்களிலிருந்து வெளியேறி தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தற்போது 9000 முதியவர்கள் முகாம்களை விட்டு வெளியேறவுள்ளன…

  15. 30/06/2009, 22:53 ] வவுனியா தடுப்பு முகாமில், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் மரணம், மேற்பட்டோர் காயம் செட்டிகுளத்தில் அமைந்துள்ள ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிக்கும் முள்கம்பிகளுக்கூடாக, தடுத்து வைத்திருந்தவர்கள் வெளியே செல்வதைத் தடுக்கும் முயற்சியில், ஞாயிறு காலை, சிறிலங்கா இராணுவர்கள் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொலைசெய்யப்பட்டும் மற்றும் 2 பேருக்கு மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டும் உள்ளார்கள், என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில், ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிப்பதற்கு வேலி அமைக்கப்பட்டபோது, தரைக்கு நேராகச் செல்லும் முள்கம்பிகளால் அமைக்கப்பட்டன. இரண்டு முகாம்களிலும் தடுத்துவை…

  16. இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காகவென அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் குழு தனது செயற்பாடுகளை ஒரு மாத காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 314 views
  17. "எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகாமல் 'உதயன்' நிறுவனம் சுதந்திரமாக இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது" என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 'சுடரொளி', 'உதயன்' நாளேடுகளின் பிரதம ஆசிரியரான ந.வித்தியாதரனிடம் உறுதியளித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 414 views
  18. வன்னியில் சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்காக படையினருக்கு மேலும் 50 ஆயிரம் பேரைச் சேர்த்துக்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது என அறிவித்திருக்கும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, இதற்கு தேவையான படையினரைச் சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதுதான் அரசாங்கத்தின் அடுத்த பணியாக இருக்கும். இதன் முதற்கட்டமாக பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவி…

    • 0 replies
    • 411 views
  19. மீளக்குடியமர்வின் பின்னரும் படையினர் தங்கியிருப்பர்:உதய நாணயக்கார on 30-06-2009 17:15 Published in : செய்திகள், இலங்கை வன்னியில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்ட பின்னரும் அவர்களுடன் படையினர் தங்கியிருப்பர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இரண்டு இராணுவத் தலைமையகங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. படையினரின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்கவும் திட்ட மிட்டுள்ளோம் என்றும் அவர் பி.பி.ஸியிடம் தெரிவித்தார். இதுகுறித்து பி.பி.ஸி. வெளியிட்ட செய்தி வருமாறு : மற்றுமொரு தீவிரவாத எழுச்சியை ஒடுக்குவதற்கும் அபிவிருத்தித் திட்டங்…

    • 1 reply
    • 584 views
  20. "...நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்..."bullet இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி. bullet பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான். bullet நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது. bullet மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது. bullet ஒ…

    • 1 reply
    • 3.8k views
  21. சீன முதலீட்டாளர்களுக்கு என சிறப்பான பொருளாதார வலயம் ஒன்றை உருவாக்கி நிர்வகிப்பது தொடர்பான உடன்படிக்கை ஒன்றை சிறிலங்காவின் முதலீட்டுச் சபை சீனாவின் ஹியூசின் முதலீட்டு நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 435 views
  22. புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட ந…

    • 1 reply
    • 1.9k views
  23. செவ்வாய்க்கிழமை, 30, ஜூன் 2009 (20:19 IST) இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் ராமேசுவரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட படகுகளை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மேலும், கச்சத்தீவு அருகே, 5 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேக ரோந்து படகில் எச்சரித்தபடி வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகில் ஏறி, 5 மீனவர்களையும் பிடித்து தாக்கினர். பிறகு அந்த படகை இயக்கி, மற்ற படகுகள் மீது மோதச் செய்தனர். இதில் படகின் வலது பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது. விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அ…

  24. இலங்கை அரசின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட வில்லை. மாறாக சிங்களர்களுக்கு தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக்குகிறது என்று,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். சென்னையில் கடந்த 26 ஆம் தேதி ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு என்ற தலைப்பிலும், 28 ஆம் தேதி தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் இது குறித்து அவர் ஆற்றிய உரை: ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது சிறீலங்கா அரசு பேசி வருகிறது. மாபெரும் மனித இனப் படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போவதாக அவ்வப்போது கூறி வருகிறார். இனப்படுகொலைக்கு தூபமிட்டு உதவிகளை வழங்கி,…

    • 0 replies
    • 2.5k views
  25. தமிழீழமக்களின் விடுதலைப்போராட்டத்தை இராணுவரீதியில் தற்காலிகமாக வெற்றிகொண்ட பாசிச சிங்களஅரசானது, அரசியல்ரீதியாகவும் தமிழ்மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்துவிட பலவேலைத்திட்டங்களை தங்கள் முகவர்களைக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இம்முகவர்கள், சிங்கள, இந்திய அரசுடன் அல்லது அவர்களது உளவுத்துறையுடன் நேரடியாகத்தொடர்பு வைத்திருப்பவர்களாவார். இம்முகவர்கள் தங்கள் நாடுகளிலுள்ள சிங்கள அல்லது இந்திய தூதுவராலங்களிற்கு சென்றுவருபவர்களாகவும் சிலநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அறிவுஜீவிகளாக, மொழித்திறன் உடையவர்களாக, உயர்தொழில்புரிபவர்களாக அல்லது தாயகத்தில் சிங்கள அரசுடன் இணைந்து ஏதோஒருதுறையில் இணைந்து செயற்பட்டவர்களாக இருப்பார்கள். இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.