ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், வடக்கில் ஆயுத கலாச்சாரம் நீடித்து வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வருத்தம் வெளியிட்டுள்ளார். கடந்த 25 வருட காலமாக யாழ்ப்பாண மக்கள் துப்பாக்கி கலாச்சாரத்தினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதே நிலைமை நீடித்து வருகின்றமை பெரும் வேதனை அளிப்பதாகவும் ஆனந்த சங்கரி, ஜனாதிபதிக்கு கடிதம் ஊடாக தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் தோற்கடிப்பட்டதன் மூலம் கிடைக்கப் பெறும் நன்மைகளை யாழ்ப்பாண மக்கள் இதுவரையில் அனுபவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட சிலரின் தனிப்பட்ட நலன் கருதிய செயற்பாடுகளே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் இயங்கி வரும் சகல ஆயுதக் குழுக்கள…
-
- 5 replies
- 829 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தினை இலகுவில் நீக்கிவிட முடியாது - அரசாங்கம் அறிவிப்பு வீரகேசரி இணையம் 6/24/2009 8:43:42 PM - சில அரசியல் கட்சிகள் கூறுவதுபோன்று அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இலகுவில் நீக்கிவிட முடியாது. அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டதுடன் அரசியலமைப்பில் இடம்பெறுகின்ற விடயமாகும். அது நீதிமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற சட்டமூலமாகவுள்ளது. அதனை நீக்கவேண்டுமாயின் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்படவேண்டும். என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். மாகாண சபை முறைமையை எதிர்க்கும் மக்கள் விடுதலை முன்னணி ஏன் அந்த தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது? அப்படியானால் …
-
- 1 reply
- 764 views
-
-
அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் - பஷில் வீரகேசரி இணையம் 6/24/2009 11:25:23 PM - தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, அதிகாரபரவலாக்கலை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவினரை சந்தித்துப் பேச்சு நடத்தியதன் பின்னர் இந்திய தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பஷில் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது: இந்திய உ…
-
- 0 replies
- 532 views
-
-
http://globaltamilnews.net/tamil_news.php?nid=11056&cat=
-
- 0 replies
- 1.2k views
-
-
24/06/2009, 10:49 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்காவிற்கு 804 மில்லியன் ரூபா உதவித்தொகை- ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவில் சிறீலங்கா அராசங்கத்தால் தடுத்து வைத்துள்ள பொதுமக்களை அவர்களது மகிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 804 மில்லியன் ரூபா உதவித்தொகையினை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையம் ஊடாகவே இந்நிதி செயற்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுவரும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. எனினும் உதவிகள் சிறப்பாக சென்றடைவதற்கு சர்வதேச உதவிநிறுவனங்களுக்கு முறையான அனுமதி கிடைக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். pathivu
-
- 1 reply
- 744 views
-
-
24/06/2009, 11:44 [யாழ் செய்தியாளர் சிறீதரன்] யாழ்ப்பாணத்தில் இரவுநேர ஊரடங்கை நீக்க படையினர் மறுப்பு யாழ் குடாநாட்டில் அமுலில் உள்ள இரவுநேர ஊரடங்கு உத்தரவு உடனடியாக நீக்கப்பட மாட்டாது என, சிறீலங்கா படைகள் அறிவித்துள்ளன. யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்கா படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மென்தக்க சமரசிங்க இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா துணைப்படைக் குழுவான ஈ.பி.டி.பியின் அலுவலகமாக இருக்கும் யாழ் சிறீதர் திரையங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பொன்றில் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது. துணைப்படைக் குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மற்றும் யாழ் காவல்துறை பொறுப்பதிகாரி உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன…
-
- 1 reply
- 475 views
-
-
24/06/2009, 10:42 ] சிறீலங்கா தூதுக்குழு - இந்திய அதிகாரிகள் சந்திப்பு சிறீலங்கா ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ தலைமையில் சிறீலங்காவின் உயர்மட்ட தூதுக்குழு ஒன்று இன்று புதுடில்லியில் இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளது. இவர்கள் சிறீலங்காவில் தற்போது தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்துள்ள பொதுமக்களின் பிரச்சனைகள் தொடர்பிலும் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது. pathivu
-
- 1 reply
- 594 views
-
-
இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்... நாகார்ஜுனன் கடந்த எட்டு மாதகாலமாக நம்மைச் சூழ்ந்துவந்த அச்சம் நிஜமாகும் பயங்கரச் சூழலை, நெருக்கடியை இன்று சந்திக்கிறோம். தெற்காசியப் பிராந்தியத்தின் அண்மை வரலாற்றில் மிகப்பெரும் மனித-இனப்படுகொலையை நடத்தியிருப்பது இலங்கை அரசு, மொத்த மனித இனமும் நின்று காணக்காண, இந்தப் பாதகச்செயலை நடத்தியிருக்கிறது இலங்கை அரசு. நடந்தவற்றைப் பார்க்கும்போது தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் சார்பில் பதினைந்தாயிரம் பேர்வரை பலியாகியிருக்கலாம் என்றும் பதினைந்தாயிரம் பேர்வரை காயம், படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. தவிர, ஆறாயிரம் இலங்கைப் படையினர்வரை பலியாகியிருக்கலாம், காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. …
-
- 1 reply
- 1.7k views
-
-
-
எம்மை மீட்பதற்கு சளைக்காமல் சில காலம் உங்கள் உறவுகளாய்ப் போராடுங்கள்: இலங்கை தமிழ் மாணவர் பேரவை திகதி: 24.06.2009 ஃஃ தமிழீழம் தமிழீழம்இ அக்கரைப்பற்றில் இருந்து இலங்கை தமிழ் மாணவர் பேரவை ஓர்அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை வருமாறு அன்புற்கினிய சர்வதேச மாணவர்களே !.. இளையோர்களே !.. உறவுகளே !.. நீங்கள் சர்வதேசத்திலே செய்கின்ற புரட்சி கண்டு நாம் எமக்கு சிறந்த எதிர்காலம் ஏற்படுத்தித் தருவீர்கள் என்கின்ற அசையாத நம்பிக்கையில் காத்திருக்கின்றோம். ஏறத்தாழ 3 இலட்சம் எம் உறவுகள் கம்பி வேலியினுள் துயர் சுமந்து நிற்க வடக்குஇ கிழக்கில் உள்ள ஏனைய எம் உறவுகள் வாய் திறக்க முடியாத எதுவுமே பேசமுடியாதபடி நடைபிணமாய் வாழ்கின்ற…
-
- 0 replies
- 980 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாளை வன்னியில் இடம்பெயர்ந்த மக்களில் நிலை தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற இருப்பதால், தமிழ் மக்கள் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டிடத்திலுள்ள பூத்றொயிட் (Boothroyd) அறையில் நாளை பிற்பகல் 2:00 மணிமுதல் மாலை 4:00 மணிவரை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியவாழ் தமிழ் மக்கள் தமது தொகுதி உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழ் மக்களிற்காக 20 நாட்களுக்கு மே…
-
- 1 reply
- 831 views
-
-
ஒட்டுக்குழுக்களை முன்னிலைப்படுத்துகின்றதா ஊடகங்கள்? புலிகளது கதை முடிந்தது போலவும் இதுவரை முக்கியத்துவம் கொடுக்கப்படாத "ஈ.பி.டி.பி" கட்சிக்கு எமது ஊடகங்கள் திடீரென்று முக்கியத்துவம் கொடுப்பது போல் தோன்றுகின்றது. இதன் பின்னனி புரியவில்லை. பல தமிழ் இணையத்தளங்கள், யாழ்ப்பாண உதயன் பத்திரிகை, தமிழ் நெட், இன்னும் பல ஊடகங்களில் ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்லஸ் தேவானந்தாவின் புகைப்படங்களுடன் செய்திகைளையும் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தோன்றுகின்றது. தயவுசெய்து ஊடக நண்பர்களே உங்கள் ஊடகங்களிலாவது அதனை முக்கியப்படுத்தாமல் விடுவது நன்று, காரணம் தலமை அற்று தவிக்கும் தமிழரின் உள்ளத்தில் இடம்பிடிக்க ஈபிடிபி முற்படுவது நன்கு தெரிகின்றது(சரணடைந்த புலிகளுக்கு மன்னிப்பு, மீன்பிடி தடை ந…
-
- 3 replies
- 1.1k views
-
-
24/06/2009, 12:00 [சிறப்புச் செய்தியாளர்] இலங்கையின் பொருண்மிய வீழ்ச்சி – வெளிநாடுகளுக்கு வலை விரிப்பு சிறீலங்கா தனது பொருண்மீய வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு மலேசிய முதலீட்டாளர்களை தமது நாட்டில் முதலிடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டதாக, அரசு அறிவித்து ஒரு மாதமாகியுள்ள போதிலும், சிறீலங்காவின் பொருளாதாரம், ஒரு தேக்க நிலையிலேயே இருந்து வருகின்றது. இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களிற்கு பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெளிநாடுகள் நிதி வழங்குவதால், சிறீலங்காவின் இனவாத அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றது. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் உப அமைப்பு உட்பட பன்னாட்டு மனிதநேய அமைப்புக்கள் மூலம் தமது நிதியுதவிக…
-
- 0 replies
- 536 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆயுட்காலம் முழுவதும் நிறைவேற்று ஜனாதிபதியாக இருப்பார் என என்று வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கையின் ஆயுட்கால ஜனாதிபதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வருவதை எவராலும் மாற்ற முடியாதிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சேருவிலவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பின் நாங்கள் அரசியலமைப்பை மாற்றுவோம். அதன்பின் இந்த நாட்டின் ஆயுட்கால ஜனாதிபதியாக ஜனாதிபதி ராஜபக்ஷ விளங்குவார் என்பது மிகத் தெளிவானது என்றும் பேர்டி பிரேமலால் தி…
-
- 1 reply
- 797 views
-
-
இதுபோன்றதொரு குழப்ப நிலையை ஈழப்போராட்ட வரலாற்றில் என்றுமே கண்டதில்லை. இந்தியா-சிறீலங்கா புலனாய்வுப்பிரிவுகளின், நாசகாரச் செயற்பாடுகளை மிஞ்சுமளவிற்கு மின்னஞ்சல் போர்களும், ஊடகங்களை வெருட்டும் உத்திகளும் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன. எதிரி யாரென்பதை மறந்துபோகுமளவிற்கு அறிக்கைச் சமர்கள் தீவிரப்படுத்தப்படுகின்றது. பெருந்தேசிய இனவாதத்தின் அடக்குமுறைக்குள் சிக்கிச் தவிக்கும் மக்கள் குறித்து அக்கறை கொள்ளாமல் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை துரோகிகளாகவும், தலைவருக்கு அஞ்சலி செலுத்தாதோர் ஆக்கிரமிப்பாளர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.மக்
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 25 replies
- 7.9k views
-
-
போரின் உக்கிரத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அடிப்படை வசதிகள் ஏதுமற்று முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கும் வகையில் உணவு, மருந்து மற்றும் அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் அடங்கிய கப்பல் ஒன்றை சிறிலங்காவுக்கு அனுப்பி வைப்பதற்கு அனுசரணை வழங்கும்படி அவுஸ்திரேலிய அரசினை அந்நாட்டின் விக்டோரிய மாநில அமைச்சரும் விக்டோரிய மாநில திட்டமிடல் துறையின் செயலருமான ஜெனி மிக்கக்கோஸ் கோரியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 339 views
-
-
மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படும் இன அரசியல் இராணுவப் பிணக்குகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் மேற்கத்தேய மற்றும் வல்லரசு நாடுகள் உண்மையில் அங்கு அந்த முரண்பாடுகள் ஆயுதப்போராக மாற்றமடைவதையே விரும்புவார்கள். ஏனெனில் அந்த நாடுகளின் பிணக்குகளும், துயரங்களும், உயிரிழப்புகளும் மேற்கத்தேய நாடுகளின் வருமானத்தைப் பெரிய அளவில் உயர்த்தும்.இங்கு வீழும் ஒவ்வொரு உயிரும் அவர்கள் பணப் பையை நிரப்பவே உதவும். ஏனெனில் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் ஆயுதங்கள் இவர்களின் உபயமே. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் சந்தைப்பொருட்களில் ஆயுதங்களே பெருமளவில் இடம்வகிக்கின்றன. இவர்களது சந்தைப்பொருட்கள் விற்பனையாகவேண்டுமாயின், இவர்கள் உற்பத்தி பெருகவேண்டுமாயின் உலகி…
-
- 0 replies
- 984 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளான கொகுவல, சொய்சாபுர, பாணந்துறை ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற தேடுதலில் 12 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 330 views
-
-
இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்! ராணுவத்தை அனுப்பி, சொந்த தேசத்து மக்கள்மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்தும் கொடூரம் ஈழத்தில் நடந்தபோது அதைக் கண்டித்த, கொதித்தெழுந்த மனிதாபிமானிகள் பலர் இப்போது மேற்கு வங்காளத்தில் நடப்பது என்ன என்பதை குறைந்தபட்சம் தெரிந்துகொள்ளக்கூட விரும்பவில்லை. ‘அது மாவோயிஸ்ட் வன்முறை...’ அவ்வளவுதான்! வழக்கம்போல் இந்த இங்கிலீஷ் மீடியா, போர்க்களத்தில் நின்று செய்தி சேகரிப்பது போல சாகசத்தனங்களில் ஈடுபட்டிருக்கிறது. ஏதோ எல்லையில் இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவமும் சண்டையிடுவதை வர்ணிப்பது போல் இருக்கிறது அவர்களின் செய்கைகள். லால்கர் என்ற நடுத்தரமான நகரில் இருக்கும் ஆள்நடமாட்டமில்லாத ஒரு போலீஸ் ஸ்டேஷனைப் பிடித்ததும், பரபரப…
-
- 0 replies
- 834 views
-
-
சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின் போது, சிக்கியிருந்த பொதுமக்கள் விவகாரத்தில், ஐ.நாவின் பாதுகாப்பு சபை வரலாற்று தவிறிழைத்துள்ளதாக, மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. சிறிலங்கா,கொங்கோ குடியரசு,சூடான்,சாட்,போன்ற நாடுகளில் தொடரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக, பாதுகாப்பு சபை கடைப்பிடித்த அலட்சியப்போக்கை சுட்டிக்காட்டி ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் தூதுவர் குழுவுக்கு, மனித உரிமை கண்காணிப்பகம் எழுதியுள்ள கடிதத்திலேயே சிறிலங்கா தொடர்பாக இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ஐ.நாவின் மதிப்பீடுகளின் படி இவ்வருடம் ஜனவரி - மே காலப்பகுதியில், சிறிலங்காவின் வடக்கில் சுமார் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட…
-
- 0 replies
- 834 views
-
-
ஹெயிட்டிக்கு மற்றொரு தொகுதி சிறீலங்கா படையினர் பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் நேட்டோ படைகளுடன் இணைந்து அங்கு கடமையிலுள்ள கஜபா படைப் பிரிவுக்குப் பதிலாகவே இந்த அணியினர் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். 52 அதிகாரிகளும், 697 ஏனைய தரத்திலுள்ள படையினரும் ஹெயிட்டிக்குச் செல்ல இருப்பதாக அறிவிக்கபட்டுள்ளது. ஹெயிட்டியில் பணியாற்றிய சிறீலங்கா படையினரில் 130 பேர் வரையில் அங்குள்ள சிறுமிகள், மற்றும் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, ஐ.நாவின் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி பதிவு .
-
- 7 replies
- 973 views
-
-
வீரகேசரி நாளேடு - தமது நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பணியாளர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு ஐ.நா. இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியா பிரதேசத்தில் தொண்டாற்றி வந்த இரண்டு தமிழ்ப் பணியாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறையினரிடம் தகவல்கள் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கம் 1941ஆம் ஆண்டு கைச்சாத்திட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இரண்டு பணியாளர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான சகல நடவடிக்கை…
-
- 0 replies
- 479 views
-
-
வெள்ளவத்தைப் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலாக வெடித்ததால் இருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் கதிர்காமதேவன் ஜெனிட் நிரோஷன் (வயது 24) மற்றும் மகேந்திரன் சசிதரன் ஆகிய இருவருமே கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமானவர்களாவர். வெள்ளவத்தை33ஆவது ஒழுங்கைப் பகுதியில் வைத்தே மேற்படி இரு குழுவினர் மத்தியிலும் மோதல் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சம்பவத்தில் மரணித்த இருவரில் ஒருவர், மோதலை விலக்க எத்தனித்த சமயமே கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமானதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது. இச்சம்பவத்தை அடுத்து குற…
-
- 12 replies
- 1.7k views
-
-
கீழே தரப்பட்டுள்ள தளத்துக்குப் போனால் விபரம் தெரியும். முடிந்தவரை இந்த இளையவரின் நீதிமன்றச்செலவுக்கு உதவவும். மன்னிக்கவும். சிலகாரணங்களுக்காக இணைப்பை எடுத்துவிட்டேன். தகவல் தேவையாயின் என்னுடன் தொடர்புகொள்ளவும்.
-
- 3 replies
- 1k views
-