Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது - அன்னராசா குற்றச்சாட்டு! Published By: Digital Desk 1 05 Oct, 2025 | 02:22 PM அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும், கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவு வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சீன கடலட்டை பண்ணை சூழலுக்கு பாதிப்பா? இல்லையா? என்று ஒரு ஆய்வு செய்து தருமாறு நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்த…

  2. 05 Oct, 2025 | 04:38 PM தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாண்டு ஓவ்வொரு 10 இலட்சம் பெறுமதியான 88 வீடுகளில் 80 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (05) அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. அந்தவகையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் கோண்டாவில் நாகபூசணி அம்மன் கோவிலடியில் பயனாளிக்கு ஒருவருக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், தேசிய மக்கள் சக்தியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர், அபிவிருத…

  3. காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரையில் நாளாந்தம் குறித்த கப்பல் சேவை இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்ந்த வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்தது. இந்நிலையில் பண்டிகை காலத்தில் அனைத்து நாட்களிலும் சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இக்கப்பல் சேவையில் தீர்வை அற்ற கடைத் தொகுதியும் ( Duty free) புதிதாக இணைக்கப்ப…

  4. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று நேற்று (4) அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் அங்கிருந்து இந்த மனித எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு சென்ற ஒருவர் இதனை அவதானித்த நிலையில் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- ht…

  5. சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு! சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ள நிலையில் கடை உரிமையாளர் மிக்சருக்கு உரிய பணத்தை தருமாறு கேட்டபோது மிக்சரை வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது கடை உரிமையாளர் மீது மிக்சர் வாங்க வந்தவர்கள் கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த 35 வய…

  6. இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் : வாக்கெடுப்பைத் தவிர்க்க அமெரிக்கா, நோர்வேயிடம் ஆதரவு கோரிய அரசு 05 Oct, 2025 | 09:35 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் மீது, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பரபரப்பான பின்னணியில், அரசாங்கம் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் ஆகியோர் தலைமையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழு, அமெரிக்கா, நோர்வே உள்ளிட்ட முக்கிய மேற்குலக நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்…

  7. ஹிட்லரின் பாதையில் தேசிய மக்கள் சக்தி அரசு ; நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயல்வதாக ரணில் சாடல் 05 Oct, 2025 | 11:28 AM (லியோ நிரோஷ தர்ஷன்) எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கடுமையாகச் சாடியுள்ளார். எதிரணியினருடன் அரசியல் ரீதியான எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும், உள்ளூர் அரசியல் மேடைகளில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை குறித்தும் இங்குள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைப்பது முறையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

  8. 05 Oct, 2025 | 07:07 AM தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் எமது நாட்டின் இறைமையில் உள்ள கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் அவர்கள் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமூகம் மிக விரைவில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்குமென வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடாக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சதீவை மீட்பேன் என வடக்கு கடற்றொழில் சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தை தொடர்ச்சியாக அரசியல் மேடைகளில் பேசி வருகின்றார். முதலமைச்சரே, …

  9. 'தேசிய மக்கள் சக்தி செயலால் நிரூபிக்கிறது; வட மாகாணத்தை அவர்களால் அபிவிருத்தி செய்ய முடியும்' - ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 01:23 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டத்தின் கீழ் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின் ஆரம்ப நிகழ்வு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில…

  10. 04 Oct, 2025 | 01:12 PM புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் நிகழ்வு ஒன்றின் பின்னர் வெள்ளிக்கிழமை (03) ஊடகவியலாளர் ஒருவர் "புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக உங்களது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார். புதிய அரசியலமைப்பு சட்டம் எமது கொள்கை பிரகடனத்தில் இருக்கின்ற ஒரு விடயம். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒருவருடம்தான் நிறைவடைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது மக்களுக்கு தெரியும். ஆனால் அரசியல்வாதிகள் தெரிந்து…

  11. 04 Oct, 2025 | 02:17 PM கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் ஆரம்பமான இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளில் பிரதம அமைச்சரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டார். இப்பட்டமளிப்பு விழாவில் 1966 உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கி உறுதிசெய்யப்படவுள்ளன. முதலாம் நாளின் சனிக்கிழமை (04) முதலாவது அமர்வின் போது சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது. 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது அமர்வின் …

  12. Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 10:02 AM நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பரவல் குறித்து பொலிஸாருக்கு நேரடி தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் தொலைபேசி இலக்கங்கள் முன்னதாக, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன. சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் கீழ் உள்ள மாவட்ட பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்களின் தொலைபேசி இலக்கங்களும் நேற்று வெள்ளிக்கிழமை (03) வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிற்கு தொடர்பினை ஏற்படுத்தி, போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்கலாம் என பொ…

  13. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்று பலமுறை பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றததாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று(3) அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்து காணப்பட்டது. பழுது நீக்கி மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த பேருந்து ஆனது மீண்டும் இடை நடுவே பழுதடைந்துள்ளது. பயணிகள் சிரமம் பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது மீண்டும் அதே பேருந்து கேவில் நோக்கி நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த …

  14. 04 Oct, 2025 | 11:38 AM கல்வி, ஒழுக்கம், நேர்மை, கண்ணியம், உழைப்பு போன்றவற்றிற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு காலத்தில் பெயர் போனவர்கள். ஆனால் கடந்த ஆட்சிகளில் ஏற்பட்ட போதைப்பழக்கம், தொலைபேசி பாவனை காரணமாக இளைஞர்கள் திசைமாறி சீரழிந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்களை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்ன நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானை வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற நடைபெற்ற நல்லொழுக்க தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக மாற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று அனைவரு…

  15. மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே, நேற்று (3) சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் வாகனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் செப்டம்பர் 24 அன்று தெரிவித்ததாகவும் கமகே மேலும் குறிப்பிட்டார். மேலும், முன்ன…

  16. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள்! இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகையானது 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரியவந்துள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடியபோது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. இலங்கை பெற்ற கடன்கள் குறித்து குழு விசாரித்தபோது, கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட பொதுக் கடன் மேலாண்மை அலுவலக அதிகாரிகள், 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது 19.6 டிரில்லியன் ரூபாய் வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறினர். அனைத்து கடன் வாங்கும் செயல்முறைகளும் தற்போது அரச கடன் மேலாண்மை அலுவலகத்தால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றன. நாட்டின் கடன் மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்த தி…

  17. me இலங்கை 17 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு! சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ஊட்டச்சத்து மருந்து, மூலக்கூறு உயிரியல் மற்றும் நெட்வொர்க் மருந்தியல் போன்ற நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி 05 மருத்துவ தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெர்னோனியா ஜெய்லானிகா, ( Vernonia zeylanica) நிஜெல்லா சாடிவா, (Nigella sativa) ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ், (Hemidesmus indicus) லூகாஸ…

  18. ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது - புபுது ஜயகொட 04 Oct, 2025 | 04:11 AM (எம்.ஆர்.எம்.வசீம்) அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தினால் உலகில் ஆகக்குறைவான கடன் குறைப்பு செய்த நாடு இலங்கை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ப…

  19. அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்! 04 Oct, 2025 | 09:59 AM அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக, தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக, வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/226851

  20. யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா 04 Oct, 2025 | 10:59 AM யாழ் மாவட்ட பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றது. யாழ். புனித யுவானியர் தேவாலய முன்றலில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி மாவட்டச் செயலகத்தினை வந்தடைந்ததனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது. குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டுப் பெரு விழாவில், 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் - பிரதேசங்களுக்குரிய கலைஞர்களாலும், மாணவர்களாலும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. மேலும், "யாழ…

  21. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு 04 Oct, 2025 | 10:00 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு எதிர்வரும் 08.10.2025 புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த ஆய்வுமாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்து சிறப்பிக்கவுள்ளார். ஆய்வு மாநாடு கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் நடைபெறவுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ். சந்திரபோஸ் திறப்புரையினை ஆற்றவுள்ளார். பல்கலைக்கழகங்களின் பிரதான பணிகளில் ஒன்றாக இருப்பது ஆய்வுச் செயன்ம…

  22. ’நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்’ - சி.வி.கே.சிவஞானம் அரசியலமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்ய வேண்டும் என்று கேட்பதிலே சைக்கிள் கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வி.கே.சிவஞானம் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் அதீத அக்கறை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும் அதில் மிக முக்கியமான பணி இந்தியாவுக்கு உண்டு. இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஊடாக அந்தப் பொறுப்புக் கூட இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆனால், பொதுவாகவே இந்தியத் தரப்பு ஒரு விடயத்தைத் தி…

  23. வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு உதவும் காவல்துறையினரின் தகவல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம் adminOctober 3, 2025 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் , கடத்தல்கள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் காவல்துறையினர் தொடர்பிலான விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களுடனு…

  24. மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், இன்று (03) காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில், பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று (02) மாலை, போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ராஜேந்திரன் கபிலன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அவரைத் துரத்திப் பிடித்த நிலையில், அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட கபிலனை பொலிஸார் ப…

  25. இலங்கையில் தினமும் சுமார் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35,000 புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர். இவர்களில் 35% (அதாவது, சுமார் 13,000 பேர்) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அவர் கூறினார். கண்டி மாவட்டம், பொல்கொல்லவில் நேற்று (02) நடைபெற்ற நான்காவது ஆரோக்கிய நல மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வருடாந்த மருந்து செலவில் 30% புற்றுநோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும், இதைக் கட்டுப்படுத்த ஆரம்ப கட்டத்தில் நோயைக் கண்டறிவது ஒரே வழி எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 30 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களிட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.