ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையிலும், புத்தாக்க அடிப்படையிலும், எதிர்காலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தூரநோக்குடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மாணவர்களை உருவாக்கும் வகையிலும் இலங்கையின் பல்கலைக்கழக கல்விமுறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். சர்வதேச தரத்திற்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களை தர முயர்த்த வேண்டும் என்பதுடன், 2030ஆம் ஆண்டளவில் பிராந்தியத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கான கல்வி மறுசீரமைப்பு, கொள்கை உருவாக்கம் குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் 19 ஆம் 20 ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம், பல்கலைக் கழகப் பதிவாளர் வி.காண்டீபன், கல்வி விவகாரங்கள் மற்றும் வெளியீட்டுக் கிளையின் உதவிப் பதிவாளர் எஸ்.கே. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவர் பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளித்தார். பல்கலைக்கழக…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் Published By: NANTHINI 15 JUL, 2023 | 10:22 AM கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் ஈடுபட்டவர்கள் 'இனியும் கலவரம் வேண்டாம்', 'பிரிவினைகள் வேண்டாம்', 'சமூக ஒற்றுமையை குலைக்காதே', 'ஆட்சியாளர்களே இனவாதத்தினை தூண்டாதே', 'யாழ் நூலகத்தை எரித்தது இனவாதமே', 'நாடு பூராகவும் ஜூலை கலவரத்தை திட்டமிட்டு நடத்திய…
-
- 0 replies
- 209 views
-
-
கொழும்பு – காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை 2024 இல் !! கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சீரமைப்புப் பணிகளால் இச்சேவை இரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த ஜனவரி 5ம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் தொடரூந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை, எதிர்வரும் ஜுன் …
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம் Published By: DIGITAL DESK 3 15 JUL, 2023 | 01:15 PM இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இன்று சனிக்கிழமை (15) தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் யாழ்ப்பாணம் கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக நேற்றிரவு சுமார் 8 மணியளவில் பைபர் படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனையை சென்றடைந்தனர். தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகி…
-
- 0 replies
- 220 views
-
-
35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் முந்நூறு மீற்றர் வரை, 5 அடி வரை உயரமாக மண் அரண் அமைக்கப்பட்டு அதற்கு மேலாகக் கிரவல் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது குறித்த நபர் அக் கடற்கரை வீதியில் 100 க்கு…
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
பேருந்தில் செல்லும் போது பாலியல் துன்புறுத்தல் : இராணுவ கோப்ரல் அதிரடியாக கைது துருக்கியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, பேருந்தில் செல்லும் போது பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இடமபெற்றபோது பாகிஸ்தான் இளைஞர் ஒருவரும் நடத்துனரும் அவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேகநபர் இன்று தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். https://athavannews.com/2023/1338918 @குமாரசாமி, @Kandiah57, @noc…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழில் தொழில் பயிற்சி நிலையம் வட மாகாணத்திற்கான வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பினைத் தேடிச் செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம், யாழ் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாகத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கான காணியைப் பெற்றுத்தருமாறு, நான் யாழ் மாவட்ட செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர் …
-
- 0 replies
- 216 views
-
-
Published By: DIGITAL DESK 3 15 JUL, 2023 | 09:02 AM யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளது. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார், ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய இழுவைப்படகளை கட்டுப்படுத்த நாங்கள் கூட்டாக இந்தியாவில் போய் பேசுவோம் என்று மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம், என அமைச்சர் டக்ளஸ் தேவானாந்திற்கு பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பதிலளித்துள்ளார். நெடுந்தீவு பிரதேசத்துக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (14) பகல் 9.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இக…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
இலங்கையில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் ஒருமுறை, விபத்துகள் காரணமாக, நான்கு பேர் வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர், விசேட வைத்தியர் சமித சிறிதுங்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது நாளொன்றுக்கு, 32 முதல் 35 பேர்வரையில், விபத்துகளால் மரணிக்கின்றன நிலையில் வாகன விபத்துகள், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், வீழ்தல் மற்றும் மின்சாரத் தாக்கத்திற்கு இலக்காகுதல் உள்ளிட்ட காரணிகளால் குறித்த மரணங்கள் சம்பவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது, மேலும் இது மிகவும் மோசமான நிலைமையாகும் எனவே, இதனைத் தடுப்பத…
-
- 1 reply
- 254 views
-
-
வைத்தியசாலைக் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அமைச்சரவையைக் கூட்டி உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த ஒன்றியத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷான் பெல்லன இந்த யோசனையை முன்வைத்துள்ளார். கெனியுலா(Cannula) எனப்படும் ஊசி மருந்துகளை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஒன்றின் பாகம் விஷமானதால் ஏற்பட்ட தாக்கநிலையால் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் (வயது 31) ஒருவர் மரணித்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங…
-
- 1 reply
- 169 views
- 1 follower
-
-
இந்தியாவில் இருந்து எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதம்! இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார். குறித்த விவாதமானது நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தை விரைவுபடுத்துவதும், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1339088
-
- 7 replies
- 622 views
- 1 follower
-
-
பேதங்களை மறந்து ஒன்றிணைந்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் : அமைச்சர் மனுஷ! இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முத்தவெளிப் பகுதியில் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “க்லோகல் பெயார் 2023′ கண்காட்சியின் முதலாவது வேலைத்திட்டத்தை நாங்கள் யாழில் ஆரம்பிக்கி…
-
- 6 replies
- 262 views
-
-
Published By: RAJEEBAN 12 JUL, 2023 | 10:15 AM அரசாங்க மருத்துவமனைகளில் பெரும்பாலான சிடி ஸ்கானர்கள் செயல் இழந்துவிட்டன என மருத்துவதுறை சார்நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்க மருத்துவமனைகளில் 44 சிடி ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 12 சிடி ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன, குருநாகல், கராப்பிட்டிய, திருகோணமலை, அம்பாந்தோட்டை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, ஹொரன தேசிய பல்வைத்தியசாலை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மாத்தறை ஆகிய மருத்துவமனைகளில் சிடி ஸ்கானர்கள் இயங்கவில்லை என அந்தஅமைப்பு தெரிவித்துள்ளது. …
-
- 15 replies
- 1k views
- 1 follower
-
-
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகுசேவையின் நேர ஒழுங்கு இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (14) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்பவர்களின் வசதிக்கேற்ப வடதாரகை பொது போக்குவரத்து நேர ஒழுங்கு மாற்றப்பட்டமையால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர். இதன்போது நெடுந்தீவுக்கு செல்லவிருந்த மக்கள், வயோதிபர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். குறிக்கட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி காலை 8 மணிக்கு பயணமாகும் வடதாரகை பயணிகள் படகு இன்றையதினம் நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவ…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 JUL, 2023 | 03:58 PM வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள். ஏமாற்று, மோசடிகாரர்களை நம்பி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு வேலை வாய்ப்பில் அதிகளவான மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். வெளிநாடு செல்பவர்கள் சட்டரீதியாக செல்லாது, அங்கு சென்று பல இன்னல்களுக்கு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அது தொடர்பில் நாம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறோம். யாழ்…
-
- 1 reply
- 262 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 14 JUL, 2023 | 07:27 PM பனை அபிவிருத்தி வாரம் வடக்கு மாகாண அமைச்சரவையின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். இதை கொண்டாடாமல் கைவிடவோ மாற்றியமைக்கவோ வட மாகாண கூட்டுறவுத் திணைக்களத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வட மாகாண கூட்டுறவுத் திணைக்களம் ஆடிப் பிறப்பை முன்னிட்டு ஜூலை 14 முதல் 16ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் நல்லூர் கிட்டு பூங்காவில் பனை உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கண்டனக் கருத்தினை அவர் பதிவு செய…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கிற்கே இலங்கை அதிக கடனைப் பெற்றது : அமைச்சர் பந்துல! இலங்கையின் வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த சில தசாப்தங்களாக நடந்த யுத்தம் காரணமாக ஏனைய பகுதிகளை விடவும் …
-
- 8 replies
- 748 views
- 1 follower
-
-
ரணிலின் உயிருக்கு ஆபத்து : உயிர் தப்புவாரா? ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடைபெற்ற சர்வதேச நிதி ஒப்பந்த மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொண்டார். இந்தப் பயணத்தை முடித்துவிட்டு இன்று நாட்டிற்கு மீண்டும் திரும்ப உள்ள நிலையில் இது குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதிக்கு குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிநவீன துப்பாக்கி மூலமோ, வேறு வடிவிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…
-
- 0 replies
- 191 views
-
-
சுவிஸ் தூதரக அதிகாரி கானியாவுக்கு எதிரான வழக்கு : தற்போதைய நிலை என்ன ? By VISHNU 12 OCT, 2022 | 08:32 PM ( எம்.எப்.எம்.பஸீர்) கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது என அடிப்படை ஆட்சேபனம் முன் வைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை (12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபத…
-
- 2 replies
- 309 views
- 1 follower
-
-
ஜப்பான் அரசின் கடனுதவியில் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்தில் 28 கோடி ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள செம்பு கம்பிகள் மற்றும் ஆணிகள் மயமாகியுள்ளன. போதைக்கு அடிமையானவர்கள் இவற்றை எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் ரகசியமாக செப்பு கம்பிகள் அகற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தற்போது 28 கோடி ரூபாவுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் மின்சார வயர்கள் அறுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் ஒளிரச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்கிழமை (11) …
-
- 1 reply
- 347 views
- 1 follower
-
-
விசேட தேவையுடைய மாணவர்களையும் அரச பாடசாலைகளின் சாதாரண வகுப்புக்களில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் நீலமணி மலவீஆராச்சி தெரிவித்துள்ளார். வலயங்களிலுள்ள பணிப்பாளர்களின் அனுமதியுடன் விசேட தேவையுடைய மாணவர்கள் வகுப்புகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய மாணவர்கள் ஏனைய மாணவர்களுடன் இணைத்துக்கொள்ளப்படுவது வரலாற்றில் முதல் தடவை என்பதோடு, அவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வரப்பிரசாதமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் விசேட தேவையுடைய மாணவர்கள் இதுவரை சிறப்பு பிரிவுகளிலேயே கல்வி கற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 JUL, 2023 | 11:17 AM ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பம்! IWWWRMP திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குள பிரிவின் கீழ் வவுனிக்குளம் வலதுகரை வாய்க்கால் புனரமைப்பு வேலைக்கான அடிக்கல் நாட்டுவிழா வியாழக்கிழமை (13) கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதில் வவுனிக்குளம் வலதுகரை வாய்க்காலில் உள்ள D - 23 வாய்க்காலின் திருத்த வேலை 5 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நீர்ப்பாசன அமைச்சின் திட்ட அமுலாக்கம் மற்றும் ஒழுங்…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 JUL, 2023 | 10:29 AM இளைஞன் உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் அளிக்க சென்ற வயோதிப பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியைச் சேர்ந்த ஜே.தேவரஞ்சன் (வயது 31) எனும் இளைஞன் நேற்று புதன்கிழமை இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் , இளைஞன் தங்கியிருந்த வீட்டின் மற்றுமொரு அறையில் தங்கியிருந்த வயோதிப பெண்மணியை வாக்குமூலம் வழங்க வருமாறு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பொல…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 JUL, 2023 | 12:20 PM கடுகண்ணாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல்போன 32 வயதுடைய டென்மார்க்கை சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் நேற்று (13) முதல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையையின்போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது தவறி வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/159990
-
- 0 replies
- 146 views
- 1 follower
-