ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
ராணுவ பலத்தை 50% அதிகரிக்க இலங்கை திட்டம் திங்கள்கிழமை, ஜூன் 29, 2009, 12:45 [iST] கொழும்பு: தற்போது உள்ள 2 லட்சம் பேர் என்ற ராணுவத்தினரின் பலத்தை 3 லட்சமாக உயர்த்த இலங்கை ராணுவமும், அரசும் திட்டமிட்டுள்ளன. இலங்கைக்கு பெரும் சவாலாக கடந்த 30 ஆண்டுகளாக விளங்கி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் செயல்பாடுகளை ஆயுத ரீதியாக இலங்கை படைகள் ஒடுக்கி ஒரு மாதம் ஓடி விட்டது. போரையொட்டி வடக்கு கிழக்கில் குவித்த படைகளை இன்னும் திரும்பப் பெறாமல் அப்படியே வைத்துள்ளது இலங்கை அரசு. ஆங்காங்கு சில படைகள் மட்டும் பாசறைகளுக்குத் திரும்பியுள்ளன. இந்த நிலையில் ராணுவ பலத்தை கிடுகிடுவென அதிகரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. தற்போது 2 லட்சம் வீரர்கள் ராணுவத்தில் உள்ளனர். இந்த …
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசு மேற்கொண்ட சமாதானப் பேச்சுக்களுக்குத் துணை புரிவதற்காக அமைக்கப்பட்ட அரச சமாதான செயலகம் அடுத்த மாத இறுதியுடன் மூடப்படவிருக்கின்றது. அரச தலைவரின் செயலகம் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 518 views
-
-
நியூசிலாந்து துடுப்பாட்டக் குழுவினர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்குமாறு கோரும் பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்படவிருக்கின்ற
-
- 0 replies
- 353 views
-
-
அவுஸ்திரேலியாவின் இந்து சமுத்திர எல்லைப் பகுதியில் உள்ள கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே 194 பேருடன் சென்ற படகொன்றை அந்நாட்டு கடற்படையினர் இடைமறித்து கைப்பற்றியுள்ளனர். இந்தப் படகில் இருந்து மீட்கப்பட்ட அனைவரும் ஈழத் தமிழர்களாக இருக்கலாம் என் நேற்று மாலை கொழும்பில் வெளியான செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. படகில் இருந்தோர் அநேகமாக யாவரும் ஆண்கள் என்றும் அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் உள்ள குடிவரவுத் தடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரென்டன் கொன்னர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த வருடம் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களுடன் சென்ற படகுகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 7 படகுகளே சென்றன…
-
- 0 replies
- 595 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையே அரசாங்கம் இன்று போரில் வெற்றி பெறுவதற்குக் காரமாக இருந்துள்ளது எனத் தெரிவித்துள்ள சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இந்த உடன்படிக்கை சிறிலங்காவின் வரலாற்றில் மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன இதனைத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இந்த ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு போர் நிறுத்த உடன்படிக்கை சாதகமாக அமைந்தது எனத் த…
-
- 1 reply
- 427 views
-
-
மத்திய அமெரிக்காவின் ஹோண்டூராஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் இராணுவ புரட்சியினால் அந்நாட்டு அதிபர் சிறைப்பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம், அமெரிக்க கண்டத்தினையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக ஹோண்டூராஸ் நாட்டின் அதிபராக இருந்து வரும் மானுவல் ஜிலேயாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. நாட்டின் அரச சட்டப்படி, ஒருவர் ஒடு தடவைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது. இந்நிலையில் இச்சட்டத்தை சீர் திருத்தம் செய்து, ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் அதிபராகலாம் என்ற புதிய சட்டத்தை அமுல்படுத்த பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்த முற்பட்டார் மானுவல் ஜிலேயா. ஆனால் இப்புதிய சட்டத்துக்கு அந்நாட்டு இராணுவம் கடும் எதிர்ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
அமெரிக்காவின் பயண எச்சரிக்கை அதிருப்தியளிக்கிறது:பாலித கோஹண வீரகேசரி இணையம் 6/29/2009 3:00:17 PM - இலங்கைக்கான விஜயங்கள் ஆபத்தாக அமையக் கூடும் என்ற அமெரிக்காவின் பயண எச்சரிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும், தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் எனவும் அமெரிக்கா தனது புதிய பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்ற யதார்த்தத்தை புறந்தள்ளி அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹண தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அமெரிக்கா சரியாக புரி…
-
- 2 replies
- 686 views
-
-
29/06/2009, 15:01 [சுடர்] “வீட்டுக்குள்ளே வீடற்றவர்கள்...”, சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா ஆய்வாளர் “பிரச்சினைகள் நிரம்புவதற்கு காரணமாக இருந்த பல குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை, மீள்கட்டமைப்புக்காக என்ன சலுகைகளை சிறிலங்கா அரசு தற்போது வைத்துள்ளது என்பதுதான் கேள்வி,” என ஜோர்ஜ் வாஷிங்டனில் அமைந்துள்ள சிகர் மையத்தின் துணை இணைப்பாளர், னுச. தீபா ஒல்லாபல்லி, வெளிநாட்டு பரிமாற்ற தொலைக்காட்சிக்கு கூறியுள்ளார். “தமிழர்களுக்கு அரசியல் தலைமை இல்லாவிடில் தமிழர்கள் ‘மிகவும் காயப்படுத்தக்கூடியவர்கள்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். “வடக்கு-கிழக்கில் உறவினர்கள் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களும் மற்றும் ஏனைய தமிழ் அழுத்த அமைப்புகளும் சிறிலங்கா அரசை நேர்மையாக இருக்கச்…
-
- 0 replies
- 1.1k views
-
-
29/06/2009, 13:45 [செய்தியாளர் தாயகன்] இலங்கை மீதான ஆதிக்கப் போட்டியில் மூன்று ஆசிய நாடுகள் - செய்வறியாது மேற்குலகம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் போட்டியில் தெற்காசியாவின் மூன்று முக்கிய நாடுகள் போட்டியிட்டு, பனிப்போர் நடத்தி வருகின்றன. தமிழ் மக்கள் மீது சிறீலங்கா முன்னெடுத்த போருக்கு முண்டு கொடுத்த, அல்லது முன்னின்று நடத்திய இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளே இந்த பனிப்போரில் இறங்கியுள்ளன. போர் முடிவடைந்து விட்டதால், இப்பொழுது அபிவிருத்தி என்ற பெயரில், யார் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது, என்ற போட்டியில் இந்த நாடுகள் இறங்கியுள்ளன. தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் 50 எரிபொருள் நிலையங்களை அமைக்க இருப்பதாக இந்தியாவும், ஹம்பாந்தோட்டை துறைமுக அபி…
-
- 0 replies
- 1k views
-
-
திங்கட்கிழமை, 29, ஜூன் 2009 (13:18 IST) 194 தமிழ் அகதிகளுடன் சென்ற படகை ஆஸி கடற்படை பிடித்தது 194 அகதிகளுடன் சென்ற படகு ஒன்றை ஆஸ்திரேலியக் கடற்படை பிடித்துள்ளது. இலங்கையில் போர் ஓய்ந்தாலும் கூட அங்கு தமிழர்களுக்கு சாதகமான நிலை இல்லாத காரணத்தால் தமிழ் மக்கள் அகதிகளாக தொடர்ந்து இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட கிறிஸ்துமஸ் தீவு என்ற இடத்தில் 194 பேருடன் வந்த படகு ஒன்றை ஆஸ்திரேலிய கடற்படை பிடித்தது. அதில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று சந்தேகப்படுவதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரன்டன் கோனர் தெரிவித்துள்ளார். படகில் பெண்கள் யாரும் இல்லை எனவும் அனைவரும் ஆண்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 924 views
-
-
சிறிலங்காவுக்கான ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி அதிகாரபூர்வமான பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு சென்றிருக்கின்ற போதிலும் அரசியல் விடயங்கள் அவரது இந்தப் பயணத்தில் முக்கியத்துவம் பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 527 views
-
-
யாழ்ப்பாணத்தில் 'உதயன்' பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் வீரகேசரி இணையம் 6/29/2009 12:13:47 PM யாழ்ப்பாணத்தில் 'உதயன்' பத்திரிகையை இயங்க அனுமதிப்பதில்லை எனத் தெரிவித்து, 'உதயன்' பணியாளர்களை அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 'நாட்டைக் காக்கும் தமிழ்க் கூட்டமைப்பு' என்ற அமைப்பின் பெயரால் யாழ். நகரில் உள்ள சில பத்திரிகை முகவர்களுக்கு இந்தத் துண்டுப் பிரசுரம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 24 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளேடு ஒன்றுக்கு, யாழ்ப்பாணத்தில் மிக முக்கிய தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கையில், இப்படியானதோர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவது தேர்தல் சட்டமீறல் நடவடிக்கை…
-
- 0 replies
- 478 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக நாட்டில் அமுலில் இருக்கும் சட்டங்களுக்கு ஏற்ப உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளது : கடந்த சில தினங்களில் மட்டும், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்.இந்நிலையில் பாதுகாப்பு தரப்பினரால், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை இரண்டாக வகைப்படுத்தியுள்ளோம். முதலாவது வகையினர் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு ஒன்றிணைந்து பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள…
-
- 0 replies
- 712 views
-
-
அகதி முகாமில் பிரபாகரனின் பெற்றோர்-ராஜபக்சே கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி அம்மாள் ஆகியோர் வவுனியா அகதி முகாமில் தங்கியிருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அகதி முகாமில் பிரபாகரனின் பெற்றோரும், ஏனைய விடுதலைப் புலித் தலைவர்களின் உறவினர்களும் தங்கியுள்ளதாகவும் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார். 'பிரபாகரன் பெற்றோர் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை- வள்ளிப்புரம் பார்வதி ஆகியோர் எம்மிடம் சரணடைந்துள்ளனர். வன்னியில் பொதுமக்களுடன் இணைந்து படையினர் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு இவர்கள் வந்துவிட்டனர்' என்று அவர் தனது உர…
-
- 1 reply
- 2.1k views
-
-
யசூசி அகாசி 19 ஆவது தடவையாக இன்று இலங்கைக்கு விஜயம் வீரகேசரி இணையம் 6/29/2009 11:42:52 AM - ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி மீண்டும் இன்று காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர், 19ஆவது தடவையாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.. மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த யசூசி, இலங்கை அரசாங்கம் சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தியதுடன், வவுனியா அகதி முகாம்களின் நிலை குறித்தும் தமது கவலையை வெளியிட்டிருந்தார்.
-
- 0 replies
- 432 views
-
-
ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 463 views
-
-
டெங்கு நுளம்பு பெருக்கத்தை ஒழிப்பதற்கென கியூபாவிலிருந்து பி.ரி.ஐ. பக்டீரியாக்களை தருவிக்க தீர்மானித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வாரத்திற்குள் அந்த பக்டீரியாக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படுமென்றும் அது குறித்து இலங்கையிலுள்ள கியூபா உயர்ஸ்தானிகராலயத்துடன் சுகாதார அமைச்சு பேசியிருப்பதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். பி.ரி.ஐ.பக்டீரியாக்களை நேற்று முன்தினம் சனிக்கிழமையே கொண்டு வர தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் கியூபா அரசாங்கத்திடமிருந்து அதற்கான அனுமதி கிடைக்காததால் அது சாத்தியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், இந்த வாரத்திற்குள் பி.ரி.ஐ.பக்டீரியாக்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியிருப்பதாகவும் இந்த பக…
-
- 0 replies
- 553 views
-
-
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அரசாங்ககத்தில் இருந்து விலகப்போவதாக சிறிலங்காவில் உள்ள சிங்கள பேரினவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இன்று திங்கட்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 336 views
-
-
சிறிலங்காவுக்கு பயணம் செய்யும் மற்றும் அங்கு வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள பிரயாண எச்சரிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழித்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் உறுதியற்ற நிலையும், பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகளும் தொடர்ந்தும் காணப்படுவதாகத் தெரிவித்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இந்த விடயத்தில் அமெரிக்கக் குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது. இது தொ…
-
- 0 replies
- 751 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற பின்னர் வவுனியா திரும்பிய மதபோதகர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசலிங்கம் நகுலேஸ்வரன் என்ற மதபோதகரே இவ்வாறு காணாமல் போயிருப்பதாக அவரது மனைவி முறைப்பாடு செய்திருக்கின்றார். கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்ககில் கலந்துகொள்ளச் சென்ற இவர், அதனை முடித்துக்கொண்டு கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து ஒன்றில் புறப்பட்டதாகவும் ஆனால் வவுனியா வந்து சேரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா ஆசிரியையும் காணாமல் போனவரின் மனைவியுமான கீதாஞ்சலி பிரதி அமைச்சர் பெ.இராதாகிரு…
-
- 0 replies
- 668 views
-
-
எந்த வகையில் ஒத்துழைப்பு வழங்கவில்லை? - கருணாநிதியிடம் இராமதாஸ் கேள்வி ஈழத்தமிழ் மக்கள் விவகாரத்தில் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் கூற்றுக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈழத் தமிழர் விவகாரத்தில் உங்களுக்கு எந்த வகையில் நாங்கள் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாட்டாளி மகளிர் அணி சார்பில் ஈழத் தமிழர்களை தாய்த் தமிழகம் தனது மடியில் வாரி அரவணைக்கும் என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது. இப்பேரணி சென்னை மன்றோ சிலையில் இ…
-
- 1 reply
- 749 views
-
-
மீண்டும் பிரபாகரன் தலைமையில் போர் தொடங்கும்: பழ.நெடுமாறன் திகதி: 28.06.2009 // தமிழீழம் திருச்சியில் தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. பொன்னிறைவன் தலைமை தாங்கினர். சோமசுந்தரம் வரவேற்று பேசினர். கூட்டத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உலகிலேயே தமிழர்களைத்தான் வீரமரபினர் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது ஈழத்தமிழர்களைத்தான் வீரமிக்கவர்கள் என்று உலகம் மதிக்கிறது. ஏனென்றால் இலங்கையில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு எதிராக சிறீலங்கா இராணுவம் மட்டும் போரிடவில்லை. இந்தியா, சீனா உள்பட 20 நாடுகள் கூட்டு சேர்ந்து கொண்டு விடுதலைபுலிகளை எதிர்த்து போரிட…
-
- 10 replies
- 2.2k views
-
-
28/06/2009, 11:26 மணி தமிழீழம் [செய்தியாளர் சுடர்விழி] பிரித்தானியாவின் 73 நாட்கள் அறவழிப் போராட்டம் -10 மில்லியன் பவுண்ஸ் செலவு பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் தமிழ் மக்கள் நடத்திய 73 நாட்கள் தொடர் போராட்டம் காரணமாக 10 மில்லியன் பவுண்ஸ் செலவு பிரித்தானிய காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ் மக்களின் போராட்டத்தின்போது லண்டன் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதால், லண்டனின் புறகர்ப் பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிகப் பிரமாண்டமான போராட்டங்கள் இடம்பெறும்போது ஒரு நாளைக்கு 616 காவல்துறை உறுப்பினர்கள் தமக்கு தேவைப்பட்டிருப்பதாக, காவல்துறை உயரதிகாரி அலிசன் டொலெறி தெரிவி…
-
- 7 replies
- 1.8k views
-
-
வாயில் விரலை வைத்து சத்தம் போட வேண்டாம் என பணித்த பசில் : அடங்கிப்போன டக்ளஸ் திகதி: 28.06.2009 // தமிழீழம் யாழ் மாநகர சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியும், துணைப்படை ஈ.பி.டி.பியும் இணைந்து போட்டியிடுகின்ற போதிலும், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உட்பூசல் நீடித்து வருகின்றது. கடந்த வாரம் யாழ் செயலகத்தில், சிறீலங்காவின் அதிபரது சகோதரரும், ஆலோசகருமான பசில் ராஜபக்ச கலந்து கொண்ட கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பலர் கலந்து கொண்டிருந்தபோது, சிலரை மட்டும் அணுகிய பசில் ராஜபக்ச, எதிர்வரும் யாழ் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுமாறும், தமது வெற்றிலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். …
-
- 5 replies
- 2.2k views
-
-
"வணங்காமண்" தொடர்பாக ஐ.நா. எதுவும் செய்யமுடியாது திகதி: 28.06.2009 // தமிழீழம் இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கென ஐரோப்பாவில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வந்த "வணங்காமண்'' கப்பல் தற்போது சென்னைத் துறைமுகத்துக்கு அப்பால் 5 கடல்மைல் தொலைவில் நங்கூரமிட்டிருக்கும் நிலையில் அக்கப்பல் விவகாரம் தொடர்பாக ஐ.நா. வோ அல்லது ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரத்திற்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகமான தானோ எதுவும் செய்வதற்கு இல்லை என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியே வந்த ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் "இன…
-
- 5 replies
- 1.1k views
-