Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையை மனித உரிமைகள் கவுன்சில் விசாரிக்காவிட்டாலும் மனித உரிமைகள் கமிசன் விசாரிக்க சட்டத்தில் இடமுண்டு - சட்ட நிபுணர் - BBC காணொளி

  2. சுற்றிவர கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ள 50 முகாம்களில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 915 பேர் தடுத்து வைப்பு இலங்கை படையினரின் விசாரணை தடுப்பு முகாம் உள்ளிட்ட வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 915 பேர் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான அலுவலகம் கணக்கிட்டுள்ளது. சுற்றிவர கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ள 50 முகாம்களில் இந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு தங்கியுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கோ, அருகில் உள்ள பிரதேசங்களில் இருக்கும் உறவினர்களைத் தேடி அறியவோ, இடம்பெயர்ந்துள்ள மக்களின் பெயர்களை பதிவு செய்யவோ ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன மறுப்பதா…

    • 0 replies
    • 797 views
  3. ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக றட்ணா: ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம். விடுதலைப்புலிகளையும் தமிழர்களையும் வேறுபடுத்தி விட்டோம் என்று கருதிக் கொள்ளும் சிங்களப் பேரினவாத அரசியல், இராணுவக் கூத்தாடிகளுக்கு இப்பொழுது பெரும் கொண்டாட்டம். சிங்கள வார இறுதிப் பத்திரிகையான லங்காதீபவில் கோத்தாபயவின் முழு பக்க செவ்வி இன்று (31‐5‐09) வெளியாகியுள்ளது. இதனை வாசிக்கத் தலைப்படும் எந்தவொரு தன்மானமுள்ள தமிழரும் ஆவேசம் கொள்ளாமல் இருக்கவே மாட்டார்கள். தமிழர் பேராட்டத்தினைக் கொச்சைப்படுத்தி அவர் கூறியிருக்கும் கருத்துக்களைப் பார்க்கும் போது வேதனையும், புலிகளின் மௌனம் மீதான எரிச்சலினையுமே ஏற்படுத்துகின்றன. சில ஊடகங்கள் செவ…

  4. அம்மா ஒரு நாள் வீட்டிற்கு வருவா என தடுப்பு முகாம்களில் பல சிறார்கள் காத்திருக்கின்றனர்..... என்ன கொடுமை இது, அவர்கள் இறந்ததைக் கூட விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக எமது சிறார்கள் தடுப்பு முகாம்களில் தமது தாய் தந்தையர் ஒரு நாள் வருவார்கள் எனக் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் புல்மோட்டை தடுப்பு முகாமிற்கு விஜயம்செய்த, பணியாளரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கண்ணீர் மல்க கூறிய கதை நெஞ்சை உருக்கியது. தடுப்பு முகாம்களில் பல குழந்தைகள், தமது சகோதரருடன் இருப்பதாகவும், அவர்களின் தாய் தந்தையர் இறந்த விடையம் தெரியாத நிலையில் அவர்கள் ஒரு நாள் தம்மை பார்க்கவருவார்கள் என்று கூறியவாறு, அரை குறை உடுப்புடன் அங்கே சிறார்கள் இருப்பதாக ஒரு வெளிநாட்டவர் குறிப்பிட்டார். அந்தச் சி…

    • 26 replies
    • 4.2k views
  5. தாயக மக்கள் மக்களின் துயர் துடைக்க சுவிற்சர்லாந்தில் நாளை திங்கட்கிழமை பாத யாத்திரை நடைபெறவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 634 views
  6. இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவர் வீட்டில் இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசியதாக கூறியுள்ளார். அத்துடன் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாத். இலங…

    • 7 replies
    • 1.2k views
  7. இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளையும் அழிக்கும் முயற்சிகளை சிறிலங்கா படைத்தரப்பு மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள விடுதலைப் புலிகளை தேடி அழிக்கும் முயற்சிகளை படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது. இதற்கு அமைவாக அதிகளவிலான கொமோண்டோ படையினரும், 53, 57 மற்றும் 58 ஆவது டிவிசன் படையினரும் கிழக்கு மாகாணத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளனர். கிழக்கில் கேணல் ராம் மற்றும் அவரின் துணைத் தளபதி உமாராம் ஆகியோரின் தலைமையில் 50-க்கும் அதிகமான விடுதலைப் புலிகள் இயங்கி வருகின்றனர் என படையினரின் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. கிழக்கு ம…

    • 4 replies
    • 978 views
  8. இருபது ஆண்டுகளுக்கு முன் படித்த புத்தகம் ஒன்று தந்த கருத்துக்களை நினைவுக்குக் கொண்டு வர முயல்கிறேன். புத்தகத்தின் பெயர் ""தோல்வியின் பண்பாடு'' - Culture of Defeat் ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அவர் ஜெர்மனி நாட்டுக்காரர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுதப்பட்டது. படுதோல்வியின் வலியிலும் அவமானங்களிலும் உழன்ற ஜெர்மனி நாட்டு மக்களை பின்புலமாகக் கொண்டு வெளிவந்த புத்தகம். அப்புத்தகத்தின் மறக்க முடியாத சில வரிகள் இவை: ""உன்னை தோற்கடித்தவனின் இலட்சி யங்களை விட உனது இலட்சியங்கள் உயர்ந்தவையாக இருந்தால், எதிரியின் ஒழுக்கத்தை விட உனது ஒழுக்கம் மேலானதாக இருந்தால் நீ உண்மையில் தோற்றுப் போகவில்லை. அழிவினூடேயும் நீ தலைநிமிர்ந்து நிற்கலாம்!''. நான் பலமுறை பார்த்தும் ச…

  9. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடனை தடுத்து நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட யோசனை தோல்வியடைந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியக் கடனை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய கடன் வழங்கலை நிறுத்த ஒபாமா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறைவின் போது பாராட்டு தெரிவித்த அமெரிக்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியக் கொடுப்பனவு கடன் குறித்து எதனையும…

    • 0 replies
    • 730 views
  10. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் கலாநிதி பட்டங்களை வழங்க கொழும்பு பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்ததற்காக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்க தீர்மானித்துள்ளது. மகிந்தவுக்கு சட்டத்துறையில் கலாநிதி பட்டமும் கோத்தபாயவுக்கு கல்வியலில் சார்ந்த கலாநிதி பட்டமும் வழங்கப்படவுள்ளன. எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உயர்கல்விமான்களுக்கான பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. புதினம்

  11. இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கையை ஐ.நா. வெளியிட வேண்டும் திகதி: 31.05.2009 // தமிழீழம் சிறீலங்காவில் நடைபெற்ற போரின் கடைசி வாரங்களில் இரு தரப்பினராலும் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாடு கள் சபை உடனடியாக வெளியிட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. இது தொடர்பாக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குநர் சாம் ஸரீபீ கூறுகையில்: இந்த யுத்தத்தில் இரு தரப்பினாலும் யுத்தக்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளமையை மன்னிப்புச் சபை பெற்றுக் கொண்ட சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. செய்தியாளரான பொவோரியன் மேலும் கூறியிருப்பதாவது: அவர்களின் நீதி தொடர்பான இசை காட்டியில் தவறு ஏற்பட்டிருக்க வேண்டும். முக்கியமான செயல் என…

    • 1 reply
    • 611 views
  12. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிய மருத்துவமனையில் பணியாற்றிய பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ்வாணி ஞானகுமார் என்ற தமிழ் பெண்ணை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் சர்வதேச ஊடகமொன்றில் வெளியான செய்தியாவது: பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ்வாணி ஞானகுமார் (வாணி) என்ற மருத்துவப் பணியாளர் வவுனியாவில் உள்ள தடைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரை விடுதலை செய்வதற்கு இராஜதந்திர வட்டாரங்களின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். வவுனியா தடை முகாமில் வாணி தடுத்து வைக்ப்பட்டுள்ளதாகவும் அவர் அங்கிருந்து தமக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டதாகவும் அவரின் சகோதரி சுபா மோகனதாஸ் தெர…

  13. வீரகேசரி இணையம் - அரசாங்கத்தினால் தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள யாழ் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை 4 தமிழ் கட்சிகள் நிராகரித்துள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணி,புளொட் ,ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ,ஈ.பி.டி.பி. ஆகிய தமிழ் கட்சிகளிடம் இது தொடர்பான கோரிக்கை அரச தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையிலேயே இக் கட்சிகள் இதனை நிராகரித்துள்ளன. தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை தற்போது இல்லை என்றாலும் அப்படி தேர்தல் நடத்தப்படுமானால் தமிழர் விடுதலைக் கூட்டணி,புளொட் ,ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய தமிழ் கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக…

  14. ஞாயிற்றுக்கிழமை, 31, மே 2009 (10:45 IST இங்கிலாந்தில் இலங்கை அணியின் நிகழ்ச்சி ரத்து இங்கிலாந்தில் வருகிற 5 ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக இலங்கை அணி, இங்கிலாந்து சென்றுள்ளது. இலங்கை அணி அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இலங்கை அணி வீரர்கள் தங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டனர். இங்கிலாந்தில் வெளியாகும் பத்திரிகையில் முதல் பக்கத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் 20 ஆயிரம் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது' என்ற செய்தி வெளியாகியதை பார்த்த இலங்கை வீரர்கள் பாதுகாப்பு அச்சம் கருதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்கீரன்

  15. தாக்கும் நடவடிக்கையில் புலிகள்: தகர்க்கும் நடவடிக்கையில் ராணுவம் இலங்கை கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதனால் கிழக்கு மாகாணம் மீது சிங்கள ராணுவத்தின் கவனம் திரும்பி உள்ளது. இது பற்றி, இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ’’இலங்கை கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இதற்காக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 300 தற்கொலைப் படையினர் இலங்கையின் பல பகுதிகளில் ஊடுருவி இருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. எனவே ராணுவத்தை உஷார்படுத்தி உள்ளோம். வடக்கு பகுதியில் கூடுதல் ராணுவ படையை நிரந்தரமாக வைக்க இயலாது. மற்ற பகுதி அச்சுறுத்தல்களை ரா…

  16. பாதுகாப்புய் வலயத்தினுள் சிங்களம் நடத்திய 20000 படுகொலைகளுக்கு சாட்சியமுண்டு - வாஷிங்டன் போஸ்ட் Evidence points to Colombo culpability to Tamil massacre - Washington Post [TamilNet, Saturday, 30 May 2009, 13:24 GMT] Adding to the increasing international media coverage of Government of Sri Lanka's culpability to the massacre of more than 20,000 Tamil civilians in Mullaitheevu, Emily Wax of Washington Post in a Saturday story said, the beach "shows clear signs of heavy artillery shelling, according to a helicopter inspection of the site by independent journalists, interviews with eyewitnesses, and specialists who have studied high-resolution satellite imagery from…

  17. சிறிலங்காவில் உள்ள கனடிய தூதரகத்தின் முன்பாக சிங்கள இனவெறியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தினை கண்டித்து கனடாவில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  18. சிறிலங்காவின் இன மேலாதிக்க அரசின் இன அழிப்பு வன்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமையை வெளிக்கொணரும் முகமாக நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோ நகரில் உடலப்பேழை பேரணி முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 300 views
  19. பிரான்சில் உள்ள பாரிஸ் நகரில் 'புதிதாய் பிறப்போம்' மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு உணர்வு எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 347 views
  20. தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த விதத்திலேனும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் கோத்தபாய : தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த விதத்திலேனும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகளால் கள்ளவாக்குகள் போடப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பபட்டவர்கள் என்பதை அனைவரும் அறிவர் எனவும் அவர் கூறியுள்ளார். கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு எதிராகவே பேசியதாகவும் கோத்தபாய கூறியுள்ளார். நாட்டை பிளவுப்படுத்துவது குறித்து பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த வழியிலேனும் நீக்கப்பட வேண்டும…

    • 4 replies
    • 1.6k views
  21. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கான அனைத்துலக நாணய நிதியத்தின் கடனை தடுக்கும் முயற்சிகளை பிரான்ஸ், பிரித்தானியா, சுவீடன் ஆகிய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கான அனைத்துலக நாணய நிதியத்தின் கடனை தடுக்கும் முயற்சிகளை பிரான்ஸ், பிரித்தானியா, சுவீடன் ஆகிய நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கான அழுத்தங்களை அவர்கள் அமெரிக்க அரசாங்கத்துக்கு கொடுத்து வருகின்றனர். மேற்குலகத்தின் கோரிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வரை பொருளாதார அ…

    • 0 replies
    • 611 views
  22. வடபகுதியில் உள்ள இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பயிற்சிகளை வழங்கும் பொருட்டு முல்லைத்தீவில் சிறிலங்கா காவல்துறை பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வடபகுதி இளைஞர்களுக்கு காவல்துறை பயிற்சிகளை வழங்கும் பொருட்டு முல்லைத்தீவில் காவல்துறை பயிற்சி நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதியை அரசாங்கம் தெரிவு செய்யவுள்ளது. அரசின் இந்த திட்டங்களை காவல்துறை மா அதிபர் ஜெயந்த விக்ரமரட்ன உறுதி செய்துள்ளதுடன், ஆயிரம் பேருக்கு முதற்கட்ட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவு பகுதிக்கு காவல்த…

    • 0 replies
    • 571 views
  23. அதே இடம் மே 06 திகதி 2009 அதே இடம் மே 10 திகதி 2009 மேலதீக தகவல் With fresh reports emerging calls grow in support of war crime probe

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.